Wednesday 11 April 2012

ஐநாவின் ஆலோசனைக் குழுவில் சவேந்திர சில்வா இல்லை

இலங்கைப் படையின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்தபோது போர்க்குற்றம் இழைத்தவராகக் கருதப்படும் சவேந்திர சில்வா தற்போது ஐக்கியநாடுகள் சபையின் அமைதி நிலைநாட்டலுக்க்கான ஆலோசனைக் குழுவின் கூட்டங்களில் கலந்து கொள்வது இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சவேந்திர சில்வா தற்போது  ஐநாவிற்கான பிரதி நிரந்தரப் பிரதிநிதியாகக் கடமையாற்றுகிறார். இவர் போர்க் குற்றம் இழைத்தமைக்கான நம்பகரமான ஆதாரங்கள் இருப்பதாக ஐநா பொதுச் செயாலர் பான் கீ மூன் இலங்கைப் போரின் போது நடந்த அத்துமீறல்கள் தொடர்பாக் விசாரிக்க நியமித்த நிபுணர்கள் குழு தெரிவித்திருந்தது.

சவேந்திர சில்வா ஆசியப்பிராந்திய நாடுகள் சார்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி நிலைநாட்டலுக்க்கான ஆலோசனைக் குழுவில் ஒரு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட போது அவரைப் போட்டியிட வேண்டாம் என ஐநாவிற்கான பங்களாதேசப் பிரதிநிதி ஆலோசனை வழங்கியிருந்தார். ஆனாலும் அவர் அப்பதவிக்குப் போட்டியிட்டதுடன் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட நேப்பாள தேசப் பிரதிநிதியையும் சவுதி அரேபியப் பிரதிநிதியையும் இலங்கை கெஞ்சிக் கேட்டுப் போட்டியில் இருந்து விலகச் செய்தது.

அமைதி நிலைநாட்டலுக்க்கான ஆலோசனைக் குழுக் கூட்டம் முதலில் கூடியபோது அதன் தலைவியான கனடியப் பிரதிநிதி சவேந்திர சில்வாவை வேண்டப்படாதவராக்கிவிட்டார். பின்னர் நடந்த கூட்டத்தில் சவேந்திர சில்வா பங்கு பற்றுவதில்லை. இது தொடர்பாக ஊட்கங்கள் பான் கீ மூனிடம் கேட்ட போது அது உறுப்பு நாடுகளைப் பொறுத்தது என்று தட்டிக் கழித்து விட்டார். இலங்கைப் பிரதி நிதி பாலித கொஹென்னவிடக் சவேந்திர சில்வா ஏன் அமைதி நிலைநாட்டலுக்க்கான ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்குபற்றவில்லை எனக் கேட்ட போது அவர் "ஊரில் இல்லை" அதனால் பங்குபற்றவில்லை எனப் பதிலளித்திருந்தார்.

கனடாவைச் சேர்ந்த Louise Frechette ஐக்கியநாடுகள் சபையின் அமைதி நிலைநாட்டலுக்க்கான ஆலோசனைக் குழுவின் தலைவியாக இருக்கிறார். இவர் சவேந்திர சில்வா தனது குழுவிற்குப் பொருத்தமற்றவர் என்று சொன்னார். ஏப்ரல் இரண்டாம் திகதி நடந்த ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் சவேந்திர சில்வா பங்குபற்றவில்லை எனக் கூறப்படுகிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...