Wednesday 16 March 2011

ஜப்பானிய அரசின் அயோக்கியத்தனமும் அணு உலைகளும்


பன்னாட்டு அணு வலுக் கண்காணிப்பகம் இரு வருடங்களுக்கு முன்பே யப்பானிய அரசிற்கு யப்பானில் உள்ள அணு உலைகள் 6.5 அளவிற்க்கு மேலான பூமி அதிர்ச்சியைத் தாங்கமாட்டாது என்று எச்சரித்திருந்தது. அதை யப்பானிய அரசு ஏற்று நடக்கவில்லை என்று இப்போது செய்திகள் கூறுகின்றன. கடந்த 35 ஆண்டுகளில் மூன்று தடவை மட்டுமே யப்பனிய அணு உலைகளின் பாது காப்புப்பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. யப்பானிய அரசு ஒரு அவசர நடவடிக்கை நிலையத்தை மட்டுமே ஏற்படுத்தி இருந்தது. அணு உலைகளின் பாதுகாப்பை மேம்படுத்தவில்லை. யப்பானிய் அணு உலைகள் 7அளவிலான பூமி அதிர்ச்சியை மட்டுமே தாங்கவல்லன. 11-ம் திகதி மார்ச் மாதம் நடந்த பூமி அதிர்ச்சியின் அளவு 9 ரிச்சர் அளவுகோலுடையது. 2008-ம் ஆண்டு யப்பானில் நடந்த G-8 நாடுகள் கூட்டத்திலும் உலகெங்கும் உள்ள அணு உலைகளின் பாதுகாப்புப் பற்றி விவாதிக்கப்பட்டது.

2009-ம் ஆண்டு யப்பானிய நீதிமன்றம் பாதுகாப்பற்ற அணு உலைகள் மூடப்படவேண்டும் என்று உத்தரவிட்டது. இதை யப்பானிய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அமெரிக்காவும் யப்பானிய அணு உலைகளில் இலாபத்திற்காக பாதுகாப்பு பலியிடப்படுகிறது என்று தெரிவித்திருந்தது என்று விக்கிலீக் கூறுகிறது.

ரரோ கோனோ என்ற யப்பானியப் பாராளமன்ற உறுப்பினர் யப்பானிய அரசு அணு உலைகள் தொடர்பாக பல மூடி மறைப்புக்களைச் செய்கின்றது என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

அணு உலைகளின் தற்போதைய நிலை

புக்குஷிமாவில் உள்ள அணு உலைகளில்தான் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உலை - 1 இங்குதான் முதலில் ஐதரசன் வெடிப்பு ஏற்பட்டது. அங்கு புகுந்த சுனாமி நீர் வெப்பத் தணிப்பை ஏற்படுத்தியது

உலை - 2 இங்கும் ஐதரசன் வெடிப்பு ஏற்பட்டது. ஆனால் இங்கு போதிய அளவு நீர் உட்புகாதபடியால் வெப்ப அதிகரிப்பு ஏற்படுகிறது.

உலை - 3 இங்கும் திங்களன்று ஐதரசன் வெடிப்பு ஏற்பட்டது.

உலை - 4 இங்கு வெடிப்பு ஏற்பட்டு தீ பரவியுள்ளது. கூரை தகர்ந்து விட்டது. இங்கிருந்துதான் பாரிய ஆபத்து வரவிருக்கிறது. இங்கு வேலை செய்த இருவரைக் காணவில்லை. வெடிப்பின் போது எருந்து சாம்பலாய் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இங்கிருந்து வெளிப்பட்ட கதிரியக்கம் பற்றிச் சரியான தகவல்களை யப்பானிய அரசு வெளியிடவில்லை. இங்கு நீருக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்ட ரொட்ஸ் இப்போது வெப்பத்தை வெளிவிடுகிறது. இதனால் நீர் கொதிநிலையை அடைந்து வற்றுகிறது.
உலை - 5 ம் 6 ம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன.

பாதிக்கப்பட்ட இடங்களில் கதிர் வீச்சு நேற்று 400எம் எஸ் வி அளவில் இருந்தது. 100இற்கு மேல் இருந்தால் உடலின் டி என் ஏ க்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் பிற்காலத்தில் பாதிக்கப்ப்பட்டவர்களுக்கு புற்று நோய் வரலாம். காற்றால் கதிர்வீச்சு 155மைல் தொலைவில் உள்ள ரோக்கியோ வரை சென்றுள்ளது. அங்கு கதிர்வீச்சு சாதாரண நிலையிலும் பார்க்க 10 மடங்காக உயர்ந்துள்ளது. குறைந்த அளவு கதிர் வீச்சிற்கு உள்ளானோர் முகம் சிவத்தல், வாந்தி, வயிற்றோட்டம், காய்ச்சல், தலையிடி போன்றவற்றால் பாதிக்கப்படுவர்.
பிரெஞ்சு அரசு யப்பான் மீது கடும் தாக்குதல்
யப்பானிய அணு உலைகளின் கதிர்வீச்சு இப்போது காட்டுப்படுத்த முடியாத நிலையை அடைந்து விட்டதென்று பிரெஞ்சு அரசு குற்றம் சுமத்துகிறது. உண்மையான ஆபத்தை யப்பானிய அரசு மூடி மறைக்கிறது என்றும் பிரான்ஸ் கூறுகிறது. வெறுமனவே தண்ணீரை ஊற்றுவது பிரச்சனிகளைத் தீர்க்க மாட்டது என்றும் பிரான்ஸ் கூறுகிறது.

யப்பானிய அரசின் அயோக்கியத்தை நாம் நன்கு அறிவோம்
இலங்கையில் தமிழர்களைக் கொல்ல சிங்களவர்களுக்கு உதவிய நாடுகளில் யாப்பானும் ஒன்று. 2009 மே மாதம் இலங்கையில் நடந்த இறுதிப் போரில் இலங்கைப் படையின் உயர் அதிகாரிகள் ஒரு வெளிநாட்டு முக்கிய பிரமுகரை உழங்கு வானொலியில் அழைத்துச் சென்று முள்ளிவாய்க்காலுக்குள் ஒரு சிறு பிரதேசத்தில் மூன்று இலட்சம் மக்கள் அகப்பட்டுத் தவிப்பதைக் காட்டி இச்சிறு பிரதேசத்துக்குள்தான் இந்த விடுதலைப் புலிகள் எஞ்சியுள்ளனர் என்று காட்டினார்களாம். அப்போது அந்தப் பிரமுகர் அப்படியே குண்டுகளைப் போட்டு அத்தனைபேரையும் அழித்தொழிக்கும்படி கூறினாராம். அந்தப் பிரமுகர் ஜப்பானின் யசூசு அகாசி என்று நம்பப்படுகிறது. யப்பான் இனக் கொலைக்கு உதவுவதால் 11-04-2009 இலன்று சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச் நெருக்கடி குழு, காக்கும் பொறுப்பிற்கான சர்வதேச அமைப்பு ஆகியன ஜப்பானியப் பிரதமருக்கு இலங்கையில் நடக்கவிருக்கும் மனிதப் பேரழிவை இலங்கைக்கு உதவி வழங்கும் நாடு என்ற வகையில் தடுக்கும்படி வேண்டின. ஆனால் யப்பானிய அரசு எதுவும் செய்யவில்லை. 2010ஜூனில் இலங்கை சென்ற ஜப்பானின் யசூசி அகாசி இலங்கை அரசின் ஊடகப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெலபோல் பேசியுள்ளார். அவரது பேச்சை ரம்புக்வெலதான் எழுதிக் கொடுத்தாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் தலையிடக்கூடாது என்று யசூசி அகாசி கூறியுள்ளார்.

புத்தமதம் போதிக்கும் கர்ம வினை இதுவா?

4 comments:

Unknown said...

படுகொலைக்கு உதவினால் பதில் வரவேசெய்யும்..

Anonymous said...

புத்தர் கூறியதை சந்தைப்படுத்தலுக்கும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் மட்டுமே ஜப்பானியர்கள் பயன்படுத்தினார்கள். மற்றும்படி அவர்கள் மனதளவில் காட்டுமிராண்டிகளே.
நல்லதையே சிந்தித்து நல்லதையே செயற்படுத்தி இருந்தால் நல்லது நடந்திருக்குமே

தனிமரம் said...

மற்றவர்களின் சாபம் பொய்பபதில்லை.

கூடல் பாலா said...

அணு உலைகள் மற்றும் அணுமின் நிலையங்களை கண்காணித்து வரும் IAEA(INTERNATIONAL ATOMIC ENERGY AGENCY) தனது பங்களிப்பை சரியாக செயல்படுத்தவேண்டிய நேரமிது .
பாதுகாப்பற்ற அணு உலைகளை கண்டறிந்து அவைகளை மூட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் .

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...