Wednesday 10 August 2011

பிரித்தானியக் கலவரம்: கடாஃபி நினைத்தது நடக்கிறது.

கொல்லப்பட்ட மார்க் டகன்
04-08-2011 வியாழக்கிழமை இரவு வட இலண்டன் புறநகர்ப்பகுதியில் ஒன்றான ரொட்னம் என்னும் இடத்தில் தான் கைது செய்யச் சென்ற மார்க் டகன் என்பவர் தன் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதாக நினைத்து அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார் பிரித்தானியக் காவற்துறையின் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர். இரு ரவைகளால் தாக்கப்பட்ட மார்க் டகன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இவரது நண்பர்களும் உறவினர்களும். காவல் நிலையத்திற்கு நீதி கேட்டுச் சென்றனர். அவர்களை சந்திக்க காவல்துறையினர் வராத நிலையில் பெரும் கலவரம் வெடித்தது. இறந்தவர் ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்.

கொல்லப்பட்டவரின் காதலி

அரபு வசந்தம் மல்லைகைப் புரட்சிக்கு உதவி செய்த டுவிட்டரும் ஃபேஸ்புக்கும் பிரித்தானியக் கலவரத்திற்கு உதவி செய்தன. அவை மூலம் ஆட்கள் திரட்டப்பட்டு கலவரம் பெரிதாக்கப்பட்டது. பெரிய கடைத் தொகுதிகள் தீக்கிரையாக்கப்பட்டன. வீடுகள் எரியூட்டப்பட்டன. கலவரங்கள் யாவும் இரவிலேயே நடந்தன. பிரித்தானியாவைப் பொறுத்தவரை இரண்டாம் உலகப் போரின் பின்னர் நடந்த பெரும் கலவரம் இது. கலவரம் வெகு விரைவில் இலண்டனையும் தாண்டி மன்செஸ்டர், பர்மின்ஹாம், லிவர்ப்பூல் போன்ற இடங்களுக்கும் பரவின.  கலவரத்தை தமக்குத் தேவையானவற்றை பெரும் கடைகளில் இருந்து எடுத்துக் கொள்ளப் பலர் பாவித்தனர். ஐ-போன்கள், ஐ-பாட்கள், புதிய காணொளிக்கருவிகள் உள்ள பல கடைகள் சூறையாடப்பட்டன. நவநாகரீக ஆடைகள் பாதணிகள் கொண்டகடைகளும் தப்பவில்லை. ஒரு பாதணிக் கடைக்குள் புகுந்த ஒரு கலகக்காரப் பெண்மணி தனது காலுக்கு அளவான பாதணிகளைத் தேடி எடுத்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.

 டுவிட்டர் மூலம் பொய் வதந்திகள் பரப்பப்பட்டன.
கலவரக்காரர்கள் தம்மிடம் அகப்படும் வெள்ளை இனத்தவரிடம் ஆடைகள் உட்படச் சகலவற்றையும் சூறையாடிவிட்டு நிர்வாணமாகத் துரத்துவதாக டுவிட்டரில் செய்திகள் பரப்பப்பட்டன். இதை உறுதி செய்ய முடியவில்லை என்று செய்திகள் தெரிவித்தன. இவை ஒரு பெரும் கலவரத்தை தூண்டும் நடவடிக்கையாக இருக்கலாம்.


பேஸ்போல் மட்டைகளுக்கு பெரிய தட்டுப்பாடு.
கலவரகலவர்க காரர்களுக்கு பிரியமான ஆயுதமான பேஸ்போல் மட்டைகளுக்கு பிரித்தானியாவில் பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கலவரம் தொடங்கியதிலிருந்து பேஸ்போல் மட்டைகளின் விற்பனை பெருகியது. இப்போது கடைகளில் இருப்பு இல்லை. இணையத்திலும் பெறுவது சிரமாமாக இருக்கிறது. அமேசனில் பெறுவதாயில் ஆறு வாரங்கள் காத்திருக்க வேண்டுமாம்.


டுவிட்டரே காட்டியது டுவிட்டரே கூட்டியது


ஹக்னி என்னும் நகரில் மக்களை டுவிட்டர் மூலம் ஒன்று கூட்டி கலவரக்காரர்களால் பாதிக்கப் பட்ட பகுதிகளை துப்பரவாக்கினர். மக்கள் பலர் துடைப்பக் கட்டைகளுடன் வந்து நகரைச் சுத்தீகரித்தனர்.

அது போன வாரம் இது இந்த வாரம்.
ஆர்ப்பாட்டங்கள் கலவரங்கள் நடக்கும் போது பிரித்தானியக் காவற்துறையினர் அதிக வன்முறையாக நடந்து கொள்வதாக ஊடகங்கள் குற்றம் சாட்டுவது வழமை. இம்முறை காவற்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச் சாட்டை ஊடகங்கள் முன் வைத்தன.
 வீடுகள் பணிமனைகள் குடும்பங்கள் பாதிப்புக் உள்ளாகி உள்ளன. இது போன்ற துப்பாக்கிச் சூடுகள் இதற்கு முன்பும் நடந்ததுண்டு ஆனால் இப்படிப் பெரிய கலவரம் வெடித்ததில்லை. இம்முறை மட்டும் ஏன் இப்படி என்பது ஒரு கேள்வி. இக்கலவரத்தின் பின்னர் காவற்துறையில் செய்ய இருந்த ஆள் குறைப்பு நடவடிக்கை செய்யப்படாமல் போகலாம்.

எமக்கு நாமே பாதுகாப்பு.
கலவரம் ஏற்படத் தொடங்கியபின்னர் துருக்கி இனத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் வியாபார நிலையங்களுக்கு தாமே பாது காப்புக்காக வியாபார நிலையங்கள் முன்னர் அணிவகுத்து நின்றனர். இதைத் தொடர்ந்து சவுத்ஹோல் பகுதியில் வாழும் இந்தியர்கள் தங்கள் ஆலயங்களுக்குப் பாதுகாப்பு வழங்கினர். தமிழர்களின் ஆலயங்களில் வழமை போல் யாவும் நடைபெற்றன. ஆனால் ஆட்களின் வருக்கை குறைந்திருந்தது. எவரும் எந்தப் பாதுக்காப்பு ஏற்பாடுகளும் செய்யவில்லை. ஆலயங்கள் வழமையான நேரத்திலும் முன்னதாக மூடப்பட்டன.


ஜூலை மாதம் முதலாம் திகதி லிபியத் தலைவர் கேர்ணல் கடாஃபி சொன்னது நினைவிற்கு வருகிறது: லிபிய மக்கள் இந்தப் போரை உங்கள் வீடுகளுக்கும் பணிமனைகளுக்கும் குடும்பங்களுக்கும் எடுத்து வருவர்.
 
போதப் பொருள் வரத்தகர்கள்
பிரித்தானியக் காவற்துறையினர் போதைப் பொருள் வர்த்தகத்தை பெருமளவில் ஒழித்துக் கட்டிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த போதைப் பொருள் வர்த்தகர்கள் காவற்துறையின்ர் மீது பழிவாங்குகின்றனர் என்றும் இன்னொரு செய்தி சொல்கின்றது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...