Wednesday 7 September 2011

கடாஃபியைத் தங்கத்துடன் தப்ப வைத்த தென் ஆபிரிக்கா.

லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மர் கடாஃபிக்கு தென் ஆபிரிக்கா திரைமறைவில் அளித்து வரும் ஆதரவு பலரை ஆச்சரியப் பட வைக்கிறது. ஆனால் தென் ஆபிரிக்கர்கள் நிறவெறிக்கு எதிராகப் போராடும் போது கடாஃபி அவர்களுக்கு செய்த உதவியை அறிந்தவர்களுக்கு இது ஆச்சரியமல்ல. கடாஃபியை தன் மகன் என்று சொந்தம் கொண்டாடியவர் நெல்சன் மண்டேலா. மண்டேலா பதவியில் இருந்தபோது 1999இல் அவரது கடைசி அரச விருந்தினர் மும்மர் கடாஃபியே.  நெல்சன் மண்டேலா சிறையில் இருக்கையில் அவரது மனைவிமேல் கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போது அவருக்கு நிதி உதவி செய்தவர் மும்மர் கடாஃபி. அப்போது தென் ஆபிரிக்காவின் நிற வெறி அரசுக்கு ஆதரவு அளித்த நாடுகள்தான் இப்போது கடாஃபியை பதவியில் இருந்து விரட்டுகின்றன.

லிபியாவின் இடைக்கால தேசிய சபை
புதிய அரசின் சவால்கள் காடாஃபிக்கு உயரிய சந்தர்ப்பங்களாகின
மும்மர் கடாஃபி சிறு பிராந்தியத்தில் சுற்றி வளைக்கப்பட்டபோது அவரது இனக்குழுமத்தினர் அவருக்கு பாதுகாப்பு அரணாக இருந்துகொண்டனர். கடாஃபியை பிடிக்க அல்லது கொல்ல எடுக்கும் முயற்ச்சி பெரும் இரத்தக் களரியில் முடியும். ஏற்கனவே லிபியாவில் இருக்கும் பல இனக் குழுமங்களுக்கிடையிலான முரண்பாடுகளைக் கையாள்வது எப்படி என்பது புதிதாக அமையவிருக்கும் லிபிய அரசுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. புதிய அரசு எதிர்கொள்ளும் மற்றைய சவால் ஆபிரிக்க நாடுகளின் அங்கீராம் பெறுதல். அதில் முக்கியமானது தென் ஆபிர்க்க நாட்டின் அங்கீகாரம். இவை இரண்டையும் கடாஃபி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

சென்ற வாரம் தென் ஆபிரிக்கத் தலைவர் ஜேக்கப் சுமோ தலைமையில் எதியோப்பியாவில் கூடிய ஆபிரிக்க ஒன்றிய நாடுகள் லிபியாவின் புதிய அரசில் கடாஃபியின் ஆதரவாளர்களும் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தனர். ஐக்கிய நாடுகள் சபையில் லிபிய வெளிநாட்டு நிதிகளை லிபியாவின் புதிய இடைக்கால அரசுக்கு கொடுப்பதை தென் ஆபிரிக்கா எதிர்க்கிறது.

கடாஃபி தப்பிச் சென்ற பாதை
தென் ஆபிரிக்காவும் பிரான்சும் மும்மர் காடாஃபியின் எதிர்காலம் தொடர்பாகவும் புதிய அரசு தொடர்பாகவும் நீண்ட பேச்சு வார்த்தையை நடாத்தி சில உடன்பாடுகளுக்கு வந்தன. அதில்முக்கிய அம்சம் கடாஃபியையும் அவரது பரிவாரங்களையும் லிபியாவில் இருந்து தப்பிச் செல்ல அனுமதிப்பது. அதன் பிரகாரம் கடாஃபி பத்து பாரிய வாகனங்களில் தனது பல பில்லியன் பெறுமதியான தங்கம், அமெரிக்க டொலர்கள், யூரோக்களையும் எடுத்துக் கொண்டு நைகர் நாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். அவர் பின்னர் பெர்க்கினோ பாஸோ நாட்டில் தற்காலிகமாகத் தங்கி இருந்து பின்னர் வேறு நாடு செல்வார்.

எரிபொருள்களின் விலையை அமெரிக்க நாணயமான டொலரில் நிர்ணயம் செய்யாமல் யூரோ நாணயத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தை முன்னெடுத்ததால் சதாம் ஹுசேயின் பதவில் இருந்து விரட்டப்பட்டு தூக்கில் இடப்பட்டார். எரிபொருள்களின் விலையை அமெரிக்க நாணயமான டொலரில் நிர்ணயம் செய்யாமல் தங்கத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்ததால் மும்மர் கடாஃபி பதவியில் இருந்து விரட்டப்பட்டார். மேற்குலக ஏகாதியபத்தியவாதிகளின் அடுத்த இலக்கு சிரியா.

கடாஃபி தொடர்பான முந்தைய பதிவுகள்:
1. தாக்குப் பிடிக்கும் கடாஃபி
2. கடாஃபியில் இறுதி நிகழ்வுகள்
3. கடாஃபிக்கு இதிரான இறுதிச் சதிகள்
4. தாக்கும் நேட்டோவும் தாக்குப் பிடிக்கும் கடாஃபியும்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...