Saturday 31 March 2012

கொலைவெறி சோனியாவைத் தேவதையாக்கும் சதி.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்களப் படைகளுக்கு மிடையில் போர் நடக்கும் போது சில சமயங்களில் சிங்களப்படையினரின் கை ஓங்கும். அத் தருணத்தில் விடுதலைப் புலிகள் பின் வாங்கிக் கொண்டே சிங்களப் படையினர் மீது தாக்குதல்கள் நடாத்துவர். அத்தாக்குதல்கள் சிங்களப் படையினருக்கு பலத்த ஆளணி இழப்புக்களை ஏற்படுத்துவதே முக்கிய நோக்கம் கொண்டதாக இருக்கும். அந்த ஆளணி இழப்புக்கள் ஒரு கட்டத்தில் படைச் சம நிலையை புலிகளுக்குச் சாதக மாக்கும். பின்னர் விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்கள், பக்காவாட்டுத்தாக்குதல்கள் பின்னால் இருந்து தாக்குதல்கள் போன்ற பல உத்திகளை கையாண்டு ஏற்கனவே இழந்த நிலப்பரப்பிலும் அதிக நிலப்பரப்பையும் சிங்களப் படைகளின் படைக் கலன்களையும் கைப்பற்றுவர் ஆனால் 2008இல் இருந்து அந்த நிலை இருந்தது. விடுதலைப் புலிகள் சிங்களப்படையினருக்கு ஏற்படுத்தும் ஆளணி இழப்புக்களை அயல்நாட்டில் இருந்து வந்த படையினர் ஈடு செய்தனர். அது எந்த நாடு என்று எமக்குத் தெரியும்.

எந்த நாட்டில் இருந்து இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட படையினர் வந்து தமிழின அழிப்புப் போரில் சிங்களப் படையினருக்கு உதவினர் என்று எமக்குத் தெரியும்.

எந்த நட்டில் இருந்து வந்த படையினரில் மூவாயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்று எமக்குத் தெரியும். அண்மைக்க்கால போர் வரலாற்றில் இது மிகப் பெரும் படைத்துறை ஆளணி இழப்பு என்பதும் எமக்குத் தெரியும்.

இலங்கையின் முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேக்கா 2009 ஆகஸ்ட் மாதம் முடிக்கத் திட்டமிட்டிருந்த போரை இந்தியப் பாராளமன்றத் தேர்தலுக்கு முன் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது யார் என்பது எமக்குத் தெரியும். அப்படி முடிப்பதாயின் அதிக அப்பாவிகள் கொல்லப்படலாம் என்று தெரிவித்த போது அப்பாவிகள் இழப்பைப் பற்றிக் கவலை கொள்ளாமல் போரை நடத்தவும் என்று சிங்களவர்களுக்கு யார் உத்தரவிட்டனர் என்று எமக்குத் தெரியும்.

சிங்களப் படையினர் மன்னாரில் இருந்து மேற் கொண்டு முன்னேற முடியாமல் தவித்த போது அங்கு என்ன தடைசெய்யப்பட்ட குண்டுகள் வீசப்பட்டன என்று எமக்குத் தெரியும். அந்தக் குண்டுகளை சிங்களவர்களுக்கு யார் வழங்கினர் என்று எமக்குத் தெரியும்.

ஈழக் கடலை எந்த நாட்டுக் கடற்படைக் கப்பல்கள் சூழ்ந்து நின்று தமிழர்களுக்கு உணவு ஆயுதம் போகாமலும் தமிழ்ரகள் தப்பி ஓடாமலும் காவல் நாய்கள் போல் காத்திருந்தனர் என்றும் எமக்குத் தெரியும்.

2009இன் ஆரம்பத்தில் இருந்து பிரபாகரன் தலை வேண்டும் என்று புலம்பிக்க் கொண்டிருந்தது யார் என்றும் எமக்குத் தெரியும்.

2009மே மாதம் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி இலங்கையில் தமிழர்களைக் கௌரவமாக வாழவைப்போம் என்று கூறியதும் எமக்குத் தெரியும். பின்னர் தமிழர்களின் வீட்டில் சிங்களப் படையினர் இரவென்றில்லைப் பகலென்றில்லை எந்த நேரமும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று எதுவும் செய்யலாம என்ற நிலையை ஏற்படுத்த சிங்களவர்களுக்கு உதவியவர்கள் யார் என்று எமக்குத் தெரியும்.

 2009 செப்டம்பர் ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகக் கூட்டத் தொடரில் இலங்கையில் இறுதிப் போரின் போது சிங்களப் படையினர் செய்த மனித உரிமை மீறல்களுக்காக கண்டனம் தெரிவிக்க ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்த தீர்மானத்தை மாற்றி அதை கடும் பிரயத்தனம் செய்து இலங்கைக்கு பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றியது மானங்கெட்ட இந்தியா என்பதும் எமக்குத் தெரியும்.

போருக்குப் பின்னர் இலங்கை அகதி முகாம்களைப் பார்க்க வந்து தமிழ்ர்கள் போர்க்குற்றவாளி எனக் கருதும் மஹிந்த ராஜபக்சவிற்கு பொன்னாடை போர்த்திய பன்னாடைப் பன்றிக் கூட்டம் எது என்றும் எமக்குத் தெரியும். அது மட்டுமா டில்லியில் நடந்த பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிக்கு வந்த போர்க்குற்றவாளிக்கு எந்த சொறி நாய்க்கூட்டம் செங்கம்பளம் விரித்து வரவேற்றது என்றும் எமக்குத் தெரியும்.

இவையெல்லாம் நாம் அறிந்திருக்க இப்போது புதிதாக ஒரு பொய்யைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அந்தப் பொய்:


  • அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளித்திருந்தது. இந்த முடிவை காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியே பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் சொன்னாராம்.  சோனியா காந்தியின் இந்த முடிவுக்குக் காரணம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டுக் கிடந்த ஒளிப்படமே எனப் பொய் கூறுகிறார்கள்.


இந்தியாவிற்காக இந்தியாவின் உதவியுடன் நடாத்தப்பட்ட இலங்கைப் போரில் 13வயதுச் சிறுவன் மட்டுமா கொல்லப்பட்டான். பிறந்த 13 நாளான குழந்தைகளும் கொல்லப்பட்டனர். உணவில்லாமல் பசியால் குழந்தைகள் இறந்தன. அவறை எல்லாம் பார்து பரவசம் அடைந்து கொண்டிருந்தவர் யார்?


வட இந்தியாவில் நடந்த சட்டசபைகளுக்கான தேர்தலில் காங்கிரசுக் கட்சி படு தோல்வியடைந்தது. ஏற்கனவே தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் இனி காங்கிரசுக் கட்சிக்கு எதிர்காலமே இல்லை என்பதை தமிழ்நாட்டுக் கதர் வேட்டிகள் நன்கு உணர்ந்து கொண்டன. காங்கிரசுக் கட்சி 2014 நடக்கவிருக்கும் இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற வேண்டுமாயின் தமிழர்களுக்கு உதவி செய்வது போல் நாடகமாட வேண்டும் அதற்காக ஜெனீவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. ஆனால் திரை மறைவில் பல சதிகள் செய்து தீர்மானம் கொண்டுவரமுன்னர் தீர்மானத்து வாசகங்களை மாற்றியது. இந்தியச் சதிகளைப்பற்றி அறிய கீழே உள்ள இணைப்பில் சொடுக்கவும்:
         அடுத்துக் கெடுத்த இந்தியா


தமிழர்களைப் பொறுத்தவரை சோனியா காந்தியும் அவரது காங்கிரசுக் கட்சியும் என்றும் மன்னிக்க முடியாத குற்றத்தை தமிழர்களுக்கு இழைத்து விட்டது. சோனியாவிற்காக வக்காலத்து வாங்குபவனோ அல்லது அவரது கட்சிக்கு வாக்களிப்பவனோ தமிழன் அல்லன்.


எச்சரிக்கை: கீழுள்ள படங்கள் கொடூரமானவை. இளகிய மனமுள்ளோர் பார்க்க வேண்டாம்:

 >
>
>








இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான படங்கள் இதிலும் மோசமான படங்கள் உண்டு. இந்த இனக்கொலையின் பங்காளி யார்?

Friday 30 March 2012

நகைச்சுவை: விரைந்து ஓடும் Made in India

அந்த ஜப்பானிய சுற்றுலாப் பயணி மிகவும் ஆர்வத்துடன் சிங்காரச் சென்னையில் வந்து இறங்கினார். அவர் ரஜனி நடித்த முத்து படத்தை மூன்று தடவையும் பாபா படத்தைப் பத்துத் தடவையும் எந்திரன் படத்தை ஏழு தடவையும் சிவாஜிபடத்தைப் பதினொரு தடவையும் பார்த்தவர். சென்னை விமான நிலையத்தில் இறங்கி ஒரு ஆட்டோவில் ஏறி சென்னை நகரை சுற்றிப்பார்க்கத் தன்னைக் கொண்டு செல்லும்படி ஓட்டுனரிடம் கூறினார். அவனும் அவரை குலுக்கோ குலுக்கு என்று குலுக்கிய படி ஆட்டோவை ஓட்டினான். முதலில் ஒரு ஹொண்டா அவர்களை முந்திச் சென்றது oh Honda, made in Jappan... going faster என்றார் அந்த ஜப்பானியர். சிறிது நேரம் கழித்து ஒரு யமாஹா அவர்களை முந்திச் சென்றது . oh Yamaha, made in Jappan... going faster என்றார் அந்த ஜப்பானியர். சிறிது நேரம் கழித்து இன்னொரு டொயோட்டா அவர்களை முந்திச் சென்றது. oh Toyota, made in Jappan... going faster என்றார் அந்த ஜப்பானியர். பயணம் முடிந்தது கட்டணம் எவ்வளவு என்றார் ஜப்பானியர். ஆட்டோ ஓட்டுனர் பத்தாயிரம் ரூபா என்றார். ஐயோ அத்தனை தொகையா என்றார் ஜப்பானியர். ஓட்டுனர் ஆட்டோ மீட்டரைக் காட்டி meter.......made in India.....going very very faster....என்றான்.


முக்கியமானது என் கையில்
அது ஒரு மனோநல மருத்துவ மனை. ஒரு குழு மன நோயாளர்களுக்கு நீண்டநாளாக சிகிச்சை அளித்த மருத்துவர் அந்நோயாளர்களை ஒரு அறைக்கு கொண்டு சென்று அவர்களில் மன நோயில் இருந்து விடுபட்டவர்கள் யார் என அறிய முயன்றார். அறையில் அவர்களை இருக்கச் சொல்லிவிட்டு கரும்பலகையில் ஒரு கதவின் படத்தைக் கீறி இந்த மருத்துவ மனையில் இருந்து தப்பிச் செல்ல விரும்புபவர்கள் இந்தக் கதவைத் திறந்து கொண்டு தப்பிப் போகலாம் என்றார். எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு அப்படத்தை நோக்கி ஓட ஒருவன் மட்டும் சிரித்தபடி உட்காந்திருந்தான். மருத்துவரும் ஒருவனுக்காவது மனநோய் குணமாகி விட்டது என்று மகிழ்ந்து அவனிடம் சென்று நீ தப்பி ஓடவில்லையா என்றார். அதற்கு அவன் கிறுக்குப் பயலுவ எப்படித் தப்பி ஓடுவாங்க பார்க்கலாம். அந்தக் கதவின் திறப்பு என் பாக்கெட்டில் இருக்கிறது என்றான் சிரித்தபடி. மருத்துவரும் மனநோயாளியானார்..

Thursday 29 March 2012

ராஜபக்சவின் எதிர்காலம்

உலகத்திலேயே அதிக அதிகாரம் கொண்ட மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச. தனது மக்களிடம் அசைக்க முடியாத செல்வாக்குப் பெற்றிருந்தார். இவரது செல்வாக்கு நேர்மை நியாயத்தின் அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்டதல்ல. சந்திரிக்கா பண்டாரநாயக்க இலங்கைக் குடியரசுத் தலைவராக இருந்த போது பிரதம மந்திரியாக யாரை நியமிப்பது என்ற கேள்வி வந்த போது அவரின் அரசியல் செல்வாக்கிற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்த சிங்கள தீவிரவாதக் கட்சியான ஜனதா விமுக்திப் பெரமுனையைத் திருப்திப்படுத்த அவர்களிடை செல்வாக்குப் பெற்றிருந்த மஹிந்த ராஜபக்ச பிரதம மந்திரியாக்கப்பட்டார். அதில் இருந்து அவர் தனது செல்வாக்கைக் கட்டி எழுப்பி தொடர்ந்து வந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று சந்திரிக்கா பண்டார நாயக்காவை ஓரம் கட்டி தனது கட்சியான் சிறீலங்கா சுதந்திரக் கட்சியைத் தன் குடும்பவசமாக்கினார். பின்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று தனது செல்வாக்கை உச்சத்திற்கு கொண்டு சென்றார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மஹிந்தவிற்கு பல நாடுகள் உதவின. முக்கய உதவிகள் இந்தியாவிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் கிடைத்தன. இதில் இந்தியாவிற்கு விடுதலைப்புலிகளை ஒழிக்க வேண்டும் என்ற தேவை இருந்தது. மஹிந்த ராஜபக்ச பகிரங்கமாக அறிவித்தார் இந்தியாவின் போரை தான் நடத்தி முடித்ததாக.


சமாதானப் பங்கிலாபம்(Peace dividends) சரியாகப் பங்கிடப்படவில்லை.
போருக்கு பின்னரான் "அபிவிருத்திப் பணி" எனப்படும் பொருளாதாரச் சுரண்டலில்  இலங்கை சீனாவிற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தது. போருக்குப் பின்னர் நடந்த இலங்கைக் குடியரசுத் தேர்தலில் அமெரிக்கா சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாகச் செயற்பட்டமை மஹிந்த ராஜபக்சவை அதிகம் சீனாபக்கம் நகர்த்தியது.

இந்தியாவின் கையாலாகத் தனம் அமெரிக்காவைக் களமிறக்கியது.
இலங்கையில் தமிழர்களின் ஆயுத போராட்டத்தை ஒழிப்பதே தனது பிரதான நோக்கமாகக் கொண்டு செயற்பட்ட இந்திய ஆட்சியாளர்கள் இந்தியாவின் பிராந்திய நலன்களைக் கோட்டை விட்டனர்.  இந்தனால் இலங்கையில் சீன ஆதிக்கம் அதிகரித்தது. இலங்கை இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்துக்குள் உட்பட்ட நாடு என்று இந்தியாவின் போக்குற்கு விட்டால் இலங்கை இன்னொரு கியூபா ஆகிவிடும் என்று உணர்ந்த அமெரிக்கா இலங்கை விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டது. இலங்கைக்கு எதிராக செயற்படத் தொடங்கிய அமெரிக்கா பல தடைகளை இந்தியாவிடமிருந்து எதிர் கொள்ள வேண்டியிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இந்தியா பல வைக்களிலும் செயற்பட்டது. பல சிரமங்களுக்கு மத்தியில் இந்தியாவின் ஆதரவை அமெரிக்கா பெற்றுக் கொண்டது. தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்த பின்னர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை அதிபர் ராஜபக்சவிற்கு ஒரு கடிதம் எழுதினார். இலங்கையை இந்தியா அக்கடிதத்தில் மன்றாடியிருந்தது என்று இலங்கை அரசியல்வாதிகள் தெரிவித்தனர். இந்திய அரசறிவியலாளர் சூரியநாராயணன் அப்படி ஒரு கடிதம் இந்தியா எழுதியிருந்திருக்கத் தேவையில்லை என்றார். இலங்கையின் கையில் இந்தியா தொடர்பான ஒரு பிடி இருந்த படியால்தான் அப்படி ஒரு கடிதம் எழுதப்பட்டிருக்க வேண்டும். அது இலங்கையில் நடந்த போர்க்குற்றதில் இந்தியாவின் பங்களிப்பைத் தவிர வேறு என்ன?

ஜெனீவாத் தீர்மானத்தின் பின்னர் ராஜபக்ச
ஐநா மனித உரிமைக் கழகத்தில் இலங்கைகு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பின்னர் ராஜபக்ச தனது அரசியல் சகாக்களைக் கலந்து ஆலோசிக்கவில்லை. கொழும்பில் உரையாற்ற விருந்த அமெரிக்கர்களை தடை செய்தார். இந்தியா கஷ்மீரில் செய்யும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தப் போவதாகச் சொன்னார். அமெரிக்காவிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை அரங்கேற்றினார். தனது சகாவான விமல் வீரவனசவை அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்க அறைகூவல் விடுக்கச் செய்தார். தான் என்ன செய்ய வேண்டும் என்று தனக்கு யாரும் சொல்லத் தேவையில்லை என்றார். அவரது அடியால் மேர்வின் சில்வா ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கருத்துத் தெரிவித்த ஊடகவியலாளர்களின் கை கால்களை முறிப்பேன் என்றார். ஆக மொத்தத்தில் ராஜபக்ச ஜெனீவாத் தீர்மானத்தை ஏற்கும் நிலையில் இல்லை. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதாயின் இலங்கைப் படையினரின் போர்க்கால அத்து மீறல்களை விசாரித்துத் தண்டிக்க வேண்டும். இது "மஹிந்த சிந்தனைக்கு" முற்றிலும் முரணானது.

இரு தலைக் கொள்ளி எறும்பாக மஹிந்த
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றினால் உள்ளூரில் பலத்த எதிர்ப்பை மஹிந்த சந்திக்க வேண்டும். நிறைவேற்றாவிட்டால் பன்னாட்டு மட்டத்தில் பெரும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டும். 1983இல் தமிழர்களின் நண்பனாகக் களமிறங்கிய இந்தியா பின்னர் 1987இல் தமிழர்களின் மோசமான எதிரியாக மாறியது. அது போலவே இதுவரை சிங்களவர்களின் சில்லறைக் கைக்கூலி போல் செயற்பட்டு அவர்களுக்கு சகல உதவிகளையும் செய்து வந்த இந்தியா இனி அவர்களின் காலை வாரிவிட்டு அவர்களுக்கு எதிராக செயற்படலாம். சீனா மட்டுமே இப்போது மஹிந்தவின் நண்பன். அந்த நட்பு அவருக்கு பல எதிரிகளை உருவாக்கும்.


மூன்று மாதங்களின் பின்னர் அமெரிக்கா மேலும் தீவிரமாகும்
இலங்கையின் அடுத்த நகர்வுகளை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனிக்கும். மூன்று மாதங்களின் பின்னர் அமெரிக்கா தனது காய்களை தீவிரமக நகர்த்தும். கியூபா போன்ற இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்ட நாடுகளுக்கு  இலங்கையின் உண்மையான அடைகுமுறை பற்றி உணர்த்தப்படும். அதற்குரிய வேலைகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. பன்னாட்டு அறிஞர்கள் குழு ஜெனீவாத் தீர்மானம் வெளிவந்தவுடன் இலங்கை இன்னும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிக்கை விட்டது. இது அமெரிக்காவின் வேண்டுதலின் பேரில் நடந்திருக்கலாம். ஜெனீவாத் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரை அது அமெரிக்காவின் தீர்மானம். அது நிறைவேற்றப்பட்ட பின்னர் அது ஐநா மனித உரிமைக் கழகத்தின் தீர்மானம். இனி அந்த தீர்மானம் தொடர்பாக இலங்கை என்ன செய்கிறது என்பதை மனித உரிமைக் கழகம் அவதானிக்கும். இலங்கைக்கு ஆலோசனைகள் வழங்க முன்வரும். அவற்றை மஹிந்த நிராகரிப்பார். ஜெனீவாத் தீர்மானத்தின் முக்கிய அம்சம் இலங்கை மனித உரிமைக் கழகத்தின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்பதும் மனித உரிமைக் கழகம் அது தொடர்பாக 2014 செப்டம்பரில் நடக்க விருக்கும் மனித உரிமைக் கழகக் கூட்டத் தொடரில் அறிக்கை சமர்ப்பிக்கப் படவேண்டும் என்பதே.

 இந்தியாவின் போர்க்குற்றம் அம்பலத்துக்கு வரும்
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களில் இந்தியாவின் பங்களிப்பு அம்பலத்திற்கு வரும். எத்தனை இந்தியப் படையினர் நேரடியாக ஈடுபட்டிருந்தனர் என்பதும் உண்மையிலேயே மூவாயிரத்திற்கு மேற்பட்ட இந்தியப் படையினர் கொல்லப்பட்டனரா என்பதும் சிவ சங்கர மேனனின் திருவிளையாடல்கள் நாராயணின் லீலைகள் கருணாநிதியும் சிதம்பரமும் சேர்ந்து ஆடிய நாடகங்கள் கனிமொழி, ஜகத் கஸ்பர் போன்றோரின் இறுதிக் கட்டச் சதிகள் போன்றவை அம்பலமாகும்.

செய்மதிப் படங்கள்
அமெரிக்காவிடமும் இந்தியாவிடமும் இலங்கையின் இறுதிப் போரின்போது நடந்த கொடூரங்களுக்கான ஆதார செய்மதிப் படப் பதிவுகள் எப்படியாவது இனி அம்பலத்திற்கு வரும். அது பெரிய போர்க்குற்ற சாட்சியாக அமையும்.

ஜீ எல் பீரிஸ் மீண்டும் தாவுவார்.
ஜெனீவாவில் நடந்த 19வது மனித உரிமைக் கழகக் கூட்டத் தொடரில் பெரும் சோதனைக்கும் வேதனைக்கும் உள்ளானவர் மஹிந்தவின் வெளிநாட்டு அமைச்சர் ஜீ எல் பீரிஸ். இவர் மஹிந்தவால் ஜெனீவாவில் வைத்துக் கடுமையாகத் கண்டிக்கப் பட்டுள்ளார். மஹிந்த தனது வெளிநாட்டமைச்சர் பீரிஸை கடுமையான தூஷண வார்த்தைகளால் திட்டியதாகவும் அதனால் அவர் அமர்ந்திருந்த ஆசனத்தயே  ஈரமாக்கி விட்டதாகவும் கொழும்பில் கதைகள் அடிபடுகின்றனவாம். பீரிஸ் கட்சி தாவுவதில் பிரபலமானவர்.  விரைவில் ஜீ எல் பீரிஸ் மஹிந்தவை விட்டு விலகலாம்.  ஜீ எல் பீரிஸ் உள் இருந்து கொண்டே அமெரிக்காவின் உளவாளியாகச் செயற்படலாம். அதனால் அவரை மஹிந்த பதிவியில் இருந்து தூக்கி எறியலாம. இந்த இரணு முறையில் எந்த முறையில் பீரிஸ் பதவி விலகினாலும்  அப்போது மஹிந்தவின் முடிவு ஆரம்பமாகிவிட்டது என உறுதியாகக் கூறலாம்.


2014 செப்டம்பர் ராஜபக்சவிற்கு பெரும் திருப்பு முனையாக அமையும்
2014 செப்டம்பரில் நடக்க இருக்கும் மனித உரிமைக் கழகக் கூட்டத் தொடரில் ராஜபக்சதான் முக்கியத்துவம் பெறுவார். அதில் அல்லது 2015 மார்ச்சில் ராஜபக்சவிற்கு எதிராக கடுமையான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அப்போது அவர் மும்மர் கடாஃபி போல் பன்னாட்டு அரங்கில் தனிமைப் படுத்த்தப் பட்டு விடுவார். அவரும் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சவும் மேலும் பல இலங்கைப் படைத் துறையினரும் பன்னாட்டு நீதி விசாரணைக்கு உடபடுத்தப் படுவர். 2016இற்கும் 2017இற்கும் இடையில் அவர்கள் தண்டிக்கப்படலாம். அப்போது பான் கீ மூனோ இந்தியாவின் விஜய் நம்பியாரோ ஐக்கிய நாடுகள் சபையில் இருக்க மாட்டார்கள். இந்தியாவில் நிலைமை தலை கீழாக மாறியிருக்கும். நேரு-கான் குடுமபம் இத்தாலியில் குடியேறி இருக்கும். திருப்பதிக் கோவிலில் பரிகாரம் தேட முடியாமல் இருக்கும்.

Wednesday 28 March 2012

கணவன் மனைவி நகைச்சுவைகள்

ஒருவன் இரு தருணங்களில்
பெண்ணைப் புரிந்து கொள்வதில்லை
ஒன்று திருமணத்தின் முன்
மற்றது திருமணத்தின் பின்

திருமணமாகும் வரை
ஒருவன் பூரணமாவதில்லை
திருமணமானபின்
வாழ்வதில்லை

போருக்கும் திருமணத்திற்கும் என்ன வேற்றுமை?
போரில் எதிரிகள் ஒரே கட்டிலில் உறங்குவதில்லை.


கணவன்: திருமண முதலாம் ஆண்டு நிறைவை எங்கு கொண்டாடுவோம்?
மனைவி: நான் இதற்கு முன்னர் போகாத ஒரு இடம் செல்ல வேண்டும்.
கணவன்: சமையலறைக்குப் போ!!!!

திருமணத்தின் போது
அவள் நினைத்தாள்
திருமணத்தின் பின்
இவன் மாறிவிடுவான் என்று
அவன் மாறினான்.
திருமணத்தின் போது
அவன் நினைத்தான்
இவள் இன்றுபோல் என்றும்
அன்பாயிருப்பாள்
இனி மாறமாட்டாள் என்று
அவள் மாறினாள்

அவன் தன் Facebookஇல்
எழுதினான் நான் விவாகரத்துச்
செய்யப் போகிறேன்
முதல் Like வந்தது
அவன் மனைவியிடம் இருந்து

Tuesday 27 March 2012

இலங்கை தொடர்பாக இந்தியாவின் கொள்கை மாறுகிறதா?

இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் பிரகாஷ் மேனன் சென்னைப் பல்கலைக் கழகத்தில் "இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கான சவால்கள்" என்னும் தலைப்பில் உரையாற்றும் போது இலங்கை போருக்குப் பின்னர் போதிய அளவு செய்யவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில் அவர்கள் நீண்டகால அடிப்படையில் சமாதானத்தை இழப்பார்கள் என்றார். இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்கான காரணத்தை விளக்குகையில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் பிரகாஷ் மேனன் இந்தியா கூட்டணி அரசின் அரசியல் காரணங்களுக்காக அல்லாமல் இந்தியாவின் வாக்கு ஒரு பெறுமதி அடிப்படையிலான கணக்கிடப்பட்டு அளிக்கப்பட்ட வாக்கு என்றார்.

இலங்கையில் இந்தியாவை சீனா மிஞ்சி விட்டதா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் பிரகாஷ் மேனன் "அதற்குக் காலம்தான் பதில் கூறும்" என்றார்.

இதற்கு முன்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கேந்திரோபாய விவகாரத் துறைத் தலைவர் கோபால்ஜீ மாளவையா "இலங்கை சீனாவை நெருங்கி வருகிறது. இலங்கை இந்தியாவில் இருந்து விலகி சீனாவை நெருங்கிச் செல்வதை இந்தியா அனுமதிப்பதா இல்லையா என்பது ஒரு அரசியல் சம்பந்தப்பட்ட பிரச்சனை. ஏற்கனவே நாம் நேப்பாளத்தை இழந்து விட்டோம். மேற்கு வங்க முதல்வரின் பேச்சுக்களால் பங்களாதேசம் கொதிநிலை அடைந்துள்ளது." என்றார்.

இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் பிரகாஷ் மேனன் அவர்களின் உரை இந்தியாவின் இந்தியாவின் கொள்கை மாற்றத்திற்கு அடிக்கல் நாட்டுகிறது என்று கூறலாம். உண்மையில் இலங்கையில் சீனாவுடனான போட்டியில் இந்தியா தோற்று விட்டது என்பதுதான் உண்மை. சீனாவுடன் போட்டி போட்டுக் கொண்டு இலங்கைக்கு இந்தியா உதவி செய்து வந்தது. விளைவு தமிழர்களின் ஆயுத போராட்டம் வலுவிளந்தது. தமிழர் போராட்டம் வலுவிழந்த பின்னர் இலங்கை மீதான பிடியை  இந்தியா இழந்து விட்டது. மஹிந்த ராஜபக்ச தனது மந்திரி ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தனது நண்பர்களுடன் உரையாடுகையில் இலங்கைக்குப் பயணம் செய்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவை தான் எப்படி ஏமாற்றினார் என்று சொல்லிப் பெருமையடித்துக் கொண்டார். இலங்கை தொடர்பாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அந்த அளவு பலவீனமாக இருந்தது.

இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் பிரகாஷ் மேனனின் உரைக்கு ரைம்ஸ் ஒவ் இந்தியாவில் பின்னூட்ட மிட்ட ஒருவர் கூறியது:
India is loosing Lanka not because of supporting human rights motion, but because is wicked politics, crooked behavior,dishonesty, lack of principles, lack of vision, lack of good faith, double face, twisted tongue and every bad behavior one can attribute. India is in the hands of elitist Mafia.
இந்தியா இலங்கையை இழப்பது மனித உரிமைத் தீர்மாந்த்திற்கு ஆதரவு வழங்கியதற்காகவல்ல, இந்தியாவின் கொடூரமான அரசியல், குறுக்கு பண்புகள், நேர்மையின்மை, கொள்கைகள் போதாமை, தூர நோக்கின்மை, நன்நம்பிக்கையின்மை, இரட்டை முகம், இரட்டை நாக்கு, போன்ற பல துர் குணங்களே காரணம். இந்தியா தம்மை மேலானவர்கள் என்ற கொள்கையுடைய மாஃபியாவின் கையில் உள்ளது.

இந்தியாவின் நேர்மையற்ற ஆட்சியாளர்களும் குடும்ப ஆதிக்கமும் சாதி வெறிபிடித்த தென்மண்டலப் பார்ப்பனர்களுமே இலங்கையில் இந்தியா விட்ட தவறுகளுக்கும் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கும் காரணம். அவர்கள் இந்தியா உதவாவிட்டால் சீனா இலங்கைக்கு உதவும் என்ற பொய்யையும் இலங்கையில் தமிழர்கள் உரிமை பெற்றால் அது இந்தியாவில் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்ற பொய்யையும் சொல்லி தமிழர்களின் போராட்டத்தை வலுவிழக்கச் செய்தனர்.





இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் பிரகாஷ் மேனனின் கூற்று இந்தியாவின் கொள்கை மாற்றத்திற்கு அடிக்கல் நட்டுவிட்டது என்று கூறலாம். இலங்கை தொடர்பாக இந்தியாவின் கொள்கை மாற்றத்தின் ஒரு அம்சமாக இலங்கைத் தோட்டத் தொழிலாளர் காங்கிரசு மஹிந்த ராஜபக்ச அரசில் இருந்து வெளியேறுகிறது. அந்த மாற்றம் தமிழர்களுக்கு சாதகமாக மாறுமா என்பது தான் கேள்வி.

பூநூல்களும் மல்லு அங்கிள்களும்

புது டில்லி அதிகார மையத்துள் சீனக் கைக்கூலிகள் ஜவகர்லால் நேரு காலத்தில் இருந்தே செயற்படுகின்றனர்.  அவர்களின் மனுதர்மப் படி சூத்திரனான தமிழர்கள் ஆளக்கூடாது. அவன் ஆளப்பட வேண்டியவன். அவர்கள் இந்தியாவின் பிராந்திய நலனைக் கோட்டை விட்டு தமது சாதிய நலன்களை முன்னிறுத்தியதன் விளைவுதான் இலங்கையில் சீனாவின் ஆழ-அகலக் காலூன்றல். இந்தியாவைச் சுற்றியுள்ள மற்ற நாடுகளான மியன்மார், பங்களாதேசம், பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளில் சீனா திட்டமிட்ட முறையில் தனது ஆதிக்கத்தை அதிகரித்துவிட்டது. அண்மையில் துக்ளக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்தும் ராஜ்பக்சவிற்கு வக்காலத்து வாங்கியும் சோ எழுதியது எமக்கு சில செய்திகளை எடுத்துக் காட்டுகிறது. எத்தனை சனல்-4 காணொளிகள் வந்தாலும் முழு உலகும் தமிழர்களுக்கு நடந்த அநியாயங்களின் உண்மையை உணர்ந்தாலும் இந்தப் பூநூல்களும் மல்லு அங்கிள்களும் என்றும் தமிழர்களை ஒழித்துக் கட்டுவதில் பஞ்ச கஜத்தை வரிந்து கட்டிக் கொண்டுதான் நிற்பார்கள். இவர்களின் ஆதிக்கம் புது டில்லியின் அதிகார மையமான தென்மண்டலத்தில் இருக்கும் வரை இந்தியாவின் கொள்கை தமிழர்களுக்கு நியாயத்தை வழங்கும் அளவிற்கு மாறாது.

இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை மாற்றம் தமிழர்களைப் பொறுத்த வரை காலம் கடந்துவிட்டது. இந்தியாவின் கொள்கை மாறினாலும் அது இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை நாடியதாகவே இருக்குமே தவிர தமிழர்கள் நலன் சார்ந்ததாக இருக்காது. அமெரிக்காவின் இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தையே விரும்புகிறது. அமெரிக்கா சிங்களவர்களின் வெறுப்பைச் சம்பாதிக்காமல் இருக்க நினைக்கிறது.  1980களில் தமிழர்களின் முதுகில் ஏறி இந்தியா இலங்கையை கட்டுக்குள் கொண்டுவந்தது போல் இப்போது அமெரிக்கா செய்ய நினைக்கிறது. உலக வர்த்தகத்தில் மூன்றில் இரண்டு பங்கிற்கான கடற்போக்கு வரத்து அமைந்துள்ள இந்து சமூத்திரத்தில் முக்கிய இடத்தில் இருக்கும் இலங்கையில் வல்லரசு நாடுகளிற்கு இடையின போட்டி  சிங்களவர்களுக்கோ தமிழர்களுக்கோ நன்மையாக அமையாது.

Monday 26 March 2012

மம்தா பனர்ஜீ: சீறும் வங்கப் பெண் புலி தேறுமா?

நேர்மையான அரசியல்வாதி, துணிச்சாலான அரசியல்வாதி, குடும்பச் செல்வாக்கை முன்வைத்து அரசியலுக்கு வராத அரசியல்வாதி இப்படிப் பல பாரராட்டுதல்களைப் பெற்றவர் இந்தியாவின் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பனர்ஜீ. இவர் பெயர் இப்போது இந்தியத் தேசிய அரசியலில் பெரிதாக அடிபடுகிறது. குடும்பப் பிடிக்குள் அகப்பட்ட காங்கிரசுக் கட்சியும் மதவாதக் கட்சியான பாரத் ஜனதாக் கட்சியும் மட்டும்தான் இந்தியாவை ஆளவேண்டுமா என்ற கேள்விக்கு பதிலாக மூன்றாம் அணி என்பது பதிலாகும் போது மாநிலத் தலைவர்களான மம்தா பனர்ஜீ, ஜெயலலிதா, போன்றோர் முக்கியத்துவம் பெறுகின்றனர். தனது கட்சியைச் சேர்ந்த இந்திய தொடரூந்துத் துறை அமைச்சர் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் பயணக் கட்டங்கள் அதிகரித்தமைக்காக அவரைப் பதவியில் இருந்து விலகச் செய்ததால் அவர் பெயர் உலகெங்கும் அடிபட்டது.

கல்லூரியில் கற்றுக் கொண்டிருக்க்கும் போதே காங்கிரசுக் கட்சியில் இணைந்து அதன் இளைஞரணித் தலைவியாகி குறுகிய காலத்தில் புகழ்பெற்றார் மம்தா. இன்றுவரை திருமணமாகவில்லை. அவர் எந்த அழகு சாதனமும் பவிப்பதில்ல்லை. நகைகள் அணிவதில்லை. 96இலட்சம் ரூபாக்கள் பெறுமதியுள்ள நகைகள் அவரிடம் இருக்கின்றன. ஒரு நீலக்கரையுடனான அல்லது பச்சைக் கரையுடனான வெள்ளை நூற்ச் சேலையை விரும்பி அணிவார். ஒரு முறை ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்றபோது தனது மருமளுக்கு உதட்டுச் சாயம் வாங்கச் சென்ற இவர் பெண்களின் உதட்டுச் சாயம் என நினைத்து ஆண்களின் அழகு சாதனத்தை வாங்கினார். கலாநிதிப்பட்டம் பெற்றவர்.  நிறையப் படித்தவரான மம்தா பனர்ஜீ அனுபவப் பாடசாலையில் நிறைய அரசியல் கற்றவர். சரித்திரம், சட்டம், கல்வியியல் துறைகளில் பட்டம் பெற்றவர். அரசியலில் மிகச் சிறந்த எதிர்ப்பாளராகச் செயற்படக்கூடியவர் மம்தா. அதில் புகழ் பெற்றவர். எதிர்க்க ஒன்றும் இல்லாவிடில்  எதிர்ப்பதற்கு எதையாவது உருவாக்கக் கூடியவர்.

சண்டிராணி மம்தா
1984-ம் ஆண்டு 29வயதான மம்தா பனர்ஜீ பிரபல பொதுவுடமைவாதியான சோமநாத் சட்டர்ஜீயைத் தோற்கடித்து இந்தியப் பாரளமன்றத்திற்குத் தெரிவானார். 1991இல் நரசிம்மராவ் அரசில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணை அமைச்சரானார். அமைச்சராக இருந்து கொண்டே அரசு விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கவில்லை என்று எதிர்ப்புக் காட்டினார். 1996இல் மகளி இட ஒதுக்கீட்டை எதிர்த்த ஒரு பாராளமன்ற உறுப்பினரை பாராளமன்ற வளாகத்தில் இருந்து  சட்டையில் பிடித்து இழுத்து வெளியேற்றினார். 2006இல் பங்களாதேசத்தில் இருந்து வரும் கள்ளக் குடியேற்றக்காரர்காள் தொடர்பான தனது பிரேணனையை விவாதத்திற்கு எடுக்காத பாராளமன்ற சபாநாயகர்மீது தனது பதவி விலகல் கடிதத்தை வீசினார்.

சொந்த அரசியல் கட்சி
1997இல் காங்கிரசுக் கட்சியில் இருந்து வெளியேறி திரினமூல் காங்கிரசுக் கட்சியை ஆரம்பித்தார். 1999இல் பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி அமைத்து 2000இல் தொடரூந்துத்துறை அமைச்சராகி திறம்படச் செயற்பட்டார். 2001இல் ஆயுத பேர ஊழல் அம்பலமானததைத் தொடர்ந்து ஊழல் புரிந்த அரசை எதிர்த்து அமைச்சர் பதவியைத் துறந்தார். மீண்டும் 2004இல் நிலக்கரித்துறை அமைச்சரானார். இவரை ஊழல் அற்றவர் என்றும் எளிமையாவர் என்றும் இவரது ஆதரவாளர்கள் கூறிய போதும் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த இவரிடம் 52கோடி பெறுமதியான சொத்து உண்டு. இவரை இவரது ஆதரவாளர்கள் அக்கா என்றே அழைக்கின்றனர்.

தூக்கிவிட்ட நந்திக்கிராம எதிர்ப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பொதுவுடமைவாதிகளின் அரசு விவசாயிகளின் நிலங்களை இந்தோனிசிய நிறுவனத்தின் முதலீட்டிற்காக பறித்தபோது அதை மம்தா கடுமையாக எதிர்த்தார். நில அபகரிப்புக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்தபோது மாநில அரசு அவர்கள்மீது கட்சித் தொண்டர்களையும் காவல்துறையினரையும் ஏவிவிட்டது. பெரும் கலவரம் நிகழ்ந்தது. இது மம்தாவின் செல்வாக்கை மக்கள் மத்தியில் அதிகரித்தது. 2009இல் நடந்த இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் மம்தா பனர்ஜீ காங்கிர்சுடன் கூட்டணை அமைத்து அமோக வெற்றியீட்டினார். மீண்டும் தொடரூந்துத் துறை அமைச்சரானார். 2011இல் மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் மம்தாவின் திரினமூல் காங்கிரசுக் கட்சி பெரும் வெற்றி ஈட்டியது. உலகத்திலேயே அதிககாலம் தேர்தலில் மூலம் தேர்தெடுக்கப்பட்டு ஆட்சியில் இருந்த பொதுவுடமைக்கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது. மம்தா மேற்கு வங்க மாநில முதலமைச்சரானார். விவசாயிகளிடம் இருந்து  பறிக்கப்பட்ட நிலம் மீண்டும் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்திய மத்திய அரசில் மம்தாவின் கட்சியைச் சேர்ந்த  திரிவேதி தொடரூந்துத் துறை அமைச்சரானார். மாநில முதல்வரான மம்தா மாநிலத்தில் வாழும் கூர்க்காக்களின் பிரச்சனையைத் தீர்க்க அவர்களுடம் ஒப்பந்தம் செய்து கொண்டார். மாவோயிஸ்டுக்கள் வாழும் பிரதேசத்தில் அவர்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை முன்வைத்தார்.

பிரணாப் முகர்ஜீ
சித்தார்த்த சங்கரே போன்ற காங்கிரசுக் கட்சியினர் மாநிலத்தில் பொதுவுடமைக் கட்சி பெரும் செல்வாக்குடன் திகழ்ந்ததால் மாநில அரசியலில் அதிக அக்கறை காட்டாமல் மத்திய அரசில் அதிக அக்கறை எடுத்து அமைச்சர்களானார்கள். மம்தா இரு முனைகளிலும் தனது அக்கறையையும் திறமையையும் காட்டுகிறார். கொல்கத்தாவில் இருந்து  கொண்டு புது டில்லியை ஆளுகிறார் என்று இவரை விமர்சிக்கிறார்கள். இவரது மருமகன் அண்மையில் காவல்துறையினரைத் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டார். இது அவரது நேர்மைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தது. ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த ஒரு கற்பழிப்பின் குற்றவாளிகளைக் கண்டு பிடித்த  காவல்துறை அதிகாரிகளுடன் மம்தா நடந்து கொண்டவிதம் அவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியது.

காங்கிரசுக் கட்சியுடன் கூட்டணியாக இருந்து கொண்டே காங்கிரசின் ஆட்சியை பல வழிகளில் எதிர்த்து வருகிறார் மம்தா பனர்ஜீ. தன்னுடன் கலந்து ஆலோசிக்காமல் தேசிய பயங்கரவாத எதிர்ப்புச் சபையை மத்திய அரசு அமைப்பதைக் கடுமையாக எதிர்க்கிறார் மம்தா. அத்துடன் எரிபொருள் விலை அதிகரிப்பு, தேசிய உணவுப் பாதுகாப்ப்பு மசோதா போன்றவற்றை எதிர்க்கிறார். கூட்டணிக் கட்சியான காங்கிரசைக் கலந்து ஆலோசிக்காமல் மேற்கு வங்கத்திலவெற்றிடமாகும் 5 மாநிலங்களவஉறுப்பினரபதவிகளில் 4 இடங்களிலதனததிரினாமூலகாங்கிரஸகட்சியிலஇருந்தவேட்பாளர்களநிறுத்தி காங்கிரஸகட்சிக்கமமதபானர்ஜி அதிர்ச்சியளித்துள்ளார. மம்தா தந்து அரசியல் செல்வாக்கை மேற்கு வங்கத்தையும் தாண்டி அகலப்படுத்த முனைகிறார். அதற்காகத்தான் இந்தனை அரச எதிர்ப்பு நிலைப்பாடு என்று சொல்பவர்களும் உண்டு.

அதிக மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசுக் கட்சி மாநில சட்ட சபைத்தேர்தலில் படு தோல்வியைச் சந்தித்தமை காங்கிரசுக் கட்சிக்கு அதன் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது. இதில் மம்தாவின் திரிணாமூல் காங்கிரசுக் கட்சி முக்கிய இடம் பெறுகிறது. உத்தரப் பிரதேச தேர்தலில் மாயாவதியின் பகுஜன் கட்சியும் படுதோல்வியடைந்தது. பாரதிய ஜனதாக் கட்சியும் தோல்விகண்டது. இது மூன்றாம் அணி ஒன்றிற்கான அவசியத்தை உருவாக்கியுள்ளது. ஊழலுக்குப் பெயர் பெற்ற காங்கிரசுடன் செல்வாக்கு மிக்க பங்காளியாக மம்தா இணைவாரா? அல்லது இந்திய அரசியலில் மூன்றாம் அணியில் முன்னணித் தலைவராகத் திகழ்வாரா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...