Monday 4 July 2011

பிரித்தானியாவிடம் பறி போகும் இந்திய வேலை வாய்ப்புக்கள்

பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளின் வெளி-ஒப்படை வேலைகள் பல மூன்றாம் உலக நாடுகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகக் கருதப்பட்டது.

வெளி-ஒப்படை வேலைகள்:
கணனித் துறை - 28%
சந்தைப்படுத்தல் துறை - 15%
நிதித் துறை        - 11%
நிர்வாகத் துறை - 9%
ஏனையவை -    27%    என்று இருந்தது. இவற்றின் வேலை வாய்ப்புப் பெறுமதி 1.2 ரில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தன. 2015இல் அமெரிக்காவின் வேலை வாய்ப்புக்களில் 3.3மில்லியன்கள் ஆசிய ஆபிர்க்க நாடுகளுக்கு மாற்றப்படலாம் என்று 2010இல் எதிர்வு கூறப்பட்டது. அவற்றின் சம்பளப் பெறுமதி 136மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டது.

உதாரணம்:
பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் வெளிநாடுகளில் அழைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்ட பின்னர் பல நிறுவங்களின் வாடிக்கையாளர்களுக்கன சேவைகளின் தரம் பெரிதும் குற்ந்துள்ளதாக தெரிவித்தன.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் அங்குள்ள பணவீக்கமும் இந்தியத் தொழிலாளர்களின் ஊதியத்தை பிரித்தானியத் தொழிலாளர்களின் ஊதிய அதிகரிப்பிலும் பார்க்க அதிக அளவில் அதிகரிக்கச் செய்தது. இதன் விளைவாக பிரித்தானியாவின் சில பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரதேசங்களில் அழைப்பு நிலையங்களை(Call Centers) ஏற்படுத்தி அங்கு வேலை வாங்குவது மும்பாயில் வேலை வாங்குவதிலும் மலிவான நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவில் ஆங்காங்கு நடந்த தகவல் திருட்டுக்கள் பண மோசடிகள் போன்றவையும் பல பிரித்தானிய நிறுவனங்களைச் சிந்திக்க வைத்துள்ளன. இந்த நிலை நீடித்தால் பிரித்தானியாவில் அமெரிக்க அழைப்பு நிலையங்கள் உருவாகலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...