Saturday 29 December 2012

நிர்பயா-மனுதர்ம மனப்பாங்கிற்கு இன்னும் ஒரு பலி

பூலான் தேவி பாலியல் வன்முறைக்கு உள்ளான போது யாரும் கிளர்ந்து எழவில்லை. ஒரு கீழ்சாதிப் பெண் என்று விட்டு விட்டனர். நிர்பயா என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட ஒரு பெண் புதி டில்லியில் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளான போது ஒரு சாரர் கிளர்ந்து எழுந்தனர். இன்னும் ஒரு சாரர் இரவு ஒன்பது மணிக்கு ஒரு பெண் எப்படி வெளியே செல்லலாம் என்று கேள்வி எழுப்பினர். இன்னும் ஒரு சாரார் நிர்பயா அணிந்த ஆடைதான் எல்லாவற்றிற்கும் காரணம் என்றனர். நிர்பயா ஒரு தலித் பெண் அல்ல. புது டில்லியின் மத்திய தர வர்க்கப் பெண். பெயரைப் போலவே பயமில்லாத பெண்ணாக இருக்கலாம்.


லக்ஸ்மி ஒராங்
2007-ம் ஆண்டு நவம்பர் 24-ம் திகதி அசாமைச் சேர்ந்த 17 வயதான ஆதிவாசிப் பெண்ணான லக்ஸ்மி ஒராங் தமது இனத்தவர்களுக்கும் மற்றவர்கள் போல் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று அமைதியான ஆர்ப்பாட்டம் செய்த போது அவரை நடுத் தெருவில் வைத்து நிர்வாணமாக்கி அவரது பிறப்பு உறுப்பில் காலால் உதைந்து ஒரு ஆண் தாக்கினார். அது புகைப்படமாக பத்திரிகைகளில் வந்தது. இன்றுவரை அவருக்கு நீதி கிடைக்கவில்லை.

சுதந்திரம் அடையாத இந்தியா.
ஒரு பெண் தனியாக இரவு நேரம் எங்கும் செல்லலாம் என்ற நிலை வரும் போது தான் இந்தியா சுதந்திரம் அடைந்ததாகும் என இந்தியாவில் பெரிய மனிதராகக் கருதப்படுபவர் சொன்னார். சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்தியாவில் மக்களுக்குச் சுதந்திரம் இல்லை. இந்திய எழுத்தாளரான அருந்ததி ராய் இந்திய உயர் வகுப்பினர் தாழ்ந்த சாதி பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டு கொள்வதில்லை என்கிறார்.

அயோக்கிய இந்திய அரசு.
இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டில் மட்டும் 24 ஆயிரத்து 202 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கிறார்கள். சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரையில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகியிருப்பதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் டில்லியில் 18 மணி நேரத்துக்கு ஒரு பாலியல் வன்புணர்ச்சி நடக்கிறது. புது டில்லி ்ப்பாட்டக்காரர்கள் த்தியில் மையில் டுபட்டிருந்காவற்துறையைச் சேர்ந்த ஒருவர் மாடைப்பால் காமானார். இந்திய அசு அவர் ஆர்ப்பாட்டக்காரர்ளால் கொல்லப்பட்டார் என்தாம்.கின் பெரிபொருளாத்தைக் கொண்ட 20 நாடுளில் பெண்கள் வாழ்தற்கு மிமோமாநாடு என  ட்ரஸ்ற் லோஎன்னும் தொம்ஸன் ராயட்ரின் சட்டப் பிரிவு டாத்திஆய்வில் ண்றியப் பட்டுள்து. பால்த் திருணம், சீனம் போதாமையால் கொலை செய்யப்டல், வீட்டுக்குள் கொடுமைகள் போன்வற்றில் ந்தியா முன்ணி கிக்கிது. இதில் ஆச்ரியம் என்வென்றால் பெண்டிமைத் த்தில் ந்தியா வுதி அரேபியாவிலும் பார்க்மோமாது. 

கையாலாகாருங்கா வல்சு
ந்தியா விரைவில்வல்சாகப்போகிது என்று லர் பிதற்றுகின்னர். அப்டிப்பட்ட இந்தியாவில் ஒரு கற்ழிக்கப்பட்பெண்ணுக்கு ருத்துவம் செய்வக்கில்லை. சின்ஞ்சிறு சிங்கப்பூருக்கு நிர்யா அனுப்பப்பட்டாள் ருத்துவம் செய்ய. இந்தியாவில் நோய் வாய்ப்பட்டு ருத்துதியின்றிறக்கும் சிறுவர்கள் யிமாயிரம். அவர்கள் மேல் காட்டாத அக்றையை இந்தியா நிர்பயாமேல் காட்டுவது ஏன்?  நிர்பயா விவகாரம் தமது 2014 தேர்தல் வெற்றி வாய்ப்புக்களைப் பாதிக்கக் கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறதுநிர்பயா விவகாரம் தமது 2014 தேர்தல் வெற்றி வாய்ப்புக்களைப் பாதிக்கக் கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது. நிர்பயா இனி இறக்கப் போகிறாள். அவளைக் காப்பாற்ற முடியாது என்று தெரிந்த நிலையில் தனது அக்கறையை மக்களுக்கு காட்டுவதற்காக இந்திய அரசு அவளை சிங்கப்பூர் அனுப்பியது. விமானம் மூலம் பயணம் செய்ததால் அவளது இரத்த அழுத்தம் கடுமையாகக் குறைந்திருந்ததாம்.  அவளைப் பொறுப்பேற்ற சிங்கப்பூர் மருத்துவர்கள் அவளது உடல் நிலையைக் கண்டு அதிர்ந்து போனார்களாம்.ப்

மனுதர்ம மனப்பாங்கு
இந்தியாவின் இரு பெரும் மதங்களான இந்து மதமும் இசுலாமிய மதமும் நடை முறையில் பெண்களுக்குச் சாதகமானவை அல்ல. பெண்ணுக்குச் சுதந்திரம் கிடையாது என மனுதர்ம சாஸ்திரம் அடித்துச் சொல்கிறது.

Manusmrti 5:147-164:
A girl, a young woman, or even an old woman should not do anything independently, even in (her own) house. In childhood a woman should be under her father's control, in youth under her husband's, and when her husband is dead, under her sons'. She should not have independence. A woman should not try to separate herself from her father, her husband, or her sons, for her separation from them would make both (her own and her husband's) families contemptible.

மனுதர்ம சாஸ்த்திரம் தனது "நீதிகளை" சாதி அடிப்படையில் வகுத்து வைத்திருக்கிறது. ஒரே குற்றத்தை  உயர் சாதிக்காரன் செய்தால் வேறு தண்டனை. தாழ்  சாதிக்காரன் செய்தால் வேறு தண்டனை. தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டால் கற்பழித்தவனை தண்டிக்காமல் கற்பழிக்கப்பட்டவளைத் தண்டிக்கும் மனப்பாங்கை இந்திய சமுதாயம் கொண்டுள்ளது.

கற்பழிக்கப்பட்ட பாரத மாதா
நிர்பயா ஏறிய வண்டி பிழையான வண்டி என்றும் சில வக்கிர புத்திக்காரர்கள் சொல்லுகின்றனர். நிர்பயாவைத் தேசத்தின் புதல்வியாக்கிப் புருடா விடுகின்றனர்.  பாரத மாதா ஏற்கனவே அசிங்கப் பிடித்த அரசியல்வாதிகளால் கற்பழிக்கப்பட்டுவிட்டாள். 2011இல் எடுக்கப்பட்ட கருத்துக் கணிக்கின்படி புது டில்லியில் வாழும் பெண்களில் மூன்றில் ஒரு பங்கினர் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்தியாவில் காவற்துறையினரிடம் கற்பழிப்புப் புகார் செய்யச் சென்றவர்களுக்கு நடந்த அநியாயங்கள் பலப்பல. இப்படி இலட்சக்கணக்கான பெண்கள் காவல்நிலையத்தில் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர்.

புது டில்லியில் தாம் தொலைக்காட்சிகளில் அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக  மேக்கப் போட்டுவிட்டு போய் நின்று நிர்பயாவிற்கு நீதிகேட்கும் பெண்களுக்கு இந்திய அமைதிப்படையினர் ஈழத்தில் புகுந்து நிர்பயாவிற்கு நிகழ்ந்ததிலும் பார்க்க பலமடங்கு அநியாயம் தமிழ் அப்பாவிப் பெண்களிற்கு செய்தது தெரிந்திருக்காது. ஆனால் குஜராத்திலும் காஷ்மீரிலும் இசுலாமியப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது நன்கு தெரியும். ஒவ்வொரு நாளும் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் தலித் பெண்களைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. மணிப்பூரில் இந்தியப் படையினர் செய்த பாலியல் கொடுமைகளிற்கு எதிராக புது டில்லிப் பெண்கள் குரல் கொடுத்ததில்லை.

நிர்பயாவிற்கு நடந்ததைப்பற்றி ஒரு இந்தியப் பெண் இப்படிச் சனல் - 4 இற்கு இப்படிச் சொல்கிறார்:


 இன்னொரு பெண் இப்படிச் சொல்கிறார்:


கருவறையில் பெண் என்று தெரிந்தவுடன் கொல்லப்படும் இலட்சக் கணக்கான சிசுக்களுக்கு புது டில்லிப் பெண்கள் குரல் கொடுக்கவில்லை. சீதனத்திற்காக சமையலறையில் காஸ் அடுப்பு வெடித்து இறக்கும் பெண்களுக்காக யாரும் கிளர்ந்து எழவில்லை. மனுதர்ம மனப்பாங்கு அதற்கு வழிவகுக்கவில்லை.

வால்மார்ட்டே(Walmart) கடை திறவாய்
இந்தியக் காங்கிரசு ஆட்சியின் இப்போதைய முக்கிய பிரச்சனை அமெரிக்க வால்மார்ட் இந்தியாவில் நிறைய சுரண்டல்கள் செய்வதற்கு வழியமைப்பதேயாகும். வால்மார்ட் 2014 தேர்தலில் காங்கிரசுக் கட்சி வெற்றி பெறுவதற்கு உதவி செய்யும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்தப் பிரச்சனையில் இருந்து மக்களைத் திசை திருப்ப டில்லி கற்பழிப்பு விவகாரம் வெற்றீகரமாகப் பயன்படுத்தப்ப்டுகிறது.

அவசரமாகத் தகனம் செய்யப்பட்டது ஏன்?
சிங்கப்பூரிலிருந்து கொண்டுவரப்பட்ட நிர்பயாவின் உடலம் அவசரமாக தகனக் கிரியை செய்யப்பட்டது. அவர்மீது அக்கறை கொண்டவர்கள் இறுதி மரியாதை செய்வதற்கு போதிய அவகாசம் கொடுக்கப்படவில்லை.

2 comments:

Anonymous said...

incredible india

Anonymous said...

Appearently Nirbaya is not her real name. It is given name by protest activist + media

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...