Wednesday 19 January 2011

சிறந்த தாம்பத்தியம் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.


சிறந்த தாம்பத்திய வாழ்க்கை உங்களை இளமையாக வைத்திருப்பதுடன் ஆரோக்கிய வாழ்விற்கு வழி வகுக்கும் என்று Younger (Sexier) You என்னும் புதிய புத்தகத்தில் Dr Eric Braverman தெரிவித்துள்ளார். வயோதிபத்திற்கு எதிரான நிபுணரான (anti-ageing expert) Dr Eric Braverman சிறந்த முறையில் உடலுறவு கொள்ளும் தம்பதிகளின் உடற் செயற்பாடு (metabolism)களை ஊக்குவிப்பது, மூளை விருத்தி, சிறந்த இருதயச் செயற்பாடு, சிறந்த நோய் எதிர்ப்புத்தன்மை போன்ற நன்மைகள் உண்டாகின்றன.

சிறந்த உடலுறவு செய்து கொள்ளும் தம்பதிகளின் ஹோமோன் மட்டம் உயர்வதால் இளமையாக இருக்க உதவுகிறது என்கிறார் Dr Eric Braverman.

சிறந்த உடலுறவு கொள்ளும் தம்பதிகளுக்கு ஏற்படும் நன்மைகள்:
  • நோய் எதிர்க்கும் உயிரணுக்களின் உற்பத்தி 20% அதிகரிக்கிறது.
  • நல்ல தோல், பலமான எலும்புகள்.
  • prostate cancer வராமல் பாதுகாக்கிறது
  • உடல் எடை குறைக்க உதவுகிறது
  • மன அழுத்தத்தை குறைக்கிறது
  • தன்னம்பிக்கையை வளர்க்கும்
  • தம்பதிகளின் நெருக்கத்தை அதிகரிக்கும்
  • நல்ல தூக்கத்தை தருகிறது
  • பெண்களின் இடுப்புத் தசைகளை பலமடையச் செய்கிறது
  • இரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது.

சிறந்த உடலுறவிற்கு உகந்த உணவுகளாக சிலவற்றை குறிபிடுகிறார்கள்: மிளகு, துளசி, சீரகம், இஞ்சி, உள்ளி, மஞ்சள், எள்ளு, சீமைப்பச்சைமிளகாய், குட மிளகாய் ( அட எல்லாம் நம்ம ஊர் சாப்பாட்டில் நிறையச் சேர்ப்போமே) இவற்றுடன் tarragon.

1 comment:

Anonymous said...

சிறந்த உடலுறவு கொள்ளும் தம்பதிகளுக்கு ஏற்படும் நன்மைகள்:

* நோய் எதிர்க்கும் உயிரணுக்களின் உற்பத்தி 20% அதிகரிக்கிறது.
* நல்ல தோல், பலமான எலும்புகள்.
* prostate cancer வராமல் பாதுகாக்கிறது.

Is it true???

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...