Friday 15 April 2011

நேட்டோவிற்குள் லிபியா தொடர்பாக நெருக்கடி.


லிபியத் தலைவர் மும்மர் கடாஃபி தொடர்ந்து தந்திரமாக தனது எதிரிகளைக் குழப்பும் தகவல்களையும் அறிக்கைகளையும் பேச்சு வார்த்தை அழைப்புக்களையும் விட்டு வருகிறார். அவரை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்களிடை ஒரு ஒழுங்காகன கட்டமைப்புக் கொண்ட படையணிகள் இல்லை. போதிய அளவு ஆயுதங்களும் இல்லை. அவர்களிடை முரண்பாடுகளும் காணப்படுகிறது. அவர்களிடை பல முரண்பாடுகளும் உண்டு.

பிரான்ஸ் இன் முன்னெடுப்புடன் நேட்டோ அமைப்பு கடாஃபியை பதவியில் இருந்து அகற்ற அப்பாவி மக்களைப் பாதுகாப்பது என்ற போர்வையில் மும்மர் கடாஃபியின் படை நிலைகள் மீது தொடர்ந்து தாக்குதல்களை மேற் கொண்டு வருகிறது.


தேக்க நிலையில் இருக்கும் போர்
நேட்டோவின் தொடர்ச்சியான குண்டு வீச்சுக்கள் கடாஃபியின் படைகளின் பலத்தை பாதித்ததாகத் தெரியவில்லை. கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் முன்னேற முடியாத ஒரு தேக்க நிலையிலேயே இருக்கிறார்கள். லிபியா மீதான தாக்குதல் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக நேட்டோவுக்குள் ஆரம்பத்தில் இருந்தே கருத்து வேறுபாடு இருக்கிறது. நேட்டோவில் இருக்கும் ஒரே ஒரு முசுலிம் நாடான துருக்கி மற்ற நாடுகளிலும் பார்க்க வித்தியாசமான கருத்தைக் கொண்டுள்ளது. நேட்டோ தனது முயற்சிகளை லிபியாவில் இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்தல் விடுத்துள்ளன. அமெரிக்கா லிபியாவில் பிரான்ஸ் பிரித்தானியாவிலும் பார்க்க குறைந்த அக்கறையைக் காட்டுகிறது. லிபியாவில் கடாபிக்கு எதிரான நடவடிக்கைகள் தேக்க நிலையை அடைந்தமைக்கு அமெரிக்காவே காரணம். ஜேர்மனி கடாஃபிக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கு கொள்ளவில்லை. நேட்டோவின் 28 நாடுகளில் 14 நாடுகள் மட்டு மே கடாஃபிக்கு எதிராக செயற்படுகின்றன. நேட்டோவில் இருந்து அடிக்கடி தாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று அறிக்கைகள் வருவது எங்க அப்ப குதிருக்குள் இல்லை என்பது போன்றதே.

ஐரோப்பிய பலம்
லிபியத் தலைவர் மும்மர் கடாஃபிக்கு எதிரான நடவடிக்கை பன்னாட்டு அரங்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பலத்தை சோதனை செய்வதற்கான ஒரு களம் என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்

கடாஃபிக்கு எதிராக லிபியப் பணம்
வெளிநாடுகளில் உள்ள லிபியாவின் சொத்துக்களை முடக்கி வைத்திருக்கும் ஆபிரிக்க ஐரோப்பிய அமெரிக்க அரசுகள் அச்சொத்துக்களை கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களிடம் திட்டத்தைத் தீட்டியுள்ளன. தனக்கு எதிராக சொத்து முடக்கம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீண்டகால்த்துக்கு முன்பரே உணர்ந்த கடாஃபி தனது சொத்துக்களில் பெரும் பகுதியை தனது நாட்டிலேயே தங்கங்களாக சேமித்து வைத்திருக்கிறார். அவரிடம் இருக்கும் தங்கங்களின் மதிப்பு 6.5பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சம்மானது. இதை வைத்துக் கொண்டு அவரால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியும்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...