Saturday 10 September 2011

பொருளாதாரம்: யானைப்பசிக்கு ஒபாமா கொடுத்த சோளப்பொரி.

வேலையில் இருப்போர்க்க்கு வேலை நீடிக்கும் என்ற நம்பிக்கை இல்லை. வேலையற்றோர்க்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. வியாபாரிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்து வியாபாரம் பெருக்கும் நம்பிக்கை இல்லை. மக்களுக்கு அரசு நாட்டின் பொருளாதாரப் பிரச்சனையைத் தீர்க்கும் என்ற நம்பிக்கை இல்லை. பெரு முதலீட்டாளர்களுக்கு நீண்டகால அடிப்படையில் தம் முதலீடு இலாபம் ஈட்டும் என்ற நம்பிக்கையில்லை. இதுதான் இன்று அமெரிக்கா உட்படப் பல நாடுகளில் நிலைமை. பொருளாதார நடவடிக்கைகள் எதிர்கால நிகழ்வுகளில் உள்ள நம்பிக்கையில் பெரிதும் தங்கியிருக்கின்றன.

வேலையாட்கள் வேலை இழப்பதுண்டு. பின்னர் மீண்டும் வேலையில் இணைவதுண்டு. வர்த்தக நிறுவனங்களில் நிதி நெருக்கடி என்றால் வங்கிகள் கடன் கொடுத்து அவற்றின் நிதி நெருக்கடியைச் சீர் செய்து இலாபமீட்டும். வங்கிகளில் நிதி நெருக்கடி என்றால் அரசு மத்திய வங்கியூடாக வங்கிகள் முறிவடைவதைத் தடுத்து பொருளாதார நடவடிக்கைகள் நாட்டில் சீராக நடக்கவும் வளர்ச்சியடையவும் உதவி செய்யும். இப்போது அரசே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன.

ஒருவர் வேலையை இழக்கும் போது அவரது கொள்வனவு குறையும்; அவர் அரசுக்குச் செலுத்தும் வரி குறையும்; வேலையை இழந்தவருக்கு அரசு வாழ்வாதார நிதி உதவி செய்ய வேண்டும்; அரச செலவீனம் கூடும்;  நாட்டில் பலர் வேலை இழக்கும் போது நாட்டின் மொத்தக் கொள்வனவு குறையும்; அரச வரி வருமானம் குறையும்; அரச செலவு அதிகரிக்கும்; கொள்வனவு குறைய உற்பத்தி குறையும்; வியாபார நிறுவனங்கள் முறிவடையும்; அவற்றிக்கு கடன் கொடுத்த வங்கிகள் முறிவடையும்; அரசுக்கு விற்பனை வரி வருமான வரி போன்றவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் குறையும்;  அரசுக்கு நிதி நெருக்கடி தோன்றும்.

அன்று ஒளவையார் சொன்னார்:
  • வரப்புயர நீருயரும்
  • நீருயர நெல் உயரும்
  • நெல் உயர குடி உயரும்
  • குடி உயரக் கோன் உயர்வான்.

அரசுக்கு நிதி நெருக்கடி என்றால் அரசின் கடன் முறிகளில் முதலீடு செய்வோர் அதிக வட்டி வீதத்தை எதிர்பார்ப்பர். இதனால் நாட்டின் வட்டி வீதம் அதிகரித்து உற்பத்தித் துறையில் முதலிடுவர்.  இப்படிப்பட்ட பிரச்சனைகளால் அமெரிக்க உட்படப் பல நாடுகள் திக்குத் தெரியாமல் தவிக்கின்றன. மக்கள் கையில் பணப் புழக்கத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும் அவர்கள் அந்தப் பணத்தில் கொள்வனவு செய்ய வேண்டும். அவர்கள் கொள்வனவு செய்ய உற்பத்தி அதிகரிக்கும். உற்பத்தி அதிகரிக்க வேலை வாய்ப்பு அதிகரிக்கும். வேலைவாய்ப்பு அதிகரிக்க நாட்டின் மொத்தக் கொள்வனவு மேலும் அதிகரிக்கும். கொள்வனவு அதிகரிக்க உற்பத்தி மேலும் அதிகரிக்கும்.


அமெரிக்க மக்களின் கையில் பணத்தை புழங்க விடுவது எப்படி என்றுதான் இப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் அவரது பொருளியல் ஆலோசகர்களும் தலை முடியைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில்தான் பராக் ஒபாமா தனது தொழில் உரையை வியாழன் இரவு ஆற்றினார். அந்த உரை American Jobs Actஐ உருவாக்கும். அமெரிக்காவின் சட்டவாக்க உரிமை பாராளமன்றத்தின் கைகளில் இருக்கிறது. அமெரிக்கப் பாராளமன்றம் மக்களவை (congrss), மூதவை (senate) என்ற இரு சபைகளைக் கொண்டது. இரு சபைகளும் அங்கீகரித்தாலே ஒரு சட்டம் நிறைவேற்றப்பட முடியும். மக்களவை ஒபாமாவின் எதிர்கட்சியான குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒபாமா மக்கள் கையில் பணம் புழங்கவிட பெரும் செல்வந்தர்களின் வரியை அதிகரிக்க விரும்புகிறார். அந்த வரி வருமானத்தின் மூலம் அதிக ஆசிரியகளை வேலைக்கு அமர்த்தியும், சிறு முதலீட்டாளர்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுக்கு உதவிகள் வழங்கியும் நாட்டின் கொள்வனவையும் உற்பத்தியையும் அதிகரிக்க விரும்புகிறார் ஒபாமா.

மக்களவையின் சவால்களைச் சமாளிக்க ஒபாமா தனது வார்த்தைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்தார். ஒபாமா சமர்ப்பித்த அமெரிக்கத் தொழிற் சட்டத்தின் நோக்கம் அதிக மக்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துவது; மக்களின் சட்டைப்பைகளில் அதிக பணத்தை இடுவது; அதிக கட்டுமானத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது; அதிக ஆசிரியர்களை வேலைக்கு அமர்த்துவது; அதிக நிபுணர்களை வேலைக்கு அமர்த்துவது; நீண்டகாலமாகத் தொழிலின்றி இருப்போர்க்கு வேலை வழங்குவது; ஆட்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு வரி விலக்களிப்பது; ஊழியர்களின் வரியைக் குறைப்பது; சிறு முதலீட்டாளர்களின் வரிச்சுமையைக் குறைப்பது.

இப்படி தனது உரையை கவர்ச்சிகரமாகத் தயார் செய்திருந்தார் ஒபாமா. முதலீட்டாளர்களுக்கும் மக்களுக்கும் உலகப் பொருளாதார மேடைக்கும் நம்பிக்கை ஊட்ட ஒபாமா விரும்பினார். தனது 34 நிமிட உரையில் இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுங்கள் என்று எட்டுத்தடவை கூறியிருந்தார் ஒபாமா. ஆனால் குடியரசுக் கட்சியினர் இவை வெறும் வார்த்தையாடல்கள் மட்டுமே. இதில் சரக்கு எதுவுமில்லை என்கின்றனர். குடியரசுக் கட்சியினர் தேர்தலில் மக்கள் மீதான வரியை அதிகரிப்பதில்லை என்ற வாக்குறுதியுடனேயே மக்களவைக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஒபாமாவின் புதிய திட்டம் பெரும் செல்வந்தர்கள் மீதான வரியை அதிகரிப்பதாக உள்ளது. இதனால் ஒபாமாவின் திட்டம் வெற்றி பெறுமா என்பது சந்தேகமே.

ஒபாமாவின்  American Jobs Act- அமெரிக்க தொழிற் சட்டத்திற்கு $447பில்லியன்கள் செல்வாகும் என்றும் அது 500,000இல் இருந்து இரண்டு மில்லியன்கள் வரையிலான வேலைகளை உருவாக்கும் என்றும் பொருளியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் வர இருப்பதால ஒபாமாவின் உரை முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகிறது. அத்துடன் அமெரிக்கா பொருளாதர நெருக்கடியில் இருந்து மீளும் போது அமெரிக்கவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும். இதனால் ஒபாமா என்ன சொல்லப் போகிறார் என்று உலகமே எதிர்பார்த்திருந்தது. ஒபாமாவின் உரைக்குப் பின்னர் உலகெங்கும் பங்குச் சந்தைகள் பெரும் விலை வீழ்ச்சிக்கு உள்ளானது. இது ஒபாமாவின் உரை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை தரவில்லை என்பதைக் காட்டுகிறது. ஒபாமாவின் உரைக்குப் பின்னர் கருத்துத் தெரிவித்த அமெரிக்க வேலைகொள்வோர்(முதலாளிமார்கள்) தாம் ஒபாமாவின் உரையை வரவேற்கும் அதேநேரத்தில் தாம் இப்போதைக்கு புதிதாக எவரையும் வேலைக்குச் சேர்க்கும் நிலையில் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா இப்போது எதிர்கொள்ளும் சீன வளர்ச்சி, உலகெங்கும் வளரும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, எரிபொருள் தட்டுப்பாடு, கடன் நெருக்கடி போன்றவற்றுடன் பார்க்கையில் ஒபாமாவின் உரை யானைப் பசிக்கு சோளப்பொரி.

Friday 9 September 2011

முகவேட்டில் சேர்த்தேன். டுவிட்டரில் தொடர்ந்தேன்

ஹைக்கூ கவிதைகள்

துயரம் தராத துணைவன்
பலம் தரும் பயிற்ச்சி
மௌனம்

வறுமைக்கு வழி
நிம்மதிக்கு துணை
நேர்மை

என் மனது அதிர்ந்தது
ரிச்சர் அளவு கோலில் ஏழு
அவள் பார்வை

முகவேட்டில் சேர்த்தேன்
டுவிட்டரில் தொடர்ந்தேன்
காதலில் நான்


பிக்கப்(எடுத்துவா) கவிதைகள்

என்னிடம் கால் உண்டு
தேவை உன் "த"

உன் உடல் நாடென்றால்
நான் ஓர் நாடோடி

Thursday 8 September 2011

நகைச்சுவைக் கதை: கடவுள் அனுப்பிய காசைச் சுட்ட மோகன் மன்சிங்

அவன் ஒரு ஏழு வயதுச் சிறுவன். உலகத்தில் உள்ள மொத்த வறியவர்களில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட இந்தியாவில் பிறந்ததால் அவன் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனுக்குச் சேரவேண்டிய பணம் அவன் பிறப்பதற்குப் பல நாட்களுக்கு முன்னர் இருந்தே கொள்ளை அடிக்கப்பட்டு சுவிஸ் வங்கியில் இருக்கிறது.

அந்த ஏழு வயதுச் சிறுவனுக்கு தனது வறுமையைத் தெரிவித்து கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதி தனக்கு ஆயிரம் ரூபாக்கள் அனுப்பும் படி எழுதினான். கடவுள் எங்கும் நிறைந்தவர் என்று அவன் அடிக்கடி கேள்விப்பட்டதால் கடவுள், இந்தியா என்று விலாசமிட்டு அனுப்பினான்.

கடிதத்தைப் பார்த்த தபால் துறையினர் அதனால் மனம் நெகிழ்ந்து அந்தக் கடிதத்தை மோகன் மன்சிங்கிற்கு அனுப்பினர். மோகன் சிங் அந்தக் கடிதத்தைப் பார்த்துவிட்டு அந்தச் சிறுவனுக்கு ஆயிரம் ரூபாக்களை  அனுப்பினால் அவன் பணக்காரன் ஆகிவிடுவான் என்று பயந்து இரு நூறு ரூபாக்களை மாட்டும் அனுப்பி வைத்தார்.

சிறுவனிற்கு பணம் கிடைத்தது. சிறுவன் கடவுளுக்குப் பதில் கடிதம் எழுதினான். "கடவுளே எனக்குப் பணம் அனுப்பியமைக்கு நன்றி. நீங்கள் எனக்கு ஆயிரம் ரூபாக்களை டெல்லிக்கூடாக அனுப்பினீர்கள். அவர்கள் வழமை போலவே அதில் எண்ணூறு ரூபாக்களைச் சுட்டுவிட்டு எனக்கு இருநூறை மட்டும் அனுப்பினார்கள்."

 
நன்றி: newsforindia




 அவன் ஒரு வழிப்பறித் திருடன். அவன் தொழிலுக்கு அன்றிரவு சென்றது ஒரு சிவப்பு விளக்குப் பகுதி. அங்கு ஒரு தெருவில் ஒரு கதர் வேட்டிக்காரன் தான் அன்றிரவு அவனுக்கு அகப்பட்டான். அவன் கழுத்தில் கத்தியை வைத்தபடி உன் பணம் முழுவதையும் எடு என்றான். அதற்கு அந்தக் கதர் வேட்டிக்காரன் என்னை யாரென்று நினைத்தாய் நான் ஒரு மந்திரி என்றான். அப்போது திருடன் உன்னிடம் இருக்கும் எனது பணம் முழுவதையும் உடனடியாகக் கொடு என்றான்.

சிக்கிபிடியா என்ற ஒரு இனவெறி நகைச்சுவைக்கு பெயர் போன இணையத்தளம் ஒன்றில் இப்படி ஒரு நகைச்சுவை:

இலண்டனுக்கு புதிதாக வந்து குடியேறிய பாக்கிஸ்தான் இளைஞன் ஒருவன் தனக்கு உடலும் மனமும் சரியில்லை என்று மருத்துவரிடம் சொன்னான். அதற்கு மருத்துவர் நீ ஒரு வாளியை எடுத்து அதற்குள் முதலில் மலம் கழி பின்னர் அதற்குள் நாறிய மீனையும் அழுகிய கோவாவையும் போடு. அப்படியே அதை ஒரு வாரம் மூடி வைத்திருந்து விட்டு பின்னர் அதை முகர்ந்தபடி ஒரு மணித்தியால இரு. எல்லாம் சுகமாகும் என்றார். அவனும் அப்படியே செய்தான். அவனது மனமும் உடலும் சுகமானது. மருத்துவரிடம் மகிழ்ச்சியாக அவன் தான் சுகம் பெற்றதைச் சொல்லி இதை எப்படி கண்டுபிடித்தீர்கள் என்றான் அந்தப் பாக்கிஸ்தானிய இளைஞன். அதற்கு மருத்துவர் நீ வீட்டு ஏக்கம் (home sick) நோயால் பீடிக்கப்பட்டுள்ளாய் என்றார்.

Wednesday 7 September 2011

கடாஃபியைத் தங்கத்துடன் தப்ப வைத்த தென் ஆபிரிக்கா.

லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மர் கடாஃபிக்கு தென் ஆபிரிக்கா திரைமறைவில் அளித்து வரும் ஆதரவு பலரை ஆச்சரியப் பட வைக்கிறது. ஆனால் தென் ஆபிரிக்கர்கள் நிறவெறிக்கு எதிராகப் போராடும் போது கடாஃபி அவர்களுக்கு செய்த உதவியை அறிந்தவர்களுக்கு இது ஆச்சரியமல்ல. கடாஃபியை தன் மகன் என்று சொந்தம் கொண்டாடியவர் நெல்சன் மண்டேலா. மண்டேலா பதவியில் இருந்தபோது 1999இல் அவரது கடைசி அரச விருந்தினர் மும்மர் கடாஃபியே.  நெல்சன் மண்டேலா சிறையில் இருக்கையில் அவரது மனைவிமேல் கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போது அவருக்கு நிதி உதவி செய்தவர் மும்மர் கடாஃபி. அப்போது தென் ஆபிரிக்காவின் நிற வெறி அரசுக்கு ஆதரவு அளித்த நாடுகள்தான் இப்போது கடாஃபியை பதவியில் இருந்து விரட்டுகின்றன.

லிபியாவின் இடைக்கால தேசிய சபை
புதிய அரசின் சவால்கள் காடாஃபிக்கு உயரிய சந்தர்ப்பங்களாகின
மும்மர் கடாஃபி சிறு பிராந்தியத்தில் சுற்றி வளைக்கப்பட்டபோது அவரது இனக்குழுமத்தினர் அவருக்கு பாதுகாப்பு அரணாக இருந்துகொண்டனர். கடாஃபியை பிடிக்க அல்லது கொல்ல எடுக்கும் முயற்ச்சி பெரும் இரத்தக் களரியில் முடியும். ஏற்கனவே லிபியாவில் இருக்கும் பல இனக் குழுமங்களுக்கிடையிலான முரண்பாடுகளைக் கையாள்வது எப்படி என்பது புதிதாக அமையவிருக்கும் லிபிய அரசுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. புதிய அரசு எதிர்கொள்ளும் மற்றைய சவால் ஆபிரிக்க நாடுகளின் அங்கீராம் பெறுதல். அதில் முக்கியமானது தென் ஆபிர்க்க நாட்டின் அங்கீகாரம். இவை இரண்டையும் கடாஃபி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

சென்ற வாரம் தென் ஆபிரிக்கத் தலைவர் ஜேக்கப் சுமோ தலைமையில் எதியோப்பியாவில் கூடிய ஆபிரிக்க ஒன்றிய நாடுகள் லிபியாவின் புதிய அரசில் கடாஃபியின் ஆதரவாளர்களும் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தனர். ஐக்கிய நாடுகள் சபையில் லிபிய வெளிநாட்டு நிதிகளை லிபியாவின் புதிய இடைக்கால அரசுக்கு கொடுப்பதை தென் ஆபிரிக்கா எதிர்க்கிறது.

கடாஃபி தப்பிச் சென்ற பாதை
தென் ஆபிரிக்காவும் பிரான்சும் மும்மர் காடாஃபியின் எதிர்காலம் தொடர்பாகவும் புதிய அரசு தொடர்பாகவும் நீண்ட பேச்சு வார்த்தையை நடாத்தி சில உடன்பாடுகளுக்கு வந்தன. அதில்முக்கிய அம்சம் கடாஃபியையும் அவரது பரிவாரங்களையும் லிபியாவில் இருந்து தப்பிச் செல்ல அனுமதிப்பது. அதன் பிரகாரம் கடாஃபி பத்து பாரிய வாகனங்களில் தனது பல பில்லியன் பெறுமதியான தங்கம், அமெரிக்க டொலர்கள், யூரோக்களையும் எடுத்துக் கொண்டு நைகர் நாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். அவர் பின்னர் பெர்க்கினோ பாஸோ நாட்டில் தற்காலிகமாகத் தங்கி இருந்து பின்னர் வேறு நாடு செல்வார்.

எரிபொருள்களின் விலையை அமெரிக்க நாணயமான டொலரில் நிர்ணயம் செய்யாமல் யூரோ நாணயத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தை முன்னெடுத்ததால் சதாம் ஹுசேயின் பதவில் இருந்து விரட்டப்பட்டு தூக்கில் இடப்பட்டார். எரிபொருள்களின் விலையை அமெரிக்க நாணயமான டொலரில் நிர்ணயம் செய்யாமல் தங்கத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்ததால் மும்மர் கடாஃபி பதவியில் இருந்து விரட்டப்பட்டார். மேற்குலக ஏகாதியபத்தியவாதிகளின் அடுத்த இலக்கு சிரியா.

கடாஃபி தொடர்பான முந்தைய பதிவுகள்:
1. தாக்குப் பிடிக்கும் கடாஃபி
2. கடாஃபியில் இறுதி நிகழ்வுகள்
3. கடாஃபிக்கு இதிரான இறுதிச் சதிகள்
4. தாக்கும் நேட்டோவும் தாக்குப் பிடிக்கும் கடாஃபியும்

Tuesday 6 September 2011

தடை செய்யப்பட்ட படங்களும் விளம்பரங்களும்

பொருட்களை விற்பனை செய்வதற்காக என்ன என்னவோ எல்லாம் செய்கிறார்கள். எத்தனை விநோதமான படங்களைப் போடுகிறார்கள். எதையும் விட்டு வைப்பதில்லை.
இங்கிலாந்தைச் சுத்தாமாக வைத்திருக்க இப்படியா?


அசிங்கம்

சொன்னது கேட்காத செம்மறி,,,

நிறவெறி விளம்பரம்...





பெண்களை இழிவு படுத்தக்கூடாது..

கைப்பேசிவைப்பிடம்???


வாகன ஓட்டும் போது கவனம் சிதற விடக்கூடாது....

என்ன கொடுமை இது????


என்ன நடக்குது இங்கே???

இறந்த உடலுக்கு பூச்சு.....

சீன மனித உரிமை மீறல்களுக்கு எதிரான விளம்பரம்....

தாய்மை அழகு...



சிகரட் புகைத்தல் கூடாது என்பதற்கு ஏன் இரட்டைக் கோபுரத்தை,.....


பீர் வாங்க இப்படியா?




















....

40இல் கருணாநிதியும் அடக்கமோ?


 சொல்லுக் கேளாத செம்மறிகள் இரண்டு.........
இதுக்கு தடையில்லை...


Monday 5 September 2011

கிறீஸ் மனிதர்களுக்கு எதிராக நடவடிக்கை - மாவை சேனாதிராஜா சூளுரை

இலண்டனில் சனிக்கிழமை 4ம்திகதி நடை பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய தமிழ் நாடாளமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்கள் கிறீஸ் பூதத்திற்கு எதிராக தாம் விரைவில் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகச் சூளுரைத்துள்ளார்.

இதன் காணொளியைக் கீழே காணலாம்:





அக்கூட்டத்தில் சிறீதரன் அவர்கள் ஆற்றிய உரை:






Sunday 4 September 2011

கலக்கல் கணனி நகைச்சுவைகள்

 வே|று வேறு இணையங்களில் இருந்து தெரிந்தெடுத்த கணனி நகைச்சுவைகள்:

“Programming is like sex, one mistake and you have to support it for the rest of your life.” — Michael Sinz

A user friendly computer first requires a friendly user.

"To err is human... to really foul up requires the root password."

A bug in the code is worth two in the documentation.

"COBOL programmers understand why women hate periods."

Computer programmers do it byte by byte.

"There are 10 types of people in the world: those who understand binary, and those who don't."

Computers are a more fun way to do the same work you'd have to do without them.

"To go forward, you must backup."




Computers are like air-conditioners: both stop working, if you open windows. Computers are not intelligent. They only think they are.

Is reading in the bathroom considered Multi-Tasking?

Computers are unreliable, but humans are even more unreliable.

Computers follow your orders, not your intentions.



Multitasking:  Screwing up several things at once...
 
Computers can never replace human stupidity.

Computer Science: solving today's problems tomorrow.

Crashing is the only thing windows does quickly.

"If at first you don't succeed; call it version 1.0"

"Some things Man was never meant to know. For everything else, there's Google."





Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...