Saturday 23 July 2011

அமெரிக்கக் கடற்படைக்கு எதிராக சீனவின் அதிரடி ஆயுதம்.

அமெரிக்காவின் பொருளாதார பலமும் படைத்துறைப் பலமும் பின்னிப் பிணைந்தவை. அமெரிக்க மக்கள் தொகை உலக மக்கள் தொகையின் 5%. அதன் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தின் 23%. படைத்துறைச் செலவு உலக மொத்த படைத்துறைச் செலவீனத்தின் 40%. மொத்த ஆசிய நாடுகளின் படைத்துறைச் செலவீனத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவின் செலவீனம் 20 மடங்கு. அமெரிக்க ஆதிக்கத்தை எதிர் கொள்ள சீனா தனது படைத்துறைக் கட்டமைப்பை நன்கு திட்டமிட்டு வளர்த்து வருகின்ற போதும் அதன் கடற்படைப்பலம் இன்னும் இந்தியாவின் கடற்படையை மிஞ்சவில்லை. சீனாவிற்கென்று ஒரு விமானம்தாங்கிக் கப்பல் இன்னும் உருவாக்கப்படவில்லை. சீனக் கடற்படையினர் எந்தவித சண்டையிலும் இதுவரை ஈடுபட்ட அனுபவம் இல்லாதவர்கள். ஆசியப் பிராந்தியத்தில் அமெரிகாவின் ஆதிக்கத்திற்கு உறுதுணையாக இருப்பது அதன் விமானம் தாங்கிக் கப்பலணிகளே.

சீனாவின் வளர்ச்சிக்கு விட்டுக் கொடுக்கத் தயாரில்லாத அமெரிக்கா.
ஒரு நாடு பொருளாதார ரீதியில் வளர்ச்சி காணும் போது அதன் படை பலமும் வளர்ந்தே ஆக வேண்டும். உலக சரித்திரத்தில் புதிதாக ஆதிக்கம் செலுத்த வந்த ஒரு நாடு ஏற்கனவே ஆதிக்கத்தில் உள்ள ஒரு நாட்டுடன் போரில் ஈடுபடாமல் இருந்ததாக இல்லை. சீன வளர்ச்சிக்கு ஏற்ப அமெரிக்கா இன்னும் ஆசியப் பிராந்தியத்தில் தந்திரோபாய விட்டுக் கொடுப்புக்களை மேற்கொள்ளவில்லை.  தாய்வானில் இன்னும் சீன விருப்பங்கள் நிறைவேறவில்லை.

அமெரிக்கப் படைப்பலத்தை ஆய்வு செய்யும் சீனா
அமெரிக்கப் படை பலத்தினை சீனர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து அதன் பலவீனங்களைக் கண்டு அவற்றின் மீது தாக்குதல் நடத்தும் உத்திகளை உருவாக்கிவருகின்றனர். அமெரிக்காவின் படைபலம் செய்மதிகளிலும் கணனிகளிலும் தங்கியிருப்பதை உணர்ந்த சீனா செய்மதிகளை நிலத்தில் இருந்து வீசித் தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணைகளை உருவாக்கியது. சீனாவில் இருந்து அமெரிக்கப் படைத்துறையின் கணனிகளை ஊடுருவும் செயற்பாடுகள் அடிக்கடி நடப்பதாக நம்பப்படுகிறது. இது பற்றி மேலும் வாசிக்க இங்கு சொடுக்கவும்: வல்லரசு நாடுகளின் இணையவெளிப் போர்

சீனாவின் ஆயுதமாக மின்காந்த அதிர்வு.
1962-ம் ஆண்டு அமெரிக்கா பசுபிக்கில் மேற்கொண்ட அணு ஆயுத வெடிப்புச் சோதனையின் போது ஹவாய்த் தீவில் இருந்த இலத்திரனியல் கருவிகள் செயலிழந்து போயின. அணுக்குண்டு வெடிப்பின் போது வெளிவந்த காமாக் கதிர்களின் அதிர்வுகள் (gamma-ray pulse)தான் இதற்கான காரணமென்று அறியப்பட்டது. இதை இப்போது சீனா ஆயுதமாக உருவாக்குகிறது. அதுவும் அமெரிக்கக் கடற்படையை எதிர்கொள்ள. இதை அடிப்படையாக வைத்து சீனா ஒரு மின்காந்த அதிர்வு{electromagnetic pulse (EMP)} உருவாக்கும் முறையை உருவாக்கியுள்ளது. இது சீனாவின் மிக இரகசியத் திட்டமாகும். இதை 2005இலேயே சீனா உருவாக்கிவிட்டது என்றும் சொல்லப்படுகிறது. சீனா வெடிக்கவைக்கும் குண்டு மிகக் குறைந்த உயர்த்தில் மிகக்குறைந்த வலுவுடன் இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மின்காந்த அதிர்வு தாய்வானில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தி சீனாவைப் பாதிக்காமல் இருக்க வேண்டும். இந்த மின்காந்த உருவாக்கிகள் Microwave weapons என அழைக்கப்படுகின்றன. இவைஎதிரியின் கணனிகளையும் கதுவி(radar)களையும் மற்றும் சகல இலத்திரன் கருவிகளையும் செயலிழக்கச் செய்யும்.மேலும் எதிரியின் விமானங்களின் தொடர்பாடல்களையும் செயலிழக்கச் செய்யும். சீனாவின் Microwave weapons உருவாக்கலில் எந்த அளவிற்கு முன்னேறியுள்ளது என்று அறிந்து கொள்ள முடியாத நிலையில் அமெரிக்காவின் பெண்டகன் இருக்கிறது

Friday 22 July 2011

நகைச்சுவை: விநோதமான அறிவுரைகள்

பிட் அடிக்க ஆலோசனை
Add caption
 உன்னை நீ நேசிக்காவிடில் உன்னை யாரும் நேசிக்க மாட்டார்கள்.



"I hate advice unless I'm giving it" நான் கூறும் அறிவுரைகளைத் தவிர மற்றவை எனக்குப் பிடிக்காது.

 சிலர் போகுமிடமெல்லாம் ஆனந்தம். சிலர் விட்டுப்போகும் போதெல்லாம் ஆனந்தம்.

Don't ask the barber whether you need a haircut. உன் முடிவெட்டப்பட வேண்டுமா என்று சிகைஅலங்கரிப்பவனைக் கேட்காதே!



"Everyday is a gift, thats why they call it the present."



I love being married. It's so great to find that one special person you want to annoy for the rest of your life. - Rita Rudner

The best way to succeed in life is to act on the advice we give to others.

                                               தற்கொலைக்கான தாயாரிப்பு...

We hate to have some people give us advice because we know how badly they need it themselves.


The advice of their elders to young men is very apt to be as unreal as a list of the hundred best books.

Thursday 21 July 2011

எடுத்துவா (பிக்-அப்) கவிதைகள்


உன் தலைமுடி தடவ 
ஆசைப்படுகிறது
என் தலையணை

 அழகாகத்தான் இருக்கின்றன
உன் ஆடைகள்
என் கட்டிலின் அருகில்
கழற்றிப் போட்டால்
இன்னும் அழகாக இருக்கும்.

வானத்தில் இருந்து விழலாம்;
மரத்தில் இருந்து விழலாம்;
மாடியில் இருந்தும் விழலாம்;
ஆனால் என் மடியில் விழுவதே
வீழ்ச்சியோ வீழ்ச்சி

உன்னைப் பார்த்தால்
உலக அழகியைப் பார்த்தது  போல்
ஏன் உணருகிறேன்

உன்னுடல்
கோவில் வீதி
என் உதடு தேராகட்டும்

உன் கண்ணோடு தேவை
ஒரு நகர வரைப்படம்
பார்க்கும் போதெல்லாம்
தொலைக்கிறேன் என்னை

Wednesday 20 July 2011

நகைச்சுவைக் கதை: சோனியாவின் கடிகாரம்

குண்டு வெடிப்புச் சம்பவமொன்றில் சிதம்பரம் கொல்லப்பட்டார். அவர் யம லோகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார். யம லோகத்தில் சித்திர புத்திரனார் அன்று சற்று ஓய்வாகக் காணப்பட்டார். அதனால் அவர் சிதம்பரத்துடன் ஆறுதலாகப் பலவற்றையும் பற்றி உரையாடினார். சிதம்பரம் தான் சித்திரபுத்திரனாரின் பணிமனை முழுவதையும் சுற்றிப்பார்க்க விரும்புவதாகக் கூறினார். சித்திரபுத்திரனாரும் கருணை கூர்ந்து அவரது விருப்பத்திற்கு சம்மதித்தார். சித்திரபுத்திரனாரின் பணிமனைக்குச் சென்ற சிதம்பரத்திற்கு ஒரே ஆச்சரியம் அங்கு கோடானு கோடிக் கணக்கான கடிகாரங்கள் இருந்தன. அவற்றை உற்று நோக்கிய சிதம்பரத்திற்கு மேலும் ஆச்சரியிம். ஒவ்வொரு கடிகாரங்களும் வேறு வேறு கதியில் ஓடிக் கொண்டிருந்தன. பல மிக விரைவாகவும் சில விரைவாகவு ஓடிக்கொண்டிருந்தன. இது என்ன கடிகாரங்கள் இவை ஏன் வேறுபட்ட வேகங்களில் ஓடுகின்றன என்றார் சிதம்பரம். அவை ஒவ்வொன்றும் பூமியில் வாழும் ஒவ்வொரு மானிடர்களினதும் ஆயுளைக் குறிக்கின்றன. அது சரி ஏன் பல வேகமாக ஓடுகின்றன என்று வினவினார் சிதம்பரம். ஒவ்வொரு மானிடனும் பொய் சொல்லும் போது அவை வேகமாக ஓடுகின்றன என்றார் சித்திரபுத்திரனார். அப்போது சிதம்பரத்திற்கு தனது எசமானி அம்மா சோனியாவின் கடிகாரத்தைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. தனது ஆசையை மெல்ல சித்திர புத்திரனாரிடம் தெரிவித்தார் சிதம்பரம். "ஓ அதுவா? அதை நான் எனது ஆசனத்தின் மேல் பூட்டியுள்ளேன். அது மிக வேகமாக கடந்த சில ஆண்டுகளாக ஓடுவதால் அதை கூரை மின் விசிறியாக(Ceiling Fan) நான் பாவிக்கிறேன்" என்றார் சித்திர புத்திரனார்.(யாவும் கற்பனையே)

Tuesday 19 July 2011

இந்தியாவிற்கு இலங்கை இனக் கொலையில் பங்குண்டு என்கின்றனர் இரு விற்பன்னர்கள்.

2008 செப்டம்பரில் இருந்து 2009 மே மாதம் வரை இலங்கையின் தமிழர்களுக்கு எதிரான இறுதிப் போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களில் இந்தியாவிற்கும் பங்கு உண்டு என்று இருவர் அடித்துச் சொல்லியுள்ளனர் இலங்கைப் பிரச்சனை பற்றி நன்கறிந்த இரு வல்லுனர்கள்.

சாம் ராயப்பா என்னும் பத்திரிகையாளர் ஸ்ரேட்ஸ்மன் பத்திரிகையிலும் எம் ஜீ தேவசகாயம் என்னும் முன்னாள் இந்திய நிர்வாக சேவை(I.A.S) அதிகாரி த வீக்கெண்ட் லீடரிலும் இந்தக் குற்றச்சாட்டை இந்தியாவிற்கு எதிராக முன்வைக்கின்றனர்.

சாம் ராயப்பா இந்தியா இலங்கைக் கொலைக் களத்தில் (India In The "Killing Fields Of Sri Lanka") என்ற தலைப்பிலும் எம் ஜீ தேவசகாயம் இலங்கைக் கொலைக் களத்தில் மறைந்திருக்கும் கை வெளிப்பட்டுள்ளது: அது இந்தியா (The ‘hidden hand’ in the ‘Killing Fields of Sri Lanka’ exposed: It’s India) என்னும் தலைப்பிலும் இந்தியாவின் போர்க்குற்றம் பற்றி எழுதியுள்ளார்கள். இவை நாம் அனைவரும் நன்கறிந்த உண்மைகள்தான் ஆனாலும் இருவர் பகிரங்கமாக இந்தக் குற்றச் சாட்டை சோனியாவின் காங்கிரசின் ஆட்சிக்கு எதிராகச் சுமத்தியுள்ளனர். இவர்கள் இருவரையும் இப்படி எழுதவைத்தது சனல்-4இன் காணொளிப்பதிவுகளே. வெவ்வேறு தலைப்பில் இருவரும் ஒன்றையே எழுதியுள்ளனர். சில வசனங்கள் பிரதி பண்ணியவை போல் இருக்கின்றன.

சனல்-4இன் காணொளி போலியானது என்று இலங்கை அரசு பிரச்சாரம் செய்கின்றது. ஆனால் எம் ஜீ தேவசகாயம் "The authenticity of the footage has been confirmed by a forensic pathologist, forensic video analyst, firearms evidence expert and a forensic video expert of international repute and the images are horrific." என்கிறார். அவர் மேலும் சனல்-4 காணொளிப் பதிவைப் பார்த்து  உலகமே ஆத்திரப்படுகையில் இந்தியா மௌனமாக இருக்கிறது என்கிறார்.
இந்தியாவிலிருந்து இலங்கை செல்லும் ஆயுதங்களைத் தடுக்கும் தமிழின உணர்வாளர்கள்.


ராஜபக்சவிற்கு "ஊட்டுவதற்காக" இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா துரோகம் இழைத்தது என்கிறார் சாம் ராயப்பா. மேலும் ராயப்பா இந்தியா படை, ஆயுதங்கள், ஊக்கம் போன்றவற்றை சிங்களவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்க்கையில் திமுக பேசாமல் சொத்துக் குவித்துக் கொண்டிருந்தது என்கிறார்.

நால்வர் குழு
எம் ஜீ தேவசகாயமும் சாம் ராயப்பாவும் 2007-ம் ஆண்டு இலங்கைப் பிரச்சனை தொடர்பாக அமைக்கப் பட்ட நால்வர் குழுவில் உறுப்பினராக இருந்தனர். அதைப்பற்றி சாம் எழுதியது: After much persuasion by Colombo, a small four-member group comprising MG Devasahayam, a former IAS officer and close associate of Jayaprakash Narayan and Mother Teresa as convenor, SP Ambrose, retired IAS officer who was home secretary of Tamil Nadu and Secretary to Government of India, a senior journalist working for a national daily, and a military veteran well versed in Sri Lankan affairs was formed and held its preliminary meeting in Chennai on 10 May 2007, with Sunimal Fernando, adviser to President Rajapaksa, participating. இந்த நால்வர் குழு மஹிந்த ராஜபக்சவின் ஆலோசகர்களுடன் தொடர் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டனர். மஹிந்த ராஜபக்ச இருதரப்பும் ஒத்துக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வால் மட்டுமே பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்று நம்பினார். இருதரப்பும் ஒருமனதாக அரசியல் தீர்வையே ஒரே தீர்வாக ஏற்றுக் கொண்டன. It was unanimously agreed that a mutually acceptable political package was the only lasting solution to the ethnic crisis. 25-03-2008இல் ஒரு இறுதி உடனபாடு நால்வர் குழுவாலும் மஹிந்த ராஜபக்ச தரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவர்களின் முடிவை தேவசகாயம் டில்லிக்குக் கடித மூலம் தெரிவித்திருந்தார். டில்லி அதை ஏற்றுக் கொண்டு அதற்கு இணங்க செயற்பட்டு இலங்கைக்குத் தேவையான அழுத்தங்களைக் கொடுத்திருந்தால் இலங்கையில் அழிவைத் தவிர்த்திருக்கலாம் என்கின்றனர் எம் ஜீ தேவசகாயமும் சாம் ராயப்பாவும்.

மேற்படி நால்வர் குழுவுடன் மஹிந்த ராஜபக்ச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டமை டில்லியில் தென் மண்டல தமிழின விரோதிகளுக்குப் பிடிக்கவில்லை. அதிகாரமளிக்கப் படாதவர்களுடன் இலங்கை அரசு பேச்சு வார்த்தை நடாத்துகிறது என்று இலங்கையைத் கண்டித்தது டில்லி என்கின்றனர் எம் ஜீ தேவசகாயமும் சாம் ராயப்பாவும். அதன் பின்னர் மஹிந்த ராஜபக்சவின் அரசின் மனதை மாற்றி தனி இராணுவத் தீர்விற்கு இந்தியாவே இட்டுச் சென்றது என்கின்றனர் இருவரும்.

ராயப்பா: The then national security adviser MK Narayanan, foreign secretary Shivshankar Menon and the clique controlling the Prime Minister’s Office put Sonia Gandhi’s interest above national interest and actively assisted the brutal Sri Lankan genocide that could be seen in the Channel 4 documentary thus creating the quagmire Sri Lanka finds itself in. This is evident from the fact that while the whole world is seething at what they saw in the documentary, the government of India is deafeningly silent. சிவ் சங்கரமேனனும் எம் கே நாராயணனும் மற்றும் அவர்களது கூட்டமும் தேச நலனிற்கு மேலாக சோனியாவின் விருப்பத்தைக் கருத்தில் கொண்டு இலங்கை இனக்கொலைக்குத் துணை புரிந்தனர். இங்கு இனக்கொலை என்ற பதத்தை துணிந்து பாவித்துள்ளார் ராயப்பா.

தேவசகாயம்:Had New Delhi taken cognizance of this initiative and acted in concert by putting some pressure on President Rajapaksa, the issue would have been resolved and Tamils would now be living in the island with honour and dignity. But instead, pursuing somebody’s personal agenda of ‘Sicilian Revenge’, New Delhi minions with a well-synchronised Network in Colombo, New York and Geneva, actively assisted the brutal Sri Lankan genocide. No wonder, Delhi is deafeningly silent today on Sri Lanka’s excesses. தேவசகாயம் சோனியாவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் சிசிலியன்(சோனியா காந்தியின் ஊர்) பழி வாங்கல் என்கிறார்.

முடிவுரைகள் - டில்லி தப்ப முடியாது
தேவசகாயம்: Time is not far when Rajapaksa & Co is hauled up before the International Court of Justice for war crimes and genocide. In the event, New Delhi minions cannot escape responsibility for this inhuman horror. The bell is tolling! ராஜபக்சவினர் பன்னாட்டு நீதி மன்றில் இனக்கொலைக்குத் தண்டிக்கப்படும் காலம் தொலைவில் இல்லை. அப்போது டில்லிக் கைத்தடிகளும் இந்த மனிதாபிமானமற்ற பயங்கரத்திற்குப் பொறுப்பானவர்களாவதிலிருந்து தப்ப முடியாது. இதையே ராயப்பா வேறு வார்த்தைகளில் சொல்கிறார்: There is every possibility of Rajapaksa and company being hauled up before the International Court of Justice at The Hague to stand trial for war crimes and genocide. In the event, New Delhi cannot escape responsibility for this horrendous brutality. The bell is tolling. இருவரினதும் கடைசி வனங்கள் ஒன்றே. 

இரு கட்டுரைகளையும் கீழுள்ள இணைப்பில் காணலாம்:
ராயப்பா: http://thestatesman.net/index.php?option=com_content&view=article&id=376293&catid=38
தேவசகாயம்: http://www.theweekendleader.com/Causes/583/Exclusive:-A-dark-secret.html

Monday 18 July 2011

விரைவில் வருகின்றன பறக்கும் கார்கள்

பல விமானவியல் ஆராச்சியாளர்களின் நீண்டநாள் கனவான பறக்கும் மகிழூர்ந்து(கார்) விரைவில் நனவாக நிறைவேறவிருக்கின்றது. Terrafugia Transition எனப்படும் விண்ணில் பறக்கவும் தெருவில் சாதாரண கார்களைப்போல் ஓடவும் வல்ல கார்களை உருவாக்குவதில் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். இவற்றை ஓட்டுவதற்கான பயிற்ச்சியை 20 மணித்தியாலங்களில் வழங்க முடியும் என்று கூறப்படுகிறது. இவற்றை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் Carl Dietrich.

இப் பறக்கும் மகிழூர்ந்து(கார்)ன் விலை $250,000. இதை வான்குவதற்கு பலர் இப்போதே பதிவு செய்து வருகின்றனர். ஆனால் இவை பாவனைக்கு வர இன்னும் 4 அல்லது 5 வருடங்கள் எடுக்கலாம்.


இறக்கைக்களை மடிக்கலாம்.
இப் பறக்கும் மகிழூர்ந்தின் இறக்கைகளை 15 நொடிகளில் மடித்து சாதாரணக்கார் போல ஆக்கி அதை தெருவிலும் செலுத்தலாம். இதை விண்ணில் 115mph வேகத்திலும் தரையில்  65mph வேகத்திலும்செலுத்தலாம். ஒரு முறை நிரம்பிய எரிபொருளுடன் 500மைல்கள் பயணிக்கலாம்.இதன் மேலதிக விபரங்கள்:

Sunday 17 July 2011

கடாபிக்கு எதிரான இறுதிச் சதி!

ஆகஸ்ட் முதலாம் திகதி ஆரம்பிக்கவிருக்கும் ரம்ழானுக்கும் முன்னர்  லிபியத் தலைவர் தளபதி மும்மர் கடாஃபியை லிபியாவில் இருந்து விரட்ட முடியுமா என்பதுதான் கடாஃபிக்கு எதிராகச் செயற்படும் நேட்டோப் படையினரைக் குடையும் கேள்வி. கடாஃபியோ நேட்டோவைக் குழப்பும் சமிக்ஞைகளை தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக்கிறார். தனது ஆதரவாளர்கள் நேட்டோ நாடுகளில் வீடுகளிலும் பணிமனைகளிலும் தாக்குதல் நடாத்துவார்கள் என்றும் ஒரு மிரட்டல் விட்டும் பார்த்தார்.

திருப்பதியில் லட்டுத் தட்டுப்பாடு போல்                                           திரிப்போலியில் எண்ணெய்த் தட்டுப்பாடு.
கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் திரிப்போலிக்கான எரிபொருள் செல்லும் குழாய்களைத் தகர்த்ததைத் தொடர்ந்து திரிப்போலியில் எண்ணெய்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது கடாஃபியின் படையினரை ஒரு நெருக்கடி நிலைக்குத் தள்ளியுள்ளது. குழாய்த் தகர்ப்புக்கான ஆயுதங்களை கிளர்ச்சிக்காரகளுக்கு பிரான்ஸ் விமானங்கள் மூலம் போட்டிருந்தது. இது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைத் தீர்மானத்திற்கு விரோதமானது என இரசியா போன்ற நாடுகள் ஆட்சேபித்திருந்தன
தொடர்புக் குழு (Contact Group)கூட்டம்

தொடர்புக் குழுக் கூட்டம்.
கடாஃபிக்கு எதிரானவர்கள் தொடர்புக் குழு (Contact Group) என்ற அமைப்பை அமைத்துள்ளனர். இவர்கள் ஜுலை 15-ம் திகதி இஸ்த்தான்புல் நகரில் கூடினர். இக்கூட்டத்தில் 32 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் அமைப்பான இடைக்காலத் தேசியச் சபையை (National Transitional Council - NTC) லிபியாவின் சட்டபூர்வ அரசாக அங்கீகரித்தனர். இக்கூட்டத்தில் அமெரிக்க அரச செயலர் ஹிலரி கிளிண்டன் பங்குபற்றியமை இக்கூட்டத்திற்கு அமெரிக்கா கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. 

மேலும் பிரித்தானிய விமானங்கள்
இஸ்த்தான்புல்லில் நடந்த தொடர்புக் குழு (Contact Group)க்கூட்டத்தைத் தொடர்ந்து பிரித்தானியா மேலும் சில ரொனேடோ விமாங்களை லிபியப் போரில் ஈடுபடுத்தவுள்ளது.
கிளர்ச்சிக்காரர்களின் தாக்குதல்


ஏன் இந்தத் திடீர் அங்கீகாரம்?
மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் ஒரு நன்கு பயிற்றுவிக்கப்பட்ட படையினர் அல்லர். அவர்கள் தொலவில் இருந்து சிறியரக ஏவுகணைகள் எறிகணைகளை வீசியே கடாஃபியின் படை நிலைகளைக் கைப்பற்றுகின்றனர். அதுவும் ஆமைவேகத்தில். அவர்களிடை ஒரு சிறந்த ஒழுங்கமைப்போ கட்டமைப்போ இல்லை. கடாஃபியின் படையினருடன் நேருக்கு நேர் மோதி அவர்களிடமிருந்து திர்ப்போலியைக் கைப்பற்றுவது  என்பது இலகுவில் நடக்கக்கூடிய காரியம் அல்ல என்பதை நேட்டோ அமைப்பினர் உணர்ந்துள்ளனர். மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் அமைப்பான இடைக்காலத் தேசியச் சபைக்கு (National Transitional Council - NTC) மேலும் படைக்கு ஆள்களைச் சேர்க்கவும் ஆயுதங்களைத் திரட்டவும் நிறைய நிதி தேவைப்படுகிறது. அதற்கான நிதி வழங்க நேட்டோ செய்த சதிதான் இந்த அங்கீகாரம். மேற்கு நாடுகள் இப்போது  இருக்கும் நிதி நெருக்கடியில் தங்கள் பணத்தை லிபியாவில் விரயமாக்குவது உள்ளக எதிர்ப்புக்களை உருவாக்கும். கடாஃபி அரசின் நிதி 34 பில்லியன் டாலர்களை அமெரிக்கா முடக்கி வைத்துள்ளது. மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் அமைப்பான இடைக்காலத் தேசியச் சபையை சட்டபூர்வமான அரசாக அங்கீகரிப்பதன் மூலம் அந்த நிதியில் ஒருபகுதியை கிளர்ச்சிக்காரர்களுக்கு அமெரிக்கா வழங்கவிருக்கிறது. மூன்று பில்லியன்கள் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கவிருக்கிறது. இப்பணத்தைப் பாவித்து கிளர்ச்சிக்காரர்கள் பிரித்தானியப் படையில் இருந்தவர்களை தங்கள் படையில் இணைத்துக் கொள்ளலாம். பிரித்தானியா தனது படையில் உள்ளவர்களை விடுப்பில் விடுவித்து அவர்கள் கடாஃபிக்கு எதிரான படையினர்களுடன் இணைந்து கொள்வார்கள். இச்சதியால் பிரித்தானியா தன் செந்தச் செலவில் சொந்தப்படையினரைப் போரில் ஈடுபடுத்தும் குற்றச் சாட்டில் இருந்து தப்பிக்கலாம். வேறு இடத்தில் இப்படிப்பட்ட சதி வெற்றிகரமாக அரங்கேறியது உண்டு.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...