Sunday 24 April 2011

யப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசியின் மௌனம் ஏன்?


இலங்கையில் பெரும் நிலப்பரப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில் யாழ் மாவட்டத்தில் உள்ள இலங்கை அரச படையினருக்கு தேவையான வழங்கல்களை வழங்க இலங்கை அரசு பெரும் சிரமமும் பணச்செலவும் செய்து கொண்டிருந்த வேளையில் இணைத் தலைமை நாடுகள் என்று ஒரு பன்னாட்டு கட்டப் பஞ்சாயத்துக்காரர் இலங்கையில் தலையிட வந்தனர். இலங்கையில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்று சொல்லி ஒரு இணைத் த(றுத)லை நாடுகள் என்று ஒரு அமைப்பு உருவாக்கப் பட்டது. இதில் நோர்வே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகியன இடம்பெற்றன. பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தினர். இலங்கையில் அமைதி ஏற்படுத்துவது போல் பாசாங்கு செய்து தமிழர்களை ஏமாற்றிக் கொண்டனர். இந்த இணைத் தறுதலை நாடுகளில் இந்தியா பங்குபற்றாமல் திரை மறைவில் அவற்றுடன் கள்ளத்தனமாக இணைந்து செயற்பட்டது. உண்மையில் சொன்னால் இது தமிழர்களை "ரவுண்டு' கட்டித் தாக்கிய ஒரு ரவுடிக் கும்பல். அதில் முக்கியமானவர்கள் எரிக் சொல்ஹெய்மும் யசூசி அகாசியும்.

இலங்கையின் இறுதிப் போரில் நடந்த அழிவுகள் பற்றி இனக் கொலைகள் பற்றி இந்த இணைத் தலைமை நாடுகள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

போர் நிறைவடைந்த பின்னர் முதன் முறையாகக் கிளிநொச்சிக்கு சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்சவுடன்18யூன் 2010இலன்று சென்றிருந்தார். பின்னர் கொழும்பு திரும்பி செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அகாசி, சிறீலங்கா அரசின் போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஏனைய உலக நாடுகள் அழுத்தம் கொடுக்கக் கூடாது எனவும், அது உள்நாட்டு விடயம் எனவும் கூறியிருந்தார். இப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் அமைத்த நிபுணர் குழு இலங்கையில் போர்க் குற்றமும் மனித குலத்திற்கு எதிரான குற்றமும் நடந்தமைக்கான நம்பகமான ஆதரங்கள் உண்டு என்று தெருவித்திருக்கிறது.

பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பாக எரிக் சொல்ஹெய்ம் மேற் கொண்டு விசாரணைகள் தேவை எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

யப்பானின் இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை. 2009இன் ஆரம்பப் பகுதியில் இலங்கை சென்ற யசூசி அகாசி தொடர்பாக ஒரு ஊடகச் செய்தி ஒன்று அப்போது வந்திருந்தது. அதில் யசூசி அகாசி ஹெலிக்கொப்டரில் இலங்கைப் படை அதிகாரிகளுடன் வன்னிக்குச் சென்று பார்த்தாராம் அவருக்கு அப்போது வன்னிப் போர் முனையில் சிக்குப் பட்டிருந்த பிரதேசத்தைக் காட்டி இந்தச் சிறு பிரதேசத்துக்குள்தான் இரண்டரை இலட்சம் மக்களும் இருபத்தைந்தாயிரம் மக்களும் இருக்கிறார்கள் என்றபோது அப்படியே அவ்வளவு பேரையும் துடைத்து அழிக்க வேண்டியதுதானே என்றாராம். அந்தச் செய்தி உண்மை என்றால் யசூசி அகாசியும் ஒரு போர்க் குற்றவாளியே. அதனால்தான் யப்பானின் இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் மௌனமாக இருக்கிறாரோ.

6 comments:

Mohamed Faaique said...

///இந்தச் சிறு பிரதேசத்துக்குள்தான் இரண்டரை இலட்சம் மக்களும் இருபத்தைந்தாயிரம் மக்களும் இருக்கிறார்கள் என்றபோது அப்படியே அவ்வளவு பேரையும் துடைத்து அழிக்க வேண்டியதுதானே என்றாராம். //

காமெடி பண்ணாதீங்க பாஸ்.. நீங்க எத சொன்னாலும் நம்புரதுக்கு தமிழன் ஏமாளிதான்... ஆனாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர். Control ur Self

Anonymous said...

mr mohamed faaique
That is what happened,
dont u kno what happened at the last stage of war

suri said...
This comment has been removed by the author.
suri said...

இந்த தளத்தில் உங்களுக்கு என்ன வேளை? தமிழர்களை ஏமாளிகள் என்று சொல்ல நீ யார்? தமி்ழர்கள் ஏமாளிகளும் அல்ல உங்களைப் போன்ற ஏமாற்றுபவர்களும் அல்ல, அப்பாவிகள்........,
this comment for u mohamed faaique

Mohamed Faaique said...

///தமிழர்களை ஏமாளிகள் என்று சொல்ல நீ யார்? //
தமிழன்...

பெயரில்லா நன்பரே/நன்பியே!!
கடைசி யுத்தம் மற்றும் இலங்கையின் தமிழர்கள் நிலை பற்றி உங்களை விட எங்களுக்கு நன்றாகவே தெரியும் என் நினைக்கிறேன்...

Anonymous said...

do u kno that italian bitch sent 10,000 dogs to kill innocent Tamils?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...