Links
பெண்ணே நீ நீல வானமடி
தொடரூந்தில் எதிரே இருக்க
அவள் கண்ணசைவுகள்
மின்னலாய் மிளிர
பார்வைகள் நெஞ்சில்
முழக்கமாய் எதிரொலிக்க
நண வரிகள் கன்னதில்
வானவில்லின் வர்ணம் தீட்ட
சோவெனப் பொழிந்தது
காதல் மழை
ஓர விழிப் பார்வை பொழியும்
காதல் மொழி மழை
கோபம் வந்தால் அதுவே
பொழியும் எறிகணை மழை
கன்னம் தொட்டால் பட்டு மழை
நாணத்தில் வானவில்லும் தோன்றும் அதிலே
உதடு தரும் தேன்மழை
ஆத்திரம் வந்தால்
அதுவே சொரியும் திட்டு மழை
அணைத்தால் இன்பமழை
பிரிந்தால் துயரமழை
பெண்ணே நீ நீல வானமடி
1 comments:
கவிதை அருமை.
வாழ்த்துக்கள்.
இனிய பொங்கல் வாழ்த்துக்களும்.
Post a Comment