Sunday 6 November 2011

நகைச்சுவை: சிவப்பு விளக்கு ஏரியாக் கிளி

உறவினருக்கும் நண்பனுக்கும் என்ன வித்தியாசம்?
நீ மருத்துவ மனையில் இருக்கும் போது நீ எப்படி இருக்கிறாய் என்று கேட்பவர் உறவினர்.
நர்ஸ் எப்படி இருக்கிறாள் என்று கேட்பவன் நண்பன்.

பப் (Pub)ஒன்றில் மனைவி கணவனிடம்: அதோ பாருங்க அந்த மூலையில் இருந்து சிரித்தபடி தண்ணியடிச்சுக் கொண்டுப்பவன் தன்னைத் திருமணம் செய்யும் படி 4 வருடங்களுக்கு முன் என் பின்னால் திரிந்தவன். நான் மாட்டேன் என்று சொல்லி விட்டேன்.
கணவன்: பயல் இன்றைக்கும் அதைச் சந்தோசமாகக் கொண்டாடுகிறான் பார்.




துன்பத்தின் போது பக்கத்தில் நிற்பவந்தான் உண்மையான நண்பன். சந்தேகமிருந்தால் உங்கள் திருமணப்படங்களை எடுத்துப்பாருங்கள்.

சுமதிக்கு ஒரு பேசும் கிளி வாங்கி வளர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. ஒரு செல்லப் பிராணி விற்கப்படும் கடைக்குச் சென்று பார்த்த போது ஒரு ஆங்கிலம் கிளி இருபது ரூபா என்று குறிக்கப்பட்டிருந்தது. இது ஏன் இவ்வளவு மலிவாக இருக்கிறது என்று கேட்ட போது அது முன்பு சிவப்பு விளக்கு ஏரியாவில் இருந்தது. அடிக்கடி பலான பலான வார்தைகள் பேசும். அதை வாங்குபவர்கள் உடன் திருப்பிக் கொண்டு வந்து விடுகிறார்கள் எனப் பதில் கூறப்பட்டது. இருந்தும் சுமதி அதை பழக்கி எடுக்கலாம் என்ற நம்பிக்கையுடன் வங்கி வீட்டுக்கு எடுத்துச் சென்றாள். சுமதியின் கணவன் வழமை போல் நேரம் செல்ல வீடு வந்தான். அவனுக்கு தனது புதிய செல்லப் பிராணியை வந்தவுடன் காட்டினாள் சுமதி. அவனைப் பார்த்தவுடன் கிளி " Hello Sekar, how are you" என்றது. சுமதி கிளியையும் கொண்டு வாங்கிய கடைக்குப் போகவில்லை, பெற்றோர் வீடு சென்றாள்.

2 comments:

Shanmugam Rajamanickam said...

'hello seker' என்றதும் எப்படி பிறந்த வீட்டுக்கு போனால் என்று டவுட்டாவே இருந்தது. இப்போது தான் புரிந்தது அவள் கணவன் பேர் சேகர் இல்லை என்று.

pearl said...

BOSS APDI ILLA AVAN ANTHA RED LIGHT AREA ADIKORUKA POIRUKAN ATHAN ANTHA KILI AVANAI APPADI SOLLIRUKU

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...