Wednesday 11 May 2011

பின் லாடன் ஒழுக்கமானவரா?


பின் லாடனைப் கொல்ல/பிடிக்கச் சென்ற அமெரிக்கச் சிறப்புப் படையணிக்குக் கிடைத்த மிகப் பெரும் பரிசு அவர் தங்கிருந்த மாளிகையில் கிடைத்த கணனிகளும் காணொளிப்பதிவுகளும் மற்றும் பல பதிவேடுகளுமே. நூற்றுக்கணக்கான computer hard disks கைப்பற்றப் பட்டன. அவை இனிவரும் காலங்களில் அல் கெய்தா இயக்கத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

பின் லாடனைப் பற்றிய தகவல்களை வைத்து அவரது குணாம்சக் கொலை (Character Assasination) செய்ய அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை முயல்கிறது. அதற்கு அது பாவிக்கும் முதல் ஆயுதம் பின் லாடனின் மாளிகையில் கைப்பற்றிய காணொளிகளே. 07-05-2011 சனியன்று அமெரிக்க நிர்வாகம் ஐந்து காணொளிகளை வெளிவிட்டது. வெளிவிடப்பட்டமையின் நோக்கத்தை ஒர் அமெரிக்க ஊடகம் இப்படிக்குறிப்பிடுகிறது: The administration released the videos in part to promote an intelligence triumph but also to try to further diminish the legacy and appeal of Bin Laden.

அமெரிக்க நிர்வாகம வெளியிட்ட காணொளிப்பதிவுகளில் ஒலியை நீக்கிவிட்டே வெளிவிட்டுள்ளார்கள். அல்லாவிடில் அது அல் கெய்தாவிற்கு ஒரு பிரச்சாரமாக அமைந்து விடும் என்கிறார்கள்.

அமெரிக்க பாதுகாப்புத் தளமான பெண்டகன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்படுத்தி காணொளிகளை வெளிவிட்டது. பொதுவாக பெண்டகன் பத்திரிகையாளர்களைச் சந்திப்பை மேற்கொள்வதில்லை. இது ஒரு வழமைக்கு மாறான நிகழ்வுதான்.

முக்கிய குறிப்பு: இதை எழுதுவதன் நோக்கம் பின் லாடனின் கொள்கைகளையோ அல்லது அவரது செயல் களையோ ஆதரிப்பதற்காக அல்ல.
பின் லாடனுக்கு எதிராக முன் வைக்கப்பட்ட பரப்புரைகள்:

  • பின் லாடன் தன்னைப் பற்றிய தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்வையிடுகிறார்.

இதில் ஒன்றும் பெரிய தவறில்லை. ஆனால் அமெரிக்கா பின் லாடன் தன்னைத் தானே இரசிப்பது போல் கூறுகிறது. தன் செயல்கள்பற்றிய பின்னூட்டங்களை அறிய ஆவலாய் இருப்பது ஒரு நல்ல தலைவனுக்குரிய பண்பு. அவர் என்ன நீலப்படமா பார்த்தார்?

  • பின் லாடன் தனது தாடிக்கு கறுப்புச் சாயம் பூசியுள்ளார்.

இது ஒன்றும் ஒழுக்கக் குறைவான செயல் அல்ல. அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள்: “Our takeaway is that he jealously guarded his own image.”

  • மூன்று மாடிகளிலும் மூன்று மனைவியரைக் குடியமர்த்தியுள்ளார்.

பின் லாடனின் மார்க்கத்திற்கோ அல்லது அவரைப் பின்பற்றுபவர்கள் கலாச்சாரத்திற்கோ இது ஒன்றும் முரணானது அல்ல.
  • பின் லாடனின் அறையில் குப்பைகள் நிறைந்திருந்தன.

அவர் பணியாள்களை வைத்திருப்பதில் இருந்த சிரமம் புரிந்து கொள்ளக் கூடியது. அவர் படாடோபமான வாழ்க்கை வாழவில்லை.

  • பின் லாடனின் வீட்டிற்குள் பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் விளையாடும் பந்து சென்றால் அதை உள் சென்று எடுக்க அனுமதிப்பதில்லை. மாறாக பணம் கொடுப்பார்கள் புதிய பந்து வாங்கும் படி.

இது ஒரு நல்ல பண்புதானே!

  • பின் லாடன் வயாகரா முலிகை உட் கொண்டார்.

அரபு நாடுகளில் வீரியத்திற்கு மூலிகைகள் உண்பது தொன்று தொட்டு நடந்து வருகிறது. அந்த மூலிகைக்கு ஏன் வயாகார என்ற முன்னிணைப்பு?

  • காணொளிப்பதிவுகளின் போது பின் லாடன் தனது உரையாடல்களில் அடிக்கடி தவறுகள் விட்டதால் பல மீள் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

அவர் வார்த்தையில் வீரன் அல்ல. செயல் வீரனா?

  • பின் லாடன் தனது தோற்றத்தில் அதிக கவனம் செலுத்தினார்.

அல் கெய்தா வெளிவிட்ட காணொளிளிப்பதிவுகள் எதிலும் அவர் தன்னை அலங்கரித்து அழகு படுத்திக் காண்பிக்கவில்லை.

அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையின் இறுதிக் கண்டுபிடிப்பு: பின் லாடனின் மாளிகை ஒரு கட்டளை-கட்டுப்பாட்டுப் பணியகமாகச்(Command and Control) செயற்பட்டது.

முன்பு அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை பின் லாடன் மறைந்து வாழ்வதால் ஓரம் கட்டப்பட்டுவிட்டார் அவரது நேரடி கட்டுப்பாட்டில் அவரது அல் கெய்தா இயக்கம் இல்லை என்றனரே!!!

மொத்தத்தில் அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை இதுவரை பின் லாடனிற்கு களங்கம் விளைவிக்கக் கூடிய எதையும் வெளிவிடவில்லை.

2 comments:

abdul said...

ஏன் ஒசாமாவை ஆதரிக்க வில்லை என சொல்லுரிங்க ஆனால் பிரபாகரனை மட்டும் ஆதரவு கொடுகிறிங்க

Anonymous said...

Vera velayey illaya...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...