Wednesday 28 December 2011

வர்ணங்களைப் பிரித்த வர்ணம்


அவள் கூந்தல் கரு வர்ணம்
நாணத்தில் முகம் ஒரு வர்ணம்
கோபத்தில் இன்னொரு வர்ணம்


ஆடும் விழியசைவுகள்
ஸ்வரங்களும் அபிநயங்களும்
இணைந்த பதவர்ணம்

பேசும் மொழியோ
ஜதியும் சஞ்சாரமும்
நிறைந்த தான வர்ணம்

இணைந்திருந்த
ஒவ்வொரு இனிய நாட்களும்
ஒவ்வொரு அழகிய வர்ணம்

பிரித்து வைத்ததும் ஒரு வர்ணம்
மகாபாரத்தில் மகாபாவிகள்
இடைச் செருகிய
பகவத் கீதை சொல்லும்
நான்கு வர்ணம்


இயற்கை அன்னையின் ஓவியத்தில்
எத்தனை வர்ணங்கள்
பதமளிக்கும் பச்சை நிற வனங்கள்
நீலவர்ணத்தில் கடலும் வானும்
வெண்ணிற முகில்கள்
அவ்வப் போது கற்பனை
வெடித்தெழ
பலவர்ண வானவில்
மனிதத் தோலைப்
பல வர்ணங்களில் வரைந்து
பல குழப்பங்கள் ஏன் தந்தாய் தாயே

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...