Friday 26 October 2012

சீனப் பிரதம மந்திரியின் பெரும் செல்வம் அம்பலம்.

சீனக் காசைக் கரியாக்கியவரும் இந்தியக் கரியை காசாக்கியவரும்
அமெரிக்கப் பத்திரிகையான நியூயோர்க் ரைம்ஸ் சீனப் பிரதம மந்திரி வென் ஜியாபோவும் அவரது குடும்பத்தினரும் அவரது பதவிக்காலத்தில் சேர்த்த பெரும் செல்வத்தைப் பற்றி அம்பலப் படுத்தியுள்ளது. ஒரு பன்றி மேய்க்கும் தகப்பனுக்கும் ஆசிரியையான தாய்க்கும் பிறந்த வென் ஜியாபோ எப்படிப் பெரும் செல்வம் சேர்த்தார்?

இந்த ஆண்டுடன் பதவி விலகும் 90 வயதான வென் ஜியாபோ 1998இல் உதவிப் பிரதம மந்திரியாக்கப்பட்டுப் பின்னர் 2003இல் பிரதம மந்திரியாக பதவி உயர்த்தப்பட்டவர். அவரதும் அவரது குடும்பத்தினரதும் செல்வம் 2.7பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்கிறது அமெரிக்கப் பத்திரிகையான நியூயோர்க் ரைம்ஸ். பிரதம மந்திரியின் விதவைத் தாய் யாங்கின் சொத்து 2007-ம் ஆண்டு 120மில்லியன் டாலர்கள்.முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் சொத்து 120 மில்லியன் டாலர்கள்.

சீனப் பிரதம மந்திரியின் தம்பி, மகள், மகன், மைத்துனர் போன்றோரும் பெரும் அவரது பதவிக்காலத்தில் செல்வந்தர்களாகியுள்ளனர்.  வென்னின் உறவினர்கள் வங்கிகள், நகைக்கடைகள், உல்லாச விடுதிகள், தொலைதொடர்பு நிறுவனங்கள் போன்ற பல கம்பனிகளில் பங்குதாரர்களாக உள்ளனர். சீன அரசு குடும்பங்கள் ஆரம்பிக்கு வியாபார முயற்ச்சிகளுக்கு உதவும் கொள்கை கொண்டது. சீனாவில் 2008-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிகளிற்கான அரங்கங்களைக் கட்டுவதில் வென் ஜியாபோவின் குடும்பந்தினர் சம்பந்தப்பட்டு பெரும் செல்வம் ஈட்டினராம்.

2004-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காப்புறுதி நிறுவனத்தில் மட்டும் வென் ஜியாபோவின் குடும்பத்தினர் 1.8பில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பாதித்தனர் என்கிறது அமெரிக்கப் பத்திரிகையான நியூயோர்க் ரைம்ஸ்.

சீனக் கம்யூனிசக் கட்சியின் விதிகளின் படி கட்சியின் உயர் பதவியில் உள்ளவர்கள் தமது சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும். ஆனால் அதி உயர் பதவியில் இருப்பவர்களின் உறவினரகள் தங்கள் சொத்து விபரங்களை வெளியிட வேண்டுவதில்லை. இந்த ஓட்டையைப் பாவித்து பலர் சொத்து சேர்த்துள்ளனர். சீனாவின் அடுத்த அதிபராக வரவிருக்கும் ஸி யின்பிங்கின் சொத்துக்களைப்பற்றி புளூம்பேர்க் பகிரங்கப்படுத்தியதைத் தொடர்ந்து அது சீனாவில் தடை செய்யப்பட்டது.சீனாவில் அதி உயர்பதவியில் இருப்பவர்களின் பிள்ளைகளுக்கு பல சலுகைகள் உண்டு. அவர்கள் இளவரசர் இளவரசிகள் போல் நடாத்தப்படுவர். பங்குச் சந்தையில் கூட அவர்கள் கழிவு விலைக்கு பங்குளை வாங்க முடியும். வென் ஜிபாவேயின் மகனும் மருமகளும் பல நிறுவனங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல பங்குகளை வாங்கிக் குவித்துள்ளனர். மகனின் நண்பன் ஒருவரும் பெரும் செல்வந்தர் ஆகியுள்ளார் என்கிறது நியூயோர்க் ரைம்ஸ். சீனப் பிரதம மந்திரியின் மகன் சீனாவில் பட்டமும் கனடாவில் உயர்படிப்பும் சிக்காக்கோவில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.

அமெரிக்கப்பத்திரிகை 2007இல் வென் ஜியாபோ சொன்னதை நினைவு படுத்துகிறது.
“Leaders at all levels of government should take the lead in the antigraft drive. They should strictly ensure that their family members, friends and close subordinates do not abuse government influence.”  

நியூயோர்க் ரைம்ஸின் நீளமான கட்டுரையை சீனாவின் டுவிட்டரான வெய்போவில் பகிர சிலர் முயன்றபோது  "Your post cannot be published due to violation of law". என்ற பதில் வந்ததாம்.  ஒரு கோடி மக்களுக்கு மேல் பலி கொண்ட சீனப் புரட்சி கடைசியில் கண்டது இதுதானா?

கேம்பிரிட்ஜ் நகரில் எச்சில் உணவுத் தட்டுக் கழுவியவள் இந்தியா வந்து பெரும் பணக்காரி ஆனாள். 5 ஆண்டுகளுக்கு முன்னர் சுவிஸ் வங்கியில் 2பில்லியன் டாலர்களாம். இப்போது பல மடங்காக இருக்கலாம்.  நாதியற்ற தெலுங்கர்கள் ஆடிப் பிழைக்க தமிழ்நாட்டுக்கு வந்து பெரும் செல்வந்தர் ஆனார்கள். கன்னடத்தில் திவாலான குடும்பம் தமிழ்நாட்டுக்கு வந்து பெரும் பணம் சேர்த்து தமிழர்களைத் தன் காலில் விழ வைக்கிறது. அரசியலில் இதெல்லாம சகஜம் என்று இருக்கக் கூடாது மக்கள் தட்டிக் கேட்க வேண்டும்.

பிந்திக் கிடைத்த செய்திகளின் படி சீனாவில் நியூயோர்க் ரைம்ஸ் தடை செய்யப்பட்டுள்ளது. சீனப் பிரதமரின் செல்வம் தொடர்ப்பான செய்திகள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன. இது தொடர்பாக பிரசுரிக்கும் இணையத் தளங்கள் தடை செய்யப்படுகின்றன.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...