Friday, 5 August 2011

தமிழ் நாய்களே அடங்குங்கடா என்கிறதா இந்தியா?

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று இந்தியா பகிரங்கமாக அறிவித்துக் கொண்டு தமிழர்களுக்கு எதிரான போரை இந்தியாவே திரை மறைவில் நடத்தி ஒரு இன அழிப்புக்கு வழிவகுத்தது நாம் அனைவரும் அறிவோம். இலங்கைப் பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு இல்லை என்று இந்தியா பகிரங்கமாக அறிவித்துக் கொண்டு தமிழர்களுக்கு சிங்களவர்களின் இராணுவ நடவடிக்கைக்கு சகல உதவிகளையும் வழங்கியது.

நேற்று (04-08-2011) இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா இலங்கை தொடர்பாக ஒரு அறிக்கை சமர்பித்தார்.  இந்த எஸ். எம். கிருஷ்ணா ஏற்கனவே இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றியவர். இது தொடர்பான பதிவைக் காண இங்கு சொடுக்கவும்:  எஸ். எம். கிருஷ்ணாவின் மொக்கை. ஐநாவில் கப்பலேறிய இந்திய மானம்.

இலங்கை தொடர்பாக இந்தியா பகிரங்கமாகச் சொல்பவை உண்மைக்குப் புறம்பானவை என்பதே நாம் அனுபவத்தில் கண்டதாகும். நேற்று இந்தியப் பாராளமன்றில் கூறப்பட்டவையின் பொருள் என்ன என்பதைப் பார்ப்போம்.

எஸ். எம். கிருஷ்ணா சொன்னது: போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை நடத்த வேண்டும்.
பொருள்: இலங்கை ஒரு விசாரணை நடாத்துவது போல் உலகை ஏமாற்ற வேண்டும் அல்லது பன்னாட்டு அமைப்புக்கள் பன்னாட்டு விசாரணைக்கு வழி செய்யப்பார்க்கும்.

எஸ். எம். கிருஷ்ணா சொன்னது: இலங்கை அரசியல் பிரச்சனைக்கு நியாயமான முறையில் தீர்வு காணப்படுவது அவசியம்.
பொருள்: இல்லாவிடில் பிராந்தியத்தில் வேறு நாடுகள் தலையிட வழிவகுக்கும். ஏதாவது தீர்வு ஒன்று வருவது போல இலங்கை போலியாக பேச்சுவார்த்தைகளை நடாத்திக் கொண்டு இருக்க வேண்டும்.

எஸ். எம். கிருஷ்ணா சொன்னது: இலங்கையில் போர் முடிவடைந்துவிட்ட நிலையில், ஒன்றுபட்ட இலங்கைக்குகள் அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் வகையில், நிலையான அரசியல் தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என இந்தியா கருதுகிறது.
பொருள்: ஆயுத போராட்டத்தை தொலைத்தாயிற்று இனி பேரினவாதத்தின் உச்சக்கட்டத்தில் சிறுபானமை இனம் அடக்கி ஆளப்பட வேண்டும். அது இந்தியப் பேரினவாதம் இந்தியாவில் சிறுபான்மை இனங்களை அடக்க உதவும்.


எஸ். எம். கிருஷ்ணா சொன்னது:அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், எவ்வளவு விரைவில், நிலையான அரசியல் தீர்வு காணப்படுகிறதோ அது நன்மை தருவதாக இருக்கும்.
பொருள்: சிங்களவர்கள் திருப்திப்படாத தீர்வு சரிவராது. தமிழ் நாய்களே அடங்குங்கடா.

 எஸ். எம். கிருஷ்ணா சொன்னது:தேசிய நல்லிணக்கத்துக்காக அரசியல் தீர்வு காண எடுக்கப்படும் முயற்சிகள், மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான முயற்சிகளை இந்தியா பாராட்டுகிறது.
பொருள்: இலங்கையை அடிக்கடி நாம் பாராட்டிக்கொண்டே இருப்போம்.

எஸ். எம். கிருஷ்ணா சொன்னது: இலங்கையின் கொலைக்களங்கள்' என்ற தலைப்பில் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப் படத்தை கண்ட மக்களின் எதிர்வினைகளையும் அறிந்து வைத்திருக்கிறோம்.
பொருள்: எந்தப் படுபாவி மொபைல் போனுக்குள் கமராவை வைக்கக் கண்டுபிடிச்சுத் தொலைச்சான்? இலங்கை செய்த அட்டூழியங்களுக்கு இந்தியா துணை செய்ததை எந்தப் பாவி படமெடுத்து வைச்சிருக்கிறானோ!


எஸ். எம். கிருஷ்ணா சொன்னது: விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில், இலங்கை அரசு உடனடியாக அவசர நிலை விதிமுறைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பொருள்: நாம சொன்னா அதை இலங்கை அரசு எங்கு கேட்கப் போகிறது. அவிங்களுக்கு நாம கைக்கூலிமாதிரியெல்ல நடத்துறாங்க.


கிரிக்கெட் ஸ்கோர் சொல்லும் கிருஷ்ணா.
எஸ். எம். கிருஷ்ணா தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஏதோ கிரிக்கெட் ஸ்கோர் சொல்வது போல் பாராளமன்றத்தில் சொன்னார். கடந்த ஆண்டில் 137 தமிழக மீனவர்களும், இந்த ஆண்டு ஆகஸ்ட் 3 வரை 164 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இலங்கை - 1000 இந்தியா- 0 .
இலங்கையால் கொல்லப்பட்ட தமிழ் மீனவர்கள் தொகையைப் பற்றி கிருஷ்ணா எதுவும் கூறவில்லை.

இலங்கைத் தமிழர்களையும் இந்தியத் தமிழர்களையும் முன்னாள் இந்தியப் பிரதமர் நேரு பிரித்து வைத்ததைப் பற்றி வாசிக்க இங்கு சொடுக்கவும்: துரோகி நேரு.
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...