Saturday 20 October 2012

நிருபாமா ராவே இலங்கைப் போர்இந்தியாவின் கை மீறி நடந்ததா? கைங்கரியமா?

விகடன் குழும சஞ்சிகைகளை இந்திய உளவுத்துறையான் ரோ தமிழ் மக்கள் மத்தியில் பொய்ப்பிரச்சாரம் செய்வதற்கு தந்திரமாகப் பயன்படுத்துகிறதா என்ற சந்தேகம் நியாயமானதே. பல தடவைகளில் விகடன் கபடத்தனமான கட்டுரைகளில் தமிழர்களுக்கு ஆதரவாகவும் கட்டுரைகளுக்கான பின்னூட்டங்களில் தமிழர்களின் போராட்டத்தை படு மோசமாகக் கொச்சைப் படுத்தியும் எழுதி இருந்தது. இலங்கை அரசின் கைக்கூலியாக விகடனைச் சேர்ந்த ஒரு ஊடகவியலாளர் செயற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டதும் உண்டு.

18/10/2012இலன்று வெளிவந்த ஆனந்த விகடன் இதழில் வெளியான இந்தியவின் வாஷிங்டனுக்கான தூதுவர் நிருபாம ராவின் பேட்டி வெளிவந்திருக்கிறது. இவர் முன்பு இந்தியாவின் கொழும்பிற்கான தூதுவராகச் செயற்பட்டவர். 200-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் திரைமறைவில் அமெரிக்க அனுசரணையுடன் இலங்கையில் ஒரு இடைக்கால தன்னாட்சி அதிகார சபை அமைக்க வேண்டும் என விடுதலைப் புலிகள் ஒரு வேண்டுகோளை முன்வைக்க அதை அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அதை ஏற்றுக் கொண்டார். அந்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபை இந்தியாவில் உள்ள மாநில் அரசின் அதிகாரங்களை விடக் கூடியது. ஊடனே இந்தியா கொதித்து எழுந்தது. இந்தியப் பார்ப்பன ஊடங்கங்கள் இடைக்கால தமிழீழம் என எழுதி சிங்கள இனவாதிகளை உசுப்பி விட்டனர். அப்போது கொழும்பிற்கான இந்தியத் தூதுவராக இருந்த நிருபாமா ராவ் சிங்கள இனவாதிகளை ஒன்றிணைத்தார். விளைவு ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டு மஹிந்த ராஜபக்ச பிரதம மந்திரியாக்கப்பட்டார். பெரும் இனக்கொலைக்கு வித்திடப்பட்டது.

இலங்கையில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நடக்கும் போது அரச படைகள் மூர்க்கத்தனமான தாக்குதல் போரை ஆரம்பித்தால் விடுதலைப் புலிகள் பின் நோக்கி நகர்ந்து கொண்டே அரச படைகளுக்கு ஆளணி இழப்பை ஏற்படுத்துவர். இந்த ஆளணி இழப்பும் பல படையினர் படு காயமடைந்து களத்தில் இருந்து விலகுவதும் கள நிலமையை விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக மாற்றும் அக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் தமது தாக்குதலைத் தீவிரப்படுத்தி அரச படைகளைப் பின்வாங்கச் செய்வர். அதனால் அரச படையினர் கைப்பற்றியதிலும் பார்க்க அதிக அளவு நிலப்பரப்பை இழப்பர். இலங்கை அரசின் ஜெயசிக்குரு படை நடவடிக்கை இதற்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு. ஆனால் 2008இலும் 2009இலும் நடந்த போரில் நிலைமை மாறிவிட்டது. போரில் சிங்களப் படையினருக்கு ஏற்பட்ட ஆளணி இழப்பை இன்னொரு நாட்டில் இருந்து வந்த 20,000மேற்பட்ட படையினர் ஈடு செய்தனர். அது எந்த நாடு என்பதை யாவரும் அறிவர். இப்படி இருக்கையில் இலங்கைப் போர் இந்தியாவின் கை மீறி நடந்தது என்று நிருபாம ராவ் சொல்வது முழுப் பொய்.

சீனா ஷாங்காய் ஒத்துழைப்பு சபையில் இலங்கை இணைந்து கொண்டது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வளர்வதை இந்தியா கண்டு கொள்ளாமல் இருப்பது பற்றி பல படைத்துறை ஆய்வாளர்கள் ஆச்சரியம் தெரிவித்தது உண்டு. சீனா இலங்கியில் பலவகையில் தனது பிடிகளை இறுக்குகிறது.
இலங்கைக்கு பண உதவி வழங்கும் நாடுகளில் சீனா முதலாமிடத்தில் நிற்கிறது.இலங்கைக்கு பெருமளவு படைக்கலன் விற்பனையையும் உதவியையும் சீனா செய்கிறது. சீனா தனது ரத்து(வீட்டோ) அதிகாரத்தைப் பாவித்து ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் மனித் உரிமை தொடர்பாக பாதுகாப்புச் சபை விவாதிக்காமல் பார்த்துக் கொண்டது. எல்லாவற்றிலும் மேலாக சீனா அம்பாந்தோட்டையில் அமைத்த துறைமுகம் அமைகிறது. இதைப்பற்றி இருமுறை குன் ஜன் சிங் இந்தியாவை எச்சரித்துள்ளார். ஒன்று 2009 ஜூனில் மற்றது ஆகஸ்டில்:

“This increasing closeness between Colombo and Beijing is a reason for concern for New Delhi. During the construction of the (Hambantota) port a large number of Chinese experts are to be expected to be present in the region and this is proving to be a security concern for the Indian side.”

இலங்கையில் சீன செயற்படுத்தும் பல்வேறு திட்டங்களில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சீனர்கள் இருப்பதாக லங்கா ஈ நியூஸ் இணையத் தளம் செய்தி வெளியிட்டது. இவர்களில் பெரும்பாலானோர் சீனாவின் செம்படை உறுப்பினர்களும் சிறைக்கைதிகளும் ஆவர்கள். இப்படி இருக்கையில் நிருபாம ராவ் விகடனுக்குச் சொன்னது:

  • ''இந்தியாவைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பாதுகாப்புத் துறையும் வெளியுறவு அமைச்சகமும் 24 மணி நேரமும் உன்னிப்பாகக் கவனிக்கின்றன. இலங்கையின் வட பகுதிகளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய இடங்களுக்கு முதன்முதலாகச் சென்று வந்த வெளியுறவுச் செயலர் என்ற முறையில் சொல்கிறேன். அங்கே சீனாவின் ஆதிக்கம் இல்லை. சாலை போடுவதில் தொடங்கி வீடு கட்டித் தருவது வரை 500 கோடி ரூபாய் செலவில் மறு சீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவற்றை இந்தியாவே செய்துகொண்டிருக்கிறது.''
இந்திய வெளியுறவுத் துறையும் பாதுகாப்புத் துறையும் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் இருந்தால்தான் தமிழர்களின் போராட்டத்தை அடக்க முடியும் என உணர்ந்தே இலங்கையில் சீன ஆதிக்கத்தை வளரவிட்டன. சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் இருந்தால்தான் தமிழர்களின் போராட்டத்தை மீண்டும் தொடங்க முடியாமல் செய்ய முடியும் என்பதால் அவர்கள் இந்தியாவில் பாதுகாப்பைப் பலியிட்டாவது தமிழர்கள் போராட்டத்தை அடக்க முயல்கிறார்கள். தமிழன் எனப்பட்டவன் சூத்திரனோ இல்லியோ! அவாள் ஆளக்கூடாது. ஆளப்பட வேண்டியவாள்.

1 comment:

Anonymous said...

இந்தியா என்ற முட்டாள் யானை தன் தலையிலே மண் அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கின்றது என்பது தெளிவு. எம்மை தமிழினத்தை அழிக்க நினைத்து இந்திய பாப்பான அரசு தம் நாட்டையே சிதறடிக்கும் செயல்களை செவ்வனே செய்து கொண்டிருக்கின்றது. பிரதிபலன்கள் விரைவில் தெரியவரும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...