Monday 24 October 2011

கடாஃபி லிபிய மக்களுக்குச் செய்த நன்மைகள்.

விடுதலை வீரர்களின் நண்பன்
உலக எண்ணெய் வளத்திலேயே லிபியாவில் உள்ள எண்ணெய் வளம்தான் மிகத் தூய்மையானது. சதாம் ஹுசேயின் அரபு நாடுகள் தமது எண்ணெய் விலையை அமெரிக்க டொலர்களில் நிர்ணயம் செய்யாமல் யூரோ நாணயத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறியதற்காக கொல்லப்பட்டார். மும்மர் கடாஃபி எண்ணெய விலையை தங்கத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறியதற்காகக் கொல்லப்பட்டார். கடாஃபியை கொல்லாமல் உயிருடன் பிடித்து விசாரித்திருந்தால் அவர் பல ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்குக் கொடுத்த இலஞ்சங்கள் வெளி வந்திருக்கும். ஒரு மடிக்கணனி(Laptop) இலவசமாகக் கொடுத்து ஐந்து ஆண்டுகாலம் ஆட்சியில் அமர்ந்து கொள்கிறார்கள். காடாஃபியோ அள்ளி அள்ளிக் கொடுத்தார்.

புரட்சி வீரர்களின் நண்பன்.

மூன்றாம் உலக நாடுகளின் தலைவர்களின் நண்பன்
லிபியர்களுக்கு அவர் செய்த நன்மைகள்.

1. அனைவருக்கும் மின்சாரம் இலவசம்.
2. லிபிய வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு வட்டி அறவிடப்படுவதில்லை.
3. மக்களுக்கு வீடு என்பது அடிப்படை உரிமை. லிபிய நாட்டின் அனைத்து மக்களுக்கும் வீடு கிடைக்கும் வரை தனது தந்தைக்கு கடாஃபி வீடு கொடுக்கவில்லை. கடாஃபியின் தந்தை இறக்கும் வரை ஒரு கூடாரத்திலேயே வசித்தார்.
4. லிபியாவில் திருமணமான தம்பதிகளுக்கு அறுபதினாயிரம் டினார்கள் (50,000அமெரிக்க டொலர்கள்) இலவசமாக அவர்கள் வீடு வாங்கவும் வாழ்க்கையை ஆரம்பிக்கவும் வழங்கப்படும்.
5 அனைவருக்கும் இலவசக் கல்வி. கடாஃபி ஆட்சிக்கு வரமுன் லிபியாவின் படித்தவர்கள் 25%. இப்போது 83%
6. அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி.
7. லிபிய மக்கள் எவராவது விவசாயம் செய்ய விரும்பினால் அவர்களுக்கு இலவசக் காணி, வீடு, விவசாய உபகரணங்கள் வழங்கப்படும்.
8. லிபிய மக்களில் எவருக்காவது தேவையான கல்வியோ அல்லது மருத்துவ வசதியோ லிபியாவில் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் வெளி நாடு சென்று அவற்றைப் பெற அதற்குரிய செலவை லிபிய அரசு பொறுப்பேற்கும். அத்துடன் மாதமொன்றுக்கு அவர்களுக்கு அமெரிக்க டாலர்கள் 2300ஐ இலவசமாக வழங்கும்.
9 லிபிய மக்கள் எவராவது மகிழூர்தி(Car)வாங்க விரும்பினால் அரைவாசிச் செலவை லிபிய அரசு வழங்கும்.
10 லிபியாவில் பெட்ரல் விலை US $0.14. per litre.
11 லிபியாவிற்கு வெளிநாட்டுக் கடன் எதுவுமில்லை.அதன் வெளிநாட்டுச் சொத்து $150பில்லியன்கள்
12. பட்டதாரி ஒருவருக்கு வேலை கிடைக்கும் வரை சராசரி பட்டதாரிக்குரிய சம்பளத்தை லிபிய அரசு வழங்கும்.
13. லிபிய எண்ணெய் விற்பனை வருமானத்தின் ஒரு பகுதி நேரடியாக ஒவ்வொரு லிபிய மக்களினது வங்கிக்கணக்கில் வைப்பிலடப்படும்.
14. பிள்ளை பெறும் ஒரு தாய்க்கு அரசு US $5,000 வழங்கும்.
15 லிபியாவில் 40துண்டங்கள் அடங்கிய பாணின் விலை US $0.15
16. லிபிய மக்களில் 25% மானோர் பல்கலைக்கழகப் பட்டதாரிகள்.
17. உலகத்திலேயே பாரிய நீர்ப்பாசனத் திட்டம் - செயற்கை ஆறு லிபியாவில் மேற்கொள்ளபட்டது.
18. ஆபிரிக்காவிற்கான தொலை தொடர்புச் செய்மதியை ஒழுங்கு செய்ய கடாஃபி பணம் கொடுத்தார்.
19. ஆபிரிக்கக் கண்டத்திலேயே லிபியா மிகச் செல்வந்த நாடு.
20. ஆபிரிக்கக் கண்டத்திலேயே வாழ்கைத் தரம் மிக உயர்ந்தவர்கள் லிபியர்கள்.


கடாஃபிக்கு எதிரான கருத்துக்கள்
  • லிபியாவின் வெளிநாட்டுச் சொத்து $150பில்லியன்கள் ஆனால் கடாஃபியின் சொத்து $200 பில்லியன்கள். 
  • கடாஃபி சவுதி மன்னரிலும் பார்க்க மூன்று மடங்கு செல்வந்தர்.
  • கடாஃபி சிறப்பாக பொருளாதாரத்தை நிர்வகிக்கவில்லை.
லிபிய வருமானத்தின் 5% கடாஃபியைப் போய்ச் சேரும். கடாஃபி நாட்டின் கட்டமைப்புக்களை(infrastructure) சரியாக அபிவிருத்தி செய்யவில்லை.

அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்கு கொழும்பு வந்திருந்தபோது கடாஃபியின் படத்தில் கையெழுத்து வாங்கப் பல இலங்கை அதிகாரிகள் திரண்டனர்.
கடாஃபியை மேற்குலகினர் ஏன் வெறுத்தனர்.
  • கடாஃபியின் பெயரை எப்படி எழுதுவது என்பதில் மேற்குலக ஊடகங்களிடை பெரும் குழப்பம்.
  • ஆபிரிக்காவிற்கான தொலை தொடர்புச் செய்மதியை ஒழுங்கு செய்ய கடாஃபி பணம் கொடுத்தார். இதனால் மேற்கத்திய வர்த்தகர்களுக்கு பெரு நட்டம் ஏற்பட்டது.
  • கடாஃபி தனது நாட்டில் சீனாவின் முதலீட்டை அதிகரித்தார். பல அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவிற்கு அதிக வாய்ப்புக்கள் வழங்கினார். காடாஃபிக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பித்தவுடன் லிபியாவில் இருந்து 30,000க்கு அதிகமான சீனர்கள் வெளியேறினர்.
  • கடாஃபி ஒரு ஆபிரிக்க நாணய நிதியத்தை உருவாக்க முயன்றார். இது மேற்குலக ஆதிக்கத்தில் உள்ள பன்னாட்டு நாணய நிதியத்திற்கு பெரும் சவாலாக அமையும்.

4 comments:

umarillaval said...

can you post any thing good news about gadaffi.i need some informations for writting an article on him.can you please guide me?

நண்பன் said...

கொஞ்சமாவது தனது பழைய நிலையை நினைத்து வாழ்ந்திருந்தால் இந்நிலை வந்திருக்காது ,

Anonymous said...

None of these matter if you don't have freedom. The British did more than this for India. The last time I checked, they were kicked out of the country.

Anonymous said...

Gadafi didn't treat all the libian's as his own people.he spend more money in some cities and left out another. but he was a great leader. he didn't give a damn about the west. only sadham and gadafi helped their own people in education.this attitude killed them. too bad that they didn't give him a chance to speak for himself before he was brutally murdered,this also already planned.any way people made their own decisions.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...