Thursday 13 September 2012

கமலேஷ் ஷர்மா என்ற சொறிநாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தால்!

படம்: நன்றி டெய்லி மிரர்.
நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது வாலைக் குழைச்சிட்டு போற இடத்துக்குத் தான் போகும் என்பது எமது நாட்டில் அடிக்கடி சொல்லப்பட்டும் வாசகம். அது கமலேஷ் ஷர்மா என்ற  பொதுநலவாய நாட்டுப் பொதுச் செயலருக்கும் பொருந்தும். ஷர்மாக்கள் எங்கிருந்தாலும் தன் புத்தியை மாற்ற மாட்டார்கள். இலங்கையில் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்த பின்னர் இலங்கை தொடர்பாக அவாள் உதித்த கருத்து:
  • இலங்கையில் மக்களாட்சி  தொடர்பில் எவ்வித குறைபாடுகளும் இல்லை. மக்களாட்சி என்பது ஒரு பயணம் என்றும் அது பயணம் முடிவுறும் இடமில்லை. 
  • வடக்கு, கிழக்கு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதை எனது கண்களால் காணக்கிடைத்தமை தொடர்பில் மிகவும் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கமலேஷ் ஷர்மாவின் மனைவியை மஹிந்தவின் மனைவி சந்தித்தார். என்ன "பரிமாறப்பட்டதோ இப்படி இலங்கையைப் பற்றிக் கூறுவதற்கு? பன்னாட்டு அரசியல் அறிவில்லாத ஒருவனுக்குக் கூடத் தெரியும் ஒரு நாட்டுக்குச் செல்லும் அரசதந்திரிக்கு அந்நாட்டு அரசின் வழிகாட்டுதல் பயணத்தில்(guided tour) அரசு தனக்குச் சாதகமாக நிலைமை இருப்பது போல் காட்டிவிடும் என்று. சில மானம்கெட்ட நாட்டு அரசதந்திரிகள் ஏற்கனவே தட்சணைகளை தாராளமாகப் பெற்றுக் கொண்டு அரசு சொல்லும் ஒரு சில இடங்களுக்குச் சென்றுவிட்டு அரசைப் பாராட்டி அறிக்கைகள் விடுவர். இப்படிப்பற்றவற்றை நாம் அண்மைக்காலங்களாக நிறையப் பார்க்கிறோம்.

கனடாவிற்கு ஆலோசனை கூறும் கமலேஷ்
ஏற்கனவே கனடியப் பிரதமர் ஸ்ரிவன் ஹார்ப்பர் இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறமுன்னர் இலங்கையில் இறுதிப் போரின் போது நடைபெற்ற அத்து மீறல்கள் தொடர்பாக முறையான விசாரணை செய்யாவிடில் தான் அம்மாநாட்டில் பங்கு பற்றப் போவதில்லை என இலங்கையை எச்சரித்திருந்தார். ஆனால் கமலேஷ் ஷர்மா கனடா இந்த முடிவை மாற்ற வேண்டும் என்றார்.  கமலேஷ் ஷர்மாவிற்கு நன்கு தெரியும் இலங்கைப் போரின் போது இலங்கை மட்டும் குற்றம் புரியவில்லை என்று. கிழக்கு மாகாணத்தில் அரசின் அத்து மீறல்கள் தேர்தல் முடிந்தவுடன் முடியவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற மாற்றுக் கட்சி வேட்பாளர்களை இப்போது அரசு மிரட்டியும் ஆசைகள் காட்டியும் தம்முடன் இணையும்  படி வேண்டுகிறது.கமலேஷ் ஷர்மா ஹெஹெலிய ரம்புக்வெலவின் பணியைச் செய்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.

மாமா வேலை பார்த்த கமலேஸ்
இலங்கையில் அண்மையில் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலின் போது நடந்த முறை கேடுகளைப்பற்றி பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே கமலேஷ் ஷர்மா இலங்கையில் மக்களாட்சி  தொடர்பில் எவ்வித குறைபாடுகளும் இல்லை என்றார். இந்தக் கமலேஷ் தான் பொது நலவாய நாட்டின் அலுவலகத்தில் பிரித்தானிய அரசியாரின் வைர விழாவின் போது பொருளாதார மாநாட்டில் மஹிந்தவை உரையாற்ற வைக்கும் மாமா வேலை பார்த்துத் தோல்விகண்டவர்.

இதுக்கென்றே ஒரு குரூப்பாய் அலையுறாங்கள்
ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு விஜய் நம்பியார், வாஷிங்டனில் ஒரு நிருபாமா ராவ், பொதுநலவாய நாட்டில் ஒரு கமலேஷ் ஷர்மா சென்னையில் ராம், சோ, சுவாமி போன்றோர் தமிழனை அழிக்கும் சிங்களவர்களிற்கு வக்காலத்து வாங்குவதை தம் பணியாகக் கொண்டுள்ளனர்.

1 comment:

Easy (EZ) Editorial Calendar said...

எல்லாம் அரசியல்........

Did you get a chance to check the website www.ezedcal.com to manage editorial calendar easily for your blog and show your editorial calendar in your blog easily (optional)
Thanks & Regards
Malar

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...