Saturday 13 August 2011

நகைச்சுவை: இந்தியா இதில் சீனாவைப் பின்பற்ற வேண்டும்.

சீனாவிற்கென்று மிகப் பெரிய உற்பத்தித் துறை இருக்கிறது. அது தனது மனித வளததைக் கொண்டு இதைக் கட்டி எழுப்பியது. இதை இந்தியாவும் செய்கிறது.

சீனா நிறைய இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்கர்களை போல் சீனாவின் மலிவான பொருட்களை கடனுக்கு வாங்கித் தொலைக்காமல் இந்தியா தானும் சீனாவிற்கு நிறைய ஏற்றுமதி செய்ய வேண்டும்.

சீனா தனது படைபலத்தை அபரிமிதமாகக் கட்டி எழுப்புகிறது. இந்தியாவும் அப்படியே செய்கிறது.

சீனா மோசமான ஆட்சியாளர்களின் பிடியில் இருக்கிறது. இந்தியாவும் அப்படியே.

சீனாவில் பெண் குழந்தைகள் விரும்பப்படுவதில்லை. இந்தியாவிலும் அப்படியே.

சீனா சிங்களவர்களுக்கு தமிழர்களைக் கொன்று குவிக்க உதவியது. இந்தியாவும் அதையே செய்தது.

சீனாவில் தொடரூந்து வண்டிகள் தாமதமாக வந்தால் ஆத்திர மடையும் பயணிகளை சாந்தப் படுத்த அங்கு ஒரு மென் தூண் அமைத்து வைத்திருப்பார்கள்.  அதற்கு பயணிள் தங்கள் ஆத்திரம் தீரும்வரை குத்துவது காலால் உதைப்பது குங்கு பூ தாக்குதல் செய்லாம்.  இந்தியாவும் இதைப் பின்பற்ற வேண்டும் சிறு மாறுதலுடன். அந்த மென் தூணில் சோனியா காந்தி அம்மையாரினதும், மன் மோகன் சிங்கினதும் படங்களைப் பதிவு செய்ய வேண்டும். இந்தியர்களை இது நன்கு சாந்தப்படுத்தும்.



Friday 12 August 2011

நகைச்சுவைக் கதை: கணனி நிபுணரின் சின்னவீடு


ஒரு கணனி நிபுணரும் ஒரு சட்ட நிபுணர்களும் நெருங்கிய நண்பர்கள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. ஒரு நாள் இருவரும் கதைத்துக் கொண்டிருக்கும் போது சட்ட நிபுணர் சொன்னார் என்னப்பா இந்தச் சின்னவீடு சின்ன வீடு என்கிறாங்களே எப்படித்தான் வைச்சுச் சமாளிக்கிறாங்களோ தெரியாது. எனக்கெண்டால் சரியான பயம். மனைவிக்குத் தெரிஞ்சுதெண்டால் அந்தளவுந்தான், விவாகரத்து கோர்ட்டுக் கேசு என்று கடைசியில் கையில் ஒன்றுமே இல்லாமல் போயிடும் என்றார்.

கணனி நிபுணர் இது சாதாரணம் நான் எவ்வளவு காலமாக சின்ன வீடு வைச்சிருக்கிறன் என்றார்.

அது எப்படி என்று ஆரவத்துடன் கேட்டார் சட்ட நிபுணர்.

அதற்கு கணனி நிபுணர் அது சிம்பிள். மனைவி நினைப்பாள் நான் சின்னவீட்டுடன் இருக்கிறன் என்று சின்னவீடு நினைப்பாள் நான் மனைவியுடன் இருக்கிறன் என்று. நான் எனது பணிமனையில் ஃபேஸ்புக்கில் கேர்ள் ஃபிரண்ஸுடன் சற் அடிச்சுக்கொண்டு இருப்பேன்.

Thursday 11 August 2011

திசைமாறும் எகிப்தியப் புரட்சி

எகிப்திய மக்கள் 18நாட்கள் நடத்திய "புரட்சியின்" மூலம் பெப்ரவரி 11-ம் திகதி ஹஸ்னி முபாரக்கைப் பதவியில் இருந்து விரட்டினர். ஆனால் புரட்சி என்பது ஒரு ஆட்சியாளரை மாற்றுவதுடன் முற்றுப் பெறுவதல்ல என்பதற்கு எகிப்து ஒரு நல்ல உதாரணமாக அமைகிறது. ஆட்சியாளருடன் ஆட்சி முறைமையும் மாற்றப்படவேண்டும். பெப்ரவரி 11-ம் திகதிக்குப் பின்னர் எகிப்தில் பல ஆர்பாட்டங்கள் அவ்வப் போது ஆட்சியாளர்களுக்கு எதிராக நடந்தவண்ணமே இருந்தன. இது ஹஸ்னி முபராக்கிற்குப் பின்னர் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் படையினரின் உச்ச சபைக்கு{Supreme Council of the Armed Forces (SCAF)} பெரும் தலையிடியைக் கொடுத்தன. புரட்சியின் பயன் மக்களை சென்றடைய முன்னரே திசை திருப்பப்படுமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. 40%இற்கு அதிகமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் எகிப்திற்கு ஒரு நல்ல ஆட்சி அவசியம்.

புரட்சி முடிந்தது என உணர்த்தும் ஆட்சியாளர்கள்.
இப்போது புரட்சி வேண்டி மக்கள் கூடும் இடமான தஹ்ரீர் சதுக்கத்தை படைத்துறையினரின் கவச வாகனங்களால் நிர்ப்பப்பட்டுள்ளன. ஆயுதங்களும் குண்டாந்தடிகளும் தாங்கிய காவற்துறையினர் சதுக்கத்தை சுற்றிக் காவல் இருக்கின்றனர். தஹ்ரீர் சதுக்கத்தில் நிறைந்திருக்கும் படையினரும் காவற்துறையினரும் சொல்லும் செய்தி "புரட்சி முடிந்துவிட்டது". எகிப்தியப் புரட்சியாளர்களைப் பற்றி தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு அவர்களது ஆர்ப்பாட்டங்களில் மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்த எகிப்திய ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் Supreme Council of the Armed Forces (SCAF) பலவகையிலும் முயற்ச்சி செய்து மக்களையும் புரட்ச்சியாளர்களையும் பிரித்து வைத்தது. மேலும் புரட்சியாளர்கள் வெளிநாட்டுக் கைக்கூலிகள் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. விளைவு ஜூலை 25-ம் திகதி புரட்சியாளர்களி ஊர்வலத்தில் ஊர் மக்கள் தாக்குதல் நடாத்தினர். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். ஒரு இளைஞர் கொல்லப்பட்டார். அடிக்கடி ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்து மக்களுக்கு அதில் ஒரு சலிப்பும் ஏற்பட்டு விட்டது.

எகிப்திற்கு ஒரு சிறந்த ஆட்சி முறைமையும் ஆட்சியாளர்களும் தேவை என்று புரட்சியைத் தொடக்கியவர்களுக்கு தஹ்ரீர் சதுக்கத்தில் இப்போது கூட முடியாது என்பது ஒரு பின்னடைவே. புரட்சீகர இளைஞர் ஒன்றியத்தின் செயலாளர் அப்துல்லா ஹெல்மி மக்களிடமிருந்து புரட்சி வேறுபட்டு நிற்கிறது. என்கிறார். மக்களுக்கு புரட்சியை விளங்கப்படுத்துவதற்காக நாம் ஆர்ப்பாட்டங்களை நிறுத்திவிட்டோம். "இப்போது மக்களுக்கு புரட்சியைப் பற்றி விளக்கம் கொடுக்கிறோம். குடிசார் அரசியல் கல்வியையும் விழிப்புணர்வுகளையும் மக்களிடம் பரப்புகிறோம்." என்கிறார். எகிப்த்தில் பாராளமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. அதற்கு முன்னர் மக்களுக்கு அரசியல் போதிக்க வேண்டியது முக்கியத்துவம் பெறுகிறது.

படையினரின் நீதிமன்றம்
ஹஸ்னி முபாரக் ஆட்சியைப் போலவே தற்போது ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் படையினரும் அரசுக்கு எதிராகச் செயற்படுபவர்களை படைத்துறை நீதிமன்றில் விசாரித்து வந்தனர். புரட்சியாளர்களின் தொடர்ச்சியான எதிர்ப்பைத் தொடர்ந்து இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட முதலாம் திகதி கைது செய்யப்பட்ட நூற்றுக் கணக்கானோர் இப்போது குடிசார் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகின்றனர். இதை புரட்சியாளர்கள் ஒரு வெற்றியாகவே கருதுகின்றனர்.

ஏப்ரல்-6 இளைஞர் இயக்கம்
வேலை நிறுத்த மூலம் மக்களைக் கிளர்ந்து எழச் செய்து எகிப்தில் பிரபலமான ஏப்ரல்-6 இளைஞர் இயக்கம் மக்களாட்சி முறைமையினதும் சமூக நீதியினதும் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதை தலையாய பணியாகக் கொண்டு செயற்படுகிறது. மக்களாட்சி அனுபவம் இல்லாத எகிப்திய மக்களுக்கு மக்களாட்சி மனித உரிமை போன்றவை தெரியாத ஒன்றே.

தேர்தலை பாவிக்க முயலும் புரட்சியாளர்கள்
புரட்சியில் ஈடுபட்ட இருபதிற்கு மேற்பட்ட இளைஞர் அமைப்புக்களில் பெரும்பாலானவை இப்போது தேர்தலில் பங்கு பற்ற முடிவு செய்திருக்கின்றன. பாராளமன்றத் தேர்தலுக்கான திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. பழம்பெரும் மத சமூக அரசியல் அமைப்பான இசுலாமிய சகோதரத்துவ அமைப்பை புரட்சி அமைப்புக்கள் வெற்றியடைவது சிரமம்.

Wednesday 10 August 2011

பிரித்தானியக் கலவரம்: கடாஃபி நினைத்தது நடக்கிறது.

கொல்லப்பட்ட மார்க் டகன்
04-08-2011 வியாழக்கிழமை இரவு வட இலண்டன் புறநகர்ப்பகுதியில் ஒன்றான ரொட்னம் என்னும் இடத்தில் தான் கைது செய்யச் சென்ற மார்க் டகன் என்பவர் தன் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதாக நினைத்து அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார் பிரித்தானியக் காவற்துறையின் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர். இரு ரவைகளால் தாக்கப்பட்ட மார்க் டகன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இவரது நண்பர்களும் உறவினர்களும். காவல் நிலையத்திற்கு நீதி கேட்டுச் சென்றனர். அவர்களை சந்திக்க காவல்துறையினர் வராத நிலையில் பெரும் கலவரம் வெடித்தது. இறந்தவர் ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்.

கொல்லப்பட்டவரின் காதலி

அரபு வசந்தம் மல்லைகைப் புரட்சிக்கு உதவி செய்த டுவிட்டரும் ஃபேஸ்புக்கும் பிரித்தானியக் கலவரத்திற்கு உதவி செய்தன. அவை மூலம் ஆட்கள் திரட்டப்பட்டு கலவரம் பெரிதாக்கப்பட்டது. பெரிய கடைத் தொகுதிகள் தீக்கிரையாக்கப்பட்டன. வீடுகள் எரியூட்டப்பட்டன. கலவரங்கள் யாவும் இரவிலேயே நடந்தன. பிரித்தானியாவைப் பொறுத்தவரை இரண்டாம் உலகப் போரின் பின்னர் நடந்த பெரும் கலவரம் இது. கலவரம் வெகு விரைவில் இலண்டனையும் தாண்டி மன்செஸ்டர், பர்மின்ஹாம், லிவர்ப்பூல் போன்ற இடங்களுக்கும் பரவின.  கலவரத்தை தமக்குத் தேவையானவற்றை பெரும் கடைகளில் இருந்து எடுத்துக் கொள்ளப் பலர் பாவித்தனர். ஐ-போன்கள், ஐ-பாட்கள், புதிய காணொளிக்கருவிகள் உள்ள பல கடைகள் சூறையாடப்பட்டன. நவநாகரீக ஆடைகள் பாதணிகள் கொண்டகடைகளும் தப்பவில்லை. ஒரு பாதணிக் கடைக்குள் புகுந்த ஒரு கலகக்காரப் பெண்மணி தனது காலுக்கு அளவான பாதணிகளைத் தேடி எடுத்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.

 டுவிட்டர் மூலம் பொய் வதந்திகள் பரப்பப்பட்டன.
கலவரக்காரர்கள் தம்மிடம் அகப்படும் வெள்ளை இனத்தவரிடம் ஆடைகள் உட்படச் சகலவற்றையும் சூறையாடிவிட்டு நிர்வாணமாகத் துரத்துவதாக டுவிட்டரில் செய்திகள் பரப்பப்பட்டன். இதை உறுதி செய்ய முடியவில்லை என்று செய்திகள் தெரிவித்தன. இவை ஒரு பெரும் கலவரத்தை தூண்டும் நடவடிக்கையாக இருக்கலாம்.


பேஸ்போல் மட்டைகளுக்கு பெரிய தட்டுப்பாடு.
கலவரகலவர்க காரர்களுக்கு பிரியமான ஆயுதமான பேஸ்போல் மட்டைகளுக்கு பிரித்தானியாவில் பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கலவரம் தொடங்கியதிலிருந்து பேஸ்போல் மட்டைகளின் விற்பனை பெருகியது. இப்போது கடைகளில் இருப்பு இல்லை. இணையத்திலும் பெறுவது சிரமாமாக இருக்கிறது. அமேசனில் பெறுவதாயில் ஆறு வாரங்கள் காத்திருக்க வேண்டுமாம்.


டுவிட்டரே காட்டியது டுவிட்டரே கூட்டியது


ஹக்னி என்னும் நகரில் மக்களை டுவிட்டர் மூலம் ஒன்று கூட்டி கலவரக்காரர்களால் பாதிக்கப் பட்ட பகுதிகளை துப்பரவாக்கினர். மக்கள் பலர் துடைப்பக் கட்டைகளுடன் வந்து நகரைச் சுத்தீகரித்தனர்.

அது போன வாரம் இது இந்த வாரம்.
ஆர்ப்பாட்டங்கள் கலவரங்கள் நடக்கும் போது பிரித்தானியக் காவற்துறையினர் அதிக வன்முறையாக நடந்து கொள்வதாக ஊடகங்கள் குற்றம் சாட்டுவது வழமை. இம்முறை காவற்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச் சாட்டை ஊடகங்கள் முன் வைத்தன.
 வீடுகள் பணிமனைகள் குடும்பங்கள் பாதிப்புக் உள்ளாகி உள்ளன. இது போன்ற துப்பாக்கிச் சூடுகள் இதற்கு முன்பும் நடந்ததுண்டு ஆனால் இப்படிப் பெரிய கலவரம் வெடித்ததில்லை. இம்முறை மட்டும் ஏன் இப்படி என்பது ஒரு கேள்வி. இக்கலவரத்தின் பின்னர் காவற்துறையில் செய்ய இருந்த ஆள் குறைப்பு நடவடிக்கை செய்யப்படாமல் போகலாம்.

எமக்கு நாமே பாதுகாப்பு.
கலவரம் ஏற்படத் தொடங்கியபின்னர் துருக்கி இனத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் வியாபார நிலையங்களுக்கு தாமே பாது காப்புக்காக வியாபார நிலையங்கள் முன்னர் அணிவகுத்து நின்றனர். இதைத் தொடர்ந்து சவுத்ஹோல் பகுதியில் வாழும் இந்தியர்கள் தங்கள் ஆலயங்களுக்குப் பாதுகாப்பு வழங்கினர். தமிழர்களின் ஆலயங்களில் வழமை போல் யாவும் நடைபெற்றன. ஆனால் ஆட்களின் வருக்கை குறைந்திருந்தது. எவரும் எந்தப் பாதுக்காப்பு ஏற்பாடுகளும் செய்யவில்லை. ஆலயங்கள் வழமையான நேரத்திலும் முன்னதாக மூடப்பட்டன.


ஜூலை மாதம் முதலாம் திகதி லிபியத் தலைவர் கேர்ணல் கடாஃபி சொன்னது நினைவிற்கு வருகிறது: லிபிய மக்கள் இந்தப் போரை உங்கள் வீடுகளுக்கும் பணிமனைகளுக்கும் குடும்பங்களுக்கும் எடுத்து வருவர்.
 
போதப் பொருள் வரத்தகர்கள்
பிரித்தானியக் காவற்துறையினர் போதைப் பொருள் வர்த்தகத்தை பெருமளவில் ஒழித்துக் கட்டிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த போதைப் பொருள் வர்த்தகர்கள் காவற்துறையின்ர் மீது பழிவாங்குகின்றனர் என்றும் இன்னொரு செய்தி சொல்கின்றது.

Tuesday 9 August 2011

ஆட்டம் காணும் உலகப் பொருளாதாரம்.

அமெரிக்க குடியரசுக் கட்சியினரின் தவறான நடவடிக்கை
உலகெங்கும் உள்ள பங்குச் சந்தைகள் கடந்த சில வாரங்களாக பெரும் வீழ்ச்சியைக் கண்டன. சில பணக்கார நாட்டு அரசுகள் தடுமாறி நிற்கின்றன. பொருளாதார வல்லுனர்கள் தலை முடியைப் பிய்த்துக் கொள்கின்றனர்.

என்னடா இந்த வாஷிங்டனுக்கு வந்த சோதனை

அமெரிக்க நாணயத்தின் மதிப்பு இப்படியாகி விட்டதோ?

அமெரிக்க அரசின் கடன் உச்ச வரம்பை உயர்த்தாவிடில் உலக நிதிச் சந்தை பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. உச்ச வரம்பு கடைசி நேரத்தில் உயர்த்தப் பட்டது. ஆனால் உலக நிதிச் சந்தையில் நெருக்கடிகள் தொடருகின்றன. அமெரிக்க அரசின் கடன் உச்ச வரம்பை உயர்த்தாவிடில் அமெரிக்காவின் கடன்படு திறன் தாழ்த்தப்படும் எனச் சொல்லப்பட்டது. ஆனால் உயர்த்திய பின்னும் அமெரிக்காவின் கடன்படு திறன் தாழ்த்தப்பட்டது. 1998இல் ஜப்பானின் கடன்படு திறன் குறைக்கப்பட்ட பின்னர் அங்கு பொருள்களின் விலைகள் சரியத் தொடங்கின. பணச்சுருக்கம் ஏற்பட்டது. பொருளாதார வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதே நிலை அமெரிக்கவிற்கும் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு தடிமன் வந்தால் உலகெங்கும் நிமோனியா வரும். இப்போது அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு நிமோனியா. இதனால் உலகப் பொருளாதாரத்திற்கு என்ன நடக்கும் என்ற பயம் ஆட்சியாளர்களை ஆட்டிப் படைக்கிறது. உலக பொருளாதார உற்பத்தியில் காற்பங்கு அமெரிக்காவினுடையது. சென்ற ஆண்டு 2% ஆல் குறைந்தத அமெரிக்க மொத்தத் தேசிய உற்பத்தி இனி 10% வீதத்தால் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சகல துறைகளும் நெருக்கடியில் தவிக்கும் போது முதலாளித்துவ அரசுகள் வங்கிகளுக்கு மட்டும் நிதி உதவி செய்கின்றன என்பதை விளக்கும் கருத்துப் படம்.

கடன் கொடுத்துக் கலங்கும் சீனா.
தனது மக்களைச் சுரண்டி அவர்களுக்கு மிகக் குறைவான கூலியைக் கொடுத்து பல உற்பத்திப் பொருட்களை சீனா மலிவான விலையில் உற்பத்தி செய்கிறது. அமெரிக்காவின் தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் சீனத் தொழிலாளர்களில் கூலி இருபதில் ஒரு பங்கு மாத்திரமே. தனது மலிவான பொருட்களை உலகெங்கும் ஏற்றுமதி செய்த சீனாவிற்கு வெளிநாட்டுச் செலவாணி உபரியாக 3.2ரில்லியன் டொலர்கள் கிடைத்தன. அவற்றில் மூன்றில் இரு பங்கை சீனா உலகப் பெரும் பணக்கார நாடான அமெரிக்காவில் முதலீடு செய்தது. அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்க அரசின் கடன் முறிகளில் முதலிடப்பட்டன. சுருங்கக் கூறின் வரவிற்கு மிஞ்சி செலவு செய்யும் அமெரிக்காவிற்கு சீனா கடன் கொடுத்தது. அமெரிக்கா தனது நாட்டில் இருந்து பொருட்களை போதிய அளவில் இறக்குமதி செய்யவுமில்லை சீனா தனது நாணயத்தின் பெறுமதியைக் கூட்டவுமில்லை. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா சீனாவைப் பழி வாங்க சீனாவின் அமெரிக்க முதலீடுகளின் பெறுமதியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கிறதா என்பது பெரும் கேள்வி. பராக் ஒபாமா அரசியலமைப்பின் 14வது திருத்தத்தைப் பாவிக்காமல் எதிர்க்கட்சியினருக்கு விட்டுக் கொடுத்தது அமெரிக்காவின் நடவடிக்கையில் சந்தேகத்தை சீனாவிற்கு ஏற்படுத்துகிறது. தனது முதலீடு கரைவதையிட்டு சீனா கலங்கி நிற்கிறது. சீன அரச ஊடகம் அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் வரவுக்கு மிஞ்சி செலவழித்ததாக திட்டித் தீர்த்தது.


அமெரிக்கக் குடியரசுக் கட்சியினர் செலவீனக் குறைப்பால் ஏழைகளுக்கு ஏற்படும் ஆபத்தை விட வரி அதிகரிப்பால் பணக்காரர்களுக்கு ஏற்படவிருப்பதை விளக்கும் கருத்துப் படம்.

பலமுனைச் சிக்கல்.

உலகப் பொருளாதாரத்தில் உறபத்தித் துறை, நாடுகளிடையான வர்த்தகம், வங்கித்துறை, நாணயமாற்று, பங்கு வர்த்தகம் போன்றவை முக்கியமானவை. உற்பத்தித் துறை பாதிக்கப்படுவதுண்டு. நாடுகளிடையான வர்த்தகம் தடைப்படுவதுண்டு. வங்கிகள் திவாலாவதுமுண்டு. பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சிகளும் நிகழ்ந்ததுண்டு. நிதிச் சந்தை ஆட்டம் காண்பதுமுண்டு. இவை தனித்தனி அல்லது இரண்டு ஒன்றாக நடப்பதுண்டு. ஆனால் இப்போது பல முனைகளில் உலகப் பொருளாதாரம் ஆட்டம் காணுகிறது. வங்கிகள் நட்டம் காண்கின்றன. அரச கடன் முறிகளின் விலை வீழ்ச்சியைக் காண்கிறது. பங்குச் சந்தைகள் சரிகின்றன. உற்பத்தித் துறை பாதிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் பிழைக்கும் போது அரசுகள் களத்தில் இறங்கிச் செயற்படும். ஆனால் இப்போது பல அரசுகள் நிதிப் பற்றாக் குறையை எதிர் கொள்கின்றன. ஏற்கனவே பல நாடுகள் வட்டிவீதத்தை குறைத்து விட்டன இனிக் குறைக்க இடமில்லை. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், அயர்லாந்து, கிரேக்கம் உடபடப் பல நாடுகளின் அரசுகள் வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் தவித்து நிற்கின்றன. பொருளாதாரம் நலிவடையும் போது அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளான வரிக் குறைப்பு அரச செலவீன அதிகரிப்பு வட்டி வீதக் குறைப்பு போன்றவற்றைச் செய்ய முடியாத நிலை உலகின் பல பாகங்களிலும் ஏற்பட்டுள்ளது. அப்படிச் செய்ய அரசு கடன்பட வேண்டி வரும். அரசுகள் பல கடன் சுமை கூடியதால் தவிக்கின்றன. வருங்காலப் பொருளாதார நிலையில் நம்பிக்கை இல்லாத நிலையில் உற்பத்தியாளர்கள் வேலைக்கு ஆட்சேர்ப்பது குறையும். மக்கள் தங்கள் செலவைக் கட்டுப்படுத்துவார்கள். இது ஒரு எதிர்மறை விளைவை பொருளாதாரத்தில் ஏற்படுத்தும். இதனால் நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கையில் இறங்கலாம்.  உலகப் பொருளாதாரம் ஆட்டம் காணும் போது உலகெங்கும் வேலையில்லாப் பிரச்சனை தலை தூக்கும். வேலையில்லாப் பிரச்சனை சமூக குழப்பங்களுக்கு வழி வகுக்கும். சுதந்திரப் பொருளாதார முறைமைமீதும் இப்போததூள்ள ஆட்சி முறைமை மீதும் மக்களுக்கு நம்பிக்கை இழந்து மக்கள் கிளர்ந்து எழலாம்.

Monday 8 August 2011

விசித்திரமான விளம்பரங்களும் விவரம் கெட்ட விளம்பரங்களும்.

என்னதான் இருந்தாலும் தமிழ் சினிமா போல் ஆம்லெட், பம்பரம் மாதிரி வருமா?
போகும் பானம் போக உறு பானம் வரும்வரை வாடி இருக்குமா?

உடற்பயிற்ச்சி செய்யாவிடில் உடம்பு அசிங்கமாகிவிடும்தான் அதற்காக இப்படியா?

பல்லையும் காதையும் துப்பரவாக்குமோ?

 இந்த மன்மதக் குஞ்சின் குறிதப்பாது

வாய் நாற்றம் எடுத்தால் இப்படித்தான் நடக்கும் ஆம்புலன்சில்..

சினிமா வேறு வாழ்க்கை வேறு.

கூகிளில் எப்ப தேடுவது என்ற விவஸ்த்தையில்லையா?

விளையாட்டுக்காகவாயினும் இப்படியா விற்பது?

இதைப் பார்த்து விஸ்க்கி குடிக்கலாமா?

மர்லின் மன்றோ இதைப் பார்க்க முடியாது.

அடுத்த பிளட்டில் நடப்பதை படமெடுக்கவா கமெரா?

பாவம் பானம்.


அமெரிக்கா சொற்படி நடந்தால் இப்படியும் நடக்கலாம்...

மாடு தின்றால் மாடு போலாகுமா?

பசு தின்றால்????

Sunday 7 August 2011

பிக்-அப்(எடுத்துவா) கவிதைகள்: தொலைத்துவிட்டேன் என் கற்பை

எரிபொருள் நிரப்பு நிலையத்தில்
உன் கண்களைக் கட்டிக் கொள்
எல்லாமே எரிந்துவிடும்

மேலதிகமாக உன்னிடம்
இதயம் இருக்கிறதா
என்னுடையது திருடப்பட்டுவிட்டது.

உன் அழகைப்பற்றி எழுதிய
மின்னஞ்சலை அனுப்ப முடியவில்ல
அளவை மிஞ்சிவிட்டது

தொலைத்துவிட்டேன் என் கற்பை
தருவாயா எனக்கு
உன் கற்பை

என் படுக்கையறையில்
உன் ஆடையில்
செயற்படட்டும் ஈர்ப்புவிசை

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...