Tuesday 24 April 2012

நகைச்சுவைக்கதை: படக்கூடாத இடத்தில் பட்ட மீன்

தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் மீனவர் சிலர் பாக்குநீரிணையில் இந்திய இலங்கை எல்லையின் இந்தியப் பகுதிக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த சிங்களக் கடற்படையினர் அவர்கள் மீது சுடத் தொடங்கினர். தமிழ் மீனவர்களில் இருவர் அந்த இடத்திலேயே செத்து விழுந்தனர். இருவர் காயமடைந்தனர். அப்போது கடற்படைத் தளபதி அவர்களைத் தடுத்து இப்பொது முன்னர் மாதிரி நிலமை இல்லை. பிரச்சனை ஜெனீவாவரைக்கும் போகலாம் அவர்களை முன்பு போலச் சுட்டுக் கொல்லாமல் கைது செய்வோம் என்றான். அவர்கள் தமிழ் மீனவர்களின் படகை அண்மித்த வேளையில் இந்தியக் கடலோரப் பாதுகாப்புக் கப்பல் ஒன்று அந்த இடத்திற்கு வழி மாறி வந்துவிட்டது. இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படை தமிழ் மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுடப்படும் பக்கம் போகவே கூடாது என்று அவர்களுக்கு கடுமையான உத்தரவு மேலிடத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. பிழையான இடத்தில் பிழையான நேரம் தாம் வந்துவிட்டதை உணர்ந்த இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படையினர் ஒருவாறு நிலைமையை சமாளிக்க எஞ்சியிருந்த இரு தமிழ் மீனவர்களிடம் என்ன நடந்தது என்று முதலில் இந்தியிலும் பின்னர் மலையாளத்திலும் கேட்டனர். கேள்வியை ஒருவாறு புரிந்து கொண்ட தமிழ் மீனவன் நடந்ததைச் சொன்னான்.  சிங்களக் கடற்படைத் தளபதி இந்தியாவில் படைப் பயிற்ச்சி பெற்றவனாதனால் இந்தியில் கதைக்கத் தொடங்கினான். இவர்கள் பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் கடத்துபவர்கள் எங்கள் பிரதேசத்துக்குள் வந்து மீன் பிடித்தார்கள். அவர்களை நாம் கைது செய்யச் சென்றபோது அவர்களிடம் இருந்த கைக்குண்டு வெடித்து இருவர் இறந்துவிட்டனர் இருவர் காயமடைந்து விட்டனர். அப்போது இந்தியக் கரையோரக் காவல்படையினர் காயப்பட்டவர்களுக்கு எந்த வித உதவியும் செய்யாமல் தமிழ் மீனவர்கள் இருவரையும் பார்த்து  நீங்கள் அவர்கள் கடலில் பிடித்த மீன்களை அவர்களிடமே கொடுத்து விடு என்றனர். தமிழ் மீனவர்கள் இருவரும் இல்லை அது எங்கள் கடலுக்குள் பிடித்த மீன்கள் என்றனர். அப்போது இந்தியக் கடலோரக் காவல் படையினர் இரு நாடுகளின் ராஜதந்திரப் பிரச்சனை என்றபடியால் இதை சாணக்கிய தந்திரப்படியும் மனுதர்ம சாஸ்த்திரப்படியும் தீர்க்க வேண்டும். ஒருவர் மீது ஒருவர் மீன் எறியும் போட்டியால் தீர்த்துக் கொள்ளுவோம். முதலில் சிங்களக் கடற்படை உன் மீது ஒரு மீனை வீசட்டும் பின்னர் நீ சிங்களவன் மீது ஒரு மீனை வீசு யாருடைய எறி அதிக காயத்தை ஏற்படுத்துகிறதோ அவன் வென்றவன் ஆவான் என்றானர் இந்தியக் கடலோரக் காவற்படையினர். இருதரப்பினரும் சம்மதித்தனர். முதலில் சிங்களவன் ஒரு பெரிய மீனை எடுத்து அதன் வயிற்றுக்குள் ஒரு சங்கைத் திணித்து தமிழ் மீனவர் இருவரில் ஒருவர் மீது வீசினான். அவர் எதிர்பார்த்தபடியே அது தமிழ் மீனவன் மீது படாத இடத்தில் பட தமிழ் மீனவன் துடித்து விழுந்து இறந்தான். கொதிப்படைந்த எஞ்சிய கடைசித் தமிழ் மீனவன் தானும் ஒரு பெரிய மீனை எடுக்க இந்தியக் கடலோரக் காவற்படையினர் இது என்ன சின்னப் புள்ளத்தனமா இருக்கு மீனால் எறிந்து கொண்டு....சரி உனது மீன் யாவற்றையும் நீயே எடுத்துக் கொண்டு போய்விடு என்று தீர்ப்பளித்தான்.

கதையின் நீதி: அதிக அளவு தமிழர்கள் கொல்லப்படவேண்டும் என்பதே ஆரிய-சிங்களக் கூட்டமைப்பின் நோக்கம்.

ஒரு பொருத்தமான கருத்துப்படம்:
படம் வரைந்தவருக்கு நன்றியும் பாராட்டுக்களும்


1 comment:

Anonymous said...

இது நகைச்சுவைக் கதை அல்ல...
சோகக் கதை

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...