Sunday 18 December 2011

நகைச்சுவை: முதலாளித்துவம் என்றால் என்ன?

முதலாளி அதிகாரியிடம்: நீ இந்த நிறுவனத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு சாதாரண கிளார்க்காக இணைந்தாய். பின்னர் சந்தைப் படுத்தல் பிரிவில் இணைந்தாய். படிப்படியாக உயர்ந்து இப்போது நிறுவனத்தில் இயக்குனராகிவிட்டாய். இதற்காக நீ என்ன செய்யப் போகிறாய்?
அதிகாரி: உங்களுக்கு எப்போதும் நன்றியுடையவனாக இருப்பேன் அப்பா.

Capitalism is like a vending machine. It doesn't work, but it takes your money. 

பொருளியல் கல்லூரி முதல்வரிடம் மாணவன்: எங்கே எமது விரிவுரையாளர்.
முதல்வர்: அரச ஆட்குறைப்பு நடவடிக்கை
மாணவன்: எங்கே நூல் நிலையத்தில் புத்தகங்களைக் காணோம்
முதல்வர்: அரச செலவீனக் குறைப்பு
மாணவன்: எனது கடன் தொகை வங்கிக்கு வரவில்லை
முதல்வர்: அரச நிதிப் பற்றாக் குறை
மாணவன்: நான் கல்வி கற்பது எப்படி
முதல்வர்: இவ்வளவு நேரமும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறாய்.

What did Soviet Socialists use before they had candles?
Answer: electricity.

நிருபர்: உங்கள் தொழிலாளிக்கு என்ன சம்பளம் கொடுக்கிறீர்கள்?
முதலாளி: ஒரு சட்டை தைக்க 3 டாலர்கள்
நிருபர்: ஒரு சட்டையை என்ன விலைக்கு விற்பீர்கள்
முதலாளி: 15 டாலர்கள்
நிருபர்: அவனுக்கு 12 டாலர்கள் கொடுக்கலாமெ
முதலாளி: அவன் பாவிக்கும் மிஷின் இருக்கும் இடம் எல்லாம் என்னுடையது அதற்குரிய இலாபம் எனக்கு வேண்டும்
நிருபர்: அவற்றை எப்படி வாங்கினீர்கள்
முதலாளி: அவனது தந்தை எனது தந்தைக்கு வேலைசெய்யும் போது கிடைத்த இலாபத்தில் வாங்கியது.

முதலாளித்துவத்தில் பசிக்கும் போது நீ ஓடர் பண்ணிய பிட்சா வருத்தத்தில் இருக்கும் போது நீ  கேட்ட ஆம்புலன்ஸிலும் பார்க்க விரைவாக வரும்.

முதலாளித்துவத்தில் நீ சிகரட் வாங்க நடக்கும் தூரத்திலும் பார்க்க உனக்கு மருந்து வாங்க அதிக தூரம் நடக்க வேண்டியிருக்கும்.

முதலாளித்துவத்தில் நாட்டுக்காக போராடிக் காயப்பட்ட முன்னாள் போர் வீரன் தெருவோரத்திலும் நாட்டை ஏமாற்றுபவன் வெள்ளை மாளிகையிலும் வசிப்பார்கள்.

முதலாளித்துவத்தில் வங்கிகள் அகலத் திறந்திருக்கும். அங்குள்ள பேனாக்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும்.

At an auction in Manchester a wealthy American announced that he had lost his wallet containing £10,000 and would give a reward of £100 to the person who found it.
From the back of the hall a Scottish voice shouted, "I'll give £150!".

முதலாளித்துவம் என்றால் என்ன?
கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு வங்கிகளைக் கொள்ளையடிக்க முயல்பவர்களிடம் இருந்து வங்கிகளைப் பாதுகாப்பதும் வங்கிகளை தமக்குச் சொந்தமாக வைத்துக் கொண்டு உலகையே கொள்ளையடிப்பவர்களைப் பாதுகாப்பதும்.

வாழ்க்கை உன்னை வெறுத்தால் கம்யூனிசம், வாழ்க்கையை வெறுக்கும் சுதந்திரம் உனக்கு இருந்தால்  அது முதலாளித்துவம்.

I hate Valentine's Day for two reasons:
1. I believe that is just a commercial holiday created by the capitalist juggernaut, designed to scrape a few pounds off of the average hard working human being.
2. I can't get a girlfriend. 

 A capitalist was hiring big men to be loggers and chop down big trees in a forest. A small man applied and the capitalist asked him what experience he had in logging. The small man said "I worked in the Sahara Forest."
The capitalist said "You mean the Sahara Desert?"
The small man said "Yeah, sure now it is!"

1 comment:

Unknown said...

முதலாளித்துவத்தில் பசிக்கும் போது நீ ஓடர் பண்ணிய பிட்சா வருத்தத்தில் இருக்கும் போது நீ கேட்ட ஆம்புலன்ஸிலும் பார்க்க விரைவாக வரும். nice

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...