Thursday 10 May 2012

அல் கெய்தா - சிஐஏ இடையிலான சதிப்போட்டி

குண்டு நிபுணர் இப்ராஹிம் அல் அசிரி
ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவில் அல் கெய்தா ஐக்கிய அமெரிக்காவிற்கு ஒரு பலத்த பதிலடி கொடுக்கும் எனப் பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஐக்கிய அமெரிக்காவின் உளவுத் துறையும் உள்ளகப் பாதுகாப்புத் துறையும் மிகுந்த கண்காணிப்புடன் இருந்தனர். தற்போது அல் கெய்தாவின் கிளை அமைப்புக்களில் மிகவும் பயங்கரமானதாகக் கருதப்படும் அரபுக் குடாநாட்டிற்கான அல்கெய்தா (AQAP) நடத்த இருந்த தாக்குதலை அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ தனது இரட்டை உளவாளியால் முறியடித்தது.

2011மே மாதம் 2-ம் திகதி பின் லாடன் கொல்லப்பட்டார். அதற்கு அல் கெய்தா இயக்கம் பழிவாங்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அமெரிக்க அரசு உலகெங்கும் பல எதிர் நடவடிக்கைகளையும் எடுத்திருந்தது. இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்த பிரபல சினிமா நடிகர்கள் கூட அவர்கள் பெயர்கள் கான் என்றும் ஹாசன் என்றும் இருந்த படியால் பல மணித்தியாலங்கள் அமெரிக்க விமான நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.


சிஐஏயின் படுபயங்கரவாதம்
அமெரிக்க உளவுத் துறைக்கும் அல் கெய்தாவிற்கும் இடையில் அமெரிக்க இரட்டைக் கோபுரங்களின் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து திரைமறைவிலும் உளவு நிறுவனமாக இருந்த அமெரிக்காவின் சிஐஏ தனக்கு என்று ஒரு படை அணியையும் உருவாக்கி விட்டது. தடுப்பு முகாம்கள் எனப்படும் வதை முகாம்களை சிஐஏ அமெரிக்காவிற்கு வெளியே பல நாடுகளில் நிறுவி அங்கு தான் சந்தேகிப்பவர்களைத் தடுத்து வைத்திருந்து பல சித்திர வதைகளைச் செய்தது. ஜோர்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த போது அமெரிக்காவில் அல் கெய்தா சந்தேக நபர்களிடம் இருந்து தகவல்களைப் பெற சி ஐ ஏ உளவு நிறுவனம் Waterboarding Interrogation Techniques எனப்படும் Simulated drowning ஐப்பாவித்தது. கைதி நீருள் மூழ்கி இறப்பது போன்ற ஒரு உணர்வைப் போலியாக ஏற்படுத்தி அதன் மூலம் அவருக்கு இறக்கப் போகிறேன் என்றபயத்தை ஏற்படுத்தி அவரை உண்மைகளைக் கக்க வைப்ப்துதான் இந்த water boarding சித்திரவதை. ஐரோப்பாவில் மட்டும் 14 நாடுகளில் சிஐஏயின் இரகசியத் தடுப்பு முகாம்கள் இருந்தன. இவை எந்த நாட்டுச் சட்டத்திற்கும் உட்பட்டவை அல்ல. போலந்தில் சிஐஏ இரகசியத் தடுப்பு முகாம்களில் அல் கெய்தா சந்தேக நபர்களைச் சித்திரவதை செய்ததை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது. சிஐஏயின் "கைதுகளும் சிறை வைத்தலும்" எந்த ஒரு நாட்டுச் சட்டத்திற்கும் இசைய நடப்பவை அல்ல. சிஐஏயின் ஒரு பிரிவான பயங்கரவாத எதிர்ப்பு நிலையத்தில் 09-11-2001இல் 300பேர் மட்டுமே பணி புரிந்தனர். 9-11 தாக்குதல் நடத்தப்பட்டவுடன் அதில் 1200பேர் உடனடியாக இணைக்கப்பட்டனர். இப்போது அதில் 2000இற்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். இதைவிட ஒப்பந்த அடிப்படையில் வேலைசெய்யும் வெளிநாட்டினர்களின் பலர் உள்ளனர். உலகெங்கும் உள்ள அல் கெய்தா இயக்கத்து உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க சிஐஏயின்  பயங்கரவாத எதிர்ப்பு நிலையத்தில் அதிகம் பேர் பணி புரிகிறார்கள் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்திகளை மாற்றும் அல் கெய்தா
விமான நிலையங்களில் இருக்கும் தீவிர கண்காணிப்புக் கருவிகளில் இருந்து தப்பக் கூடிய குண்டுகளை அல் கெய்தா தயாரித்தது. எந்த வித உலோகங்களும் இல்லாத குண்டை உருவாக்கி அதை உள்ளாடைக்குள் மறைத்து வைத்துத் தைத்து வைக்கக் கூடியாதாக அமைத்தது. பின்னர் அதற்க்குள் ஊசி மூலம் இன்னொரு திரவத்தைச் செலுத்துவதால் அது வெடிக்கும். இந்தக் குண்டுகளுகள் PETN எனப்படும் Pentaerythritol tetranitrate இரசாயனப் பதார்த்தங்களால் உருவாக்கப்பட்டன. இவை மிக வலிமை மிக்க குண்டுகளாகும் 2009 டிசம்பரில் உமர் ஃபருக் அப்துல்ல என நைஜீரிய நாட்டுக் குடிமகன் Flight 253 என்னும் விமானத்தில் ஏறி அதை வெடிக்க வைக்க முயற்சித்த போது அண்மையில் இருந்த பயணிகளால் அவரது நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.  PETN மூலம் தயாரிக்கப்படும் குண்டுகள் குண்டுகள் கண்டுபிடிக்கும் நாய்களாலும் கண்டுபிடிக்க முடியாதவை. விமான நிலையங்களில் இருக்கும் இரசாயன உணர்கருவிகளாலும் இனங்காணப்பட முடியாதவை. அத்துடன் மலிவாக formaldehyde and calcium hydroxide ஆகியவற்றை கலந்து தயாரிக்கக் கூடியவை.


இரட்டை உளவாளி
அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ சவுதி அரேபிய உளவுத் துறையின் உதவியுடன் தனது உளவாளிகளை அல் கெய்தா இயக்கத்தில் இணையச் செய்துள்ளது. இவர்களில் ஒருவரை அல் கெய்தாவின் குண்டுத் தயாரிப்பு நிபுணர் ஃப்ஹ்ட் அல் குசோ அமெரிக்க விமானம் ஒன்றைத் பின் லாடனின் ஓராண்டு நினைவாகத் தகர்க்க தேர்ந்தெடுத்தார். அவரிடம் உள்ளாடையில் வைத்துத் தைக்கப்பட்ட PETN குண்டு வழங்கப்பட்டது. அவர் அக்குண்டை அமெரிக்க உளவுத் துறையிடம் கொடுத்ததுடன் ஃப்ஹ்ட் அல் குசோவின் இருப்பிடத்தையும் அறிவித்தார். உடனே சிஐஏயின் ஆளில்லா விமானம் அவர் வாகனம் ஒன்றில் இருந்து இறங்கும் போது குண்டுவீசிக் கொன்றது.
ஃப்ஹ்ட் அல் குசோ
அல் கெய்தாவிற்கு நெருக்கடி
சிஐஏயின் உளவாளிகள் தனது அமைப்புக்குள் இணைந்திருக்கிறார்கள் என்பது அல் கெய்தாவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். தமது இயக்கத்தில் இருப்பவர்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டும். இது பெரும் உள்ளகப் பிரச்சினையை ஏற்படுத்தும். அவர்களின் கண்டுபிடிபான உள்ளாடை  PETN குண்டு இப்போது சிஐஏயின் கையில். அவர்கள் இவற்றைக் கண்டறியக் கூடிய தொழில்நுட்பத்தை உடன் உருவாக்குவாரகள். அல் கெய்தாவின் குண்டு நிபுணர் இப்ராஹிம் அல் அசிரி இனி வேறு குண்டு உருவாக்குவாரா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...