Wednesday 25 April 2012

ந கைச்சுவைக்கதை: சோனியா கேட்ட பலகை

பிரதம மந்திரியின் பணிமனையில் வேலை செய்பவர்கள் ஒருவரும் தன்னை மதிப்பதில்லை என்று மன் மோகன் சிங்கிற்குப் பெரிய கவலை. அது பற்றி பலரிடமும் சொல்லிப் பார்த்தார். கலந்து ஆலோசனை செய்து பார்த்தார். பலனில்லை. மிகவும் கவலை தேய்ந்த முகத்துடன் வீடு சென்றார். அவரது கவலையான முகத்தைக் கண்ட அவரது மனைவி நடந்தது என்ன என்று கேட்டார். யாரும் தன்னை தனது பணிமனையில் மதித்து நடப்பதில்லை என்றார். அதற்கு மனைவி மலையாளிகள்தான் ஆலோசனை வழங்குவதில் கெட்டிக்காரர்கள். சிவ் சங்கர மேனனைக் கேட்டால் அவன் உங்களுக்கு நல்ல ஆலோசனை வழங்குவான் என்றார்.

அடுத்த நாள் மன்மோகன் சிங் பாதுகாப்புத் துறை ஆலோசகர் சிவ் சங்கர மேனனை அழைத்து எனது பணிமனையில் என்னை ஒருவனும் மதிக்கிறார்கள் இல்லை. எல்லோரும் என்னை மதிக்க என்ன செய்யலாம் என்று கேட்டார் மன்மோகன் சிங். சிங்கின் நிலையை நன்கு உணர்ந்தவரான மேனன் அது உன் தலைவிதி என்றார்.. விரக்தியடைந்த சிங் உடனே அமெரிக்கப் பாதுகாப்புத் துறைப் பணிமனையான பெண்டகனுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது பிரச்சனையை எடுத்துக் கூறினார். அவர்கள் தாம் அமெரிக்க உளவுத் துறையான சிஐஏயுடன் தொடர்பு கொண்டு ஒரு சில மணித்தியாலங்களுக்குள் ஆவன செய்வதாகக் கூறினார்கள். பின்னர் சிங் தனது பணிமனைக்குச் சென்றபோது அவரது அறை வாசலில் "I am the boss here" என்று ஆங்கிலத்திலும்  मु३ो यहां की देखभाल करना என்று இந்தியிலும் எழுதப்பட்ட அழகிய பலகை ஒன்று தொங்கியது. அதைப் பார்த்து அமெரிக்காக்காரன் அமெரிக்காக்காரந்தான் எனத் தனக்குள் மகிழ்ந்து கொண்டு தனது பணியைத் தொடங்கினார். அதாவது சோனியா காந்தி தொலைபேசியில் போடும் உத்தரவுகளுக்கு தலையாட்டிக் கொண்டே இருந்தார். தனது உத்தரவுகளை அடுக்கிக் கொண்டே போன  சோனியா கடைசியில் உன்னை யாரய்யா எனது அறை வாசலில் தொங்கிய "I am the boss here" பலகையை திருடிக் கொண்டு போய் உன அறைவாசலில் மாட்டச் சொன்னது என்றார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...