Friday 8 July 2011

இந்தியாவில் அழைப்பு நிலையங்களை(Call Centres) மூடும் பிரித்தானிய வங்கி

பிரித்தானியாவின் மூன்றாவது பெரிய வைப்பகமான சன்ரெண்டர்(Santender, the third largest bank in Britain) இந்தியாவில் உள்ள தனது அழைப்பு நிலையங்களை மூடி அவற்றை பிரித்தானியாவில் மீள் ஆரம்பிக்கவிருக்கிறது. தனது வாடிக்கையாளர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்கவே தாம் இந்த முடிவை எடுத்ததாக அந்த வைப்பகம் அறிவித்துள்ளது. தாம் எடுத்த முடிவிற்கும் இந்தியாவில் அதிகரிக்கும் வேலயாட்கள் சம்பளத்திற்கும் சம்பந்தம் இல்லை எனவும் சன்ரெண்டர் வைப்பகம் அறிவித்துள்ளது.

சன்ரெண்டர் வைப்பகம் பிரித்தானியவிலேயே அதிக வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு உள்ளான வைப்பகமாக இருந்தது. சென்ற ஆணடு அது இரண்டாம் இடத்திற்கு இறங்கியது. சன்ரெண்டர் வைப்பகம் தனது பல வாடிக்கையாளர்களின் ஆட்சேபனைகளைத் தொடர்ந்தே இந்தியாவில் உள்ள தனது  அழைப்பு நிலையங்களை(Call Centers)  மூடும் முடிவை எடுத்தது.

இந்தியாவில் அதிகரிக்கும் செலவீனம்.
பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் வெளிநாடுகளில் அழைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்ட பின்னர் பல நிறுவங்களின் வாடிக்கையாளர்களுக்கான சேவைகளின் தரம் பெரிதும் குற்ந்துள்ளதாக தெரிவித்தன.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் அங்குள்ள பணவீக்கமும் இந்தியத் தொழிலாளர்களின் ஊதியத்தை பிரித்தானியத் தொழிலாளர்களின் ஊதிய அதிகரிப்பிலும் பார்க்க அதிக அளவில் அதிகரிக்கச் செய்தது. இதன் விளைவாக பிரித்தானியாவின் சில பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரதேசங்களில் அழைப்பு நிலையங்களை(Call Centers) ஏற்படுத்தி அங்கு வேலை வாங்குவது மும்பாயில் வேலை வாங்குவதிலும் மலிவான நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவில் ஆங்காங்கு நடந்த தகவல் திருட்டுக்கள் பண மோசடிகள் போன்றவையும் பல பிரித்தானிய நிறுவனங்களைச் சிந்திக்க வைத்துள்ளன.

2 comments:

Niroo said...

கால் சென்டர்ல வேலையா?

Mohamed Faaique said...

"call center" அப்பிடின்னா என்ன’னு முதல்ல சொல்லிக் குடுங்கப்பா....

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...