Tuesday 15 March 2011

3 நாட்கள் புதையுண்டிருந்த 4 மாதக் குழந்தை உயிருடன் மீட்பு




ஜப்பானின் இஷினோமாக்கியும் சுனாமியால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்று. அங்கு தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஜப்பானியப் படையினர் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட இறந்த உடல்களை மீட்டனர். அவர்கள் பணியில் ஈடுபட்டிருந்த வேளை ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது அதை அவர்கள் முதலில் நம்பவில்லை ஏதோ வேறு சத்தம் என்றே எண்ணினர். அங்கு குழந்தையின் அழுகுரல் கேட்கும் சாத்தியமில்லை. எல்லாம் சேற்றில் புதையுண்ட நிலையிலேயே இருந்தன. மீண்டும் அவர்கள் அந்த அழுகுரலைக் கேட்டபோது அவர்களுக்கு அதிர்ச்சி. மிகக்கவனமாக அந்த இடத்தைத் துப்பரவாக்கினர். ஆச்சரியம்தான் சேறுகளால் மூடப்பட்ட நிலையில் ஒரு நாலு மாதப் பெண்குழந்தை. அதை ஒரு துணியால் சுற்றி எடுத்தனர். சுனாமி அலை அடித்த போது பெற்றோரின் கையில் இருந்து வீசி எறியப்பட்ட குழந்தை உயிருடன் இருப்பதை அவர்களால் நம்பமுடியவில்லை. அதிலும் ஆச்சரியம் குழந்தைக்கு எந்த உடற்காயமும் இருக்கவில்லை. அளவற்ற மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்த தந்தையின் மகிழ்ச்சிக்கு மீண்டும் விழுந்தது இன்னொரு அடி. இன்னொரு சுனாமி வருகிறதென்ற எச்சரிக்கைதான் அது. தந்தை செய்த முதல் வேலை தன் குழந்தையை மீண்டும் படையினரிடமே ஒப்படைத்தார். ஆனால் அது விரைவில் அந்த எச்சரிக்கை மீளப் பெறப்பட்டு தந்தையுடன் குழந்தை இணைந்தது.

வாகனத்துள் ஒரு மூதாட்டி
மிதந்து கொண்டிருந்த வாகனம் ஒன்றில் 20 மணித்தியாலங்கள் அகப்பட்டிருந்த ஒரு மூதாட்டியும் உயிருடன் மீட்கப்பட்டார். இன்னொருவர் தனது வீட்டுக் கூரையின் மேல் இருந்தபடி மீட்கப்பட்டார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...