Thursday 20 September 2012

வானிலும் மேலான தேசமடி




தாயகம் என்றொரு பூமியடி - அது
நாம் வணங்கும் தெய்வமடி
நாயகம் என்று இன்று ஆச்சுதடி - எம்
மீளெழுச்சியில் அது மீட்சியடி

மலர்க ஈழம் எனக் கும்மியடி - நன்றாய்
வாழ்க அதுவெனச் சொல்லியடி


சிந்தையில் என்றும் தேசியமடி - அது
தந்தை செல்வா தீட்டிய ஓவியமடி
தடம் மாறி இன்று போனதடி - எம்
ஐக்கியத்தில் மீள எழுச்சி பெறுமடி

மலர்க ஈழம் எனக் கும்மியடி - நன்றாய்
வாழ்க அதுவெனச் சொல்லியடி



தன்னாட்சி எங்கள் ஊக்கமடி - அங்கு
பொன்னாட்சி எங்கள் நோக்கமடி
நல்லாட்சி என்றும் நிலைக்குமடி - நல்ல
தமிழாட்சி எங்கும் முழங்குமடி
வருக அதுவெனக் கும்மியடி - நன்றாய்
வாழ்க அதுவெனச் சொல்லியடி


தாயகம் தேசியம் தன்னாட்சியடி - அது
தாரக மந்திரம் என்றாச்சுதடி
எம் பணி என்றும் ஓயாத அலைகளடி
எந்த அழிவிலும் சாயாத தலைகளடி
நாளை மலரும் எம் ஈழமடி

வருக அதுவெனக் கும்மியடி - நன்றாய்
வாழ்க அதுவெனச் சொல்லியடி




வானிலும் மேலான தேசமடி - அது
எம் நெஞ்சின் இனிய நேசமடி - தமிழ்
ஈழம் என்றொரு பூமியடி - எம்
தமிழர் தாயகத் தேசமடி
வருக அதுவெனக் கும்மியடி - நன்றாய்
வாழ்க அதுவெனச் சொல்லியடி

என்றும் தணியாத தாகமடி - அது
எதற்கும் அடங்காத மோகமடி
நாம் தாயகம் என்றொரு தேசமடி -  அது
நாளை மலரும் தமிழ் ஈழமடி
வருக அதுவெனக் கும்மியடி - நன்றாய்
வாழ்க அதுவெனச் சொல்லியடி

கார்த்திகை மாதத்து நாய்கள் போலடி - பல
காக்கிச் சட்டையணி பேய்களடி
நம் பூமியில் இன்று அலையுதடி - அவற்றை
விரட்டியடிக்க மலரும் ஈழமடி

வருக அதுவெனக் கும்மியடி - நன்றாய்
வாழ்க அதுவெனச் சொல்லியடி

எம் நிலம் எமக்கே வேண்டுமடி - அதை
நானிலம் கேட்க வேண்டுமடி
தாய் நிலம் எங்கள் தங்கமடி - அங்கு
நாளை பறக்கும் எம் தேசியக் கொடி

வருக வருகவெனக் கும்மியடி - நன்றாய்
வாழ்க வாழ்கவெனச் சொல்லியடி

2 comments:

Easy (EZ) Editorial Calendar said...

மிக அருமையான கவிதை....உங்கள் பகிர்வுக்கு நன்றி......

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

தமிழ் காமெடி உலகம் said...

மிக அருமையான கவிதை வரிகள்...பகிர்வுக்கு நன்றி...

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...