Wednesday 9 March 2011

பான் கீ மூனின் திருகு தாளத்தின் இரகசியத்தை அவரே அம்பலப் படுதினார்.


இலங்கையில் ஒரு நாளில் மட்டும் 25,000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்ட போது அமைதியாக இருந்த ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கீ மூன் அவர்கள் சென்ற ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கைத் தேர்தலின் போது நான்கு சிங்களவர்கள் கொல்லப்பட்டபோது ஒப்பாரி வைத்தார்.

2009-ம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது அங்கு சென்று பேச்சு வார்த்தை நடாத்தும் படி பலர் ஐக்கிய நாடுகளின் செயலர் பான் கீ மூனைக் கேட்டிருந்தனர். மூன்று இலட்சத்திற்கு மேற்பட்டோர் போர் முனையில் அகப்பட்டிருந்தபடியால பல பொது அமைப்புக்கள் இந்த வேண்டுகோளை பான் கீ மூனிடம் விடுத்தனர். அதை கவனத்தில் எடுக்காத பான் கீ மூன் பல கண்டனங்கள் ஊடகங்களால் தெரிவிக்கப் பட்டதை அடுத்து விஜய் நம்பியார் என்ற தமிழ் மக்களின் வில்லனை இலங்கைக்கு அனுப்பினார். அவர் அங்கு சென்று பின் இந்தியா சென்றார். அதன் பின்னர் ஐநா வந்த அவர் தனது அறிக்கையைப் பாதுகாப்புச் சபைக்கு சமர்ப்பிக்காமல் காலத்தை இழுத்தடித்தார். அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பிரித்தானியா முற்பட்ட போது அவர் தமது அறிக்கையை ஐநா அதிபரிடம் சமர்ப்பித்தார். அந்த அறிக்கை பற்றி மூடப்பட்ட அறைக்குள் கலந்துரையாடப் பட்டது. இந்த இழுத்தடிப்புக்கள் யாவும் இலங்கைக்கு போரை முடிக்க வழங்கப்பட்ட அவகாசமாகும். போர் முடிந்த பின் இலங்கைக்கு சென்ற பான் கீ மூன் இலங்கைக் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் உறுதியளிக்கப் பட்டவையை இலங்கை குடியரசுத் தலைவர் ஏன் நிறைவேற்றவில்லை என்ற கேள்வி ஐக்கிய நாடுகளின் செயலர் பான் கீ முனிடம் அதன் பின் பல தடவை எழுப்பப்பட்டு வருகிறது.
அந்த கூட்டறிக்கையின் படி இலங்கை அரசு:
  • போரினால் பாதிக்கப் பட்டவர்களை மீள் குடியேற்றுதல்.
  • சர்வ தேச நியமங்களுக்கு அமைய இலங்கையில் மனித உரிமைகளை மதித்து நடத்தல்.
  • இலங்கை வாழ் சகல சமூகங்களின் அபிலாசைகள் பிரச்சனைகளை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுத்தல்.
  • இலங்கையின் நீண்டகால சமூக பொருளாதார வளர்ச்சிக்காக இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணுதல்.
  • இலங்கைக் குடியரசின் அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை நிறைவேற்றுதல். இதற்காக தமிழ் மக்களுடன் பரந்த அளவில் பேச்சு வார்த்தை நடாத்துதல்.
இந்தக் கூட்டறிக்கையில் சொல்லப்பட்டவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. முகாம்களி இருந்தவர்களை மோசமான இடங்களில் வற்புறுத்தி இருக்கச் செய்துவிட்டு மீள் குடியேற்றப்பட்டனர் என்கின்றனர்.

இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பாக பான் கீ மூன் அமைத்த ஆலோசனைக் குழு இலங்கை செல்லுமா என்பது பற்றி முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை அவர் வெளியிட்டார்.

இந்த பான் கீ மூன் ஏன் இப்படி நடக்கிறார்? ஏன் இத்தனை திருகு தாளம்? அவரது ஆலோசகர் ஒரு இந்தியர் என்பதாலா? அல்லது அவரது இளைய மகளின் கணவன் இந்தியாவின் "அமைதிப்படை" யில் இலங்கையில் செயற்பட்ட ஒரு படைத்துறை அதிகாரி என்பதாலா? இப்படிப் பல கேள்விகள் எம்மத்தியில் எழுந்தது. ஆனால் பான் கீ மூன் தனது திருகுதாளத்தின் காரணத்தை இப்போது அம்பலப்படுத்தியுள்ளார். அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் பிரபல வயலின் கலைஞர் எல். சுப்பிரமணியத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய பான் கி மூன், "ராஜந்திரத்தைக் கற்றுக் கொண்டதும், இந்திய இசையை ரசித்ததும் டெல்லியில் தான்," என்றார். இப்போது தெரிகிறதா அவர் ஏன் இத்தனை திருகுதாளம் செய்கிறார் என்று!!!

1 comment:

Anonymous said...

லிபியா கடாபி போர்கருவி வைத்து போராடும் மக்களை விமானம் மற்றும் பல பீரங்கிகளை வைத்து அடக்குவதை அமெரிக்க மற்றும் உலக நாடுகள் ஏன் எதிர்கிறார்கள்? இதே தானே இலங்கை போரில் தமிழனுக்கு நடந்தது? இலங்கை போரின் போது ஒளிந்து கொண்ட அமெரிக்க மற்றும் உலக நாடுகள் செய்வது அநியாயமான செயல் தானே. இலங்கை போரின் போது தமிழர்களுக்கு ஆதரவாக குரல் மட்டுமாவது கொடுத்திருந்தால் அவ்வளவு மக்கள் காப்பாற்ற பட்டு இருக்கலாம். தமிழன் என்றால் ஏறி மிதிப்பது உலகம் முழுதும் பரவிவிட்டதா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...