Saturday 4 February 2012

Nothing left but emptiness

My nerves used to get on fire
On a single wink of your eyes
A new spring came to my life
In the shape of you
I was in love
I felt so high
I did not where to fly


But everything gone now
Nothing left but emptiness
A very deep isolation
I need a string of hope
To me out of this mess
Infiltrated heart
Trespassed mind
Feel like in an empty ship
In the middle of deep sea
I want relief from this pain
Badly need your hand.


I hear the melody you sing
Even from thousands miles away
I can feel your heart-beat
Even though I am not in it


My nerves used to get on fire
On a single wink of your eyes
A new spring in my life
In the shape of you
I am in love
I feel so high
I do not where to fly

Friday 3 February 2012

உதட்டோடு சொல்லும் ரகசியம்

ஆன்மாவின் சுவையளக்கும்
உடலெங்கும் கோலம் போடும்
முத்தம்

உணர்ச்சிகளின் வடிகால்
காதல் மொழியின் அரிச்சுவடி
முத்தம்

கொடுத்தால் சுகம்
எடுத்தால் மயக்கம்
முத்தம்

அணைபின் உடன் பிறப்பு
உதட்டோடு சொல்லும் ரகசியம்
முத்தம்


காதலின் கையொப்பம்
இதயங்களின் இணைப்பு
முத்தம்


தமிழினத்திற்கு ஒரு தாலாட்டு

கடாரம் கண்ட களைப்புண்டு
கங்கை வென்ற களைப்புண்டு
சங்கத்தில் பாடிய களைப்புண்டு
தொல்காப்பியத் தொட்டிலிலே
குறளிசை குளிரக் கேட்டு
கண்வளராய் கண்வளராய்
தமிழினமே கண்வளராய்
கண்விழித்தால் பல தொலைகள்
உன்னைச் சூழவுண்டு

கண்வளராய் கண்வளராய்
தமிழினமே கண்வளராய்

சேலை அணிந்த  முசோலினி
தன் ஒரு தாலி எவ
ரோ எடுத்ததற்கு
ஒரு இலட்சம் தாலி பறித்தெடுத்தாள்

கண்வளராய் கண்வளராய்
தமிழினமே கண்வளராய்
கண்விழித்தால் பல தொலைகள்
உன்னைச் சூழவுண்டு

கண்வளராய் கண்வளராய்
தமிழினமே கண்வளராய்

காட்டுக் கொடுக்கப் பலருண்டு
கருவறுக்கப் பலருண்டு - கூடிக்
கழுத்தறுக்கப் பலருண்டு
உதவிக்கென வந்த ஊடுருவிகளின்
உபத்திரவம் நிறையவுண்டு

கண்வளராய் கண்வளராய்
தமிழினமே கண்வளராய்
கண்விழித்தால் பல தொலைகள்
உன்னைச் சூழவுண்டு

கண்வளராய் கண்வளராய்


போகும் இடம் எதுவென்று தெரியவில்லை
போக வேண்டிய இடமும் எங்கென்று புரியவில்லை
வழி நடத்தி வந்தோர் வழிதவறிப் போயினர்
துணைக்கென வந்தோர் துரோகிகளாயினர்
தீர்க்கவென வந்தோர்  தீர்த்துக் கட்டினர்

கண்வளராய் கண்வளராய்
தமிழினமே கண்வளராய்
கண்விழித்தால் பல தொலைகள்
உன்னைச் சூழவுண்டு

கண்வளராய் கண்வளராய்

Thursday 2 February 2012

சிதைவுறும் ஈரானியப் பொருளாதாரமும் அடி வாங்கப்போகும் அமெரிக்காவும்

இசுலாமிய நாடுகளில்  துருக்கி, இந்தோனேசியா, சவுதி அரேபியா ஆகியவற்றுக்கு அடுத்தபடியா நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டது ஈரான். ஒபெக் நாடுகளில் இரண்டாவது பெரிய எரிபொருள் ஏற்றுமதி நாடு ஈரான். ஐக்கிய அமெரிக்காவின் திறைசேரி ஈரானின் ஐந்து அரச வங்கிகளின் மீது தடை விதித்ததைத் தொடர்ந்து ஈரானின் வெளியுலக நாணயத் தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது என்று சொல்கப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவின் பராக் ஒபாமாவின் நிர்வாகம் ஈரானியப் பொருளாதாரத்திற்கு ஒரு சுருக்குக் கயிறைப் போட்டது. ஈரானின் மத்திய வங்கியுடன் எந்த வங்கியாவது தொடர்புகளை வைத்திருந்தால் அந்த வங்கிகள் அமெரிக்க டாலரின் பன்னாட்டுக் கொடுப்பனவு முறைமையில் இருந்து விலக்கப்படும் என்ற அறிவிப்பே அந்தச் சுருக்குக் கயிறு. பல வங்கிகள் அதை ஏற்றுக் கொண்டன. இது ஈரானிய நாணயத்தின் மதிப்பைப் பெரிதும் பாதித்தது. ஐரோப்பிய ஒன்றியம் ஈரானில் இருந்து எரிபொருள் இறக்குமதியைத் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானும் தென் கொரியாவும் ஈரானில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதைக் குறைத்துக் கொண்டன. இது ஈரானியப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஈரானிய நாணயமான ரியாலின் பெறுமதி ஃபெப்ரவரி முதலாம் திகதி(நேற்று) 11% வீழ்ச்சியடைந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஈரானிய நாணயம் 80% பெறுமதிக் குறைவு. இப்போது ஒரு அமெரிக்க டாலர் 20,500 ரியாலகளாக இப்போது விற்கப்படுகிறது. ஏற்பட்டது. ஈரானின் மத்திய வங்கியால் ஈரானின் வட்டி வீதம் 20% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நாட்டில் உள்ள சந்தை வட்டி வீதத்திலும் அரைப்பங்கு என்று சொல்லப்படுகிறது.

எண்ணெய் விலை அதிகரிப்பு
பெப்ரவரி முதலாம் திகதி எண்ணெய் விலையும் ஒரு டாலரால் அதிகரித்தது. இவ் அதிகரிப்புக் காரணம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நாணயப் பிரச்சனையும் கிரேக்கத்தின் கடன் பிரச்சனையும் தீர்க்கப்படும் அறிகுறி காணப்படுவதும் ஒரு காரணம். இப்பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால் உலகப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் அதனால் எண்ணெய்க்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

டாலர் என்று குறுந்தகவல் அனுப்பத்தடை
ஈரான் தனது நாணயமான ரியால் விற்கப்படுவதைத் தடுக்க பெரும் முயற்ச்சி செய்கிறது. மேற்கு நாடுகளின் நாணயங்களான டாலர், யூரோ, பவுண் ஆகியவை வாங்குவதைத் தடை செய்துள்ளது. ஈரானில் கைப்பேசிகளினூடாகவும் மின்னஞ்சல்கள் ஊடாகவும் "டாலர்" என்ற சொல் அனுப்புவதை ஈரான் தடை செய்துள்ளது. இரகசியக் காவல்துறையினர் சாதாரண உடையில் நாணயப் பரிவர்த்தனை நிலையங்களுக்குச் சென்று டாலர் வாங்க முடியுமா என்று விசாரித்து இரகசியமாக டாலர்களை விற்பவர்களைக் கைது செய்கிறது.

ஈரானியப் பொருளாதாரம் மேலும் மோசமடையலாம்
ஐக்கிய அமெரிக்க அரசு ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடையைத் தீவிரப்படுத்தும் போது ஈரானியப் பொருளாதாரம் மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலர் ஈரானிய நாணயத்தில் மதிப்பிறக்கத்திற்கு பொருளாதாரத் தடையிலும் பார்க்க மனோதத்துவக் காரணிகளே அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்கின்றனர். ஈரானில் பல அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் ஈரானியப் பொருளாதாரம் அடுத்த 12 மாதங்களில் 8% வளர்ச்சியடையும் என்று ஈரானிய அதிபர் மஹ்மூத் அஜ்மடிநெஜாத் தெரிவித்துள்ளார். பன்னாட்டு நாணய நிதியம் 2011இல் ஈரானியப் பொருளாதாரம் வளர்ச்சி ஏதும் அடையவிலலை என்கிறது.

ஈரானில் விலைவாசி பெரிதும் அதிகரிப்பு
ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்து பல பொருட்களை இறக்குமதி செய்கிறது. ரியாலின் பெறுமதி வீழ்ச்சியால் ஈரானில் பொருட்களின் விலைகள் பெரிதும் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா வாங்கவிருக்கும் அடி
தனது நாணயத்திற்கு உலகில் இருக்கும் நம்பிக்கையை ஒரு ஆயுதமாகப் பாவித்து ஈரானியப் பொருளாதாரத்தை சில நாட்களில் உலகில் இருந்து தனிமைப் படுத்திவிட்டது அமெரிக்கா. ஒரு சில நாட்களில் ஈரானிய நாணயத்தின் பெறுமதியை 40% குறைத்தும் விட்டது. ஆனால் அமெரிக்க டாலரில் நம்பிக்கை வைத்து அதை ஒரு பன்னாட்டு நாணயமாக ஏற்றுக் கொண்ட நாடுகளை இது சிந்திக்க வைக்கலாம். இன்று ஈரானுக்கு நடப்பது நாளை எமக்கு நடக்கலாம் என்ற சந்தேகம் பல நாடுகளுக்கு ஏற்பட்டால் அவை வேறு மாற்று வழிகளைத் தேடலாம். இது அமெரிக்காவிற்கோ உலக பொருளாதார வளர்ச்சிக்கோ ஏற்புடையதல்ல. ஈரானிய எரிபொருள் ஏற்றுமதி தடைபட்டால் எண்ணெய் விலை 20 முதல் 30 டாலர்களால் அதிகரிக்கலாம் என்று பன்னாட்டு நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது. சவுதி அரேபியா தனது எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து ஈரானிய் ஏற்றுமதி நிறுத்தத்தை ஈடுசெய்யலாம். அது எந்த அளவிற்கு ஈடு செய்யும் என்பதை எதிர்வு கூறமுடியாமல் இருக்கிறது.

Wednesday 1 February 2012

ஈரான் அமெரிக்க மண்ணில் தாக்குதல் நடத்தலாம் - அமெரிக்க உளவுத்துறை

ஈரானின் அணுக்குண்டுத் தயாரிப்புத் திட்டத்தைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் முறுகல்கள் தீவிரமடைந்து வருகின்றன. ஈரானை அணுக்குண்டு தயாரிக்கவிடாமல் தடுக்க ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்தன. இந்த ஆண்டு ஆரம்பத்தில் பாரசீக வளைகுடாவிற்குள் வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் வருவததைத் தடுக்கும் சட்டமூலம் ஈரானியப் பாராளமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன் ஈரானியப் படைத் தளபதி அமெரிக்கப் போர்க்கப்பல்கள் பாரசீகக் குடாவையும் ஓமான் வளைகுடாவையும் இணைக்கும் எரிபொருள் விநியோக முக்கியத்துவம் வாய்ந்த ஹோமஸ் நீரிணைக்குள் வரக்கூடது என்று எச்சரித்தார்.

2011 ஆகஸ்ட் மாதம் ஈரானுக்குச் சென்ற பன்னாட்டு அணுசக்தி முகவரகம் ஈரான் இரகசியமாக அணுக்குண்டு தயாரிக்கிறது என்பதையிட்டு தாம் கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்தது. அதைத் தொடர்ந்து ஈரான் மீது யாராவது தாக்குதல் நடாத்தினால் அவர்கள் ஈரானின் இரும்புக் கரங்களைச் சந்திக்க வேண்டிவரும் என்று எச்சரித்தது. பின்னர் நவம்பர் மாதம் ஈரானில் உள்ள பிரித்தானியத் தூதுவரகம் ஈரானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.

31-01-2012இலன்று ஐக்கிய அமெரிக்க மூதவையின் உளவுக் குழுவிற்கு ஐக்கிய அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் ஆர் கிலப்பர் வழங்கிய அறிக்கையில் ஈரான் அமெரிக்க மண்ணில் தாக்குதல் நடத்தலாம் எனத் தெரிவித்தார். ஈரானின் உச்ச தலைவரான அலி கமயினி போன்றோர் ஈரான் மீது மேற்குலகம் திணிக்கும் பொருளாதாரத் தடை ஈரானிய அரசைக் கவிழ்க்கும் எண்ணம் கொண்டதாயின், தேவை ஏற்படின், அமெரிக்க மண்ணில் தாக்குதல் நடத்தும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் ஐக்கிய அமெரிக்கவினதோ அல்லது வேறு மேற்கு ஐரோப்பிய நாடுகளினதோ நலன்கள் மீது ஈரானிய ஆதரவு  தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்றும் ஜேம் ஆர் கிலப்பப்ர் எச்சரித்துள்ளார்.

ஈரானுடனான நேரடி மோதலைத் தவிர்க்கவே ஐக்கிய அமெரிக்கா அதன் மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தியது. அத்துடன் இஸ்ரேல் ஈரானின் அணு உற்பத்தி நிலைகள் மீதோ யூரேனியம் பதப்படுத்தும் நிலைகள் மீதோ தாக்குதல் நடாத்தாமல் இருக்க ஐக்கிய அமெரிக்கா பெரும் பாடுபடுகிறது. ஈரானிய அணு விஞ்ஞானிகள் தொடர்ந்து கொல்லப்படுவது ஈரானை ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

அல் கெய்தா ஆபத்து இப்போதும் உள்ளது.
ஐக்கிய அமெரிக்க மூதவையின் உளவுக் குழுவிற்கு உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் ஆர் கிலப்பர் அல் கெய்தாவின் ஆபத்து இப்போதும் உள்ளது என்று தெரிவித்தார். அல் கெய்தா பாரிய தாக்குதல்களை ஐக்கிய அமெரிக்க மண்ணில் நடத்த முடியாவிடினும் அதனால் சிறு தாக்குதல்களைச் செய்ய முடியும் என்றார்.

போர் ஆபத்து தொடர்கிறது
ஈரானுக்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையிலான போர் ஆபத்து இன்னும் விலகவில்லை என்பதை அமெரிக்க அரசின் நிலைபற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சில வரிகளும் உறுதி செய்கின்றன. ஒபாமா தனது உரையில் ஈரானின் அணுஆயுத உற்பத்தியை தடுக்க எந்த ஒரு தெரிவையும் தான் மேசையில் இருந்து விலக்கவில்லை என்று தெரிவித்தார். - I will take no options off the table to achieve that goal.

Tuesday 31 January 2012

சேமித்தால் கொள்ளையடிப்பார்களா?

பட்டாம்  பூச்சிகளே 
பட்டாம் பூச்சிகளே
நேற்று நீங்கள்
வேண்டாப் புழுக்கள்
இன்றோ அழகிய பூச்சிகள்
தேனீக்களின் சேமிக்கும்
குணத்தை நீங்கள்
கொள்ளாதது ஏன்?
சேமித்தால் மனிதர்
கொள்ளையடிப்பார்கள் என்றா?

பட்டாம்  பூச்சிகளே பட்டாம் பூச்சிகளே
பறக்கும் பல வர்ணப் பூக்களே
இயற்க்கை கன்னியின்
குறும்புக் கண் சிமிட்டல்கள் நீங்கள்.


பட்டாம்  பூச்சிகளே பட்டாம் பூச்சிகளே
மலர்கள் தம் காதலர்க்கு
மின்னஞ்சல்களாய் அனுப்பும்
மகரந்த மணிகளை
வைரஸ் இன்றி எடுத்துச் செல்லும்
இணையங்கள் நீங்கள்


பட்டாம்  பூச்சிகளே பட்டாம் பூச்சிகளே
மலருக்கு மலர் தாவும் நோக்கம் அறியாமல்

உங்களைக் காம வெறியர்களுக்கு ஒப்பிடுவர் மூடர்
மலர் தமயந்தியின் செல்ல அன்னங்கள் நீங்கள்

பட்டாம்  பூச்சிகளே பட்டாம் பூச்சிகளே
அருவருக்கும் புழுக்களின்
அழகிய  கூர்ப்பு நீங்கள்
பொறுமையாய் கூட்டில் தவமிருந்து
தேகத்தை அழகாக்கும் தேவதைகள் நீங்கள்
பொறுத்திருந்தால் ஈழமும் எமக்காகும்
 என உணர்த்தும் தத்துவ  முத்துக்கள் நீங்கள்

Monday 30 January 2012

சிரிக்கவைக்கும் விநோதமான படங்கள்

காயாத கோலங்கள்

எதையும் தாங்கும்......

சொல் என்றும் பொருள் என்றும்.......

நரகச் சுவை......

நீபாதி நான் பாதி கண்ணே

பெரிய மனசு வேண்டும் இதற்கு.....

காலத்தைப் பொன் செய்

உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே...

இந்தப் படத்தைப் பொறுமையுடன் பாருங்கள்

உலக முடிவிற்கும் அப்பால்.....
மாறிக் கொண்டே இரு

வேலியே பயிரை....????

கொடுமை....

வருங்கால தொழில் நுட்பம்.


இந்தப் படம் இலங்கையில் எடுக்கப்படவில்லை

where is the target?

அடுதாத்துச் சங்கதியெல்லாம்??????

சுமைதாங்கி ஏன் இங்கு சரிகின்றது.......?????


முன்னாள் பாதிரியாரின் காலணி திருத்தகமா?

இது சீனாவில் இல்லை.....

இது சீனாவிலா????

சமரசம் உலாவும் இடம் இதுதான்......

Sunday 29 January 2012

ஜெயலலிதாவிற்கு நஞ்சு மருந்து கொடுக்கப்பட்டது - ரெஹெல்கா

நரேந்திர மோடியுடன் ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவையும் அவரது பிரியமான தோழியையும் பிரிந்தது பற்றி ரெஹெல்கா பத்திரிகை விரிவாக எழுதியுள்ளது. 17-12-2012இலன்று போயஸ் தோட்டத்தில் இருந்து சசிகலாவும் அவரது பரிவாரங்களும் வெளியேற்றப் பட்டு தோழிகளின் 25 ஆண்டு கால நட்பு முறிக்கப்பட்டது. இது பற்றி ரெஹெல்கா வெளிவிடும் தகவல்கள்:

1. சசிகலாவின் சகோதரரான பாஸ் எனப்படும் வி கே திவாகரன் மீது கஸ்த்தூரி பாலசுப்ரமணிய என்பவருக்குச் சொந்தமான வீட்டைத் தரைமட்டமாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் சட்டத்திற்குப் புறம்பான வகையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் வதந்திகள் அடிபடுகின்றன.

2. சசிகலாவின் குடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவரான ராவணன் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளார்.

3. ஜெயலலிதாவை யாரும் சசிகலாவின் அனுமதியின்றி அணுக முடியாத நிலை இருந்தது. மந்திரிகள் அதிகாரிகள் யாவரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆரம்பத்தில் தனது கட்சியினருக்கு ஜெயலலிதாவே தனது கட்சியினருக்கு தனனை சந்திப்பதாயின் முதலில் சசிகலா ஊடாக வரவும் என்ற உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

4. ஜெயலலிதாவிற்கு முதலில் சசிகலாவைப் பற்றி எச்சரித்தவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியாகும். பல வெளிநாடு வாழ் இந்தியர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வந்த போது அவர்களிடம் மன்னார் குடி மாஃபியா என்ப்படும் சசிகலா குடும்பத்தினர் 15% "வெட்டு" கேட்டனர் என்றும் அது அதிகமானதால் அவர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதைக் கைவிட்டனர்.

5. சென்னை மொனொரயில் திட்டத்தை ஜெயலலிதா சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றிற்கு வழங்க விரும்பியிருந்தார். ஆனால் சசிகலா குடும்பத்தினரின் சதியால் அது மலேசிய நிறுவன்த்திற்கு வழங்கக்பப்ட்டிருந்தது. இதை ஜெயலலிதா விசாரித்தபோது அவரது கையொப்பம் வேறுயாரோ ஒருவரால் இடப்பட்டமை கண்டறியப்பட்டது.

6. ஜெயலலிதா தனக்குத் தரப்படும் மருந்துகளை சசிக்குத் தெரியாமல் ஒரு மருத்துவர் மூலம் பரிசோதித்தபோது அதில் சிறிதளவு நஞ்சு கலக்கப்பட்டிருந்தது கண்டறிபப்பட்டது. ஜெயலலிதாவிற்கு மருந்து மற்றும் உணவுகளைக் கொடுப்பது சசியால் நியமிக்கப்பட்ட ஒரு தாதி.

7. ஜெயலலிதா திமுகாவினருக்கு எதிராக போதிய ஆதாரங்களைத் திரட்டியபின்னரே வழக்குப் பதிவு செய்ய வேண்டும் இன்று உத்தரவிட்டிருந்தார். ஆனால் முக ஸ்டாலினிற்கு எதிராக ஒரு போதிய ஆதாரமில்லாத ஒரு வழக்கு சசியின் உத்தரவின் பேரில் பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதாவிற்கு திமுகாவினருடன் சசி இரகசியத் தொடர்புகள் வைத்திருக்கிறாரா என்ற சந்தேகம் வந்தது.

8. சசிகலா, நடராஜன், ராவனன், மிடாஸ் மோகன், வி கே சுதாகரன், ரிரிவி தினகரன், எம் ராமச்சந்திரன் ஆகியோர் பெங்களூரில் சொத்துக் குவிப்பில் ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பு வந்தால் அடுத்து யாரை முதல்வர் ஆக்குவது என்பது பற்றி கலந்துரையாடிய கூட்டத்தை தமிழ்நாடு காவல் துறை மாஅதிபர் ராமானுஜத்தின் வேண்டுதலின் பேரில் கர்நாடகா காவல்துறை மாஅதிபர் மொஹன் பிடாரி இரகசியமாக ஒலிப்பதிவு செய்தார். இந்த ஒலிப்பதிவே ஜெயா-சசி உறவின் பிரேதப் பெட்டியின் இறுதி ஆணியாகியது.

9. சசிகலா குடும்பத்தினரின் தொலைபேசி உரையாடல்கள் யாவும் ஒற்றுக் கேட்கப்பட்டது

10. சசியால் நியமிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பாதுகாப்பு ஊழியர்கள் மாற்றப்பட்டனர்.

11. 2011இல் நடந்த தேர்தலில் சசிகலா அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களிடமிருந்து 300கோடிகள் அறவிட்டார்.

12. அதிமுக கட்சி ஆட்சிக்கு வந்தபின் சசி குடும்பத்தினர் 1000 கோடிகள் சம்பாதித்து விட்டனர்.

13. நடராஜன் இனி ஈழப்பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல் இலாபம் தேடுவார். அவர் திமுக பக்கம் சாயலாம்.


ரெஹெல்கா வெளியிடாதவை
  • சசி-ஜெயா உறவின் விரிசலில் பூணூல்களுக்குப் பெரும்பங்கு உண்டு.
  • சசி-ஜெயா பிரிவால் பெரும் நன்மை அடையப் போகிறவர்கள் பூணூல்கள்.
  • நரேந்திர மோடி ஜெயலலிதாவிற்கு கொடுத்த தாதி ஜெயாவிற்கும் சசிக்கும் இடையில் சண்டை மூட்டினார்.
  • ஜெயாவை ஆட்சியில் அமர்த்தியதில் ஈழப் பிரச்சனைக்குப் பெரும் பங்குண்டு.
  • ஜெயலலிதா இனி ஈழத்தமிழர்களுக்கு சார்பாக நடப்பார் என்று சொல்ல முடியாது.
வெளிநாடு வாழ் குஜராத்தியினர் பலர் தமிழ்நாட்டில் முதலிட்டு தமிழ்நாட்டைச் சுரண்டத் துடிக்கின்றனர். அவர்களுக்கு சசி குடும்பம் முட்டுக் கட்டையாக இருந்தது. இவர்கள் நரேந்திர மோடியிடம் இதை முறையிட்டன்ர். இதனால் நரேந்திர மோடி சசியையும் ஜெயாவையும் பிரித்து வைத்தார்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...