Saturday 30 April 2011

இந்தியாவிற்கு கேடு வருமா? காங்கிரசுக்கு கேடு வருமா?


இந்தியா பல பொய்களைச் சொல்லிக் கொண்டு இலங்கைக்கு இனக்கொலைக்கான எல்லா உதவிகளையும் செய்தது.

தமிழர் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பது பற்றி இந்தியாவின் பொய்.
இலங்கைப் பிரச்சனைக்கு படைத்துறைத் தீர்வு இல்லை என்று அடிக்கடி வெளியில் பொய் சொல்லிக் கொண்டு இலங்கையில் ஒரு படைத்துறைத் தீர்வுக்கான எல்லா உதவிகளையும் இந்தியா செய்து வந்தது. இலங்கை போரிலிருந்து அமைதிக்கு’ என்ற புத்தகம் ஒன்றை நிதின் கோகலே என்பவர் எழுதியுள்ளார். அதில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இலங்கைக்கு இந்தியா எப்படியெல்லாம் இரகசியமாக உதவியது என்பது விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியக் கடற்படை அளித்த முக்கியமான புலனாய்வு தகவல் காரணமாகவே புலிகளின் ஆயுதக் கப்பல்கள் நிற்கும் இடம் பற்றிய தகவல்கள் இலங்கைக் கடற்படைக்குத் தெரிய வந்தது என்றும், பன்னிரண்டுக்கும் அதிகமான ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டதாகவும் நிதின் அதில் கூறியுள்ளார்.

இலங்கைக்கு ஆயுத உதவி இல்லை என்ற இந்தியாவின் பொய்
இலங்கைக்கு தான் ஆயுத உதவி வழங்கவில்லை என்று சொல்லிக்கொண்டே இலங்கைக்கு ஆயுத உதவிகளையும் இலங்கைப் படையினருக்கான் பயிற்ச்சிகளையும் இந்தியா வழங்கி வந்தது. கிழக்கு இலங்கையில் உள்ள கருணா குழுவின் பயிற்ச்சி முகாம் ஒன்றை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தபோது அதில் ஒரு இந்தியப் படைத்துறையைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டார்.

இலங்கையில் சமாதானம் வேண்டும் என்ற பொய்
இலங்கையில் சமாதானம் வேண்டும் என்று அடிக்கடி கூறிவந்த இந்தியா போரின் போது தனது படைகளை இரகசியமாக இலங்கைக்கு அனுப்பி போரில் நேரடியாக ஈடு படவைத்தது. சார்க் மநாட்டுக்கு இலங்கை சென்ற இந்தியப் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்க 3,000 மேற்பட்ட இந்தியப் படைகள் இலங்கை சென்றனர். அவர்கள் சென்றதன் நோக்கம் வேறு. போரின் போது ஈழத்துக்குள் பின்கதவால் நுழைந்த கொலை வெறி நாய்களின் தொகை 20,000 இற்கு மேல்.

போர் நிறுத்தக் கோரிக்கைப் பொய்
இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டு இந்தியா இலங்கைக்கு போருக்கான எல்லா உதவிகளையும் செய்தது. 2009 மே மாதத்திற்கு முன்னர் போரை முடிக்கக்கூடிய வகையில் போரைத் தீவிரப் படுத்தும் படி திரை மறைவில் இந்தியா இலங்கையை வலியுறுத்தி வந்தது. சிவ் சங்கர் மேனன், எம் கே நாராயணன், பிரணாப் முகர்ஜி போன்றோர் போரை தீவிரப்படுத்தி விடுதலைப் புலிகளின் அழித்தொழிப்பை எப்படி போரை விரைவில் முடிப்பது எப்படி என்பவை பற்றி இலங்கைக்கு ஆலோசனை வழங்கவே இலங்கைக்கு தமிழர்களுக்கு எதிரான போர் நடந்த வேளை அடிக்கடி இலங்கை சென்று வந்தனர். காங்கிரசு ஆட்சியின் நோக்கம் 2009 மே இந்தியப் போருக்கு முன்னர் இலங்கைப் போரை முடிக்க வேண்டும் என்பதே.

இனக்கொலைப் பொய்
1983-ம் ஆண்டு இலங்கையில் நடந்த கலவரத்தை அப்போதைய பாரதப் பிரதம மந்திரி இந்திரா காந்தி ஒரு இனக்கொலை எனக் கூறினார். இந்தியச் சட்டவாளர்கள் அவையும் (Indian Bar Association) அதை ஒரு இனக் கொலை என்றே கூறியது. அன்று கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000. ஆனால் இலங்கையில் இறுதிப் போரில் 300,000தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இந்திய பொதுவுடமைக் கட்சியுன் உறுப்பினர் திரு ராஜா அவர்கள் மாநிலங்கள் அவையில் உரையாற்றும் போது இலங்கையில் நடந்தது இனக்கொலை எனக் கூறினார். அவர் பாவித்த இனக் கொலை என்னும் பதத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கும்படி உத்தரவிட்டார் அவைத் தலைவர். மாநிலங்கள் அவையில் பெரிய பூசணிக்காய் ஏன் சோற்றில் மறைக்கப் பட்டது?

ஐநா மனித உரிமைக் கழகத்தில் இந்தியாவின் பொய்.
இலங்கையில் நடந்த இறுதிப் போரில் மனித உரிமை மீறப்பட்டது என்பதால் இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் ஐரோப்பிய நாடுகளால் கொண்டுவரப்பட்டபோது அதை இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக இந்தியா மாற்றியது. அங்கு உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி இலங்கை பயங்கரவாதத்தை ஒழித்தமையைப் பாராட்டிப் பொய் பேசினார். அவர் கூறியது பொய் என்பதை இலங்கைப் போரில் நடந்தவை தொடர்பாக பான் கீ மூன் நியமித்த மூவர் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கை தெள்வு படுத்துகிறது. அது மட்டுமல்ல ஐநாவின் இலங்கைக்கான் வதிவிடப் பேச்சாளர் கோர்டன் வெயிஸ் அவர்கள் இலங்கை இலங்கைப் போரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய உளவாளிகள் இருந்தமையால் இந்தியாவிற்கு அங்கு நடந்த போர்க் குற்றம் பற்றி நன்கு தெரியும் என்றார்.

இத்தனை பொய்களையும் சொல்லி 300,000இற்கு மேற்பட்ட அப்பாவிகளின் கொலைக்கு காரணமாகியது இந்தியா.பொய் சொல்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பது பற்றி ஔவ்வையார் இப்படிக் கூறுகிறார்:

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை

ஔவையார் சொன்ன இத்தனை கெடுதலும் இந்தியாவை ஆளும் காங்கிரசுக்கு வருமா? அல்லது அநியாய ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழாத இந்திய மக்களிற்கு வருமா?

Friday 29 April 2011

இன்பத்தைப் பகிர்ந்து பெருக்குவது


குடியிருந்த கோவில்
நீ சிதைத்த மண்டபம்
என் இதயம்

இதயத்தின் ஒளி
அன்பின் மொழி
முக அழகு

காலம் கடந்த ஞானம்
பகலில் கிடைத்த விளக்கு
வாழ்க்கை அனுபவம்

மன அமைதிக்கான நெறி
உன் அறிவைக் காட்டும் மொழி
மௌனம்

துயரைப் பகிர்ந்து குறைப்பது
இன்பத்தைப் பகிர்ந்து பெருக்குவது
நல்ல நட்பு

Thursday 28 April 2011

கலக்கல் SMS JOKES


Who was the first indian cricketer To Become captain in his first match, score century in the same match and hit a 6 of the last ball to defeat england? He was AAMIR KHAN in LAGAAN It takes 2 to make a marriage
a bride and an anxious mother!

At this very moment; 1 billion people are sleeping, 1 million people are eating, 1000 people are drinking, 100 people are playing and 1 monkey is reading my sms. Q:Y do men like smart women?
*
*
*
*
A:Rare things r always sought after!!

God thought that since
he couldn’t b everywhere
he made a mother.

Then devil thought that
he couldn’t be everywhere
he made a mother-in-law.

What is the difference between Monkey and Donkey ? Monkey saves this message AND Donkey deletes this message. Choice is yours HAHA The IDEAL man does not smoke,
does not drink, does not flirt,
goes to bed early,
in short ... does not exist!!

It is said that Husband is the head of the family, But Remember that wife is the Neck of the family. & the Neck can turn the Head exactly the way she wants. Friends are like fishes. You have to sit patiently for a long time to catch a good one. Just like I caught you. so better stay nice otherwise I will FRY YOU Marriage is actually a painful
process of finding out just
what kind of man your
wife actually prefers.

Wednesday 27 April 2011

ஹைக்கூ : இதயத்தின் ஆக்கிரமிப்பாளன்


அன்பின் மொழி
இதயத்தின் ஆக்கிரமிப்பாளன்
புன்னகை

டெல்லி நோக்கி நகுக
ஈழத்தவர்க்கு இடுக்கண் வரும்கால்
கருணாநிதி

கவலைகளின் புதை குழி
தோல்விகள் உரமாகுமிடம்
காலம்

வீட்டுக் காரன் நல்லவன்
குடியிருப்பவள் கொடியவள்
இதயம்

எல்லாம் விலகி விட்டது
தேடி வருகின்றதொன்று
நட்பு

நேரத்தை வீணாக்குவது
நேரத்தை பொன்னாக்க வந்தவளுக்காக
காதல்

Tuesday 26 April 2011

தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் வன்முறைகளை அனுமதிக்கும் ஐநா


இலங்கையில் நடந்த போர்க் குற்றம் தொடர்பாக விசாரணைகளை மேற் கொண்டு தனக்கு ஆலோசனை வழங்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான் கீ மூன் அமைத்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை நீண்ட இழுத்தடிப்பின் நேற்று வெளியிடப்பட்டது.

மேற்படி அறிக்கையில் பாக்கு நீரிணையின் இருபுறமும் உள்ள தமிழின விரோதிகள் தமிழர்களின் சுதந்திர போராட்டத்தை இழிவுபடுத்த மேற்கொண்ட எல்லாப் பிரச்சாரங்களும் இடம் பெற்றுள்ளன. சிங்கள அரசுக்கு எதிராக ஐந்து குற்றச் சாட்டுக்களை முன்வைத்த அறிக்கை விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆறு குற்றச் சாட்டுக்களை முன்வைக்கிறது. அறிக்கை வெளிநாடுகள் வாழும் தமிழர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் மீது கடுமையான குற்றச் சாட்டுக்களை முன்வைக்கிறது. இலங்கையில் "இணக்கப்பட்டிற்கு" வெளிநாடுகளில் வாழ் தமிழர்கள் தடை என்கிறது. இலங்கை இந்திய அரசுகளின் கைக்கூலிகள் பான் கீ மூனின் நிபுணர்குழுவிற்கு தமது தரப்பு பொய்ப்பரப்புரைகளை மிகச் சிறந்த முறையில் முன் வைத்துள்ளனர் என்பது அறிக்கையில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

மேற்படி அறிக்கையின் 116-ம் பக்கத்தில் உள்ள 428-ம் பந்தியில் அறிக்கையின் முடிபுகளின் 4-ம் பரிந்துரையில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சண்டை முடிந்து இரு ஆண்டுகள் ஆகியும் இன முரண்பாடுகளைக் களையும் முயற்ச்சிகள் எதுவும் மேற் கொள்ளப் படவில்லை என்கிறது அறிக்கை. கடத்தல்கள் கொலைகள் இலங்கையில் தொடர்ந்து நடக்கின்றன என்கிறது அறிக்கை. வன்னியில் இயல்பு வாழ்க்கை இல்லை என்றும் சொல்கிறது அறிக்கை.

பான் கீ மூன் தான் சுயமாக எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்று சொல்லி விட்டார். நடவடிக்கையை இலங்கை அரசு அல்லது ஐநாவில் உள்ள நாடுகள்தான் எடுக்க வேண்டும் என்று சொல்லி தனது இரண்டாவது பதவிக்காலத்திற்கான பாது காப்பை அவர் தேடுகிறார். இதனால் அங்கு இன்றும் நடக்கும் வன் முறைகளை அவர் அனுமதித்தவர் ஆகிறார். நடந்தவை பற்றிப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டாலும் நடக்கும் வன்முறைகளையும் நடக்கப் போகும் வன்முறைகளையும் தடுக்கும் பொறுப்பில் இருந்து ஐநா தவறுவிடுகிறது.

Monday 25 April 2011

நம்பியாரின் வில்லத்தனத்தால் ஐநா நிபுணர் குழு அறிக்கை வெளிவருவதில் தாமதம்.



பிந்திய செய்தி: இன்று ஐநா பணிமனை மூடிய பின் நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவிடப்பட்டுள்ளது. அதை இந்த இணைப்பில் காணலாம்: அறிக்கை
ஐநாவின் நிபுணர்குழு இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக ஒரு விசாரணை தேவை என்று சொல்லியிருந்தும், இலங்கை நடத்தும் விசாரணையில் நம்பிக்கை என்று குறிப்பிட்டிருந்தும், இலங்கையின் நீதித் துறையில் சுதந்திரம் இல்லை என்று சுட்டிக் காட்டி இருந்தும், ஒரு பன்னாட்டு மட்ட விசாரணையை தன்னால் ஆரம்பிக்க முடியாது என்று பான் கீ மூன் தெரிவித்துள்ளார். அப்படி ஒரு விசாரணையை ஆரம்பிக்க ஒன்றில் இலங்கை சம்மதிக்க வேண்டும் அல்லது ஐநா உறுப்பு நாடுகள் தீர்மானிக்க வேண்டும் என்கிறார் பான் கீ மூன்.



இலங்கையில் இறுதிப் போரின் நடந்தவை தொடர்பாக ஒரு வகை சொல்லலை இலங்க அரசு மேற் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கீ மூன் தனக்கு ஆலோசனை சொல்ல ஒரு குழுவை அமைத்திருந்தார். இந்தோனேசியாவைச் சேர்ந்த முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி டறுஸ்மன் (Marzuki Darusman), தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்டவாளர், நீதியாளர் யஸ்மின் சூகா (Yasmin Sooka), அமெரிக்காவைச் சேர்ந்த சட்டத்துறைப் பேராசிரியர் ஸ்ரிவன் ரட்னர் (Steven Ratner) ஆகியோர் இந்த ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

பான் கீ மூனின் நிபுணர் குழு தனது அறிக்கையை 31-03-2011இல் முடித்து விட்டது. இந்த அறிக்கை எதிர்பார்த்தமைக்கு மாறாக இலங்கைக்கு பெரும் பாதக மாக அமைந்தது. டெல்லித் தமிழின விரோதிகள் , கொழும்புத் தமிழின விரோதிகள், பான் கீ மூனின் துணைவர் விஜய் நம்பியார் என்ற தமிழினத்தின் வில்லன் ஆகியவர்கள் கூட்டுச் சேர்ந்து இந்த அறிக்கையை வெளியிடுவதை இழுத்தடித்து வந்தனர். பான் கீ மூனின் நிபுணர் குழுவின் அறிக்கை இறுதியில் இலங்கையிடம் கையளித்ததுடன் அறிக்கையை விஜய் நம்பியாரின் மீள் பார்வைக்கும் பான் கீ மூன் குரங்குகள் கையில் பூமலை கொடுப்பது போல் சமர்ப்பித்தார்.

ஐநாவின் விருப்பத்திற்கு மாறாக பான் கீ மூனின் நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கையில் கசியவிடப்பட்டதுடன் அறிக்கைபற்றி காரசாரமாக விமர்சிக்கவும்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு ஏற்ப அறிக்கை தயாரிக்கப் பட்டது என்றும் கூறப்பட்டது.

வேறு சந்தர்ப்பங்களில் உதாரணமாக பெனாஷீர் பூட்டோ கொலை தொடர்பான ஐநா விசாரணைக் குழு அறிக்கை தயாரானவுடன் பகிரங்கப் படுத்தப் பட்டது. ஆனால் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று வெளிவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் இது எழுதும் வரை (GMT- 17.36) வரை அறிக்கையை ஐநா அதிகாரபூர்வமாகப் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் இன்று பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கையின் பிரதி ஒன்றைப் பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்து. அறிக்கையில் 171-172 ஆம் பத்திகளில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் கொல்லப் பட்ட விவகாரம் குறிப்பிடப் பட்டுள்ளது என இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் தெரிவிக்கிறது. அது நம்பியார் அறிக்கையுடன் சம்பந்தப் பட்டதை இப்படிச் சொல்கிறது:
This is a blatant conflict of interest, and may explain the delay of, and prospectively the inaction on, the report.

அறிக்கை வெளிவராமைக்கு விஜய் நம்பியாரை இன்னர் சிற்றி பிரஸ் குற்றம் சாட்டுகிறது.
பந்தி 171-172 இல் நம்பியாரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. பந்தி 170இல் ஐநா அதிகாரிகள் என்றே குறிப்பிடப் பட்டுள்ளது.

இலங்கையின் போர்க்குற்றத்தில் இந்தியாவின் பங்கு.

"இந்தியாவின் உதவியின்றி விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் எம்மால் வென்றிருக்க முடியாது" இது இலங்கையின் பல படைத்துறை அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் அடிக்கடி சொன்ன வாசகம். இதை இந்தியத் தரப்பில் இருந்து எவரும் மறுக்கவில்லை. இலங்கையின் போர் வெற்றியில் மட்டும்தான் இந்தியாவிற்கு பங்கு உண்டா? இலங்கை இழைத்த போர் குற்றங்களில், மனுக் குலத்திற்கு எதிரான குற்றங்களில் பங்கு இல்லையா என்பது தான் இப்போதைய பில்லியன் டொலர் கேள்வி. பிரணாப் முஹர்ஜி, சிவ சங்கர மேனன், எம் கே நாராயணட் ஆகியோர் இலங்கையில் அமைதி ஏற்படுத்துவதற்கான பயணம் என்று சொல்லிக் கொண்டு கொழும்பு சென்று கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேக்கா, லலித் வீரதுங்க ஆகியோரைச் சந்தித்து தமிழர்களைக் கொன்றொழிக்கும் போரை எப்படி நடத்துவது என்ற கலந்துரையாடல்களை மேற் கொண்டனர். இதற்கான பதிவுகள் இலங்கை அரசிடம் உண்டு. இந்தப் பதிவுகள்தான் இலங்கையின் சொற்படி இந்தியாவை ஆடவைத்துக் கொண்டிருக்கிறது. கோத்தபாயவின் MASTER STROKE "ஐநாவின் பானிற்கான சவால்: போர்க்குற்ற விசாரணையை முறியடிக்க இந்தியாவின் சதி" என்ற தலைப்பில் திரு வீ எஸ் சுப்பிரமணியம் எழுதிய கட்டுரையில் இந்தியாவைப்பற்றிய பல உண்மைகளை அம்பலப்படுத்தினார். அதில் ஒன்று போர் முடிந்த பின் இந்தியா தன்னிடம் உள்ள இலங்கை இழைத்த போர்க் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைக் காட்டி இலங்கையை இந்தியா மிரட்ட, கோத்தபாய ராஜபக்கச தன்னிடம் இலங்கையின் போரில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்பான ஆதாரங்களைக் காட்டிப் பதிலுக்கு மிரட்டினார் என்கிறார். இந்த மிரட்டலை வீ எஸ் சுப்பிரமணியம் துடுப்பாட்டப் பாணியில்(கிரிக்கெட்) கோத்தபாயவின் MASTER STROKE என்று வர்ணித்தார். ஆகஸ்ட் மாதம் இலங்கை முடிக்க விருந்த போரை இலங்கை மே மாதத்தில் முடிக்க இந்தியா வற்புறுத்தியாதால் பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் உயிரிழந்தனர் என்றும் சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் சங்கடமான நிலை 
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்ட ஒரு சில தினங்களில் அது தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன், மஹிந்த ராஜபக்ச தொடர்பு கொண்டு பேசினார். மஹிந்த முதலில் தொடர்பு கொண்ட வெளிநாடு இந்தியாவே. இந்தியாதான் தனக்கு தன்மீதான் போர்க்குற்றத்திற்கு எதிராக உதவி செய்யும் என்று மஹிந்தவிற்கு நன்கு தெரியும். இந்தியா இலங்கைக்கு உதவி செய்தால் அது போர்க்குற்றத்தை மறைக்க செய்த உதவி என்று பல நாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் குற்றம் சாட்டலாம். இலங்கைக்கு உதவி செய்யாவிடில் இலங்கை அரசு தனது போர்க்குற்றத்தில் இந்தியாவின் பங்கைப் பகிரங்கப்படுத்தலாம். இரண்டும் இந்தியாவின் ஐக்கிய நாடுகள் பாது காப்புச் சபையில் ஒரு நிரந்தர இடம் தேடுவதற்கான முயற்ச்சியிக்கு தடை போடலாம். இந்தியாவின் போர்க் குற்றப் பங்களிப்புகளுக்கு மேலும் ஆதாரம் இலங்கையின் இறுதிப் போரில் இந்தியா செய்தவற்றையும் செய்யாமல் விட்டவை பற்றியும் கொழும்பிற்கான முன்னாள் ஐநாவின் பேச்சாளர் கோர்டன் வெயிஸ் அவர்கள் பிபிசி யின் சிங்களச் சேவைக்கு இப்படிக் கூறியிருந்தார்:

The former UN spokesman said the Indian government which wanted to "see the Tamil Tigers destroyed" was "fully aware" of the real situation in the battle zone, including the civilian casualties.

"I believe that Indians were aware of the civilian casualties that were happening, because they had pretty good intelligence inside the siege zone."

He admitted that Ban Ki-moon's chief of staff, Vijay Nambiar, made an agreement between the LTTE and the Sri Lanka authorities to arrange the surrender of senior Tamil Tiger leaders including B Nadesan and Pulithevan.

மீண்டும் ஒரு நாடகம்
"ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு அறிக்கைக்குப் பின்னரான சூழல் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இலங்கையிலிருந்து உயர்மட்டக் குழு புதுடில்லி செல்வதற்கு இலங்கையால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை இந்தியா நிராகரித்துள்ளது." என்று ஒரு செய்தி இப்போது வெளிவந்துள்ளது. இது இந்தியாவின் ஒரு நாடகமே. பகிரங்கமாக இப்படி அறிவித்துவிட்டு இந்தியா திரை மறைவில் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்கும். இதே வேளை இலங்கைக்கு போர்குற்றம் தொடர்பாக ஆலோசனை வழங்க ஒரு உயர்மட்டக் குழுவை இந்தியா அமைத்துள்ளது என்றும் செய்திகள் வந்துள்ளன. இது மட்டுமல்ல தமிழர்களுடனான பிரச்சினைக்கு விரைந்து அரசியல் தீர்வு காணுதல் மற்றும் சீனாவுடனான உறவு ஆகிய விவகாரங்களில் தமது போக்குக்கு இலங்கை இணங்கி வராவிட்டால், ஐ.நா. நிபுணர் குழுவின் போர்க்குற்ற அறிக்கை விவகாரத்தில் உதவமுடியாமல் இலங்கையை கைவிடும் நிலையை புதுடில்லி எடுக்கும் என்ற எச்சரிக்கை கொழும்புக்கு விடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தியும் வந்துள்ளது. இத்துடன் நிற்கவில்லை ஐ.நா. நிபுணர் குழுவின் போர்க்குற்ற அறிக்கையை ஆதரிக்க வேண்டாம் என்று இந்தியா இலங்கைத் தமிழர்களின் அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழுத்தமும் கொடுத்துள்ளது .தமிழர்களுக்கு எதிராக இந்தியா திரைமறைவில் திருகுதாளங்கள் மிகுந்த சதி செய்யும் போது இப்படி ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட தகவல்கள் டில்லியில் இருந்து வேண்டுமென்றே கசியவிடப்படும். இலங்கையின் தூண்டுதலின் பேரில் இந்தியா இரசியாவைத் வேண்ட ஐநாவின் நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராக இரசியா தனது கருத்தை வெளியிட்டது. ஆனால் இந்தியா தனக்கு ஒன்றும் தெரியாது போல் மௌனமாக இருக்கிறது. 

தேவை ஒரு வீட்டோ 
ச்இலங்கைக்கு இப்போது அவசியம் தேவைப்படுவது ஐக்கிய நாடுகள் சபையில் இரத்து(வீட்டோ) அதிகாரம் பிரயோகிக்கும் ஒரு நாடு. இலங்கைக்கு எதிரான போர்க்குற்றம் சுமத்துதல் சம்பந்தமான தீர்மானம் ஏதாவது வரும்போது ஒரு நாடு அதை இரத்து செய்ய வேண்டும். இதை இலங்கை இரு வழிகளால் பெற முடியும். ஒன்று இந்தியாவூடாக இரசியாவிடம் இருந்து பெறுதல். மற்றது சீனாவிடம் இருந்து பெறுதல்.2009இல் இந்தியாவும் சீனாவும் இலங்கைக்கு போட்டி போட்டுக் கொண்டு உதவியதால் சீனாவும் இரசியாவும் இலங்கைக்கு இணக்கமாகவே செயற்பட்டன. இன்றும் அதே நிலையா?

Sunday 24 April 2011

யப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசியின் மௌனம் ஏன்?


இலங்கையில் பெரும் நிலப்பரப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில் யாழ் மாவட்டத்தில் உள்ள இலங்கை அரச படையினருக்கு தேவையான வழங்கல்களை வழங்க இலங்கை அரசு பெரும் சிரமமும் பணச்செலவும் செய்து கொண்டிருந்த வேளையில் இணைத் தலைமை நாடுகள் என்று ஒரு பன்னாட்டு கட்டப் பஞ்சாயத்துக்காரர் இலங்கையில் தலையிட வந்தனர். இலங்கையில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்று சொல்லி ஒரு இணைத் த(றுத)லை நாடுகள் என்று ஒரு அமைப்பு உருவாக்கப் பட்டது. இதில் நோர்வே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகியன இடம்பெற்றன. பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தினர். இலங்கையில் அமைதி ஏற்படுத்துவது போல் பாசாங்கு செய்து தமிழர்களை ஏமாற்றிக் கொண்டனர். இந்த இணைத் தறுதலை நாடுகளில் இந்தியா பங்குபற்றாமல் திரை மறைவில் அவற்றுடன் கள்ளத்தனமாக இணைந்து செயற்பட்டது. உண்மையில் சொன்னால் இது தமிழர்களை "ரவுண்டு' கட்டித் தாக்கிய ஒரு ரவுடிக் கும்பல். அதில் முக்கியமானவர்கள் எரிக் சொல்ஹெய்மும் யசூசி அகாசியும்.

இலங்கையின் இறுதிப் போரில் நடந்த அழிவுகள் பற்றி இனக் கொலைகள் பற்றி இந்த இணைத் தலைமை நாடுகள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

போர் நிறைவடைந்த பின்னர் முதன் முறையாகக் கிளிநொச்சிக்கு சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்சவுடன்18யூன் 2010இலன்று சென்றிருந்தார். பின்னர் கொழும்பு திரும்பி செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அகாசி, சிறீலங்கா அரசின் போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஏனைய உலக நாடுகள் அழுத்தம் கொடுக்கக் கூடாது எனவும், அது உள்நாட்டு விடயம் எனவும் கூறியிருந்தார். இப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் அமைத்த நிபுணர் குழு இலங்கையில் போர்க் குற்றமும் மனித குலத்திற்கு எதிரான குற்றமும் நடந்தமைக்கான நம்பகமான ஆதரங்கள் உண்டு என்று தெருவித்திருக்கிறது.

பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பாக எரிக் சொல்ஹெய்ம் மேற் கொண்டு விசாரணைகள் தேவை எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

யப்பானின் இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை. 2009இன் ஆரம்பப் பகுதியில் இலங்கை சென்ற யசூசி அகாசி தொடர்பாக ஒரு ஊடகச் செய்தி ஒன்று அப்போது வந்திருந்தது. அதில் யசூசி அகாசி ஹெலிக்கொப்டரில் இலங்கைப் படை அதிகாரிகளுடன் வன்னிக்குச் சென்று பார்த்தாராம் அவருக்கு அப்போது வன்னிப் போர் முனையில் சிக்குப் பட்டிருந்த பிரதேசத்தைக் காட்டி இந்தச் சிறு பிரதேசத்துக்குள்தான் இரண்டரை இலட்சம் மக்களும் இருபத்தைந்தாயிரம் மக்களும் இருக்கிறார்கள் என்றபோது அப்படியே அவ்வளவு பேரையும் துடைத்து அழிக்க வேண்டியதுதானே என்றாராம். அந்தச் செய்தி உண்மை என்றால் யசூசி அகாசியும் ஒரு போர்க் குற்றவாளியே. அதனால்தான் யப்பானின் இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் மௌனமாக இருக்கிறாரோ.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...