Thursday 16 February 2012

நகைச்சுவைக்கதை: சவுதியில் சவுக்கடி வாங்கிய இந்தியனும் பாக்கிஸ்த்தானியும் இலங்கையனும்.

சவுதி அரேபியாவில் முன்று நண்பர்கள் வேலை செய்து கொண்டிருந்தர். ஒருவர் இந்தியன், மற்றவர் பாக்கிஸ்த்தானி, மூன்றாமவர் இலங்கையர். மூவரும் ஒரு வெள்ளிக் கிழமை களவாக மதுபானம் அருந்திக் கொண்டிருந்த வேளையில் காவல்துறையினரிடம் பிடிபட்டுவிட்டனர். நீதிமன்றில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதாக இருந்தது. ஆனால் அவர்களுக்கு தண்டனை வழங்கும் நாள் மன்னரின் 18வது மனைவியின் 19வது பிறந்த தினம் என்பதால் அவர்களுக்கு மரண தண்டனைக்குப் பதிலாக 20சவுக்கடிகள் கொடுப்பதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

சவுதி மன்னருக்கு முன்னர் சவுக்கடி கொடுக்க மூவரும் நிறுத்தப்பட்டனர். அன்று மன்னரின் மூத்த மனைவியின் கடைசி மகளின் 40வது பிறந்த தினம் என்பதால் மன்னர் சற்று மகிழ்ச்சியுடன் இருந்தார். முதலில் இங்கை இளைஞனுக்கு சவுக்கடி கொடுக்க அழைத்து மன்னர் சொன்னார் "நீ ஒரு சிறிய அழகிய நாட்டைச் சேர்ந்தவன். எனவே உனக்கு 20 சவுக்கடி கொடுக்க முன்னர் உனக்கு வேண்டியதைக் கேள்" என்றார். அதற்கு இலங்கை இளைஞன் சவுக்கால் அடிக்கும் போது என் முதுகில் ஒரு தலையணையைக் கட்டி விடுங்கள் என்றான். ஆனால் நாலாவது சவுக்கடியில் தலையணை கிழிந்து தும்பாகப் பறந்து விட்டது. மீதி சவுக்கடிகளைத் துடிக்கத் துடிக்க வாங்கி மயங்கி விழுந்தான்.

பின்னர் இந்திய இளைஞன் மன்னர் முன்னர் நிறுத்தப்பட அவர் "நீ ஒரு பெரிய நாட்டைச் சேர்ந்தவன். நீண்ட கால வரலாற்றைக் கொண்ட நாட்டைச் சேர்ந்தவன். எனவே சவுக்கடிக்கு முன்னர் உனது விருப்பத்தைச் சொல்" என்றார். அதற்க்கு இந்திய இளைஞன் "என் முதுகில் இரண்டு தலையணைகளைக் கட்டி விடுங்கள்" என்றான். அப்படியே இரண்டு தலையணைகள் இந்திய இளைஞன் முதுகில் கட்டப்பட்டன. ஆனால் பாவம் இந்திய இளைஞன்! ஆறு சவுக்கடிகளில் இரண்டு தலையணைகளும் கிழிந்து தும்பு தும்புகளாகிவிட்டன. மீதி 14 சவுக்கடிகளும் இந்திய இளைஞன் முதுகில் மூச்சுத் திணறத் திணற விழுந்தன. இறுதியாக பாக்கிஸ்த்தானிய இளைஞன் சவுதி மன்னர் முன்னர் நிறுத்தப்பட்டான். நீ ஒரு இசுலாமியனாக இருப்பதால் நீ உனக்கு வேண்டியவை இரண்டைக் கேள் என்றார் மன்னர். பாக்கிஸ்த்தானிய இளைஞன் கைகட்டி வாய் பொத்தி மன்னருக்கு சலாம் போட்டபடி "மன்னா எனது முதல் விருப்பம் எனக்கு 20இற்குப் பதிலாக 100 சவுக்கடிகள் கொடுங்கள். எனது இரண்டாவது விருப்பம் எனக்குச் சவுக்கடி கொடுக்க முன்னர் என் முதுகில் எனது இந்திய நண்பனைக் கட்டி விடுங்கள்" என்றான் பணிவாக.

1 comment:

மாசிலா said...

நல்ல சிரிப்பு.

இப்போ இதை கொஞ்சம் படிச்சி வையிங்க.

கடலுக்கு மேல் உயர பறந்துகொண்டிருக்கும் பயணிகள் விமானம் ஒன்றில் தொழில் நுட்ப கோளாறினால் உண்டான ஆபத்தை சரிகட்ட விமான தளபதி பயணிகளைப் பார்த்து : "பயணிகளே, நம் விமானம் கடலைத் தாண்டி நல்லபடி தரை இரங்க வேண்டும் என்றால் உடனடியாக உங்களில் யாராவது மூவர் கடலில் குதித்து விமானத்தின் எடையை குறைக்க வேண்டும். இல்லை என்றால் நாம் அனைவரும் கடலில் மூழ்கி இறந்துவிடுவோம்" என்கிறார்.

முதலில் சிறீலங்கா வாழ்க எனச் சொல்லிவிட்டு ஒரு இலங்கையன் கடலில் குதிக்கிறான்

இரண்டாவதாக நேப்பால் வாழ்க என்று ஒரு நேப்பாளி குதிக்கிறான்

மூன்றாவதாக இந்தியா வாழ்க எனச் சொல்லி இந்தியன் ஒருவன் அவனுக்கு அருகில் ஒரு பாக்கிஸ்தானியை கடலில் தள்ளிவிடுகிறான்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...