Saturday 17 December 2011

பொய்யில் பிறந்து பொய்யில் வளர்ந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பொய்யான அறிக்கை

இலங்கையில் நடந்த போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றம் மற்றும் மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பன்னாட்டு மட்டத்தில் பல மனித உரிமை அமைப்புக்கள் தமது கரிசனையை வெளிவிட்டததைத் தொடர்ந்து அதில் இருந்து தப்புவதற்கும் காலத்தை இழுத்தடிப்பதற்கும் இலங்கை அரசு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்று ஒரு குழுவை அமைத்தது. அதன் நியமனப் பத்திரத்திலேயே இலங்கை அரசு பொய் சொல்லியுள்ளது. அதன் நியமனப் பத்திரத்தில் இலங்கை ஒரு பல்லின மக்கள் வாழும் நாடு என்று கருதுவதாகப் பொய் சொல்லியுள்ளது. இலங்கை ஒரு பல்லின மக்கள் வாழும் நாடு என்று இலங்கை ஆட்சியாளர்கள் ஒரு போதும் சொல்வதில்லை. இது சிங்களவர்களின் நாடு அவர்களோடு இணங்கி வாழ தமிழர்கள் பழகிக் கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாகப் பலதடவை கூறியுள்ளனர்.

இந்த நல்லிணக்க ஆணைக்குழு முன் பலர் சாட்சியம் அளிக்கத் பயந்தனர். சாட்சியமளித்தவர்கள் மிரட்டப்பட்டனர். இந்த ஆணைக்குழுமுன் சாட்சியம் அளிப்பதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை என்று பலர் அதில் சாட்சியமளிக்கவில்லை. ஆணைக்குழு சொந்தமாகச் செயற்பட்டு போர் நடந்த பிரதேசங்களுக்குச் சென்று சில அடிகள் மண்ணைக் கிளறினாலே அவர்களுக்குப் பல சாட்சியங்கள் கிடைத்திருக்கும். தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பாவிக்கப்பட்டமைக்கான சாட்சியங்கள் கிடைத்திருக்கும். இந்த ஆணைக்குழுவிற்கு எவரையும் தண்டிக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை.

ஆணைக்குழுவும் தனது அறிக்கையில் இலங்கை ஒரு பல்லின மக்கள் வாழும் நாடு என்று சொல்கிறது. அத்துடன் முன் எப்போதும் இல்லாதவாறு இப்போது இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்கான சூழல் உருவானதாக ஆணைக்குழு தனது முன்னுரையில் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறது. உண்மையில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு இப்போது தமிழர்களுக்கு எந்தவித உரிமையும் வழங்கத் தேவையில்லாத சூழ் நிலைதான் நிலவுகிறது. தமிழர்களைப் பொறுத்தவரை ஆட்சியாளர்களும் அவர்களது படைத்துறையினரும் தமிழர்களைப் பொறுத்தவரை தாம் நினைத்தவற்றைச் செய்யலாம் என்ற சூழலும் தாம் நினைத்தவற்றைச் செய்யலாம் என்ற வெற்றி மமதையுமே உண்மையில் நாட்டில் நிலவுகிறது. பயங்கரவாதமும் வன்முறையும் ஒழிக்கப்பட்டு விட்டதாக அறிக்கை கூறுகிறது. ஆனால் தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாதமும் வன்முறையும் தொடர்ந்து நடக்கிறது.

ஆணைக்குழு அறிககை வெளிவந்த சில மணித்தியாலங்களில் மனித உரிமைக் கண்காணிப்பகம் அறிக்கை போர்க்குற்றம் தொடர்பான பொறுப்புக் கூறலில் இருந்து தவறிவிட்டது என்று அறிக்கை விட்டுவிட்டது. ஆணைக்குழு அமைத்த போதும் மனித உரிமைக் கண்காணிப்பகம் இந்த ஆணைக்குழுவால் எதுவும் நடக்கப் போவதில்லை என்று அறிவித்திருந்தது. மனித உரிமைக் கண்காணிப்பகம் ஒரு பன்னாட்டு மட்ட விசாரணை தேவை என்று வலியுறுத்தியுள்ளது. Human Rights Watch renewed calls for an independent review. Sri Lanka has said that its Lessons Learnt and Reconciliation Commission (LLRC) will suffice and narrowly avoided censure at the UN Human Rights Council in September. "Governments and UN bodies have held back for the past 18 months to allow the Sri Lankan commission to make progress on accountability," said Brad Adams, Asia director at the New York-based rights group.

Amnesty International said that the commission acknowledged problems in Sri Lanka but ignored "serious evidence of war crimes, crimes against humanity and other violations of the laws of war." 

Channel - 4:


அறிக்கையின் சில முக்கிய அம்சங்கள்:

  • இறுதிப் போரின் போது கணிசமான அளவு பொதுமக்கள் இழப்பு ஏற்பட்டதை இந்த அறிக்கை ஒப்புக்கொண்டுள்ளது.
  • படையினர் பொது மக்களை இலக்கு வைத்துத் தாக்கவில்லை
  • விடுதலைப் புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர்
  • பொது மக்கள் மீது இலங்கைப் படையினர் எறிகணைத் தாக்குதல் தொடர்பாக விசாரணை தேவை.
  • அதிகாரப் பரவலாக்கம் தேவை

கேவலத்தை அம்பலப் படுதிய இந்தியா என்ன செய்யும்?
இலங்கையில் போர் முடிந்தவுடன் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையில் போரின் போது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் தீர்மானம் கொண்டுவரப் பட்டபோது அதை இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றித் தனது கேவலத்தை அம்பலப்படுத்தியது இந்தியா. ஐக்கிய நாடுகள் சபையால் அமைக்கப் பட்ட நிபுணர்கள் குழு இந்தியாவின் தீர்மானத்தைக் கண்டித்திருந்தது. இப்போது நல்லிணக்க ஆணைக்குழுவினாலும் எந்த பயனும் இல்லை என்பது அம்பலமாகிவிட்டது. இந்தியாவின் இத்தாலிய சோனியா காந்தி 2009இல் சென்னையில் நடந்த தேர்தல் பிரச்சாரக்  கூட்டத்தில் இலங்கையில் தமிழர்கள் கௌரவமாக வாழத் தேவையானவற்றை இந்தியா செய்யும் என்று பொய் சொல்லி இருந்தார். இந்தியா ஒரு கேவலமான ஆட்சியாளர்களால் ஆளப்படுகிறது என்பதை இந்தியர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...