Saturday 3 September 2011

நகைச்சுவை: வெள்ளை மாளிகையில் இலட்சுமி சிலை.

கடைசியாக வெளிவந்த வேலைவாய்ப்பு புள்ளி விபரமும் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு சாதகமாக இல்லை. அமெரிக்க கடன் நெருக்கடி இப்போது தீர்வதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. அமெரிக்காவிற்கு சில ஆலோசனைகள்:

  • வெள்ளை மாளிகைக்கு முன்னர் ஒரு இலட்சுமி சிலையை வைத்து அதற்கு ஆறுகாலப் பூசை செய்யவும்.
  • அட்சய திருதியையிலன்று உலகச் சந்தையில் தங்கத்தை வாங்கி வைக்கவும்.
  • தீபாவளி நாளில், திருப்பதி பெருமாளுக்கே கடன் அளித்த குபேரனையும் மகாலக்‌ஷ்மியையும் விஷேஷமாக வழிபடுவது மிகவும் பயன் தரும். தீபாவளி அன்று மாலை குபேர பூசை செய்யவும் 16 விளக்குகள் நெய்யினால் ஏற்றிக்கொள்ளவும். மஹாலஷ்மிக்கு அர்ச்சனைக்கு வில்வம் இலை,இல்லையெனில் தாமரை பூ அல்லது வெள்ளி காசு , பூக்கள் குங்குமம், குபேரன் படம் இல்லையென்றால் லஷ்மி படம், அர்ச்சனை செய்ய காசுகளை பயன்படுத்தவும்
    நெய்வேதியம்
    சக்கரை பொங்கல், பால் தேன், சிறிது நெய்
    சொல்ல வேண்டிய மந்திரம்:
    “ராஜாதி ராஜாய ப்ரஸய ஸாஹிநே
    நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே!
    ஸ மே காமாந் காம காமாய மஹ்யம்
    கர்மேஸ் வர வைஸ் ரவணாய ததாது!
    குபேராய வைஸ்ரவணாய, மஹாராஜாய நம!!
  • வெள்ளை மாளிகையை வாஸ்துப்படி மாற்றி அமைக்கவும்.
  • அமெரிக்க சாதகத்தில் கடன் தொல்லைக் குரிய ஆறம் அதிபன் சீனேஸ்வரனுக்கு சாந்தி செய்யவும்.
  • அமெரிக்கப் பொருள்களை உலகில் உள்ள அனைவரும் வாங்க உலக கொள்வனவாளர்களை வசியம் செய்யவும்.
  • அமெரிக்காவிற்கு கடன் கொடுத்த சீனாவிற்கு எதிராக பில்லி, சூனியம் செய்யவும்.

Friday 2 September 2011

கவிதை: ஒன்றைப் பார்த்து ஒன்றையே தேர்ந்து ஒன்றிலேமுடிவது காதல்

நெஞ்சில் நினைவுகளின்
சுற்றி வளைப்புக்கள்
ஆசைகளின் ஆக்கிரமிப்புக்கள்
முடிவுறாத் தேடல்கள்
நெஞ்சில் அணையாத்தீயாகின

பலதைப் பார்த்து
ஒன்றை தேர்வதல்ல காதல்
ஒன்றைப் பார்த்து
ஒன்றையே தேர்ந்து
ஒன்றிலேமுடிவது காதல்



ஒவ்வொரு நாளும் பூக்கும்
புதுப் பூக்கள் போல்
புதுப் புது வார்த்தைச் சரசங்கள்
புதுப்புது உணர்வுப் பரிமாற்றங்கள்
தேங்கி எங்கும் நிற்காது
என்றும் ஓடும் நதியே காதல்.


அணைக்க அணைக்க எரியும்
அணைப்பிலே புரியும்
உணர்வுகளின் உச்சக்கட்ட
வெப்பச் சங்கமமே காதல்

வந்த வழியிழந்து
நின்ற இடம் மறந்து
உன்பாதை நீ போக
என்பாதை நான்போகப்
பிரிவதில்லை காதல்
ஒவ்வொரு கணமும்
ஒவ்வொரு நிகழ்வும்
நெஞ்சில் நிலைத்து
நினைவாய் இனிப்பது காதல்

தூரங்கள் தொலைந்து
இடைவெளிகள் மறைந்து
காற்றுக்கும் இடமின்றி
காற்றோடு காற்றாய்
கனவோடு கனவாய்க்
கலக்கும் காதல்

Thursday 1 September 2011

கடாஃபிக்குப் பின்னர் லிபியா

கடாஃபியின் மனைவி மகள் மகன்
அல்ஜீரியாவுடனான லிபியாவின் எல்லையைக் காவல் செய்து கொண்டிருந்த கடாஃபி எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்களின் படைகள் மீது 27-08-2011 ஞாயிறு இரவு ஒரு ஊடறுப்புத் தாக்குதல் நடத்தப்படுகிறது. காடாஃபியின் எதிர்ப்புப் கிளர்ச்சிக்காரர்களிடமுள்ள குண்டுகள் தீரும் வரை தந்திரமாக சண்டை நடக்கிறது. குண்டுகள் தீர்ந்தவுடன் கடாஃபிக்கு எதிரான படைகள் பின்வாங்கிச் செல்ல பத்து ஆடம்பர கார்கள் இருட்டைக் கிழித்துக் கொன்று அல்ஜீரியாவை நோக்கி விரைகின்றன. பின்னர் திங்கட் கிழமை காலை 8-45இற்கு கடாஃபியின் மனைவியான சோபியா, நிறைமாதக் கர்ப்பிணியான கடாஃபியின் மகள் ஆயிஷா, மகன்கள் மொஹமட், ஹன்னிபல் ஆகியோர் தமது நாட்டுக்குத் தப்பி வந்ததாக அல்ஜீரிய அரச அதிகாரிகள் அறிவித்தனர். தப்பிச் சென்ற கடாஃபியின் செல்ல மகள் ஆயிஷா அல்ஜீரியாவில் கடாஃபிக்கு ஒரு பேர்த்தியையும் பெற்றெடுத்தார்.

நேட்டோவின் விமானங்கள், செய்மதிகள், ஆளில்லா விமானங்கள் எல்லாம் காவல் இருந்தும் ஒரு துணீகர நடவடிக்கையை கடாஃபி ஆதரவாளர்கள் மேற்கொண்டது எப்படி. கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் பலவீனத்தை கடாஃபி தரப்பினர் நன்கு உணர்ந்து கொண்டனர். கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியில் இருபதுக்கு மேற்பட்ட ஆயுதக் குழுக்கள் இருக்கின்றன. கடாஃபியை அகற்றியபின்னர் இவற்றின் ஆயுதங்கள் பறிக்கப்படும். இதை உணர்ந்த சில ஆயுதக் குழுக்கள் தமக்கென சில ஆயுதங்களைப் பதுக்க முற்பட்டன. இதனால் அவர்களுக்கு ஆயுதங்கள் அளவோடே வழங்கப்பட்டன. இதற்கு ஏற்ப கடாஃபி தரப்பினர் தங்கள் ஊடறுப்புத் தாக்குதலை மேற் கொண்டு தப்பினர்.

இந்த இருபதுக்கு மேற்பட்ட ஆயுதக் குழுக்களின் பின்னணி என்ன?
லிபியா ஆறரை மில்லியன் மக்களைக் கொண்டது. இதில் ஒன்றரை மில்லியன் பேர் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள். லிபியாவில் 140 இனக் குழுமங்கள் இருக்கின்றன. இந்த இனக் குழுமங்களின் அடையாளங்கள் லிபிய மக்களின் கலாச்சார அடையாளத்தின் முக்கிய அம்சமாகும். இனக்குழுமங்களின் பெயர்களையே தமது குடும்பப் பெயர்களாக லிபிய மக்கள் கொண்டுள்ளனர். மேற்கு லிபியாவில் ஒரு மில்லியன் பேரைக் கொண்ட வார்ஃபல்லா என்ற இனக்குழுமம் முக்கியமானது இந்த இனக் குழுமத்தில் 52 உட்பிரிவுகள் இருக்கின்றன. மத்திய லிபியாவில் கடாஃபி என்ற இனக் குழுமம் முக்கியமானது. மும்மர் கடாஃபி இந்த இனக் குழுமத்தைச் சேர்ந்தவர். இந்த இனக் குழுமத்தின் கையில் லிபியா இருந்தது என்று சொல்லலாம். அல் மாஹார்கா என்ற இன்னொரு இனக் குழுமம் மத்திய லிபியாவில் உள்ளது இது கடாஃபி இனக் குழுமத்துக்கு நெருக்கமானது. கிழக்கு லிபியாவில் ஜுவையா, பானி சலீம், மெஸ்ரத்தா, அல் வாஹீர் ஆகிய இனக் குழுமங்கள் முக்கியமானவை.

 கடாஃபியின் மனைவி வார்ஃப்ல்லா என்னும் இனக்குழுமத்தைச் சேர்ந்தவர். இதுதான் லிபியவின் மிகப்பெரிய இனக்குழுமம். இதற்கு 54 உட்பிரிவுகள் இருக்கின்றன.

கடாஃபியின் ஆட்சியின் கீழ் இவ்வினக் குழுமங்களிடை மோதல்கள் இடம்பெறவில்லை. ஆனால் இந்த இனக் குழுமங்களுக்கிடையிலான குரோதத்தை கடாஃபி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். கடாபிக்கு எதிரான போர் ஆறு மாதங்கள் எடுத்தமைக்கு அவருக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களிடை ஒற்றுமையின்மையே காரணமாக இருந்தது. அவர்கள் தங்களுக்குள் அடிக்கடி மோதவும் செய்தனர். கடாஃபியிடம் இருந்து கைப்பற்றப் பட்ட இடங்களி இருந்த சில இனக் குழுமங்கள் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களால் தாக்கப்பட்ட, கொளையிடப்பட்ட, பெண்கள் வன்முறைக்குள்ளான, சம்பவங்கள் நிறைய நடந்தன.

மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியில் பல தலைவர்கள் உள்ளனர். அவர்களில் மதவாதிகள், அரபுத் தேசியவாதிகள், மதசார்பற்றவர்கள், சமத்துவ வாதிகள், மேற்குலக ஆதரவாளர்கள் எனப் பல தரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய தலைவர் என்று ஒருவர் கூட இல்லை. ஓரளவுக்குப் பலராலும் அறிய்பபட்டவர் மும்மர் கடாஃபிக்கு நீதி அமைச்சராக இருந்த முஸ்தபா அப்துல் ஜலீல். ஆனால் இவரைப் பலர் கடாஃபியின் முன்னாள் அமைச்சர் என்ற வகையில் பலத்த சந்தேகத்துடனேயே பார்க்கின்றனர். இந்தச் சூழ்நிலை ஒரு தலைமைத்துவ மோதலுக்கு வழிவகுக்கலாம். கடாஃபிக்கு எதிரான போரில் முக்கிய பங்க்காற்றியவர்களில் பலர் Libyan Islamic Fighting Group (LIFG) என்ற அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இவர்கள் இசுலாமிய அடிப்படை வாதிகள் அல் கெய்தாவுடன் நெருங்கிய தொடரிபுடையவர்கள். ஒரு கட்டத்தில் Libyan Islamic Fighting Group (LIFG) அல் கெய்தாவுடன் இணைக்கப்பட்டது. Libyan Islamic Fighting Group (LIFG)இன் போராளிகளுக்கு இரகசிய இடத்தில் வைத்து  அமெரிக்கப்படை நிபுணர்கள் சிறப்புப் பயிற்ச்சி அளித்தனர். இவர்களின் படையணி திரிப்பொலியைக் கைப்பற்றுவதில் முக்கிய பங்காற்றியது.

அதிகார வெற்றிடம் (Power Vacuum)
முஸ்தபா அப்துல் ஜலீல் அவர்கள் ஒதுக்கப்பட்டால் ஒரு பெரும் பதவி வெற்றிடம் லிபியாவில் ஏற்படும். இருபதுக்கு மேற்பட்ட குழுக்களில் எந்தனை குழுக்கள் முஸ்தபா அப்துல் ஜலீல் அவர்களின் தலைமையை ஏற்றுக் கொண்டன என்பது பெரும் கேள்வி. லிபியாவின் பூகோள அமைப்பின் படி அது ஒரு பிராந்தியாங்களின் கூட்டமைப்பே. ஒவ்வொரு பிராந்தியங்களும் உள்ளூர் வாசிகளினாலேயே கடாஃபியின் படைகளிடம் இருந்து மீட்கப்பட்டன. ஆனால் திரிப்பொலி பல ஆயுதக் குழுக்களால் மீட்கப்பட்டன. திரிப்பொலி விமான நிலையம் ஜிந்தான் பிரதேசக் கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. லிபிய மத்திய வங்கி பாராளமன்றம் ஆகியவை மிசுராட்டாப் பிரதேசக் கிளர்ச்சிக்காரர்கள் வசம் உள்ளது. திரிப்பொலியில் இருக்கும் பல ஆயுதக் குழுக்களை ஒரு கட்டளைத் தளபதியின் கீழ் கொண்டுவரும் முயற்ச்சியாக அப்துல் ஹக்கீம் அல் ஹசாடி கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் ஒரு இசுலாமியத் தீவிரவாதி என மதசார்பற்ற கொள்கையுள்ளவர்கள் சந்தேகிக்கின்றனர். சிலர் இவரை காட்டார் நாட்டுக் கைக்கூலி என்கின்றனர். கிளர்ச்சிக் குழுக்களில் மிகப்பெரியதும் பலம் வாய்ந்ததுமான மிசுரட்டாப் பிரதேசக் குழுக்கள் இவரது தலைமையை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இத்தனை எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அப்துல் ஹக்கீம் அல் ஹசாடியின் நியமனம் கைவிடப்பட்டது.

புகழ் பங்கீட்டில் பெரும் போட்டி
ஒவ்வொரு குழுக்களும் கடாஃபியின் படைகளுக்கு எதிரான போரில் தமது பங்களிப்பு மற்றதிலும் பார்க்க உயர்ந்தது என்று வாதிடுகின்றனர். அதற்கான காணொளிப்பதிவுகள் தம்மிடம் உண்டு என்றும் கூறுகின்றனர்.

கடாஃபிக்கு பின்னர் அமையப் போகும் அரசு ஒரு நிர்வாகக் கட்டமைப்பை நிறுவ நீண்ட நாட்கள் எடுக்கும். இதில் கிளர்ச்சித் தலைவர்களின் அனுபவம் நம்பிக்கையளிக்கவில்லை. இதில் பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் முன்னாள் அரசறிவியல் பேராசிரியர் மஹ்மூட் ஜிப்ரில் சற்று அனுபவம் நிறைந்தவர். ஆனால் இவரும் கடாஃபிக்கு நெருக்கமாக இருந்தவர். கடாஃபியின் இரண்டாவது மகன் சயிஃப் கடாஃபியால் அரசியல் சீர்திருந்தங்கள் செய்வது பற்றி ஆராய அமர்த்தப்பட்டவர். இவர் மேலும் சந்தேகங்கள் பலருக்கு உண்டு.

போதிய  எண்ணை வருமானம் இருந்தபோதும் லிபியா மற்ற எண்ணெய் வள நாடுகளுடன் ஒப்பிடுகையில் பின்தங்கியே இருந்தது. லிபியாவிற்கு சொந்தமான பல முதலீடுகள் இன்னும் வெளிநாடுகளில் இருக்கின்றன. லிபியாவிற்கு வெளிநாட்டு முதலீடுகள் தேவையில்லை. வெளிநாட்டு தொழில் நுட்பங்களே தேவைப்படுகின்றன. இதைப் பாவித்து நேட்டோ நாடுகள் லிபியாவைச் சுரண்டும். நேட்டோவின் வங்கிகளும் காப்புறுதி நிறுவனங்களும் இனி லிபியாவில் திறக்கப்படும்.

கடாஃபியின் அமைச்சரவையில் நீதி அமைச்சராக இருந்த முஸ்தபா அப்துல் ஜலீல் தற்போது லிபியாவின் இடைக்கால தேசிய சபையின் தலைவராக இருக்கிறார். ஆபிரிக்காவில் மிகப்பெரிய எரிபொருள் இருபபை லிபியா கொண்டுள்ளது. நாளொன்றுக்கு 1.8 மில்லியன் பீப்பாய் எண்ணெய் லிபியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அத்துடன் லிபீயாவில் எண்ணெய் உற்பத்திச் செலவு உலகிலேயே மிகக் குறைவானது.

லிபியாவில் கடாஃபிக்கு எதிரான விமானத் தாக்குதலில் பிரித்தானியா மட்டும் 260மில்லியன் பவுண்களைச் செலவிட்டுள்ளது. இந்த "முதலீடு" எப்படித் திரும்பப் பெறப்படும்? எவ்வளவு இலாபமீட்டப்படும்?

லிபியாவிற்கு பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்தோ உலக வங்கியிடமிருந்தோ கடன் தேவைப்படாது. கடனைச் சாக்காக வைத்து தனியார் மயமாக்கும் நிர்ப்பந்தம் வரப்போகும் லிபிய அரசின் மீது சுமத்த முடியாது. நேட்டோ நாடுகள் லிபியாவின் எண்ணெய் வளத்தைச் சுரண்ட புதிய உபாயங்களை வகுக்கும்.

கடாஃபியைப் பதவியில் இருந்து அகற்றிய கிளர்ச்சிக்காரர்கள் அமைத்த இடைக்கால அரச சபையில் பெரும்பாலானவர்கள் கிழக்கு லிபியாவைச் சேர்ந்தவர்கள் இவர்களுக்கும் அரச இயந்திரந்தில் இருக்கும் மேற்கு லிபியர்களுக்கும் கடும் பகை. இந்த முரண்பாடு புதிய லிபிய ஆட்சியாளர்களுக்கு பெரும் சவால்.

தங்கமகன் இன்று சுரங்க வழி நடை போட்டு எங்கு சென்றான்?
144தொன் தங்கத்தை தன்னுடன் வைத்திருந்த கடாஃபி அவற்றுடன் எங்கு சென்றார் என்பதுதான் இன்று பலரையும் குடையும் கேள்வி. திரிப்பொலியின் தனது மாளிகைக்குக் கீழ் ஒரு நகரத்தையே கடாஃபி அமைத்திருந்தார். அது திரிப்பொலி விமான நிலையம் வரை செல்கிற பாதையுடன் கூடியது. அங்கு சிறிய ரக கார்களும் இருந்தன. கடாஃபியின் தங்கம் இனி எதற்குப் பயன்படும். அவரால் இனக்குழும முரண்பாடுகளைப் பயன்படுத்தி லிபியாவில் இன்னும் ஒரு கிளர்ச்சியை ஒழுங்கு செய்ய முடியும். கடாஃபியின் கன்னிக் காவலர்கள் எங்கே என்பது இன்னும் ஒரு கேள்வி.
கடாபியின் கன்னி மெய்ப்பாது காவலர்கள்

லிபியாவின் எண்ணெய் வளத்தை கருத்தில் கொண்ட நேட்டோ நாடுகள் இனி பல இனக் குழுமங்களைக் கொண்ட லிபியாவை என்ன செய்யப் போகின்றன. இனக் குழுமங்களிடை குரோதத்தை வளர்த்து அங்கு தமது படைகளை நிலை கொள்ள ஒரு நொண்டிச் சாட்டை உருவாக்குமா? கடாஃபி தனது ஆட்சியை நிலை நிறுத்த நாடெங்கும் புரட்சிக்குழுக்களை அமைத்து அதன் மூலம் நாட்டைத் தனது பிடிக்குள் வைத்திருந்தார். இந்த புரட்சிக் குழுவைச் சேர்ந்தவர்களிடமிருந்து நாட்டை இனிப் பாதுகாக்க வேண்டும். லிபியாவில் மேற்குலக ஆதிக்கத்தை இசுலாமிய அடிப்படைவாதிகளோ ஈரானோ விரும்பாது. இசுலாமியத் தீவிரவாதிகள் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களிடையே ஊடுருவி இருக்கலாம்.  ஈரானும் தனது கையாட்களை லிபியாவில் வைத்திருக்கலாம். இவை லிபியாவின் எதிர்காலத்தை அமைதியுள்ள ஒன்றாக இருக்க உதவமாட்டாது. நேட்டோ நாடுகள் லிபியாவை இரண்டாக அல்லது மூன்றாகப் பிரிக்க முயற்ச்சி செய்யலாம். அவற்றின் மீதான ஆதிக்கத்தை தம்மிடையே பங்கு போட்டுக் கொள்ளலாம்.

Wednesday 31 August 2011

தேர்தலில் வென்ற ஜெயலலிதா தேர்வில் தோற்றார்.

முகம்மட் பௌஜிஜி குடும்ப வறுமை காரணமாக பல தொழில்களுக்கு விண்ணப்பித்து வேலை கிடைக்கவில்லை. குடும்பத்தைக் காப்பாற்ற அவனால் செய்ய முடிந்தது தெருவோரம் காய்கறி பழங்கள் விற்பது மட்டுமே. தங்கையை பல்கலைக் கழம் வரை படிப்பிக்க வேண்டும் என்பது அவன் கனவு. பாவம் அவனது கடை தெருவோரம் அரச அனுமதியின்றி நடக்கிறது என்று காவற்துறையை அவனுக்குப் ப்ல தொல்லைகள் கொடுத்து வந்தது. ஒரு நாள் காவற்துறையச் சேர்ந்த பெண் ஒருத்தி அவனை பலர் முன்னிலையில் கன்னத்தில் அறைந்து காறி அவன் மீது உமிழ்ந்து அவனது மரக்கறி-பழங்கள் விற்கும் தள்ளு வண்டியை உடைத்தாள். பாதிக்கப்பட்ட முகம்மட் பௌஜிஜி தன்னைத் தானே தீ முட்டித் தற்கொலை செய்து கொண்டான். இதைத் தொடர்ந்து மக்கள் கிளர்ந்து எழுந்தனர். ஆட்சி கவிழ்ந்தது. ஆண்ட மன்னர் நாட்டை விட்டே விரட்டி அடிக்கப்பட்டார். இது நடந்தது துனிசியாவில்.
Mohamed Bouazizi
எமது மண்ணில் என்ன நடக்கிறது? எத்தனை பேர் தமக்குத் தாமே தீமூட்டிக் கொண்டனர்?  இவர்கள் உயிருக்கு மதிப்பில்லையா? அரசுக்கு எதிராகப் பொங்கி எழும் தன்மான உணர்வோ தன்னின உணர்வோ எமக்கு இல்லையா?

2011 ஏப்ரலில் நடந்த சட்ட மன்றத் தேர்தலை தமிழின உணர்வாளர்களெல்லாம் இத்தாலிச் சோனியாவின் காங்கிரசுக்கு பாடம் புகட்டுகிறோம் என்று சொல்லிக் கொண்டு கன்னடத்து பார்பனத்தி ஜெயலலிதாவை அவரே எதிர்பார்த்திராத அளவிற்கு வெற்றி பெறச் செய்துவிட்டனர். தேர்தலில் வென்ற ஜெயலலிதாவிற்கு தனது ஜாதக பலன் படி தான் இந்தியாவின் பிரதம மந்திரியாக வருவார் என்று தனது சோதிடர்கள் கூறியவற்றை மனதில் கொண்டு தமிழர்களுக்கு தான் நல்லது செய்வேன் என்பது போல் நாடகமாடத் தொடங்கிவிட்டார். ராஜபகசவைப் போர்க்குற்றவாளி என்றார். அவர் சொல்வதால் எதுவும் நடக்கப்போவதில்லை என்று அவருக்குத் தெரியும். இலங்கை மீது பொருளாதாரத் தடை என்று கூவினார். அதுவும் நடக்காது என்று அவருக்குத் தெரியும். அவரது கனவு தான் சகல தமிழர் தொகுதிகளிலும்  2014இல் அல்லது அதற்கு முன்னர் நடக்க விருக்கும் அடுத்தஇந்தியப் பாராளமன்றத் தேர்தலில் தான் வெற்றி பெற வேண்டும் அதன் மூலம் ஒரு கூட்டணி அரசில் தான் இந்தியாவின் பிரதம மந்திரி ஆகவேண்டும் என்பதே. அதற்காக அவர் அடுத்த இந்தியப் பாராளமன்றத் தேர்தல் வரை தான் ஒரு தமிழின நலன்களுக்கு சாதகமாக நடப்பவர் போலக் காட்டிக் கொள்ளத் தொடங்கினார்.

தமிழின உணர்வாளர்களை தன் பக்கம் வைத்திருந்த ஜெயலலிதாவிற்கு வந்தது ஒரு தேர்வு. அவர் ஒரு தமிழின உணர்வாளரா என்று நாம் எல்லாம் அறிந்து கொள்ள உதவும் தேர்வு. அதுதான் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கான தூக்குத் தண்டனை. ஜெயலலிதா அந்தத் தூக்குத் தண்டனை வந்தவுடன் ஒன்றும் பொங்கி எழவில்லை. தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றார். இடைக்காலத் தடை உத்தரவு வரும் என்று அறிந்தவுடன் சட்ட சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். அதற்கு இந்திய மைய அரசின் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் நீயும் உனது தீர்மானமும் என்பது போல் அத் தீர்மானத்தால் எதுவும் நடக்கப்போவதில்லை என்றார். அதை கேட்டவுடன் ஜெயலலிதா தமிழர்களின் உணர்வுகளுக்கு இந்திய மைய அரசு கொடுக்கும் மதிப்பு அதுதானா என்று பொங்கி எழவில்லை. அவர் சோனியாவின் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புக்குக் காத்திருக்கிறார்

தமிழர்களை எப்படி ஏமாற்றுவது என்பதை பல ஆயிரம் ஆண்டுகளாகப் பார்ப்பனர்கள் நன்கு அறிவர்.

Tuesday 30 August 2011

இலண்டனில் மேற்கிந்தியர்களின் கண்கவர் திருவிழா

ஐரோப்பாவில் மிகப்பெரிய வீதித் திருவிழாவான Notting Hill Carnival இம்முறையில் சிறப்பாக நடைபெற்றது. இலண்டனில் அண்மையில் நடந்த கலவரங்களைத் தொடர்ந்து இந்த விழா இந்த முறை நடக்குமா என்ற ஐயம் நிலவியது. ஆனால் ஒரு சில அசம்பாவிதங்களைத் தவிர மற்றும் படி சிறப்பாக விழா நடந்தேறியது. பிரித்தானியா வாழ் மேற்கிந்தியர்களால் ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாத இறுதி ஞாயிறு, திங்கட் கிழமைகளில் இந்த விழா நடை பெறும். வண்ண வண்ண விநோத ஆடைகள் அணிந்து பலரும் ஊர்வலமாகச் செல்வர். இதில் பல்லின மக்களும் கலந்து கொள்வர்.



















Monday 29 August 2011

ராகுல் மொக்கை காந்தியைப் பற்றிய நகைச்சுவை

ராகுல் காந்தியின் இயற் பெயர் Raul Vinci இந்திய வாக்காளர்களை ஏமாற்றப் பெயரை மாற்றியவர். இவருக்கு Junaita என்று ஒரு காதலி இருந்தாள். அவள் ஒரு போதைப் பொருள் தாதாவின் மகள் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு நாள் Junaita ராகுல் மொக்கை காந்தியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். இருவரும் நீண்ட நேரமாகப் பேசிக் கொண்டே இருந்தனர். நேரம் போனது தெரியாமல் பேசிக்கொண்டே இருந்தனர். Junaitaவின் அப்பாவிர்கு கோபம் வந்துவிட்டது. மேல் மாடியில் இருந்து "அப்படி என்ன இந்தளவு நேரமாகப் பேசிக் கொண்டிருகிறீர்கள்" என்றார் கோபத்துடன். அதற்கு Junaita அவர் தன் இதயத்தில் உள்ளதையெல்லாம் கொட்டுகிறார் அப்பா என்றாள். அதற்கு அப்பா கோபத்துடன் "அவனிட்டைச் சொல்லு அதை நிப்பாட்டிப் போட்டு அவன் தலைக்குள் இருப்பதைக் கொட்டச் சொல்லி. அலுவல் 5 நிமிடத்தில் முடிந்துவிடும்." என்றார்.


இது http://rahulgandhijokes.wordpress.comஇல் இருந்து மொழி பெயர்க்கப்பட்டது.






அறிவாளி ராகுல் கந்தி:



மொக்கையன் பற்றிய முந்தைய பதிவைக் காண கீழே சொடுக்கவும்(click below)

Sunday 28 August 2011

அல் கெய்தாவின் 2-ம் தலைவர் கொலை எந்த அளவு பாதிப்பு?

ஒரு இயக்கத்தின் செயற்பாடுகள் ஒரு சில நிபுணர்களின் திறமையில் தங்கியிருப்பதுண்டு. ஆனால் அந்த நிபுணர்களின் பின்னால் பல நிபுணர்கள் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலையில் தயாராக இருப்பார்கள். அவர்கள் இயக்கத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகளை உறுதி செய்வார்கள்.

லிபியாவின் மிசரட்டா நகரின் பிறந்தவரான  அதியா அப் அல் ரஹ்மான் அல் கெய்தா இயக்கத்தின் பின் லாடன் கொலைக்குப் பின்னர் இரண்டாம் தலைவராகக் கருதப்படுபவர். இவரை அமெரிக்கா கொன்றுவிட்டதாக அறிவித்துள்ளது. எந்த நாள் எந்த விதமாகக் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்படவில்லை. இவரை அமெரிக்கா ஆளில்லா விமானம் குண்டு வீசிக் கொன்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பாக்கிஸ்தானின் அரச கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் உள்ள வஜிரிஸ்த்தான் என்னும் இடத்தில் இவர் 22-ம் திகதி திங்கட்கிழமை கொல்லப்பட்டார். ஆனல் இது தொடர்பான செய்தி சனிக்கிழமையே வெளிவிடப்பட்டது.

அதியா அப் அல் ரஹ்மான் பற்றிய தகவல்கள்:
  • இவரது இயற்பெயர் ஜமால் இப்ராஹிம் இஸ்தாவி
  • லிபிய மிசரட்டா நகரில் பிறந்தவர். அங்கு பொறியியலில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்
  • 1988இல் ஆப்கானித்தானில் சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் இணைந்தவர்.
  • சிறந்த பேச்சாளரும் சிந்தனையாளரும்.
  • சிறந்த அமைப்பாளரும் நிர்வாகியும்
  • அல் கெய்தாவின் உயர் மட்டத்திற்கும் செயல் வீரர்களுக்கும் இடையில் தொடர்பாளராகச் செயற்பட்டவர்.
  • பல நாடுகளின் அல் கெய்தாவின் செயற்பாடுகளில் ஈடுபட்ட அனுபவம் மிக்கவர்.
  • தங்கு தடையின்றி ஈரானுக்குள் நுழையவும் வெளியேறவும் இவரால் முடியும்.
  • அல் கெய்தாவின் பல செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்தவர்.
  • அமெரிக்கா பின் லாடனின் மாளிகையில் கைப்பற்றிய கணனிப்பதிவேடுகளின் படி அல் கெய்தா இவரில் நிறையத் தங்கி இருந்தது.
இப்படிப்பட்ட பன்முகத் திறமை கொண்ட ஒருவர் கொல்லப்பட்டது அல் கெய்தாவிற்கு ஒரு பெரிய இழப்பு என்று பல படைத்துறை நிபுணர்கள் நம்புகிறார்கள். இவரது இழப்பு  அல் கெய்தாவின் தலைவர் அய்மன் அல் ஜவகாரிக்கு பெரிய இழப்புத்தான்.  அல் கெய்தாவின் தற்போதைய பெரும் பலவீனம் தனது இரகசியங்களைக் கட்டிக் காப்பதே. அது ஊடுருவிகளுக்கு எதிராக கடும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். அல் கெய்தாவின் பல இரகசியங்கள் பின் லாடனின் மாளிகையில் கைப்பற்றப்பட்டபின்னர் அல் கெய்தா தனது கட்டமைப்பை மீள் அமைப்புச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதற்கான செயற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு சிறந்த நிர்வாகியின் இழப்பு கணிசமான பின்னடைவை ஏற்படுத்தும்.
பின் லாடனுடன் அதியா அப் அல் ரஹ்மான்

பின் லாடன் கொலைக்குப் பின்னர் அல் கெய்தா இயக்கம் அதற்கான பழியை இன்னும் தீர்த்துக் கொள்ளவில்லை. பொறுத்திருப்பது நல்லது என்று நினைக்கிறதா அல்லது பெரிய தாக்குதல் எதுவும் செய்ய முடியாது என்று இருக்கிறாதா என்பது தெரியவில்லை.

ஜூலை மாதம் பாக்கிஸ்த்தான் சென்ற அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலரும் பின் லாடன் கொலையின் போது அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ இன் தலைமைப்பதவியில் இருந்தவருமான லியோன் பாணெற் அல் கெய்தாவை ஒழித்துக் கட்டும் வாய்ப்பு இப்போது கைக்கு எட்டிவிட்டது என்றார்.

ஆனால் அதியா அப் அல் ரஹ்மானைப் போல் இன்னும் இருபது அல் கெய்தாத் தலைவர்கள் இருக்கிறார்கள்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...