Wednesday 14 December 2011

தேசக் குரல் பாலா அண்ணா

பெற்ற தாய் ஈழம் பரிதவிக்கையிலே
அற்ற குளத்துப் பறவைகளாய்
நாம் பறந்தோம் வெளி நாடுகள் நோக்கி
சொந்த நலம் காக்க

தாய் ஈழம் தவிக்கையில்
வெளி நாட்டுவாழ்க்கை
வேண்டாம் எனத் துறந்து
தாயகம் சென்ற செம்மல்
எம் தேசக்குரல் பாலா அண்ணா.

போராளிகளுக்கு அரசியல்
பாடம் கூறும் ஆசானாய்
தலைமைக்கு மதியுரைக்கும்
பேரறிவாளனாய் வாழ்ந்தவர்

எம் தேசக்குரல் பாலா அண்ணா.

இந்திய ஆக்கிரமிப்பிலே
காட்டிலும் மேட்டிலும்
வெளிநாட்டு மனைவியுடன்
நீரின்றி உணவின்றி
நித்திரையின்றி நிம்மதிதானின்றி
நோய் வாய்ப்பட்டவர்

எம் தேசக்குரல் பாலா அண்ணா.

அவர் அங்கள் பல பழுது பட
மருத்துவ வசதிதர இந்தியா
மறுக்க
வேதனைகள் சுமந்து வெளிநாடுகள் சென்று
தமிழர்களுக்காய் குரல் கொடுத்தவர்

எம் தேசக்குரல் பாலா அண்ணா.

சரித்திரமும் படைத்து நின்றார்
சரித்திர நூலும் படைத்து நின்றார்
தமிழர் தரித்திரம் துடைக்க வந்த

எம் தேசக்குரல் பாலா அண்ணா.

தமிழீழத் தாய் துயர் துடைத்து
அவளுக்கு விடுதலை முடிசூடி
அவருக்கு நாம் அஞ்சலி செலுத்துவதே
அவர் ஆன்மாவைச் சாந்தியாக்கும்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...