Monday 2 May 2011

உண்மையான போர்க் குற்றவாளியின் திரை மறைவுச் சதி.


இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவருவதை ஐநா பொதுச் செயலாளரின் பிரதம ஆலோசகரான இந்தியாவின் விஜய் நம்பியார் தாமதப் படுத்தினாராம். அந்த அறிக்கை 31-03-2011இல் தயாராகிவிட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை உரிய நேரத்தில் வெளிவந்திருந்தால் அது தமிழ்நாட்டில் நடந்த சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம்- காங்கிரசு கூட்டணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வில்லங்கம் பிடித்த வில்லன் விஜய் நம்பியார் அதைத் தாமதப் படுத்தினாராம்.

ஐநாவில் தமிழர்களுக்கு எதிராக இந்தியா.
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நான்கு நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்க சீனா, ரஷ்யா, இந்தியா, போர்த்துக்கல் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளன. இதில் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனாவும் இரசியாவும் இரத்து(வீட்டோ) அதிகாரம் கொண்டவை. இந்தியாவும் போர்த்துக்கல்லும் 31-12-2012வரை தமது தற்காலிக உறுப்புரிமையைக் கொண்டிருக்கும். பாதுகாப்புச் சபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 15. மற்ற தற்காலிக உறுப்புரிமை கொண்ட நாடுகள்: பொஸ்னியா/ஹெர்செகோவினா, பிரேசில், கபன், லெபனான், நைஜீரியா, கொலம்பியா, ஜேர்மனி, தென் ஆபிரிக்கா ஆகியவையாகும்.

இரசியாவும் சீனாவும் இரத்து அதிகாரம் பாவிக்கத் தயாராம்.
இலங்கைக்கு எதிராக ஐநா பாதுகாப்புச் சபையில் விசாரணைக்குழு அமைக்கும்படி முன் மொழியப்பட்டால் அதை இரசியாவும் சீனாவும் தமது இரத்து அதிகாரத்தை பாவிக்கத் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது சற்று ஆழ்ந்து கவனிக்க வேண்டியது. சீனாவிற்கு இந்தியாவில் பிராந்திய நலன் சார் கரிசனை நிறைய உண்டு. அது தன் எதிர்கால இந்து சமுத்திர ஆதிக்கத் திட்டத்திற்கு இலங்கைக்கு முக்கியத்துவம் வகிக்கிறது. இந்தியாவிற்கு எதிரான சீனாவின் முத்து மாலைத் திட்டத்தில் இலங்கையும் ஒன்று. ஆனால் இரசியாவைப் பொறுத்தவரை இலங்கை இந்தியாவின் "ஏரியா". அதற்குள் இரசியாவின் நடவடிக்கைகள் இந்திய நலன்களை ஒட்டியதாகவே இருக்கும். ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவந்தவுடன் அதைப்பற்றி இலங்கை முதலில் கலந்துரையாடிய நாடு இந்தியா. இது சீனாவைச் சற்று அதிருப்திப்படுத்தியது. இலங்கை இந்தியாவுடன் கலந்துடையாடியதைத் தொடர்ந்து இரசியா அறிக்கைக்கு எதிராக கருத்துக்களை வெளிவிட்டு வருகிறது.
இரசியா தனது இரத்து அதிகாரத்தைப் பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு சார்பாக பாவிக்குமாம். லிபியாவிற்கு எதிராக ஐநாவில் தீர்மானம் அண்மையில் நிறைவேற்றப்பட்ட போது இரசியா தனது எதிர்ப்பைக் காட்டியது ஆனால் இரத்து அதிகாரத்தைப் பாவிக்கவில்லை. லிபியாவிடன் நீண்டகால நல்ல உறவு உண்டு. அத்துடன் லிபியாவிற்கு பல பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதம் விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை இரசியா செய்திருந்தது. அந்த பல பில்லியன் டொலர் விற்பனையைப் பாதிக்கும் லிபியாவிற்கு எதிரான ஐநாவின் பாதுகாப்புச் சபையின் ஆயுத விற்பனைத் தடைத் தீர்மானத்தை இரசியா இரத்துச் செய்யவில்லை. ஆனால் இலங்கைக்கு எதிராக வரும் தீர்மானத்தை இரசியா எதிர்க்குமாம். இதில் ஒன்று புலனாகிறது. இலங்கையில் நடந்த இறுதிப் போரினல் இலங்கையின் போர்க்குற்றம் வெளிவரும் வேளையில் அதில் இந்தியாவின் பங்கும் வெளிவரும். உண்மையான போர்க் குற்றவாளிதான் இரசியாவைத் தூண்டுகிறான்....

1 comment:

அருள் said...

குழப்பும் வினவு: போற்க்குற்ற விசாரணையின் எதிரி யார்?

http://arulgreen.blogspot.com/2011/05/blog-post.html

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...