Tuesday 31 May 2011

தென்னிந்திய விரோதமும் இலங்கைப் பிரச்சனையும்.?


2009-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் தமிழர்களுக்கு எதிரான போரில் இலங்கையின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் தீர்மானம் வந்த போது அதை இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக இந்தியா மாற்றியது. அப்படிச் செய்ய வேண்டிய கடப்பாடு இந்தியாவிற்கு இருந்தது. இந்தியாவின் தமிழர்களுக்கு எதிரான போரையே இலங்கை செய்து முடித்தது. இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களின் கருத்துப் படி "தமிழன் ஆளப்பட வேண்டிய சூத்திரன். அவன் ஆளக்கூடாது." என்பதாகும். இதற்காக தமிழர்களின் சொந்த அரசுக்கான போராட்டத்தை இலங்கையும் இந்தியாவும் இணைந்து அடக்கின.

போர் வெற்றியின் பங்கிலாபம்.
போருக்குப் பிந்திய அபிவிருத்தியில் இலங்கை மக்களைச் சுரண்டுவது யார் என்ற போட்டியின் விளைவுதான் பன்னாட்டு அரங்கில் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான அக்கறையை பல நாடுகளிடை ஏற்படுத்தியது. போருக்குப் பின்னரான அபிவிருத்தியில் மேற்குலக நாடுகள் இலங்கையால் ஒதுக்கப்பட்டன. இந்தியாவை இலங்கை கவனமாகக் கையாண்டது. இந்தியாவிற்கு வாக்களித்தபடி இலங்கை நடக்காமல் இழுத்தடித்து வந்தது. ஆனால் சீனாவின் திட்டங்கள் இலங்கையில் துரிதமாக நடந்தேறி வருகின்றன. இலங்கை இந்தியாவிற்கு வாக்களித்தபடி இலங்கை இந்திய வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமல் இழுத்தடித்து வருகிறது.

ஐநாவின் நிபுணர்கள் குழு அறிக்கை.
இலங்கையில் நடந்த போரில் இழைக்கப் பட்ட மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக விசாரிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் நியமித்த நிபுணர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையில் இலங்கையில் போர்க்குற்றம் மற்றும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கான நம்பகரமான ஆதாரங்கள் உள்ளன என்று குறிப்பிட்டதைத் தொடர்ந்து இலங்கை தீயை மிதித்தவன் போல் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறது. இலங்கைக்கு சரியாகக் கைகொடுக்கக் கூடிய ஒரு நாடு ஐநா பாதுகாப்புச் சபையில் இரத்து அதிகாரம் கொண்ட சீனாதான். ஆனால் சீனாவிடம் போனால் இந்தியா கோபித்துக் கொள்ளும் என்று இலங்கை முதலில் இந்தியாவிடம் ஓடிச் சென்றது. பாவம் இந்தியா. இந்தியாவின் ஆளும் கட்சி அப்போது தமிழ்நாட்டுத் தேர்தலில் கடுமையாகத் தண்டிக்கப்பட்டது. இலங்கை எதிர்பார்த்த உதவியை இந்தியாவால் செய்ய முடியவில்லை. இந்தியா தனது சொந்தத் தேவைகளை இதைச் சாக்காக வைத்துச் சாதிக்க முயல்கிறது. வெளியில் போலியாக இலங்கை இனப் பிரச்சனை தீர்க்கப் படவேண்டு மென்று சொன்னது.

இந்திய ஆளும் வர்க்கமும் தமிழர்களும்
இந்தியாவை ஆளும் குடும்பம் மலையாளிகளின் ஆலோசனைப் படி செயற்படுகிறது. இந்திய மத்திய அரசின் நிர்வாக சேவையில் மலையாளிகளின் ஆதிக்கம் நிலவுகிறது. வட இந்தியர்களுக்கு தென் இந்தியர்களைப் பிடிக்காது. அப்படி இருக்கையில் பல வட இந்திய நடுநிலை ஆய்வாளர்கள் இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தவறிழைத்து விட்டதாக எழுதி வருகின்றனர். இவற்றிற்கு தமிழ்நாட்டுத் தேர்தல் முடிவுகள் நல்ல விளம்பரம் கொடுத்து நிற்கின்றன. இந்திய ஆட்சியில் மலையாளிகளின் ஆதிக்கத்தைப் பிடிக்காத பல வட இந்தியர்கள் இப்போது தமிழர் பிரச்சனையில் இந்தியா விட்ட தவறை தமக்கான ஆயுதமகப் பாவிக்கத் தொடங்கி விட்டனர். இதனால் இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஒரு தடுமாற்றம் காணப்படுகிறது. ஆனால் இது தமிழர்களுக்கு சாதகமாக அமையப் போவதில்லை. சாத்கமாக அமைய தமிழ்நாட்டில் உள்ள தமிழ் விரோதப் பார்ப்பன சக்திகள் விடப்போவதில்லை.

மலையாளிகளின் தமிழின விரோதப் போக்கு
இந்தியாவில் மலையாளிகளுக்கு போட்டியாக இருப்பவர்கள் தமிழர்களே. இதனால் மலையாள தமிழ் கசப்புனர்வு உண்டு. ஆனால் மலையாளிகள் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக செயற்படுவதற்கான காரணம் இது மட்டுமல்ல. தமிழ்நாட்டில் உள்ள தமிழன் அடிமையாக்கப்படவேண்டியவன் எனக் கருதும் சோ, சுப்பிரமணியசுவாமி, இந்து ராம் போன்ற பார்ப்பன சக்திகள் மலையாளப் பார்ப்பனர்களை தமிழர்களின் விரோதிகளாக்கிவிட்டன. இலங்கையில் தமிழர்களுக்கு என ஓர் அரசு உருவானால் அது பார்ப்பனர்களுக்கு ஆபத்து என்று இந்த சக்திகள் கருதிகின்றன. இதனால் அவர்கள் எப்போதும் இலங்கையில் தமிழர்களுக்கு ஓர் அரசு மட்டுமல்ல அதிக அதிகாரம் கொண்ட ஒரு கட்டமைப்புக் கூட உருவாகக் கூடாது என்று இந்த பார்ப்பனக் கூட்டம் கருதுகின்றன. இந்தப் பார்பன சக்திகள் மலையாளப் பார்ப்பனர்களைப் பாவித்து மலையாளிகளை எளிதாக இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக திருப்பி விட்டன. இதனால் இந்திய வெளியுறவுக் கொள்கை தமிழர்களுக்கு எதிரானதாக அமைந்தது. இந்திய மைய அரசில் உள்ள பார்ப்பன மலையாள சக்திகள் இந்தியாவின் பிராந்திய நலன்களைக் கூடக் கருத்தில் கொள்ளாது செயற்பட்டன. இந்த உண்மையை இன்னும் வட இந்தியர்கள் உணரவில்லை. இலங்கையில் சீன அதிகரிக்கும் ஆதிக்கம் இந்தியாவிற்கான அச்சுறுத்தலாக அமைந்து கொண்டிருக்கிறது. இதையும் வட இந்தியர்கள் சரியாகப் புரிந்து கொண்டு செய்ற்படத் தொடங்கவில்லை. இதை உணரும் போது அவர்களுக்கு தென் இந்தியர்கள் மீதான வெறுப்பு அதிகரிக்கும். ஐநா மனித உரிமைக் கழகத்தில் நடந்த கூட்டத்தில் சீனா இலங்கைக்கு தனது பலத்த ஆதரவைத் தெரிவித்து உரையாற்றிய வேளையில் இந்தியா மௌனமாக இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. 2009இல் ஐநா மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த இந்தியா இப்போது மௌனமாக இருப்பது. இரண்டில் ஒன்று தவறு எனச் சுட்டிக்க்காட்டுகிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...