Sunday 23 September 2012

நகைச்சுவைக் கதை: ஒரு இரவிற்கு ஐநூறு டாலார்கள்...

அது ஒரு பிரபல பலகலைக் கழகம். பல துறையிலும் மாணவர்கள் பயில்கின்றனர். அவர்கள் நாளைய விற்பன்னர்களாக மாறுவார்கள். அப்பல்கலைக் கழகத்தின் பெரிய நூலகத்திற்குள் ஒரு கம்பீரமான மாணவன் உள் நுழைந்தான். எல்லா நாற்காலிகளும் நிறைந்திருந்தன, ஒரு மிகக் கவர்ச்சியான ஒரு இளம் பெண்ணிற்கு அருகில்  இருக்கும் ஒரு நாற்காலியைத் தவிர...

அந்தக் கம்பீரமான இளைஞன் அப்பெண்ணிடம் சென்று இந்த நாற்காலியில் உட்காரலாமா என இரகசியமாகவும் பணிவாகவும் கேட்டான். உடனே அந்தப் பெண் உரத்த குரலில் " என்னால் உன் அறையில் இன்றைய இரவைக் கழிக்க முடியாது" என்றாள்....நூலகத்தில் இருந்த அத்தனை பேரும் அந்த இளைஞனை அசிங்கமாகப் பார்த்தனர். அதிர்ச்சியும் வெட்கமும் அடைந்த அந்த இளைஞன் ஒரு மூலையில் போய் நின்று பெரிய புத்தகத்தில் இருந்து குறிப்புக்கள் எடுத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அந்த கவர்ச்சிகரமான பெண் அவனிடம் சென்று இரகசியமாக நான் மனோதத்துவ மாணவி. சும்மா உனக்கு ஒரு அதிர்ச்சி கொடுத்து நீ அதை எப்படிச் சமாளிக்கிறாய் எனப் பார்த்தேன் என்றாள். உடனே அந்த இளைஞன் உரத்த குரலில் "என்ன ஒரு இரவிற்கு உனக்கு ஐநூறு டாலர்களா? இது ரெம்ப அதிகம்" என்றான். அவமானம் தாங்காமல் தலை குனிந்து கண்ணீர் மல்க நின்ற அப்பெண்ணிடம் இரகசியமாக " நான் ஒரு சட்டத்துறை மாணவன். ஒருவரை எப்படிக் கேள்வி மூலம் குற்றவாளியாக்கலாம் என்று சோதித்துப் பார்த்தேன்" என்றான்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...