Thursday 21 June 2012

குருவிகள், வண்டுகள் போல் வேவு பார்க்கும் விமானங்கள்

குருவி போல் தோன்றும் வேவு பார்க்கும் விமானம்
போரில்லா ஆள் விமானங்களை உருவாக்குவதை விடுத்து விஞ்ஞானிகள் ஆளில்லாப் போர் விமானங்களை உருவாக்கி அப்பாவிகளை இலகு வழிகளில் கொன்று உலகத்தையே ஆளில்லாமல் ஆக்கப் பார்க்கின்றனர். இனி வரும் காலங்களில் நாடுகளிடையான போரில் ஆளில்லா விமானங்களும் இணையவெளித் தாக்குதல்களும் முக்கிய பங்குளை வகிக்க இருக்கின்றன.
வண்ணத்துப் பூச்சி பார்க்குது பார்...... வேவு பார்க்குது பார்....இது பெண்டகனின் cyborg insec

உலகின் பல நாடுகள் தங்கள் படைத்துறைக்கும் உளவுத் துறைக்கும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துகின்றன. அமெரிக்கா தனது படைத் துறைக்கு ஆளில்லாப் போர் விமாங்களை அதிகமாக இணைத்து வருகிறது. பாக்கிஸ்த்தானிலும் யேமனிலும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பல இசுலாமியத் தீவிரவாதிகளையும் அவர்களின் முக்கிய தலைவர்களையும் கொன்றுள்ளது. அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயும் சொந்தமாக ஆளில்லா விமானத் தளங்களை உலகின் பலபாகங்களிலும் இரகசியமாக அமைத்துள்ளது. 2012இல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொள்ளும் முடிவு ஆளில்லா விமானங்கள் மூலம் எதிர்காலப் போரை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடனேயே எடுக்கப்பட்டது. ஆளில்லாப் போர் விமானங்கள் அமெரிக்காவின் மரபு வழிப்போரிலும் திரை மறைவுப் படை நடவடிக்கைகளிலும் முக்கிய இடம் வகிக்கிறது. கடற் கொள்ளையர்களுக்கு எதிராகவும் அமெரிக்கா ஆளில்லா விமானங்களை களமிறக்கியுள்ளது.
விரல் நுனியில் நுளம்பல்ல.....வேவு விமானம்

வேவு பார்க்கும் சிறு விமானங்கள் - Nano-biomimicry MAV design
ஆளில்லாப் போர் விமானங்கள் அளவில் பெரியதாக உருவாகி வருகையில் வேவு பார்க்கும் ஆளில்லா விமானங்கள் அளவில் மிகச் சிறியதாகி வருகின்றன. ஆளில்லா விமானங்களை ஆங்கிலத்தில் drones என அழைப்பர். இதில் சிறிய வகைகளை miniature drones அல்லது micro air vehicles (MAVs). இந்த micro air vehicles சிறு பூச்சிகளின் உடலமைப்பு, அவற்றின் உணரிகள், பறப்பதற்கு அவை பாவிக்கும் நுட்பங்கள் போன்றவற்றைப் பிரதி செய்து உருவாக்கப்பட்டுள்ளன. சில வேவு விமானங்கள் குருவிகள் போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. பூச்சிகளின் உடலில் உள்ள தொழில் நுட்பங்களை reverse-engineering முறை மூலம் கண்டறிந்து அந்த நுட்பங்களை சிறிய வேவு விமானங்களில் பாவித்துள்ளனர் ஐக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள். சிறு பூச்சிகளின் கண்கள், வௌவாலின் காதுகள், தேனிக்களின் உணரி ரோமங்கள் போன்றவற்றில் உள்ள தொழில் நுட்பங்களைக் கண்டறிந்து அவற்றை வேவு பார்க்கும் micro air vehicles (MAVs)களில் பாவித்துள்ளனர். பிரெஞ்சு விஞ்ஞானிகள் பறவைகளின் சிறகடிக்கும் தொழில் நுட்பத்தை தமது micro air vehicles (MAVs)களில் பாவித்துள்ளனர். வேவு விமானங்களில் வடிவமைப்பில் பூச்சிகளினதும் குருவிகளினதும் செயற்படு நுட்பங்களைப் புகுத்துவதை Nano-biomimicry MAV design என்கின்றனர். கடந்த 350 மில்லிய ஆண்டுகளாக பூச்சியினங்கள் தங்கள் பறக்கும் திறனை எப்படி கூர்ப்படையச் செய்தன என்பதை ஆராய்ந்த பிரித்தானிய விலங்கியலாளர் ரிச்சர்ட் பொம்ஃபிரி பூச்சியினங்கள் சிறுவிமானங்களை வடிவமைப்பது எப்படி என எமக்குக் கற்றுத் தந்துள்ளன என்கிறார்.
சிறியரக பூச்சிகள் குருவிகள் போன்ற விமானங்கள் எதிரி நாட்டின் இருக்கும்  படைக்கலன்களின் தன்மை வலிமை பற்றிக் கண்டறியப் பெரிதும் உதவும். வேதியியல் படைக் கலன்கள் அணுக் குண்டுகள் போன்றவற்றை அவை துல்லிய மாகக் கண்டறியும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...