Saturday 8 October 2011

அமெரிக்க ஆளில்லா விமானங்களில் வைரஸ்.

அண்மைக் காலங்களாக அமெரிக்கா தனது தீவிரவாதிகளுக்கான போரில் ஆளில்லா விமனங்களைப் பாவித்து வருகிறது. ஆரம்பத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் வேவு நடவடிக்கைகளிலும் பாவிக்கப்பட்ட வேவு விமானங்கள் இப்போது மேலும் நவீன மயப்படுத்தப்பட்டு தாக்குதல்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றன. ஆப்க்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானின் வட பகுதியிலும் 2006-ம் ஆண்டிலிருந்து அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளைக் கொன்றுள்ளன. பாக்கிஸ்த்தானில் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்களால் பல அப்பாவி மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். பாக்கிஸ்த்தான் அமெரிக்காவிடம் பலதடவை திரை மறைவில் இந்த ஆளில்லாப் போர் விமானங்களின் பாவனையை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது. பாக்கிஸ்தானிடமும் பல ஆளில்லாப் போர் விமானங்கள் இருக்கின்றன. இப்போதுள்ள அதன் இரு ஆளில்லாப் போர் விமானங்கள் அணிகளை பாக்கிஸ்த்தான் ஆறு அணிகளாக உயர்த்த எண்ணியுள்ளது.

ஆளில்லாப் போர் விமானங்கள் பற்றிய முன்னைய பதிவைக் காண இங்கு சொடுக்கவும்.

பாக்கிஸ்த்தானிலும் யேமனிலும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பல இசுலாமியத் தீவிரவாதிகளையும் அவர்களின் முக்கிய தலைவர்களையும் கொன்றுள்ளது. அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயும் சொந்தமாக ஆளில்லா விமானத் தளங்களை உலகின் பலபாகங்களிலும் இரகசியமாக அமைத்துள்ளது. 2012இல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொள்ளும் முடிவு ஆளில்லா விமானங்கள் மூலம் எதிர்காலப் போரை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடனேயே எடுக்கப்பட்டது. ஆளில்லாப் போர் விமானங்கள் அமெரிக்காவின் மரபு வழிப்போரிலும் திரை மறைவுப் படை நடவடிக்கைகளிலும் முக்கிய இடம் வகிக்கிறது. கடற் கொள்ளையர்களுக்கு எதிராகவும் அமெரிக்கா ஆளில்லா விமானங்களை களமிறக்கியுள்ளது.

அமெரிக்காவின் ஆளில்லாப் போர் விமானங்கள் கடந்த இரு வாரங்களாக(செப்டம்பர் 20011இன் இறுதிப் பகுதியில் இருந்து) ஒரு வகை கணனிக் கிருமிகளால் பாதிப்படைந்துள்ளன. அந்தக் கிருமிகள் அழிக்க அழிக்க மீண்டும் மீண்டும் வருகின்றன. “We keep wiping it off, and it keeps coming back,” says a source familiar with the network infection, one of three that told Danger Room about the virus. “We think it’s benign. But we just don’t know.” அமெரிக்காவின் Creech Air Force Base in Nevada. இல் உள்ள விமானங்களே இக் கிருமித் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன.

அமெரிக்கப் படைத்துறையின் கணனி நிபுணர்கள் தமது ஆளில்லாப் போர் விமானங்களை பாதித்துள்ள கிருமிகள் தற்செயலாக உருவானவையா அல்லது வெளியில் இருந்து யாராவது அவற்றைத் திணித்தார்களா என்று அறிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றர்.

பிந்திக் கிடைத்த செய்திகள்:
அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் தொடர்ந்து பறப்புக்களில் ஈடு பட்டு வருகின்றன.


அமெரிக்காவின் படைத்துறையினரினதும் அமெரிக்கப் படைத்துறைக்கு ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களினதும் கணனிகள் மீது அண்மைக்காலங்களாக பல ஊடுருவல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை சீனவில் இருந்து மேற்கொள்ளப்பட்டவை என்று நம்பப்படுகின்றன.

கணனி வழியாக நடக்கும் போர் பற்றிய முன்னைய பதிவைக்காண இங்கு செடுக்கவும்

ஈராக்கில் அமெரிக்காவின் ஆளில்லாப் போர் விமானங்களில் இருந்து அமெரிக்கப் படைகளுக்கு அனுப்பப்படும் காணொளிப் பதிவுகளை ஈராக் போராளிக் குழுவினர் $26 பெறுமதியான ஒரு சாதாரண மென்பொருளைப் பாவித்து தரவிறக்கம் செய்தமை ஆளில்லாப் போர் விமானங்களின் நம்பகத் தன்மை மீது பல படைத் துறை நிபுணர்களுக்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியது.

அமெரிக்க கணனி நிபுணர்கள் Kaspersky நிறுவனத்தின் உதவியுடன் கிருமிகளை அழிக்க மேற் கொண்ட முயற்ச்சி தோல்வியில் முடிவடைந்தன. அவை மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருந்தன. இதனால் வன்பொருளில் உள்ள சகல மென்பொருளையும் அழித்து விட்டு மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிப்பது பற்றி யோசிக்கின்றனர்.

Friday 7 October 2011

2012இல் உலக மக்கள் தொகையிலும் பார்க்க கைப்பேசிகளின் தொகை அதிகமாகும்.

அடுத்த ஆண்டு உலகத்தில் மக்கள் தொகையிலும் பார்க்க கைப்பேசிக்ளின் தொகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவிலும் இந்தியாவிலும் ஒரு பில்லியன் கைப்பேசிகள் இருக்கும் என்றும் உலகெங்கும் 6.8பில்லியன் கைப்பேசிகள் இருக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது என்கிறார் எந்திரவையல்-தொழில்நுட்ப நிலையத்தின் தலைவரான கலாநிதி மைக் ஷொர்ட். பிரித்தானியாவில் 62.5 மில்லியன் கைப்பேசிகள் பாவனையில் உண்டு.




இப்போது உலகெங்கும் பற்தூரிகைகளிலும் பார்க்க(toothbrush) அதிக அளவு கைப்பேசிகள் பாவனையில் உள்ளனவாம்.

இணையத் தொடர்புகளுடன் கூடிய கைப்பேசிகள் உண்டு இணையத் தொடர்புகளைக் பற்தூரிகைகளால் ஏற்படுத்த முடியாது.

இந்தியாவில் மக்களுக்கு உள்ள கழிப்பறை வசதிகளிலும் பார்க்க கைத்தொலைபேசி வசதிகள் அதிகம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனமான University's Institute for Water Environment and Health (IWEH) தெரிவித்துள்ளது.
2008-ம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இந்திய மக்கள் தொகையில் அரைவாசிப் பேர் கைத்தொலைபேசி வைத்திருக்கின்றனர் ஆனால் இந்திய மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதியினரே நல்ல கழிப்பறை வசதிகள் பெறக்கூடியவர்களாக இருக்கின்றனராம்.



India has some 545 million cell phones, enough to serve about 45 per cent of the population, but only about 366 million people or 31 per cent of the population had access to improved sanitation in 2008.
The recommendations released today are meant to accelerate the pace towards reaching the Millennium Development Goal on halving the proportion of people without access to safe water and basic sanitation.
If current global trends continue, the World Health Organization and the United Nations Children’s Fund predict there will be a shortfall of 1 billion persons from that sanitation goal by the target date of 2015.
“Anyone who shirks the topic as repugnant, minimizes it as undignified, or considers unworthy those in need should let others take over for the sake of 1.5 million children and countless others killed each year by contaminated water and unhealthy sanitation,” said Mr. Adeel.
Included in the nine recommendations are the suggestions to adjust the MDG target from a 50 per cent improvement by 2015 to 100 per cent coverage by 2025; and to reassign official development assistance equal to 0.002 per cent of gross domestic product (GDP) to sanitation.
The UNU report cites a rough cost of $300 to build a toilet, including labour, materials and advice.
“The world can expect, however, a return of between $3 and $34 for every dollar spent on sanitation, realized through reduced poverty and health costs and higher productivity – an economic and humanitarian opportunity of historic proportions,” added Mr. Adeel.

Thursday 6 October 2011

ஹக்கூ: முத்தங்கள் ஆன்மாவைத் தொடும்

வார்த்தைகள் இதயத்தில் விழும்
முத்தங்கள் ஆன்மாவைத் தொடும்
உண்மைக் காதல்

மொழியில் வல்லவன்
சொன்ன சொற் தவறாதவன்
மௌனமாயிருப்பவன்

அளந்து விட வேண்டியவை
சிந்தனையை மீறக்கூடாதவை
வார்த்தைகள்

உன்னதமான உரையாடல்
அதிகாரத்தின் அடிப்படை
உண்மை கூறல்

நடந்தவைக்காக அழுதல்
நடக்கவிருப்பவைக்குப் பயப்படல்
நோய்களின் மூலம்

Wednesday 5 October 2011

நகைச்சுவை: Exam Jokes

2 Guys coming out of the examination Hall with chips and coke in hands....
1st guy:which paper was it?
2nd guy:I think maths......
1st guy:(surprisingly) you read the question paper?
2nd guy: no I see a girl sitting besides me using calculator.
2 Guys coming out of the examination Hall with chips and coke in hands....
1st guy:which paper was it?
2nd guy:I think maths......
1st guy:(surprisingly) you read the question paper?
2nd guy: no I see a girl sitting besides me using calculator.




AN ANALOGY FOR ALL COLLEGE LECTURERS:
They teach us to make "PLAIN RICE" in class
&
expect from us to cook "BIRYANI" in exams...!!


Teacher: I hope I didn't see you looking at Fred's test paper.
Pupil: I hope you didn't see me either !
Teacher: You copied from Fred's exam paper didn't you ?
Pupil: How did you know ?
Teacher: Fred's paper says "I don't know" and you have put "Me, neither"!


The Shortest Relationship
Ever Is Between
Students & Books . . .
They Commit 0ne Day
Before Exam
&
After Exam Break Up ! !

Our teacher says that he gives us tests to find out how much we know.
Then all the questions are about things we don't know.

Air & students hv d same mentality
How?
Both r turning d book's pages without reading.



Innocent Line written On T-shirt of A Student..
"Student are not Cheaters!!! We just really enjoy having the Same answers."

It takes 15 trees to
produce the amount
of paper that we
use to write one exam.

cause of saving trees.
SAY NO TO EXAMS.

Tuesday 4 October 2011

ராகுல் மொக்கை காந்தி பற்றிய நகைச்சுவைகள்


நாட்டில் எல்லா அரசியல்வாதிகளும் உண்ணாவிரதம் இருந்து பிரபலமாவதைப் பார்த்த ராகுல் காந்தி தானும் அது போலச் செய்து  புகழ் பெறும் எண்ணத்துடன் தனது தாயிடம் சென்று "Mummy can I fast?" என்று கேட்டார். அதற்குத் தாயார்  "No son, you are very slow" என்றார் அன்னை சொர்க்கத் தங்கம் சோனியா அவர்கள்.

Q: What did Rahul Gandhi do when he missed the 66 Bus?
A: He took the 33 bus twice instead.



எரிபொருள் விலை உயர்வைக் குறைப்பது பற்றி ராகுலிடம் கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்? எல்லாரும் நடந்து செல்லுங்கள் என்பார்.

Sonia Gandhi: Have you read Shakespeare? Ragul Gandhi : No, who wrote it?


ராகுல்: பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளிடம் உங்கள் எதிர் காலத்தை ஒப்படையுங்கள். உதாரணத்திற்கு என்னைப் பாருங்கள்.

Q: What does Rahul Gandhi and a beer bottle have in common?
A: They’re both empty from the neck up.

ராகுல்: அம்மா எனக்கு ராஜஸ்த்தான் போய் பொம்மலாட்டம் பார்க்க வேணும் போல் இருக்கு. தஞ்சாவூர் போய் தலையாட்டும் பொம்மை பார்க்க வேணும் போல் இருக்கு.
சோனியா: கொஞ்சம் பொறுத்திருடா செல்லம். அரை மணித்தியாலதில் மன்மோஹன் சிங் இங்கு வருவான். இரண்டையும் பார்க்கலாம்.

Rahul Gandhi was once holidaying in US with his Colombian (drug lord) girlfriend Junaita (aka Veronique Carloz), they witness a terrible accident on an isolated freeway in which a man was profusely wounded. Junaita went to check on the injured man and asked RG to drive up to nearest phone booth and call nine-eleven. For a very long time, no ambulance arrived and the poor man died. After all this RG returned back and Junaita asked him ‘Didn’t you find any phone booth?” RG said “I went to at least 5 booths, all phones have a ‘9’ key but none of them have a ‘11’ key. How could I call nine-eleven?”

இந்த இணைப்பு ராகுல் காந்திமீது கற்பழிப்புக் குற்றச் சாட்டு சுமத்துகிறது: சுகன்யா

During the nineties when Rahul Gandhi was generally jobless in US, he decided to visit Disneyland. He was driving down the highway to Disneyland when he saw a sign that said “DISNEYLAND LEFT”.
After thinking for a minute, he said to himself “oh well !” and turned around and drove home.
On his way home Rahul Gandhi drove past another sign that said “CLEAN RESTROOMS 8 MILES”.
By the time he drove eight miles, he had cleaned 43 restrooms!!

கீழுள்ள காணொளிப்பதிவு காந்தி குடும்பத்தின் ஊழலை அம்பலப்படுத்துகிறது. இதை இந்தியாவில் இருந்து பார்க்கமுடியாது என்று சொல்லப்படுகிறது.

Monday 3 October 2011

நகைச்சுவை: விவரம் கெட்ட கேள்விகளும் வில்லங்கமான பதில்களும்



What should never be eaten after its served?
A tennis ball

சதுரமாக இருக்கும் வளையம் எது?
What type of ring is always square?
A boxing ring.

If a red house is made of red bricks, a blue house is made of blue bricks and a yellow house is made of yellow bricks, what is a green house made of?
Green Bricks?
No, glass.

Q. What does the Statue of Liberty stand for?
A. Because it can't sit down.

Which burns longer, a red candle or a white candle?
Neither, they both burn shorter.

If King Kong went to Hong Kong to play ping-pong and died, what would they put on his coffin?
A lid.

If you have a referee in soccer, and an umpire in cricket, what do you have in bowls?
Goldfish

How can you drop and egg six feet without it breaking?
By dropping it seven feet - it won't break for the first six.


Q. Some months have 31 days how many have 28?
all of them - all months have (at least) 28 days.


Q. Where was the Declaration of Independence signed?
A. At the bottom of the document.


Why can't a man living in the USA be buried in Canada?
Because he is still alive.

Why is the letter T like an island?
It is the middle of waTer?


How many birthdays does the average man have?
Only one. When he was born.


There are sixty cups on a table. If one falls down, then how many remain?
Seems quite easy and obvious right? On being verbally asked, you will think that the answer is 59! But is it? Read or 'hear' the question once more and carefully! There are 'sixty cups' (six-tea-cups) on the table. So if one falls down then 5 tea cups will remain!
 
 
 

Sunday 2 October 2011

மாற்று வழிகளில் மஹிந்தவை நீதியின் முன் மாட்ட வைக்கும் முயற்ச்சி


இலங்கைக் குடியரசின் அதிபர் மஹிந்த ராஜபக்சமீதான போர்க்குற்றச் சாட்டுகள் சம்பந்தமாக அமெரிக்க கொலம்பியா மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப் பட்ட வழக்கில் நீதி மன்றம் வழங்கிய அழைப்பாணையை அவர் இதுவரை ஏற்க்காமல் தவிர்த்து வருகிறார். நீதி மன்ற அழைப்பாணை அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதுவரகம், இலங்கை நீதி அமைச்சு, கொழும்பில் உள்ள மஹிந்தவின் உறைவிடம் ஆகியவற்றிற்கு அனுப்பப்பட்டன. இவை எதையும் மஹிந்த ஏற்கவில்லை.

24-09-2011இலன்று மஹிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்ற அமெரிக்கா சென்றிருந்த போது அவரிடம் நியூயோர்க்கில் உள்ள பௌத்த விஹாரையில் வைத்து நீதி மன்ற அழைப்பாணை சமர்ப்பிக்கச் சென்ற போது அவரது மெய்ப்பாதுகாவலர்கள் அவரை அண்மிக்க விடாமல் சூழ்ந்து கொண்டனர்.

இப்போது புரூஸ் ஃபெயின் என்னும் சட்ட வல்லுனர் மாற்று வழிகள் மூலம் மஹிந்த ராஜபக்சவிடம் நீதி மன்ற அழைப்பாணை சமர்ப்பிப்பது தொடர்பான முன் மொழிவை அமெரிக்க கொலம்பியா மாவட்ட நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார். இது முதல் தடவையாக ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. புரூஸ் ஃபெயினின் முன் மொழிவில் மஹிந்த ராஜபசவிற்கு எட்டு வேறு வேறு வழிகளில் நீதி மன்ற அழைப்பாணை சமர்பிப்பது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது:

1. மஹிந்தவின் தபால் பெட்டி மூலம்: மஹ்ந்தவின் முகவர்கள் அமெரிக்காவில் மஹிந்தவின் 2010 அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்காக பெற்றிருக்கும் தபால் பெட்டி மூலம் சமர்ப்பித்தல். "PO Box 34017 Washington, DC 20043 US,” என்பது அதன் முகவரியாகும்.

2. பிரசுரிப்பதன் மூலம்: அமெரிக்காவில் முல்லெனெ 339 வழக்கிலும் இலங்கையில் சந்திரத்திலக்க எதிர் முனசிங்க வழக்கிலும் பத்திரிகைகளில் பிரசுரிப்பதன் மூலம் நீதிமன்ற அழைப்பாணை வழங்கப்பட்டது. சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமசிங்காவின் கொலையிலும் பத்திரிகைப் பிரசுரித்தல் ஒரு நீதிமன்ற அழைப்பாணை சமர்ப்பிக்கப்பட்டதாக நீதி மன்றம் ஏற்றுக் கொண்டது.

3. முகவேட்டினால்(FACEBOOK) சமர்ப்பிதன் மூலம்: மஹிந்தவின் முகவேட்டுப் பக்கத்திற்கு அழைப்பாணையை சமர்ப்பிப்பதன் மூலம் அழைப்பாணையை மஹிந்தவிற்கு சமர்ப்பித்ததாக ஏற்றுக் கொள்ள முடியும் என்கிறார் புரூஸ் ஃபெயின். இதற்கு அவர் அண்மையில் ஒரு அவுஸ்த்திரேலிய நீதி மன்றம் வழக்கின் பிரதிவாதிக்கு முகவேட்டின் மூலம் அழைப்பாணை வழங்குவது ஏற்றுக் கொள்ளப்பட்டதை முன்னுதாரணமாகக் காட்டுகிறார்.

4. டுவிட்டர் மூலம்: மஹிந்தவிற்கான அழைப்பணையை டுவிட்டர் மூலம் வழங்க முடியுமென்கிறார் என்கிறார் புரூஸ் ஃபெயின். இதற்கு அவர் அண்மையில் பிரித்தானையாவின் ஒரு பதிவருக்கு எதிரான தடை உத்தரவை நீதி மன்றம் டுவிட்டர் மூலம் வழங்கியதை உதாரணம் காட்டுகிறார்.

5. தமிழர்களின் இணையங்கள் மூலம்: பிரதிவாதி மஹிந்த ராஜபகசவும் அவரைச் சார்ந்தவர்களும் தமிழர்களைப் பயங்கரவாதிகளாகக் கருதி அவர்களது இணையத் தளங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. மஹிந்தவிற்கான அழைப்பாணையை தமிழர்களின் இணையத் தளங்களில் பிரசுரிப்பதன் மூலம் அது மஹிந்தவைப் போய்ச் சேரும்.

6. மின்னஞ்சல் மூலம்: மஹிந்த ராஜபக்சவின் மின்னஞ்சலுக்கு அழைப்பாணையை அனுப்ப முடியும். Rio Properties, Inc. v Rio Intern. Interlink, 284 F. 3d 1007 (9th Cir. 2002) என்னும் அமெரிக்க வழக்கில் நீதி மன்றம் மின்னஞ்சல் மூலமான அழைப்பாணையை ஏற்றுக் கொண்டது. இது போன்ற வேறு பல வழக்குகளையும் புரூஸ் ஃபெயின் முன்னுதாரணமாகச் சமர்ப்பித்துள்ளார்.

7. தொலை நகல் (FAX) மூலம்: புரூஸ் ஃபெயின் The New England Merchants Court allowed service via telex as early as 1980. New England Merchants, 495 F. Supp. 73, 81, (S.D.N.Y. 1980). என்று குறிப்பிட்டுள்ளார்.


8. மஹிந்தவின் பிரச்சார முகவர்கள் மூலம்: இலங்கை அரசிற்காக அமெரிக்காவில் பல் வேறு பிரச்சார நிறுவனங்கள் அமர்த்தப்பட்டிருக்கின்றன அவற்றினூடாக மஹிந்த ராஜபக்சவிற்கான அழைப்பாணையை வழங்க முடியும் என்கிறார் புரூஸ் ஃபெயின்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...