Friday 21 October 2011

தன்னைப் பிடித்தவர்களிடம் மன்றாடிய கடாஃபி

எச்சரிக்கை: கீழுள்ள படங்களும் காணொளிகளும் மிகக் கொடூரமானவை.

கிளர்ச்சிக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்ட லிபிய முன்னாள் தலைவர் தளபதி கடாஃபி காலை 15 வாகனங்களைக் கொண்ட ஒரு வாகனத் தொடரணியில் தப்பி ஓட முயற்ச்சித்தார். அந்த வாகனத் தொடரணியின் மீது காலை 8.30 அளவில் நேட்டோ விமானங்கள் குண்டு தாக்குதல் நடாத்தி அழித்தன. இதில் அமெரிக்க ஆளில்லா விமானங்களே ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க ஆளில்லா விமானங்கள் முதலில் முன்னர் சென்ற ஒரு வாகனத்தைத் தாக்கி மற்ற வாகனங்களைத் தடை செய்தன. பின்னர் வீசிய குண்டுகள் சுமார் ஆறு வாகனங்களைத் தாக்கிச் சேதப் படுத்தின.  மொத்தமாக 70 வாகனங்கள் தப்பி ஓட முயற்ச்சித்ததாக இன்னொரு செய்தி தெரிவிக்கிறது. நேட்டோ தாம் தனிப்பட்டவர்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்துவதில்லை என்றும் தமக்கு கடாஃப் அந்த வாகனங்களுக்குள் இருப்பது தாக்கும் போது தெரியாது என்றும் கூறியது.

குண்டு வீச்சிலிருந்து தப்ப கடாஃபி ஒரு தண்ணீர் வாய்க்கால் குழாய்க்குள் ஒளிந்து கொண்டார். நீண்ட நாட்களாக கடாஃபி ஆதரவுப் படைகள் சரணடையாமல் மூர்க்கத் தனமாக  பதில் தாக்குதல் தொடுத்ததில் இருந்தே கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கு கடாஃபி Sirte சேர்டேநகரில் ஒளிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இப்படி இருந்தவரை...

இப்படிப் பண்ணினார்கள்....
வாகனத் தொடரணி மீது விமானத் தாக்குதல் நடந்திய பின்னர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் கடும் தேடுதல் மேற்கொண்டனர். கடாஃபியின் ஆதரவுப் படையினரில் ஒருவர் கொடுத்த தகவலை அடிப்படையாக வைத்து 12..30 மணியளவில் கடாஃபி இருந்த இடத்தைச் சூழ்ந்து கொண்டனர். கடாஃபியின் மெய்ப் பாதுகாவலர்கள் சரனடைந்தனர். அவர்கள் தங்கள் தலைவனை ஒன்றும் செய்ய வேண்டாம் அவர் காயப்பட்டுள்ளார் என்றனர். யார் தலைவர் என்று வினவிய போது அவர்கள் யாரென்று சொல்லவில்லை. பின்னர் தண்ணீர் வாய்க்காலுக்குள் இருந்து வந்த கடாஃபி எனது மகன்களே.... இங்கு என்ன நடக்கிறது?...... என்ன பிழை இங்கு..... என்றபடி வந்தார். தனது எதிரிகளை எலிகள் என்று அடிக்கடி விமர்சித்த கடாஃபி ஒரு வாய்க்காலுக்குள் எலிபோல் ஒளித்திருந்தார். அவரது தங்கக் கைத் துப்பாக்கியுடன் வெளிவந்த கடாஃபி தன்னைச் சுடவேண்டாம் என்று கத்தினார். அவரை இனம் கண்டு கொண்ட அவரது எதிரிகள் அவரை மூர்க்கமாகத் தாக்கினர்.ஒரு கட்டத்தில் 69வயதான கடாஃபி தன்மீது கருணை காட்டுமாறு கெஞ்சினார். நீங்கள் செய்வது இசுலாமியச் சட்டங்களுக்கு விரோதமானது என்று கடாஃபி கூற அவரைத் தாக்குபவர்கள் நாயே பொத்தடா வாயை என்றனர். கடாஃபி தாக்கப்படுவதையும் அவர் கெஞ்சுவதையும் கீழுள்ள காணொளியில் காணலாம்:



கெஞ்சும் கடாஃபி
கடுமையான தாக்குதலால் கடாஃபி கொல்லப் பட்டார். அவர் ஒரு கைத்துப்பாகியால் கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. கொல்லப்பட்ட பின்னர் அவரது உடலை தெருவில் போட்டு காலால் உதைத்தும் உடைகளைக் கழற்றியும் அசிங்கப்படுத்தினர் அவரது எதிரிகள். ஒரு நல்ல இசுலாமியர்களாக எதிரியின் உடலுக்கு மரியாதை செலுத்த கிளர்ச்சிக்காரர்கள் தவறி விட்டனர். எனது மண்ணில் இருந்து கடைசிவரை போராடுவேன் என்று அடிக்கடி அறை கூவல் விடுத்த கடாஃபி, தான் சொன்ன படியே செய்தார். கட்ஃபியின் உடல் அசிங்கமான முறையில் தாக்கப்படுவதைக் கீளுள்ள காணொளியில் காணலாம்:


 கடாஃபியின் குடும்பம்


கடாஃபியின் மகன்களில் ஒருவரான சயிஃ அல் இஸ்லாம் கடாஃபி காயங்களுடன் கைப்பற்றப்பட்டார். ஒரு மகன் சயிஃப் அல் அரப் கொல்லப்பட்டார். இன்னும் ஒரு மகன் முத்தாசிமும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது அவரும் கொல்லப்பட்டுவிட்டார். முஹம்மட், சாதி, ஹானிபல் ஆகிய மூன்று மகன்களும் ஒரே ஒரு மகளான ஆயிஷாவும் கடாஃபியின் மனைவியும் தப்பி விட்டனர். ஒரு மகன் காசிமிற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

கடாஃபியின் உடல்
காடாஃபி ஒளிந்திருந்த இடம்
கடாஃபியின் தங்கத் துப்பாக்கி
கொடூரமாகத் தாக்கப்பட்டார்.
 கொடூரமான தாக்குதல்:




நீதிக்குப் பு'றம்பான கொலை
கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் கடாஃபி தப்பி ஓட முயற்சித்த போது காலில் முதலில் சுடப்பட்டதாகவும் கடாஃபியை தாம்  முதலில் கைது செய்ததாகவும் அப்போது அவர் ஏற்கனவே முதுகிலும் தலையிலும் காயப்பட்டிருந்ததாகவும் அவரை ஒரு வாகனத்தில் தாம் ஏற்ற முயன்ற போது தமக்கும் கடாஃபியின் மெய்ப்பாதுகாவலர்களுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கடாஃபி அவரது மெய்ப்பாதுகாவலரால் கொல்லப்பட்டதாகவும் சொல்கிறார்கள். கடாஃபியை பிடித்து வைத்திருக்கும் காணொளிப் பதிவுகள் வெளி வந்துள்ளன. பின்னர் அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார் என்பதற்கான ஆதாரங்கள் அவரடு உடலில் உள்ள காயங்கள் இரத்தக் கறைகள் என்பவற்றில் இருந்து தெரிகின்றன. கைது செய்த கடாஃபியின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்து கிளர்ச்சிக்காரர்கள் தவறிவிட்டனர். பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக் இந்த நீதிக்குப் புறம்பான கொலையைத் தாம் அங்கீகரிக்கவில்லை என்றார். பன்னாட்டு மன்னிப்புச் சபை கடாஃபியின் இறப்புத் தொடர்பாக முழு அறிக்கையைக் கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் கடாஃபியின் இறப்புத் தொடர்பாக விசாரணை தேவை என்று கூறியுள்ளது.

அரபு வசந்தத்தில் முதலில் கொல்லப்பட்ட சர்வாதிகாரி மும்மர் கடாஃபியாகும். 

கடாஃபின் கொலைக்குப் பின்னரான நகைச்சுவைகள்.
கடாஃபியின் பெயரை எப்படி எழுதுவது என்பது பல ஊடகவியலாளர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது. ‘Gaddafi’, ‘Khaddafi’ 'Qaddafi, 'Qadhafi', 'Gathafi',  or ‘Ghaddafi’ என்று பலவிதமாக எனப் பலவிதமாக அவரது பெயரை எழுதுவார்கள். இது தொடர்பாக சில நகைச்சுவைகள் உலாவத் தொடங்கிவிட்டன:

  • On Twitter by user @rameshsrivats -- "Gaddafi couldn't have been a very good dictator. Else he'd have at least given enough dictation to ensure that people spell his name right."
  • On Twitter by user @MohHKamel -- "Wait, wait!!! Don't kill Gaddafi before he tells us how to spell his name on the tombstone!"

காடாஃபியின் கொலையைக் கொண்டாடும் மக்கள்.


பிரித்தானியப் பாராளமன்றத்தில் பிரித்தானியா வாழ் இந்து சமயப் பிரமுகர்களிடை தீபாவளி வரவேற்பு வைபவத்தில் உரையாற்றும் போது கடாஃபியை பிரதம மந்திரி டேவிட் கமரூன் நரகாசூரனுக்கு ஒப்பிட்டார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...