Saturday 21 January 2012

கல்லூரி நகைச்சுவைகள்

தேர்வில் நன்கு சித்தியடைந்த ஒவ்வொரு மாணவனுக்குப் பின்னரும் ஒரு சிறந்த ஆசிரியர் இருப்பார். 
தேர்வில் நன்கு தோல்வியடைந்த ஒவ்வொரு மாணவனுக்குப் பின்னரும் ஒரு அழகிய ஆசிரியை இருப்பாள்.

மாணவன் வடிவேலு
வடிவேலு தேர்வு மண்டபத்துள் நுழைந்ததும் என்ன சொல்லுவார்?
ஸ்ஸ்ஸ்......பாபாபா.......இப்பவே கண்ணைக் கட்டுதே....

வினாத்தாளைப் பார்த்ததும் என்ன சொல்லுவார்?
என்னை வைச்சு காமெடி கீமெடி பண்ணுறியா....

தேர்வு முடிவைப் பார்த்ததும் என்ன சொல்வார்?
மாப்பு.......வைச்சிண்டான்யா ஆப்பு....

அரியேர்ஸில் மீண்டும் பெயில் ஆனால் என்ன சொல்லுவார்?
எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது....... வேணாம்... வலிக்குது......... அழுதுடுவன்...

பிட் அடிக்கும் போது பிடிபட்டால் என்ன சொல்லுவார்?
ஒரு மனிசன் எதையாவது பண்ணி முன்னுக்கு வருவம் என்று பார்த்தால் கண்ட இடமெல்லாம் கண்ணி வைக்கிறாங்களே.....

தேர்விற்க்கு விண்ணப்பிக்கும் போது என்ன சொல்லுவார்?
ரிஸ்க் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுறது மாதிரி..

பக்கத்தில் இருக்கும் மாணவன் வடிவேலுவைப் பார்த்துக் காப்பி அடித்தால் என்ன சொல்லுவார்?
இன்னுமாடா இந்த உலகம் என்னை நம்புது....

Question:What is the full form of maths.
Anwser:
Mentaly
Affected
Teachers
Harrasing
Students

புவியீர்ப்பு விசையை முதலில் கண்டுபிடித்த யாழ்ப்பாண மாணவன்
ஒரு நாள் அச்சுவேலியில் ஒரு மாணவன் தனது வீட்டுக்குப் பின்புறம் உள்ள பனந்தோப்பில் மல்லாக்கப் படுத்திருந்த படி யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது ஒரு பனம் பழம் மரத்தில் இருந்து விழத் தொடங்கியது. உடனே அவன் யோசித்து புவியின் ஈர்ப்பு விசையால்தான் பனம் பழம் கீழே விழுகிறது என்று கண்டு பிடித்து விட்டான். அந்த உற்சாகத்தில் அவன் திடீரென எழும்ப பனம்பழம் அவன் தலையில் விழுந்து அவனுக்கு சித்தப் பிரமை பிடித்து விட்டது. அதனால் அவனது கண்டு பிடிப்பு வெளியில் வரவில்லை. அவருக்கு ஏன் இப்படி நடந்தது என்று ஆராய்ந்த அவரது உறவினர்கள் பனம்பழத்தில் காகம் இருந்ததால் அது அவரது தலையில் விழுந்தது என்று அறிந்து "காகம் இருக்கப் பனம் பழம் விழுந்தது போல்" என்ற  உவமையை உருவாக்கினர். இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்து விட்டார்.

மகாத்மா காந்தியும் மொக்கை காந்தியும்
கேள்வி: மகாத்மா காந்தி இந்திய மக்களுக்காக என்ன நன்மை செய்தார்?
மொக்கை காந்தியின் பதில்: ஆகஸ்ட் 15-ம் திகதியை விடுமுறை நாளாக்கினார்.

தந்தை மகற்காற்றும் உதவி
கல்லூரியில் பயின்று கொண்டிருந்த ஜோர்ஜ் புஸ் தன் தந்தைக்கு எழுதிய கடிதம்:
Dear Dad,
$chool i$ really great. I am making lot$ of friend$ and $tudying very hard. With all my $tuff, I $imply can`t think of anything I need. $o if you would like, you can ju$t $end me a card, a$ I would love to hear from you.
Love,
Your $on
தந்தை புஷ்சின் பதில்:

Dear Son,
I kNOw that astroNOmy, ecoNOmics, and oceaNOgraphy are eNOugh to keep even an hoNOr student busy. Do NOt forget that the pursuit of kNOwledge is a NOble task, and you can never study eNOugh.
Love,
Dad

A young man studying in a college abroad sent this SMS to his father: Dear dad, no mon, no fun, your son. The father replied: Dear son, too bad, so sad, your dad.


எரிப் பொருள் பிரச்சனைக்கு மஹிந்தவின் மகனின் தீர்வு
இலங்கையில் உள்ள ஒரு கல்லூரியில் எரிபொருள் இறக்குமதியால் நாட்டுக்குப் பல கோடி அன்னியச் செலவாணி வீணாகிறது அதற்கு ஒரு தீர்வு வேண்டும் என்று ஆராயப் பட்டது. அதற்கு மஹிந்தவின் மகன் ரோகித ராஜபக்ச ஈரானில் இருந்து 5 கப்பல் மண் இறக்குமதி செய்து அதை அம்பாந்தோட்டையில் கொட்டிப் பரவி விட்டு பின்னர் நாங்கள் பெற்றோல் கிணறு தோண்டி பெற்றோல் பெறலாம் என்றான்.

மொக்கை காந்தி
Why Sperrm Donation Is More Expensive Than Blood Donation? என்ற கேள்விக்கு மொக்கை காந்தியின் பதில்: Because Hand-Made Things Are Always Costly.

Friday 20 January 2012

இலங்கையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுவைத்த எச்சில்


"நீ தண்ணி அடிப்பியா?"
"இல்லை"
"நீ தம் அடிப்பியா?"
"இல்லை"
"நீ பெண்கள்.......?"
"இல்லவே இல்லை"
"நீ திருடுவியா?"
"சீ....சீ....."
"அப்போ உன்னிடம் உள்ள கெட்ட பழக்கம் என்ன?"
"பொய் சொல்லுவது"
இந்தக் கடைசிப்பதில் எப்படி மற்ற எல்லாப் பதில்களையும் நிர்மூலமாக்கியதோ அதைப் போலத்தான் இலங்கைப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா கொழும்பில் பத்திரிகையாளர் மாநாட்டில் கூறிய கருத்தும் இருந்தது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச தன்னிடம் இலங்கை அரசியலமைப்பில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள 13வது திருத்தத்தில் உள்ள அதிகாரப் பரவலாக்கத்திற்கும் அதிகமான அதிகாரப் பரவலாக்கம்(இதை 13+ என்று அழைப்பர்) செய்யப்படும் என்று தெரிவித்ததாகக் கூறினார். ஆனால் அதற்கான ஒரு கால அட்டவணை உண்டா என்று கேட்ட போது  இல்லை என்பதே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் பதிலாக இருந்தது. இது பிள்ளையாரின் திருமணம் போல்தால். நாளை நடக்கும். இலங்கை அதிபரின் கூற்றுக்க்கு ஒரு கால அட்டவணை கிடயாது என்று கூறுவது அது ஒரு போதும் நடக்காது என்பதே. இலங்கை அரசமைப்பின் 13வது திருத்தம் 1987இல் அப்போதைய இலங்கை அதிபர் ஜே ஆர் ஜயவர்த்தனவும் ராஜீவ் காந்தியும் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற் கொள்ளப்பட்டது. ஒப்பந்தமிடும் போது தமிழர்களுக்கு இந்தியா கொடுத்த வாக்குறுதிகள் :
  • தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்தியா ஏற்கும்.
  • தமிழர்களின் பிரச்சனைக்கு இந்தியா தீர்வு காணும்.
  • தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இலங்க அரசியல் அமைப்பில் மாற்றம் செய்யப்ப்டும்.
  • இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப் பட்டு தமிழர்களின் தாயகமாக ஏற்றுக் கொள்ளப் படும்.
இந்த வாக்குறுதி அளித்து  24 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த செப்டம்பரில் அது வெள்ளி விழாவைக் கொண்டாடும். இந்தியா கொடுத்த எந்த வாக்குறிதிகளும் நிறை வேற்றப்படவில்லை. தமிழர்கள் இன்று இருக்கும் நிலையையும் 1987இல் ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தத்திற்கு முன் இருந்த நிலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இலங்கையின் எப்பாகத்திலும் சிங்களப்படை நடமாட அஞ்சி இருந்தது அன்று. இலங்கையின் எப்பகுதியிலும் தமிழ்ப்போராளிக் குழுக்கள் தாக்குதல் நடத்தி பாரிய அழிவுகளை விளைவிக்கலாம் என்று இலங்கை அரசு அன்று அஞ்சி இருந்தது. தமிழர்கள் கைகளில் ஆயுதம் இருந்தது அன்று. இன்று தமிழனுக்கு என்று ஒரு எதிர்காலம் இருக்கிறதா என்ற கேள்விக்குறி மட்டும்தான் தமிழனின் சொத்து. இந்த நிலைக்கு தமிழர்களை இட்டுச் சென்றது இந்தியாதான்.


தமிழர்கள் முதுகில் சவாரி செய்த இந்தியா
1980களில் இலங்கையில் ஆட்சிக்கு வந்த ஜே ஆர் ஜெயவர்த்தனே தலைமையில் வந்த ஐக்கிய தேசியக் கட்சி அமெரிக்க சார்பாக மாறத் தொடங்கியது. இலங்கையின் பூகோள நிலை அமெரிக்கக் கடறபடையின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு இடையிலான அதி தாழ்வலை(ultra low wave) தொலைத் தொடர்புக்கு மிக உகந்ததாக அமைந்துள்ளதால் சிலாபத்தில் அமெரிக்க வானொலி நிலையம் என்ற போர்வையில் அமெரிக்க கடற்படையின் தேவைகளை நிறைவேற்ற அமெரிக்காவிற்கு இலங்கை தயாரானது. அத்துடன் சிங்கப்பூர் நிறுவனம் என்ற போர்வையில் அமெரிக்கா திருகோணமலையில் தனது கடற்படைக்கு ஒரு எரிபொருள் மீள்நிரப்பு நிலையத்தையும் அமைக்க முற்பட்டது. இதை அறிந்த இந்திரா காந்தி தமிழர்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்தினார். தமிழர்கள் மத்தியில் பல ஆயுதக் குழுக்களை இந்தியா உருவாககியது. விளைவு அமெரிக்க திட்டத்திற்கு ராஜீவ் - ஜே ஆர் ஒப்பந்தத்தின் மூலம் ஆப்பு வைக்கப் பட்டது. இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஒரு ஆயுத மோதலை உருவாக்கியே இந்தியா இதனைச் சாதித்துக் கொண்டு இறுதியில் தமிழர்களை ஏதிலிகளாக்கிவிட்டது.

என்ன இந்த 13+?
இப்போது இருக்கும் இலங்கை அரசியல் அமைப்புக்குக்கீழ் 13வது அரசமைப்பு திருத்தத்திற்கு மேலாக எதையும் செய்ய முடியாது. 13வது திருத்தம் தம்மீது இந்தியா வற்புறுத்தித் திணித்தது என்பதே பெரும்பானமையான சிங்களவர்கள் கருத்து. ஆனால் 13வது திருத்தம் செய்யப்படும் போதே அதை நிறைவேற்றத் தேவையில்லை என்று இந்திய அதிகாரிகளால் இலங்கைக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் ஒரு கருத்து கொழும்பில் நிலவுகிறது. அதனால்தான் இந்த 24 ஆண்டுகளில் இந்தியா அதை நிறைவேற்றும் படி இலங்கையை நிர்ப்பந்திக்கவில்லையாம். ஆனால் ஜே ஆர் ராஜீவ் ஒப்பந்தத்திற்கு இணங்க விடுதலைப் புலிகள் முழுமையாக ஆயுத ஒப்படைப்புச் செய்யவில்லை என ஜேஆர் சொன்னதும் ராஜீவ் தனது படையைத் தமிழர்கள் மேல் ஏவி ஒரு இலட்சம் தமிழர்களை வீடற்றவர்கள் ஆக்கினார், எண்ணாயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவித தமிழர்களைக் கொன்றார், மூவாயிரத்திற்கு மேற்பட்ட பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கினார். 13+ என்பது ஒரு மூதவையை இலங்கையில் ஏற்படுத்துவதாம். அதில் தமிழ்ப் பிரதிநிதிகளை இணைத்து அதன் மூலம மாகாண சபைக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான பிணக்குகளைத் தீர்க்க முடியும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் மூதவையில் சிங்களவர்கள்தான் பெரும்பான்மையாக இருப்பார்கள். அது தமிழர்களுக்கு நீதி வழங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. 13வது திருத்தம் ஒரு அதிகாரப் பரவலாக்கம் அல்ல ஒரு நிர்வாகப் பரவலாக்கம் மட்டுமே. 13 பாவாடை சட்டை என்றால் 13+ ஒரு தாவணி மட்டுமே. 13 தமிழர்களுக்கு இரவலாக வழங்கப்பட்ட ஒரு ஆடை மட்டுமே. ஆபரணமல்ல. அந்த ஆடையை எப்ப வேண்டுமானாலும் பறித்துக் கொள்ளலாம்.

பேச்சு வார்த்தை மேசையில் பிச்சைக்காரத் தமிழர்கள்
இலங்கையில் 2009இல் போர் முடிந்தவுடன் இந்திய அரசின் செயற்பாடுகளிலும் கொள்கைகளிலும் செல்வாக்கு வகிக்கக் கூடியப் பார்ப்பன ஆய்வாளர்கள் இலங்கை இனப் பிரச்சனைக்கான தீர்வுபற்றி எழுதும் போது தமிழர்களின் நிலை Beggars have no choice என்றும் தமிழர்களின் நிலை Hobson's choice என்றும் எள்ளி நகையாடினர். ஆனால் பன்னாட்டு மட்டத்தில் இலங்கையில் இழைக்கப்பட்ட போர்க்குற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தின் அடிப்படையில் இலங்கை இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல பன்னாட்டு மனித உரிமை அமைப்புக்களால் முன்வைக்கப்பட அதை கனடா, பிரித்தானியா, ஒஸ்ரேலியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளதாலும் இந்த மார்ச் மாதம் நடக்கும் ஐக்கிய நாடுகளின்மனித உரிமைக் கழக மாநாட்டுல் இலங்கையில் இழைக்கப்பட்ட போர்க் குற்றம் தொடர்பாக ஏதாவது தீர்மானம் எடுக்கப்படலாம என்ற அச்சம் நிலவுவதாலும் இலங்கை கடந்த சில மாதங்களாக தமிழ் அரசியல் குழுவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஒரு பிச்சைக்கார நிலையில் இல்லாமலும் தமக்கு Hobson's choice  எனப்படும் கொடுப்பதை ஏற்றுக் கொள்வதைதவிர வேறு தெரிவு இல்லை என்ற நிலையில் இல்லாமலும் தமது கோரிக்கைகளை சற்று அழுத்தமாக முன்வைத்துப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டனர். இலங்கை அரசும் பேச்சு வார்த்தையில் அக்கறையிருப்பதாகவும் காட்டிக் கொண்டது.

 மீண்டும் தமிழர்கள் முதுகில் இந்தியா சவாரியா?
பேச்சு வார்த்தையில் அக்கறை காட்டிய இலங்கை அரசு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா இலங்கைக்கு வந்த பின்னர் இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் உதாசீனம் செய்யத் தொடங்கி விட்டது. இதற்கான காரணம் மார்ச் மாதம் நடக்க விருக்கும் ஐந மனித உரிமைக்கழகக் கூட்டத்தில் இந்தியா இலங்கைக்கு அதரவான நிலைப்பாட்டை எடுக்கும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டதாலா என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. அதற்கு பிரதி உபகாரமாக இலங்கைக் கடற்பரப்பில் சீனா தனது மூழ்கிக் கிடக்கும் கப்பல்களை ஆய்வு செய்ய இலங்கையிடம் விடுத்த கோரிக்கையை இலங்கை நிராகரித்ததா? சீனா பழைய கப்பல்கள் தேடுதல் என்ற போர்வையில் இலங்கையச் சுற்றவர உள்ள கடற்பரப்பில் தனது நீர் மூழ்கிக் கப்பல்களை எப்படி நடமாடவிடலாம் என்று ஆய்வு செய்ய விரும்பியுள்ளது. சீனா தனது கடலாதிக்கத்திற்கு விமானம் தாங்கிக் கப்பல்களிலும் பார்க்க நீர் மூழ்கிக் கப்பலகளில் அதிக கவனம் செலுத்துகிறது.

கிருஷ்ணா சுவைத்த எச்சில்.
கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்ட கிருஷ்ணா அங்கு ஒரு கட்டிடத்தைத் திறந்து  வைத்தார். ஏற்கனவே 2004ம் ஆண்டில் பாஜ் எனப்படுகின்ற ஜப்பானிய தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் கட்டப்பட்டு இக்கட்டிடம் ஏற்கனவே வேறு ஒருவரால் திறந்து வைக்கப்பட்டுவிட்டது. இதற்கு மீண்டும் பூசி மெழுகி மீண்டும் கிருஷ்ணாவைக் கொண்டு திறந்து வைக்கப்பட்டது. ஏற்கனவே ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் வேறு ஒருவர் ஏற்கனவே நிகழ்த்திய உரையை தான் மீண்டும் வாசித்து சாதனை படைத்தவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா

Thursday 19 January 2012

ஆவியாகக் கலந்தன இருவர் ஆவிகள்


இளங்காலைக் குளிராக
இளவேனில் தளிராக
புதிதாக ஒரு உறவு
புரியாத ஒரு உணர்வு

உன் இதயத்தை மெல்ல வருட
ஒரு சில வரிகள் தொடுத்தேன் இனிய தோழியே
உன் நீள் குழலில் ஒரு வண்டாக நான் அமர வேண்டும்

பூவிலும் மேலான மாதவிப் பூவிது
நல்ல மாதவப் பேறிது
நான் சொல்பவை யாவும்
நிழல்களின் நிதர்சனங்கள் 
நிழலாக தொடர்வதில் தனி சுகம்

பொய் முகங்களிடை வாழும்
போலியான வாழ்க்கையிலே
பொய்களுக்குள் இனிய
உண்மையைத் தேடி எடுப்பது தனி சுகம்

உன் நினைவோடு என் நினைவை
இணைய விடுவதும் ஒரு புதிய சுகம்
அன்பில் ஊற்றேடுத்து
ஆசையில் கொதித்து
பாசம் என்னும் ஆவியாகி
அவை கலந்து பெறட்டும் தனியின்பம்
ஆவியாகக் கலந்தன இருவர் ஆவிகள்
ஆசையாகத் தழுவிக் கொண்டன
இணைய வெளியில் இனந்தெரியா ஒரு தவிப்பு
நெஞ்சைத் துளைக்கயில் நீ வந்தாய் இதமாக
பாலை வனத்திடை ஒரு பசுஞ்சோலையாக

துள்ளியலைந்த கன்று
தாயைக் கண்டது போல் ஓர் உனர்வு
வளரத் துடித்த கொடிக்கு
படரக் கிடைத்த துணைபோல்
 கரை தேடிய ஓடத்திற்கு
கலங்கரை விளக்கம்மானாய் நீ

கொங்கிறிற் காட்டிடை
வழி தொலைத்த ஓட்டுனர்
முன் வந்த Sat Nav நீயடி தோழி
ஒரு பாதை ஒரு பயணம்
ஒரு இனிய துணை
கை கோர்த்து நடப்பதில் தனி சுகம்
ஐந்து விரல்களை ஐந்து விரல்கள் வருட
காதோரம் காற்று வந்து
சொல்லும் இரகசியம் கேட்டு
அல்லாரிப்பில் ஆடும் குழல்

இப்படியே நீளட்டும் இப்பாதை
முடிவில்லாமல் தொடரட்டும் இப்பயணம்
என்றும் காணாத தனி சுகம்
நீளும் பாதை அகலத்தில் குறையாதோ
நெருக்கத்தை அதிகரிக்காதோ
நெருக்கத்தில் கேட்கிறது
நீ விடும் மூச்சொலி
இனிய இசையாக
காந்த விழியின் ஓரப்பார்வையால்
என்னை ஒளிப்பதிவு செய்ய

Wednesday 18 January 2012

பொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை

காதல் என்பது பொய்யான மோச வலை
குடும்பம் என்பது பொய்யான பாச வலை
உறவு என்பது பொய்யான நேச வலை
வாழ்க்கை என்பதே பொய்யூரில்
நாம் பெற்ற வதிவிட உரிமை



எருவாய்ப் போகும் மெய்யை
பொய்யென்றுணராமல்
கனிவாய் என கருவாய்
மோகம் கொண்டு
நிலை இழப்போமா

கண்ணில் தெரிவதும் பொய்
கண்கள் சொல்வதும் பொய்
மண்ணாய் முடிவில்
மறைவோம் என்பதே மெய்

உடலும் பொய் உறவும் பொய்
சொல்லும் பொய் செயலும் பொய்
உணவும் பொய் நினைவும் பொய்
இறப்போம் நாம் என்பதே மெய்

பொய்யினை மெய்யென்று அலையாமல்
கையினை மெய்யாய்
மெய்க்காக நீட்டி
மெய்யினை மெய்யறிவில் நிறுத்தி
மெய்வழி செல்லும் நாள் என்னாளோ

Tuesday 17 January 2012

திகைப்பூட்டும் புகைப்படங்கள்....நகைப்பும் ஊட்டும்..

புகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள்.

முத்தமா.....மோகமா.....


பறந்த களைப்பு.....கொஞ்சம் ஓய்வு....


அப்பிடியும் ஒரு ஆசை....

பார்த்தியா.....குளத்தை நிரப்பீட்டன்....


பிழையாகப் போனதால் சரியான தகவல் சொல்கிறது

மெல்லக் கை போடு....

என்கிட்டே வைச்சுக்காதா....ஆமா சொல்லிப்புட்டேன்

நீ என்ன பெரிய கொம்பா?????

karate girl

தேகம் யாவும் தீயின் தாகம்.....

no.1 in the world

ஏன் இப்படி ஒரு ஆசை

என்ன கொடுமை இது?

மனிதரில் எத்தனை நிறங்கள்....

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?

உன்னைக் கட்டிய நேரம் ஒரு குதிரையைக் கட்டியிருக்கலாம்.
ஆச்சிக்கு ஆசை போகவில்லை

நான் ஊதினன் எண்டால் ஊரே....

எரிமலை எப்படிப் பொறுக்கும்

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே....

பென்சிலால் கைதுசெய்

அப்படி நானும் செய்வேன்...
அடுத்த மூவ் யாருடையது?

என் கையில் நீ ஒரு....

மவனே முழுங்கடா.....

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா....

போகுமிடம் எதுவென்று தெரியவில்ல..போகவேண்டிய இடமும் எதுவென்று புரியவில்லை மொத்தத்தில் என் நிலை ஈழத் தமிழர்கள் மாதிரி

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

Monday 16 January 2012

ஈரானிய அணு விஞ்ஞானிகளைக் கொல்வது யார்?

ஈரானிய அணுவிஞ்ஞானிகள் தொடந்து கொல்லப்படுவதையிட்டு ஈரான் அதிக ஆத்திரமடைந்துள்ளது. 11-01-2012இலன்று பட்டப் பகலில் ஈரானிய அணு விஞ்ஞானியான முஸ்தபா அஹ்மதி றொஸானன் அவரது வாகனத்தின் அடியில் பொருத்தப்பட்ட காந்தக் குண்டு வெடித்தமையில் கொல்லப்பட்டார். இவர் கொல்லப்பட்ட மூன்றாவது ஈரானிய அணு விஞ்ஞானி. இன்னொருவர் மீதான கொலை முயற்ச்சியில் இருந்து அவர் தப்பிவிட்டார். ஆத்திரமடைந்த ஈரான் அமெரிக்க அரசிற்கும் பிரித்தானிய அரசிற்கும் தனது அணு விஞ்ஞானியின் கொலையில் அவர்களின் உளவுத்துறைக்குச் சம்பந்தம் இருந்தமைக்கான ஆதாரங்கள் இருப்பதாக குற்றம் சாட்டி கடிதம் எழுதியுள்ளது. ஈரானின் இக்கடிதம் அனுப்பிய செய்கை ஒரு அசாதாரண நிகழ்வாகவே பலராலும் கருதப்படுகிறது.  ஈரானிய அணுவிஞ்ஞானியின் கொலையை அமெரிக்க அரசச் செயலர் ஹிலரி கிளிண்டனும் வழமைக்கு மாறான குரலிலே கடுமையகக் கண்டித்துள்ளார். ஈரானின் படைத்துறையின் பிரதி அதிபர் பிர்கேடியர் ஜெனரல் மசோட் ஜசயேரி விஞ்ஞானி கொலைக்கு அமெரிக்க பிரித்தானிய மற்றும் சியோனிஸ்ட் அரசுகள் பொறுப்பு என்றும் அரச பயங்கரவாதத்திற்கு துணை செய்பவர்கள் சரியான தருணத்தில் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று எச்சரித்தார்

ஈரானின் பூகோள முக்கியத்துவம்
ஈரானின் பூகோளவியல் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு பலமிக்க ஈரானால் ஹோமஸ் நீரிணையக் கட்டுப்படுத்த முடியும். கடல் மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40% ஈரானின் ஹொமஸ் நீரிணையூடாக நடக்கிறது. உலக மொத்த எண்ணை வழங்கலில் இது 20% ஆகும். ஹோமஸ் நீரிணை ஓமான் வளைகுடாவையும் பாராசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் அகலமுள்ள நீரிணையாகும். நாளொன்றிற்கு 15 எண்ணை தாங்கிக் கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன. சவுதி அரேபியா, ஈராக்,குவைத், பாரெய்ன், கட்டார், துபாய், போன்ற நாடுகளில் இருந்தூ ஏற்றுமதியாகும் எரிபொருள் ஹோமஸ் நீரிணையூடாகவே நடக்கின்றது. அணு ஆயுத பலம் மிக்க ஈரானால் உலக எரிபொருள் விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

ஈரானின் அணு ஆயுத பலம்
அண்மைக் காலமாக ஈரானின் அணு ஆயுத உற்பத்தி தொடர்பாக மேற்கு நாடுகளும் இஸ்ரேலும் அதிக கரிசனை காட்டத் தொடங்கி இருக்கின்றன. அமெரிக்கா ஈரானுக்கு எதிராக பல பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஈரானிய சொத்துக்களை முடக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் ஈரானுக்கு எதிரான பொருளாதரத் தடைகளைக் கொண்டுவரவுள்ளது. இந்த பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக ஈரான் ஹோமஸ் நீரிணையை மூடப் போவதாக அறிவித்துள்ளது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் ஈரானிய விஞ்ஞானி கொல்லப்பட்டுள்ளார்.

கொன்றது யார்?
32 வயதான முஸ்தபா அஹ்மதி றொஸானனை கொன்றது அமெரிக்க உளவுத் துறையான சிஐஏயா,  பிரித்தானிய உளவுத் துறையான எம்.ஐ.6ஆ, அல்லது இஸ்ரேலிய உளவாளிகளான மொசாட்டா?  பல படைத்துறை ஆய்வாளர்களைக் குடையும் கேள்வி இது. இந்தக் கேள்விக்கு விடை தேடும் போது இன்னிரு கேள்வி எழுகிறது. இம்மூன்று உளவுத் துறையும் இணைந்து செயற்பட்டதா, ஏதாவது இரு துறைகள் இணைந்து செயற்பட்டதா, அல்லது இவற்றில் ஒன்று தனித்துச் செயற்பட்டதா? ஈரானில் ஜுண்டல்லா இயக்கம் என்று ஒரு ஈரானிய அரசுக்கு எதிரான இயக்கம் இருக்கிறது. இது இக்கொலையச் செய்து குழப்பத்தைச் செய்திருக்கலாம் என்ற சங்தேகமும் உண்டு. ஆனல் ஜுண்டல்லா இயக்கத்திடம் இப்படி ஒரு கொலையைக் கச்சிதமாகச் செய்து முடிக்கக் கூடிய தொழில்நுட்பம் இல்லை. வேறு யாராவது இந்த இயக்கத்திற்கு இக்கொலையைச் செய்ய துணை போய் இருக்கலாம்.   ஹோமஸ் நெருக்கடியை மேலும் மோசமாக்க அமெரிக்கா இப்போது இருக்கும் உலக பொருளாதாரச் சூழலில் விரும்பாது. அதனால் அது ஈரானில் ஒரு குண்டு வெடிப்பை இப்போது விரும்பாது. பல படைத்துறை ஆய்வாளர்கள் விஞ்ஞானியை மொசாட்தான் கொன்றிருக்கலாம் என்று நம்புகின்றனர். போலிக் கொடி நடவடிக்கை மூலம் இஸ்ரேல் கொன்றிருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். போலிக் கொடி(False Flag) நடவடிக்கை என்பது ஒரு நடவடிக்கையை ஒரு பகுதியினர் மேற்கொள்வர் ஆனால் சகலருக்கும் அது வேறு யாரோ செய்தது போல் இருக்கும். இப்படியான பல நடவடிக்கைகளை மொசாட் செய்துள்ளது. இஸ்ரேலிய உளவுத் துறையின அமெரிக்க அல்லது பிரித்தானிய உளவாளிகள் போல் தம்மைக் காட்டிக் கொண்டு பல மத்திய கிழக்கு நாடுகளில் செயற்படுவதுண்டு. இஸ்ரேலிய மொசாட் அமெரிக்க மற்றும் பிரித்தானிய கடவுட் சீட்டுகளைப் போலியாகத் தயாரிப்பது அம்பலத்திற்கு வந்ததுண்டு. இஸ்ரேலிய மொசாட்டைச் சேர்ந்தவர்கள் தம்மை அமெரிக்கர்களாகவோ அல்லது பிரித்தானியர்களாகவோ காட்டிக் கொண்டு ஜுண்டல்லா இயக்கத்தைக் கொண்டு செய்திருக்கலாம்.

Sunday 15 January 2012

பொங்கல் பானை உடைத்த இந்தியா.....


இயற்கை வாழி

தன்னை எரித்து
வெம்மை பரப்பி
எம்மை வாழவைக்க
வலுத்தரும் கதிரோன் வாழி

தம்மை வளர்த்து
எம்மை வாழவைக்க
உணவாக்கித் தரும்
தாவரங்கள் வாழி

உணவாகி உணவாக்கி
இதமாகி இதமாக்கி
எமக்கான சொத்தான
நீர் நிலைகள் வாழி

தாமும் வாழ்ந்து
சமநிலை பேணி
எமக்கு உதவும்
மிருகங்கள் வாழி




பொங்கல் பானை உடைத்த இந்தியா.....

ஐம்பதிற்கு ஐம்பது என்னும் அரிசியிட்டு

எம்பதி ஜீ ஜீ பொன்னம்பலம் தலைமையில்

தன்மானத்தோடு சமத்துவப்  பொங்கலொன்று
சமைக்க முயன்றோம் அன்று நாம்
சோல்பரியாரின் தூர நோக்கின்மையால்
அரிசியே  மண்ணில் சிந்தியது

காந்தீய அரிசியெடுத்து கடமைப் பாலெடுத்து
தமிழுணர்வுப் பானை தேர்ந்தெடுத்து
இணைப்பாட்சி என்னும்  சமஷ்டிப்
பொங்கலிட முயன்றோம் அன்று நாம்
காடையரை ஏவிவிட்டுப் கொடுமை செய்து

பொங்கலைச் சிதைத்தது கயவர் ஆட்சி

ஐந்து வீடாவது கொடு என்ற பாண்டவர்போல்
மாவட்ட சபை என்னும் மட்டமான அரிசியிலே
அரை வேக்காட்டுப் பொங்கலொன்று சமைத்தோம்
நூல் நிலையம் கொழுத்தி நோகடித்தனர்  எம்மை


மிரட்டல் பானையிலே வஞ்சகப் பாலூற்றி
இந்திய நட்பென்னும் புழுத்துப் போன அரிசியிலே
பதின் மூன்றாம் திருத்தம் எனும்
பொங்கலை எம் வாயில் திணித்தனர்
தொண்டையில் இன்றும் சிக்கி நிற்கிறது நஞ்சாக


வீரத் தீமூட்டி தியாகப் பானை எடுத்து
தீரப் பால் வார்த்து உறுதி நெய்யூற்றி
தூய்மை அரிசியோடு வாய்மைத் தேனிட்டு
பொங்கிய  ஈழப் பொங்கல் இறக்கும் வேளையிலே
பன்னாட்டுச் சமூகமென்னும் பன்னாடைக் கூட்டமும் 

மானம் கெட்ட பாதக இந்தியாவும் 
பொங்கல்  பானை உடைத்துச் சென்றன

சாய்ந்து விழக் கோழைகளுமல்ல
ஓய்ந்து விடச் சோம்பேறிகளுமல்ல
அந்திக் கடலில் மறைந்த கதிரவன்
மறுநாள் வருவது போல்
நந்திக் கடலில் மறைந்த  சூரியன்
நாளை உதிப்பான் பொங்கிடுவோம் நாம்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...