Thursday 24 March 2011

ஆறு நாட்களில் பெருந்தெருவைத் திருத்திய ஜப்பானியர்கள்


பூகம்பத்தால் சிதைந்த ஒரு பெருந்தெருவை ஆறு நாட்களில் ஜப்பானியர்கள் மீளக் கட்டமைத்துள்ளனர். மார்ச் 11-ம் திகதி பூகம்பம் நடந்தது. அதில் சிதைந்த கந்ரோ பெருந்தெருவை திருத்தும் வேலைகள் 17-ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அது 6 நாட்களில் திருத்தி முடிக்கப்பட்டது. பூகம்பம் நடந்த மற்ற நாளே பெரும்பாலான மக்கள் வேலைக்குத் திரும்பிவிட்டனர். பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பல கடைகள் இப்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சாதனைகள் பல வெளிநாட்டவர்களை வியக்க வைத்துள்ளது. பல நாடுகளையும் சேர்ந்த வர்த்தகர்கள் ஜப்பானில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்கொடை நடவடிக்கை
ஜப்பானின் அணு உலைகளுக்கு பிரச்சனைக்கு உரிய நேரங்களில் மின்சாரம் வழங்கும் டீசல் மின்பிறப்பாக்கிகளை அதன் ஊழியர்கள் தங்கள் உயிர்களையும் பொருட்படுத்தாமல் அதிக கதிர்வீச்சுக்கள் உள்ள இடம் சென்று திருத்தினர். இதைப் பல வெளிநாட்டுப் பத்திரிகைகள் இது ஒரு தற்கொலை நடவடிக்கை(Suicide mission) என்று விமர்சித்தன. இப்போது அணு உலைகளில் புதிய பிரச்சனை உருவாகி உள்ளது. நீர் வெப்பமடைந்து கொதிக்க அணு உலைகளில் உப்பு உருவாகி உள்ளது. இது அணு உலைகளை மேலும் வெப்பமடையச் செய்யலாம்.

நீரில் அயோடின்
ஜப்பானில் பூகம்பத்தால் இறந்தவர்கள் அல்லது காணாமற் போனோர்கள் தொகை 23,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. பூகம்பம் நடந்த பிரதேசங்களில் இப்போது ஜப்பானியர்கள் எதிர் கொள்ளும் பெரிய பிரச்சனை குடி நீர்ப்பிரச்சனையாகும். அணு உலைக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட நீரைக் குழந்தைகள் குடிக்கக் கூடாது என்றும் பெரியவர்கள் குடிக்கலாம் என்றும் ஜப்பானிய அரசு அறிவித்தது. பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள நீரில் அயோடின் 131 அளவில் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. 100இற்கு வ் மேல் அயோடின் உள்ள நீரை குழந்தைகள் அருந்தக்கூடாது. பெரியவர்கள் 300வரை உள்ள நீரை அருந்தலாம். குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரை அரசு இலவசமாக வழங்கியது. ஆனால் பெரியவர்களும் நீரை அருந்த மறுக்கின்றனர். இன்று வியாழக் கிழமை நீரில் உள்ள அயோடின் அளவு 76இற்கு குறைந்துள்ளது. அதிக அளவு அயோடின் உள்ள நீரை அருந்தினால் தொண்டையில் பாதிப்பு வரும். புற்று நோயும் வரலாம். 1986இல் இரசியாவின் சேர்னோபிலில் நடந்த அணு உலை வெடிப்பின் பின்னர் 6,000பேர் வரை தொண்டைப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.

2 comments:

Anonymous said...

அவன் மனுசன் .. சுதந்திரம் வாங்கி 60 வருஷமா நம்ம நாட்டில திருத்தப்படாத ரோடு எத்தனை எத்தனை ....

கிருத்திகன் said...

திருத்திய வீதிகள் எத்தனை என்று கேட்க வேண்டும் இக்பால் செல்வன் .., எமது நாட்டிலும் தான் ...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...