Thursday 13 December 2012

மீண்டும் வந்து வழிகாட்டு எம் தேசக் குரலே

இருப்பது எங்கென்று தெரியவில்லை
போவது எங்கென்றும் புரியவில்லை
திசை கெட்டு நிற்கின்றோம்

வழிகாட்டியின்றித் தவிக்கின்றோம்
வழிகாட்டு எம் தேசக் குரலே
மீண்டும் வந்து வழிகாட்டு எம் தேசக் குரலே

கண்களில் கண்ணீரும் வற்றிவிட்டது
அழிவில்லா இடமென ஒன்றிங்கில்லை
துயரம்தவிர வேனொன்றிங்கில்லை
வந்து உன் நகைச்சுவை மொழியால்
எம் உள்ளங்களில் உரமூட்டிக்கொடு
தமிழன் வீரத்தை மீட்டுக்கொடு
புலம் நீங்கி நிலம் புகுந்து

களமாடிய வீரக் குரலே
நம்பிக்கை ஊட்டிவிடு


சிங்கக் கொடிக்குச் சிம்மவாஹினியைச்
சம்பந்தப்படுதுகின்றனர் சிலரிங்கே
இனக்கொலைப்படை எம்மண்ணில்
இருந்துவிட்டுப் போகட்டும் என்கின்றனர்
புது டில்லியையும் வாஷிங்டனையும் 
திருப்திப்படுத்திச் சில்லறைகள் வாங்க
பிள்ளையில்லாவீட்டு கிழங்கள்
பெரிதாகத் துள்ளுகின்றன
வந்திங்கு வழிகாட்டு 
மதியுயர் எம் சுடரே
வந்திங்கு வழிகாட்டு

செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும்
வித்தியாசம் தெரியாமல்
மருண்டு நிற்கின்றனர் - பலர்

பிரிந்து நிற்கின்றனர்
மதியுரைத்த எம் நேசக்குரலே
வந்திங்கு வழிகாட்டு
நல்ல நெறி புகட்டு

புலித்தோல்கள் போர்த்திங்கு
நரிகள் வந்து ஊளையிடுகின்றன
கழுதைகள் இங்கு கானம் பாடுகின்றன
காதுகள் அடைக்கின்றன
நல்லவரை இனம் காட்டு
தலைவனின் பாசக்குரலே
இருளது அகற்று அறிவெளியூட்டு

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...