Saturday 1 October 2011

அல் கெய்தாவிற்கு அமெரிக்காவின் அடுத்த பேரடி

பின் லாடன் கொலைக்குப் பின்னர் அமெரிக்கா இன்னும் ஓர் பேரிழப்பை அல் கெய்தா இயக்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் முதல் தர தீவிரவாத எதிரியாகக் கருதப்படும் அமெரிக்கக் குடியுரிமையுடைய அன்வர் அல் அவ்லாக்கி என்பவரை யேமனில் வைத்து அமெரிக்க ஆளில்லா விமானத்தில் இருந்து வீசப்பட்ட ஏவுகணையால் செப்டம்பர் 30-ம் திகதி  யேமன் நேரம் காலை 9-55 அளவில் கொல்லப்பட்டார். சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் அல் அவ்லாக்கியைக் கொல்வதற்கான உத்தரவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிறப்பித்திருந்தார். இவரோடு இன்னொரு பாக்கிஸ்த்தனிய அமெரிக்கக் குடிமகன் சமீர் கான் என்னும் அல் கெய்தாவின் பத்திரிகை ஆசிரியரும் சவுதியைச் சேர்ந்த குண்டு தாயாரிப்பு வல்லுனரான இப்ராஹிம்  ஹசன் அல் அஸ்ரி என்பவரும் கொல்லப்பட்டனர். அன்வர் அல் அவ்லாக்கி இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க உளவுத்துறையால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்தவர். இவர்களின் பத்திரிகையில் “Make a Bomb in the Kitchen of Your Mom.”  என்பன போன்ற கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டன.

சவுதியைச் சேர்ந்த குண்டு தாயாரிப்பு வல்லுனரான இப்ராஹிம்  ஹசன் அல் அஸ்ரி நீருக்குள் வெடிக்கக் கூடிய குண்டுகளையும் தயாரிக்கக்  கூடியவர். இவரும் அன்வர் அல் அவ்லாக்கியுடன் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட போதும் அவரின் இறப்பை யேமன் அரசு உறுதி செய்யவில்லை.

2002இல் அமெரிக்க விமானங்கள் அன்வர் அல் அவ்லாக்கி மீது ஒரு தாக்குதலை மேற் கொண்டன. இந்த ஆண்டு மே மாதம் 5-ம் திகதி அமெரிக்கா நடத்திய இரு தாக்குதல்களில் இருந்து அன்வர் அல் அவ்லாக்கி தப்பியிருந்தார். பின் லாடனைக் கொன்ற அதே குழுவினர்தான் அவ்லாக்கியையும் கொன்றதாகச் சொல்லப்படுகிறது.


அரேபிய தீபகற்பத்தில் ஒரு மறைமுக இடத்தில் இருக்கும் சிஐஏயின் தளத்தில் இருந்து ஏடன் வளைகுடாவைத் தாண்டி யேமனுக்குள் புகுந்த ஆளில்லா விமானங்களே தாக்குதல் நடாத்தியதாக நம்பப்படுகிறது.  சென்ற ஆண்டு சிஐஏ “YSD,” or the Yemen-Somalia Department என்ற ஒரு பிரிவை உருவாக்கி Al-Qaeda in the Arabian Peninsula எனப்படும் அல் கெய்தாவின் கிளை அமைப்பிற்க்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அன்வர் அல் அவ்லாக்கியின் கொலையை அமெரிக்க உளவுத் துறையான சிஐஏயும் அமெரிக்கப் படைத்துறையின் இணைந்த சிறப்பு நடவடிக்கைக் கட்டளையகமும்(Joint Special Operations Command) இணைந்து மேற் கொண்டன. சிஐஏ அண்மைக்காலங்களாக ஒரு படைப் பிரிவை உருவாக்கி தீவிரவாத சந்தேக நபர்கள் மீது தாக்குதல்களை நடாத்தி வருகிறது. சிஐஏ யேமனையும் சோமாலியாவையும் சூழ பல இரகசிய ஆளில்லா விமானத் தளங்களை உருவாக்கியுள்ளது. அதன் நடவடிக்கைகளில் பல புதிய வகையான தாக்குதல் ஆளில்லா விமானங்கள் மேலும் இணைக்கப்படவுள்ளன. சிஐஏயின் அண்மைக்கால நடவடிக்கைகள் பற்றி அறிய இங்கு சொடுக்கவும்.

அன்வர் அல் அவ்லாக்கியின் முக்கியத்துவம்.
நாற்பது வயதான அன்வர் அல் அவ்லாக்கி அமெரிக்க மாநிலமான நியூ மெக்சிக்கோவில் பிறந்து வட கரொலினாவில் வளர்ந்த மத போதகர். இவரின் பெற்றோர்கள் யேமன் நாட்டினர். Al-Qaeda in the Arabian Peninsula எனப்படும் அல் கெய்தாவின் கிளை அமைப்பின் தலைவர் இவரே. நவீன தொடர்பாடல் முறைமைகளைக் கையாள்வதில் வல்லவர் அற்புதமாக ஆங்கிலத்தில் தொடர்பாடல் செய்யக்கூடியவர். அதன் மூலம் அல் கெய்தாவிற்கு ஆட்சேர்ப்பதிலும் நிதி சேர்ப்பதிலும் முன்னின்று செயற்படுபவர். அல் கெய்தாவின் தீவிரவாதத்தை பத்திரிகை மூலம் வளர்ப்பவர். கடந்த சில வருடங்களாக பின் லாடனிலும் பார்க்க அன்வர் அல் அவ்லாக்கி அமெரிக்காவிற்கு அதிக ஆபத்து விளைவிப்பவராகச் செயற்பட்டார். தற்போது அல் கெய்தா இயக்கத்தின் செயற் கட்டளைத் தளபதியாகச் செய்ற்படுபவர் இவரே. 2009இல் அமெரிக்க விமானமொன்றை கணனி அச்சுப்பொறிக்குள் வெடிபொருள்களை வைத்து தகர்க்கும் திட்டத்தை தீட்டிய்வர் அன்வர் அல் அவ்லாக்கி. இது போன்ற பல அல் கெய்தாவின் அண்மைக்கால தாக்குதல் திட்டங்களைன் சூத்திரதாரி அன்வர் அல் அவ்லாக்கி. இவரைப் பற்றி ஒரு பிரித்தானிய உளவுத்துறை அதிகாரி தெரிவித்த கருத்து: “His influence is all the wider because he preaches and teaches in the English language which makes his message easier to access and understand for Western audiences.”

ஆளில்லாப் போர் விமானங்கள் பற்றிய பதிவைக் காண இங்கு சொடுக்கவும்

அமெரிக்காவின் வெற்றி
 அன்வர் அல் அவ்லாக்கியின் கொலை மூலம் அமெரிக்கா சாதித்தவை:
  • ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் வெற்றியீட்ட முடியும் என்பதை அமெரிக்கா மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.
  • உலகத்தில் எந்த மூலையிலும் தனக்கு எதிரான தீவிரவாதிகளைத் தம்மால் கொல்ல முடியும், அவர்கள் பாதுகாப்பாக நடமாட முடியாது என்று நிரூபித்தது.
  • பின் லாடன் கொலையை திரை மறைவில் நிறைவேற்றிய அமெரிக்கா தம்மால் பகிரங்கமாகவும் தாக்குதல் நடாத்தி தீவிரவாதிகளைக் கொல்ல முடியும் என்று நிரூபித்துள்ளது.
  • அமெரிக்காவின் உளவுத் தகவல் திரட்டலின் திறமையை நிரூபித்துள்ளது.
  • அல் கெய்தாவிற்கு ஆள் திரட்டுவதில் வல்லவரான ஆங்கில மொழியிலும் அரபு மொழியிலும் நாவன்மையுடன் பேசக்கூடிய அன்வர் அல் அவ்லாக்கியை கொன்றதன் மூலம் அல் கெய்தாவிற்கு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியமை.  அல் கெய்தாவில் ஆங்கிலம் பேசக் கூடிய போராளிகளுக்கான பலத்த தட்டுப்பாடு நிலவுகிறது.
அமெரிக்காவில் வாதப் பிரதிவாதங்கள்
ஆப்கானிஸ்த்தானிலும் பாக்கிஸ்த்தானிலும் தேவையான நேரத்தில் தேவையான தாக்குதலைச் செய்யும் அதிகாரம் அமெரிக்கப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் யேமனில் ஓவ்வொரு தாக்குதலுக்கும் அமெரிக்க அதிபரின் அனுமதியை பெற்றே அமெரிக்கப் படையினரால் தாக்குதல் நடாத்த முடியும். ஒரு அமெரிக்கக் குடிமகனை அமெரிக்கா நீதி விசாரணை இன்றிக் கொல்லுதல் முறையான செயலா என்ற வாதம் அன்வர் அல் அவ்லாக்கியின் கொலையைத் தொடர்ந்து எழுந்துள்ளது. அன்வர் அல் அவ்லாக்கியை கொல்ல அமெரிக்க உளவுத் துறை கொல்லப் போகிறது என்பதை அறிந்த அவரது தந்தை அமெரிக்க நீதி மன்றில் அதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து இருந்தார். இது அமெரிக்க நீதித் துறைக்கு அப்பாற்பட்டது என ஒரு விநோதமான தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அமெரிக்கா போரில் ஈடுபட்டிராத நாடு ஒன்றில் அமெரிக்க ஒரு கொலையைப் புரிந்துள்ளது. 1976இல் அமெரிக்க அதிபராக இருந்த ஜெரார்ட் போர்ட் அமெரிக்காவின் அரசியல் கொலைகளைத் தடை செய்திருந்தார். இசுலாமியப் பயங்கரவாதம் உலகையே ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளது என்கின்றனர் சில அமெரிக்கர்கள். கொலை இலக்கு அமெரிக்கர்களுக்கு உடனடியாக ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக இருக்கும் பட்சத்தில் கொலை நியாயப் படுத்தப்படக் கூடியது என்கிறார் ஒரு அமெரிக்க மனித உரிமைச் சட்டவியலாளர்.

ஒபாமாவைக் காப்பாற்றுமா
ஜோர்ச் புஷ் தோல்விகண்ட தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பராக் ஒபாமா வெற்றி கண்டுள்ளார் என்கிறார்கள் ஒபாமாவின் ஆதரவாளர்கள். அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் பொருளாதார நெருக்கடியால் பல பின்னடைவுகளைச் சந்தித்து வரும் ஒபாமாவை அல் கெய்தாவிற்கு எதிரான வெற்றிகள் காப்பாற்றுமா?

    Friday 30 September 2011

    கவிதை: இதயத்துள் ஆழ ஊடுருவும் அணி


    உன் இமை மடல்களின் அசைவுகளில்
    என் இதயத்துக்கு எழுதும் மடல்கள்
    பார்வைகளின் உரசல்களில்
    உணர்வுகள் தீப்பிடிக்கின்றன
    எண்ணங்கள் எதையோ தேடிக்
    கண்டம் விட்டு கண்டம் பாய்கின்றன
    மதி மயக்கத்தில் இதம் தேடி
    மதியுடனோர் செய்மதித் தொடர்பு
    கலாச்சாரங்களின் கண்டனங்கள்
    கட்டுப்பாடுகளின் அணைக்கட்டுக்கள்
    நாணக் காப்பரண்கள் தகராதோ
    இதயத்துள் ஆழ ஊடுருவும் அணி
    களமிறங்காதோ கரந்தடிக்காதோ

    Thursday 29 September 2011

    பார்கக்கூடாத விளம்பரங்கள்

    Too sexy என்று இந்த விளம்பரம் தடை செய்யப்பட்டது

    தரமான கருவியால் சவரம் செய்தால் இப்படி நடக்குமா

    கடைவாயில் என்னடி காயம்? Burger கடித்ததால் வந்த மோசம்..

    காருக்குள்...சில நேரங்களில் சில காதலர்கள்!!!!!

    விரைவான இணையத் தொடர்புக்கு இப்படியா விளம்பரம்

    கை கொடுக்கும் கை கிருமிகளைக் கொடுக்கலாம்.

    தப்பி ஓடுவேண்டிய குறியீடு இப்படித்தான் இருக்க வேண்டும்

    பிதாவே இவர்களை மன்னியுங்கள் என்று சொல்லவில்லை..தடை செய்து விட்டார்கள்

    அட கைய வைச்சுக்கிட்டு சும்மா இரடி...

    ரெம்பக் கூரான கத்தி



    புகைக்காதவர்கள் இறப்பதில்லையா???

    குழாயும் சுவையறியும்

    இனங்காண உதவும் சுட்டி ஒட்டிகள்...

    சைட் அடிக்கலாம் இது அடிக்கலாமா?

    எல்லாக் காதலும் டைட்டானிக் அல்ல. கதை வேறு நிஜம் வேறு
    சில விளம்பரங்களை இப்படியும் உல்டா பண்ணலாம்...





    இந்த விளம்பரப் பலகை வீதி விபத்துக்களை ஏற்படுத்தியது

    Wednesday 28 September 2011

    கணத்தில் நெஞ்சில் நிறைந்தவள்


    கணத்தில் நெஞ்சில் நிறைந்தவளை
    ஆண்டுகள் பல கடந்தும்
    மறக்க முடியாமல் இருப்பதேன்
       
        
           நம்பிக்கை

    தடைகளைத் தாண்டும்
    தடுப்புச் சுவர்களைத் துளைக்கும்
    கண்டனங்களை துண்டமாக்கும்
    சாதனைகளை உருவாக்கும்
    தன்னம்பிக்கை
    கணத்தில் நெஞ்சில் நிறைந்தவளை
    மறக்க மட்டும் ஆண்டுகள்
    பல எடுப்பதேன்



         முகவேட்டில் ஒரு தோழி
    நினைவில் ஒரு கனவுத் தோழியா
    இல்லை
    கனவில் ஒரு கற்பனைத் தோழியா
    இலத்திரன் அணுக்களிடையே
    இதமாய் வரும் தென்றல் காற்றா




                வெற்றிக்கனி
    கால்களை தரையில் வைத்துக்கொள்
    நினைவுகளைப் பறக்கவிடு
    முயற்ச்சியால் கையை நிறைத்துக் கொள்
    தேடி வரும் வெற்றிக் கனி




    எமது வெற்றிக்கு வழி வகுப்பவை
    எம் இயல்புகள்
    எம் இயல்புகளை உருவாக்குபவை
    எம் பழக்க வழக்கங்கள்
    எம் பழக்க வழக்கங்களுக்கு வழி வகுப்பவை
    எம் செயல்கள்
    எம் செயல்களுக்கு வழி காட்டுபவை
    எம் வார்த்தைகள்
    எம் வார்த்தைகளை வெளிக் கொணர்பவை
    எம் சிந்தனைகள்
    எம் சிந்தனைகளே எம் வெற்றியின்
    முதற்படிகள்

    Tuesday 27 September 2011

    பாக்கிஸ்த்தான் என்னும் பாம்பை வளர்த்த அமெரிக்காவின் பரிதாப நிலை.


    கள்வருக்குள் சண்டை வந்தால் களவு வெளிப்படும் என்பார்கள். அமெரிக்கா பாக்கிஸ்த்தான் என்னும் இரு பன்னாட்டுத் திருடர்களுக்கிடையில் ஒரு நீண்ட கால நட்புறவு உண்டு. சுதந்திரமடைந்ததின் பின்னர் இந்தியா கூட்டுச் சேரா நாடுகள் என்ற போர்வையில் சோவியத் யூனியனுடன் உறவை வளர்க்க முற்பட்டபோது உருவான பாக்-அமெரிக்க நட்பு பங்களாதேச உருவாக்கத்தின் போது உச்சக்கட்டத்தில் இருந்தது. இப்போது பாக்கிஸ்த்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நடக்கும் அரசதந்திர மோதல்கள் இருதரப்பினரதும் குட்டுக்களை அம்பலமாக்குகின்றன. செப்டம்பர் 13-ம் திகதி ஆப்கானிஸ்த்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்கத் தூதுவரகத்தின் மீது இசுலாமியத் தீவிரவாத இயக்கமான தலிபானின் ஒரு பிரிவான ஹக்கானி அமைப்பு நடாத்திய தாக்குதலின் பின்னால் பாக்கிஸ்த்தானிய உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐக்குத் தொடர்பு இருப்பதாக அமெரிக்க உயர் படைத்துறை அதிகாரி அட்மிரல் மைக் முலென் கூறிய கருத்து பாக்கிஸ்த்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பலத்த அரசதந்திர மோதல்களை உருவாக்கியுள்ளது.


    காபுலில் தலிபானின் கிளை அமைப்பான ஹக்கானியின் தாக்குதல் விபரமறிய இங்கு சொடுக்கவும்.


    அமெரிக்காவை குற்றம் சாட்டுகிறது, அமெரிக்காவை மிரட்டுகிறது,  அமெரிக்காவிற்கு சவாலும் விடுகிறது.
    பாக்கிஸ்த்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரபானி கார் அமெரிக்கா தமது காபூல் தூதுவரகத்தின் மீது இசுலாமியத் தீவிரவாதிகள் நடாத்திய தாக்குதலின் பின்னால் பாக்கிஸ்த்தானிய உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐக்குத் தொடர்பு இருப்பதாக கூறுவது ஆதாரமற்றது என்று கூறுகிறார். அமெரிக்கா எந்த ஆதாரத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்றார் ஹினா ரபானி. அமெரிக்கா முடியுமானால் போதிய ஆதாரத்தை எம்மிடம் சமர்ப்பிக்கட்டும் என்றும் கூறினார் ஹினா ரபானி. அதுமட்டுமல்ல "பயங்கரவாதத்திற்கு" எதிரான தனது போரில் அமெரிக்கா ஒரு முக்கிய நண்பனை இழக்க வேண்டி வரலாம் என்றும் எச்சரித்தார். அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகனின் ஜோன் கேர்பி பாக்கிஸ்த்தானிய உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ ஹக்கானி போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவும் ஊக்கமும் கொடுப்பதற்கான நம்பகரமான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகக் கூறினார்.

    அமெரிக்காவிற்கு எமது கதவு திறந்திருக்கிறது - பாக் வெளிநாட்டமைச்சர்.

    பாக்கிஸ்த்தானா கொக்கா.
    இதற்குப் பதிலடி கொடுத்த பாக்கிஸ்த்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரபானி கார் அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ இற்கு உலகெங்கும் உள்ள பல பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புகள் இருப்பதாகக் கூறினார். அத்துடன் நின்றுவிடவில்லை ஹினா ரபானி. காபூல் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் ஹக்கானி அமைப்பு ஒரு காலத்தில் சிஐஏயின் செல்லப்பிள்ளையாக இருந்தது என்ற உண்மையைக் கூறி அமெரிக்காவின் குட்டை உடைத்தார் பாக்கிஸ்த்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரபானி. பக்கிஸ்த்தானிய உள்துறை அமைச்சர் ரஹ்மான் மலிக் ஏற்கனவே ஹக்கானி அமைப்பு சிஐஏ ஆல் உருவாக்கி வளர்க்கப்பட்ட இயக்கம் என்றார் ஏற்கனவே. அமெரிக்காமீது மேற்கூறியவாறு பாய்ந்த பாக்கிஸ்த்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரபானி கார் தனது நாடு அமெரிக்காவைப் பகைக்கும் நிலையில் இப்போது இல்லை என்பதை உணர்ந்து ஒத்துழைப்புக்கான "தனது கதவு திறந்திருக்கிறது" என்று முடித்துக் கொண்டார்.

    ஹக்கானி பாக்கிஸ்த்தானின் ஒரு மலிவான ஆயுதம்
    தமது நாட்டில் பாக்கிஸ்த்தானின் ஆதிக்கத்தை அங்கு இந்தியாவின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் சமாளிக்க ஆப்கானிஸ்த்தானில் ஒரு பகுதியினர் விரும்புகின்றனர். ஆப்கானிஸ்த்தானில் இந்தியச் செல்வாக்கை அழிக்கவும் அங்கு இந்தியாவின் மூக்கை உடைக்கவும் பாக்கிஸ்த்தான் ஹக்கானி அமைப்பைப் பாவித்து வருகிறது. ஹக்கானி அமைப்பு பாக்கிஸ்த்தனுக்கு இந்தியாவிற்கு எதிரான ஒரு மலிவான ஆயுதம். இதனால் தலிபானின் கிளை அமைப்புக்களில் ஹக்கானி அமைப்பு பாக்கிஸ்த்தான் அரசினதும் உளவுத் துறையினதும்  விருப்பத்துக்குரிய அமைப்பாக இருக்கிறது. இதனால் தலிபானின் மற்றக் கிளை அமைப்புக்களில் இருந்து ஹக்கானி அமைப்பு வேறுபட்டு நிற்கிறது. அமெரிக்க ஆளில்லா விமானங்களின் தாக்குதல்களில் இருந்து தப்ப ஹக்கானி அமைப்பினர் பாக்கிஸ்த்தானின் பொருளாதார படைத்துறை முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இருக்க பாக்கிஸ்த்தான் அனுமதி வழங்கியுள்ளது.


    தானம் கொடுத்த அமெரிக்கா தண்டம் எடுக்குமா?
    ஆப்கானிஸ்த்தானில் தனது படைகளை நீண்ட காலம் வைத்திருக்க விரும்பாத அமெரிக்கா தனது இசுலாமியத் தீவிரவாதத்திற்கு எதிரான போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறது. அப்படி முடிவிற்குக் கொண்டுவந்த பின்னர் அமெரிக்கா பாக்கிஸ்த்தானைக் கைகழுவி விடலாம். அத்துடன் இனி வரும் காலங்களில் அமெரிக்க-பாக் உறவு  மோசமடைந்து கொண்டே போகும். காபூலில் தலிபானின் துணை அமைப்பான ஹக்கானி அமைப்பின் தாக்குதலில் பாக்கிஸ்த்தானின் ஐ.எஸ்.ஐக்குத் தொடர்பு இருப்பதை அறிந்து கொண்ட அமெரிக்கா மிகவும் கடுமையான தனது கரிசனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. பாக்கிஸ்த்தானுடன் அமெரிக்காவிற்கு இருக்கும் சிறப்பு நட்பைத் துண்டிக்க வேண்டும் என்று அமெரிக்காவில் குரல்கள் எழத் தொடங்கிவிட்டன. பாக்கிஸ்த்தானுக்கு எதிராக ஒரு ஒருதலைப்பட்சமான படைநடவடிக்கை எடுப்பது கூட அமெரிகாவின் சாத்தியமான தெரிவுகளில் ஒன்றாக உள்ளது. ஆப்கானிஸ்த்தானில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான தனது நடவடிக்கைக்கு பாக்கிஸ்த்தானின் ஆதரவு மிக முக்கியம் என்பதை உணர்ந்த அமெரிக்கா பக்கிஸ்தானுக்குத் தானம் கொடுத்தே அதை தன்னுடன் வைத்திருக்கிறது. ஆண்டு தோறும் அமெரிக்கா நான்கு பில்லியன் டாலர்கள் பெறுமதியான உதவிகளைப் பாக்கிஸ்த்தானிற்கு வழங்கி வருகிறது. சென்ற வாரம் அமெரிக்க மூதவை(செனட்) ஒருபில்லியன் டாலர்கள் உதவியை பாக்கிஸ்த்தானிற்கு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக வழங்க அனுமதித்திருந்தது. இப்போது பாக்கிஸ்த்தானிற்கான உதவிகளை மீள்பரிசீலனை செய்யும் நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்காவின் படை நடவடிக்கைகள் பாக்கிஸ்த்தானின் நட்பின்றி பூகோள ரீதியில் பெரும் சிக்கலை எதிர்கொள்ளும்.


    பாவம் அமெரிக்கா.
    ஏற்கனவே ஈராக்கிலும் ஆப்கானிஸ்த்தானிலும் இரு போர் புரிந்து கொண்டிருக்கும் அமெரிக்காவால் அணு ஆயுதங்களைக் கொண்ட பாக்கிஸ்தானுடன் இன்னொரு போர் முனையைத் திறக்க முடியாது. அமெரிக்கா வழங்கிய பலநவீன ஆயுதங்களும் அமெரிக்காவால் பயிற்றப்பட்ட படைகளும் பாக்கிஸ்த்தானிடம் உள்ளன. தான் வளர்த்த பாம்பால் அமெரிக்காவின் கால் சுற்றப்பட்டுள்ளது.


     அமெரிக்காவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையில் பிணக்குத் தீர்க்கும் முயற்ச்சியில் சவுதி அரேபியா ஈடுபட்டுள்ளது. பாக்கிஸ்த்தானின் நெருக்கடியைச் சமாளிக்கும் முயற்ச்சியாக சீன உதவிப் பிரதம மந்திரி ஜென் ஜிகான்ஜு  பாக்கிஸ்த்தானிற்குப் பயணம் மேற் கொண்டுள்ளார்.

    அமெரிக்கா பாக்கிஸ்த்தானிற்கு எதிராக பல படை நகர்த்தல்களை மேற்கொண்டும் இந்தியாவின் உதவியுடனும் இனிப் பாக்கிஸ்த்தானைப் பணிய வைக்கலாம். அமெரிக்கப் படைகள் பாக்கிஸ்த்தானுக்குள் உட்புகுந்து செய்து வரும் தாக்குதல்களை இனிவரும் நாட்களில் மேலும் தீவிரப்படுத்தலாம்.

    Monday 26 September 2011

    மோசமான ரீ-ஷேர்ட் நகைச்சுவைகள்.

     
    கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
    நோக்கமிம் மூன்றும் உடைத்து.
    வள்ளுவப் பெருந்தகையே மன்னியுங்கள்.
    எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு

    மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
    அற்றது போற்றி உணின்'

    உண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றோரா லெண்ணப் படவேண்டா தார்


    பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்; திண்மையுண் டாகப் பெறின்

    பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
    அறனொன்றோ ஆன்ற வொழுக்கு

    நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்

    ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்

    குறிப்பிற் குறிப்புணரா (வாயின் உறுப்பினுள்)
    என்ன பயத்தவோ கண்

    தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
    தன்னையே கொல்லுஞ் சினம்.

    சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
    செய்யாமை மாசற்றார் கோள்.

    நயன் இல சொல்லினும் சொல்லுக! சான்றோர்
    பயன் இல சொல்லாமை நன்று.

    குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
    யாது கொடுத்தும் கொளல்.

    எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
    கண்ணென்ப வாழும் உயிர்க்கு..

    கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்.

    உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
    புண்ணது உணர்வார்ப் பெறின்.

    இடுக்கண் வருங்கால் நகுக அதனை
    அடுத்தூர்வ தஃதொப்ப தில்.



    அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
    ஆரிருள் உய்த்து விடும்.


    புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
    உள்ளம் உடைக்கும் படை.

    சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்? மகளிர் நிறை காக்கும் காப்பே தலை

    உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
    கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

    இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
    இன்முகங் காணும் அளவு.

    எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
    அதிர வருவதோர் நோய்.

    Add caption



    நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
    வாளது உணர்வார்ப் பெறின்.

    அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல்.

    Featured post

    உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

    விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...