Thursday 27 January 2011

மாய மான் சொல்ஹெய்ம் மீண்டும் வரப்போகிறாராம்.


இலங்கையில் பெரும் நிலப்பரப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில் யாழ் மாவட்டத்தில் உள்ள இலங்கை அரச படையினருக்கு தேவையான வழங்கல்களை வழங்க இலங்கை அரசு பெரும் சிரமமும் பணச்செலவும் செய்து கொண்டிருந்த வேளையில் இணைத் தலைமை நாடுகள் என்று ஒரு பன்னாட்டு கட்டப் பஞ்சாயத்துக்காரர் இலங்கையில் தலையிட வந்தனர்.

திசை திருப்ப வந்த மாயமான்
இலங்கையில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்று சொல்லி ஒரு இணைத் த(றுத)லை நாடுகள் என்று ஒரு அமைப்பு உருவாக்கப் பட்டது. இதில் நோர்வே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகியன இடம்பெற்றன. பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தினர். இலங்கையில் அமைதி ஏற்படுத்துவது போல் பாசாங்கு செய்து தமிழர்களை ஏமாற்றிக் கொண்டனர். இந்த இணைத் தறுதலை நாடுகளில் இந்தியா பங்குபற்றாமல் திரை மறைவில் அவற்றுடன்கள்ளத் தனமாக இணைந்து செயற்பட்டது. இவர்களின் முக்கிய சதி சமாதானப் பேச்சு வார்த்தை போர் நிறுத்த உடன் படிக்கை என்று தமிழர்களின் கவனத்தை திசை திருப்புவதும் அவர்களுக்குள் பிணக்குகளை பிரிவுகளை ஏற்படுத்துவதுமாகும். இணைத்(தறு)தலைமை நாடுகளில் முக்கியமான இருவர்கள் நோர்வேயின் எரிக் சொல்ஹெய்மும் ஜப்பானின் யசூசு அக்காசியும். இவர்கள் ஏதோ நல்லவர்கள் போல தம்மைக் காட்டிக் கொண்டனர். அதில் எரிக் சொல்ஹெய்ம் தன்னை ஒரு தமிழர்களின் நண்பன் என்று பொய்யாக அடையாளம் காட்டிக் கொண்டார். இதற்காக அவர் சிங்கள பத்திரிகைகளாலும் பேரினவாதிகளாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுண்டு. பலதமிழர்கள் இவர்கள் இருவரையும் நடுநிலையாளர்கள் என்றே நம்பினர். பலமாக இருந்த விடுதலைப் புலிகளை எரிக் சொல்ஹெய்ம் என்ற மாய மானைக் காட்டி பேச்சு வார்த்தை மேசைக்கு வரச் செய்து கொண்டு இலங்கை தனது படையினருக்கு பயிற்சியும் பல தந்திரோபாய மாற்றங்களையும் செய்து கொண்டது. இலங்கை தனது படையில் ஆழ உடுருவும் அணி, சிறு படகுகள் மூலம் சிறு அணிகளாகச் சென்று கடற்புலிகளுடன் போரிடும் அணி போன்ற பல புதிய அணிகளையும் புதிய உத்திகளையும் ஏற்படுத்திக் கொண்டது. 2008இற்கு முன் இருந்த எறிகணைக செலுத்திகள் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் உள்ள இலக்குகளை மட்டும் தாக்கும். இவற்றை எதிர் கொள்ள விடுதலைப்புலிகள் இந்த எறிகணைச் செலுத்திகளுக்கு மிக அண்மையாகச் சென்று நின்று சண்டை போடும் போது இந்த எறிகணைச் செலுத்திகளால் எதுவும் செய்ய முடியாது. இதற்கு மாற்றாக இந்தியா ஒரு குறுகிய தூரத்தில் தாக்கக் கூடிய ஏவுகணைச் செலுத்திகளை உருவாக்கி இலங்கைக்கு வழங்கியது. இந்தத் தாயாரிப்புக்களுக்கான கால அவகாசத்தை இலங்கைக்கு வழங்கவே இணைத்தறுதலை நாடுகள் எரிக் சொஹொய்மைப் பாவித்து விடுதலைப் புலிகளைத் திசை திருப்பி சமாதானப் பேச்சு வார்த்தை மேசைக்கு அழைத்துச் சென்றது. இந்தக் காலகட்டத்தில் இணைத்தறுதலை நாடுகளும் இந்தியாவும் விடுதலைப் புலிகளையும் அதன் பன்னாட்டுக் கட்டமைப்புக்களையும் பலவீனப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்தன பல நாடுகள் விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்புக்களாகப் பிரகடனப் படுத்தின.

இலங்க அரசு ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்த் உடன்படிக்கையை மீறிய போது எரிக் சொல்ஹெய்மோ இணைத்தறுதலை நாடுகளோ பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
இலங்கை அரசு அப்பாவிப் பொதுமக்களை ஆயிரக் கணக்கில் கொன்றபோது எரிக் சொல்ஹெய்மோ இணைத்தறுதலை நாடுகளோ பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
இலங்கை அரசு தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பாவித்த போது எரிக் சொல்ஹெய்மோ இணைத்தறுதலை நாடுகளோ பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
இலங்கை அரசு மருத்துவ மனைகள் மீது குண்டு மழை பொழிந்த போது எரிக் சொல்ஹெய்மோ இணைத்தறுதலை நாடுகளோ பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
இலங்கை அரசு பாதுகாப்பு வலயம் என்று தான் அறிவித்த பிரதேசத்தில் தொடர்ந்து குண்டு மழை பொழிந்த போது எரிக் சொல்ஹெய்மோ இணைத்தறுதலை நாடுகளோ பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
இலங்கை அரசு பொது மக்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருள் விநியோகங்களை தடுத்து நிறுத்திய போது எரிக் சொல்ஹெய்மோ இணைத்தறுதலை நாடுகளோ பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
இலங்கை அரசு போர் குற்றம் புரிந்தது என்று சரவதேச மன்னிப்புச் சபை சர்வதேச் நெருக்கடிச் சபை போன்ற பல அமைப்புக்கள் தெரிவித்த போது எரிக் சொல்ஹெய்மோ இணைத்தறுதலை நாடுகளோ பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
இலங்கை அரசிடம் அகப்பட்டுள்ள தமிழர்கள் சட்ட விரோதமாகத் தடுத்து வைத்திருப்பற்றி எரிக் சொல்ஹெய்மோ இணைத்தறுதலை நாடுகளோ பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

இப்போது பன்னாட்டு அரங்கில் ஒரு பாதகமான நிலை உருவாகியுள்ளது. இலங்கை அரசின் போர் குற்றம் மனித உரிமை மீறல் போன்றவை இதன் காரணங்களாகும்.

  • இலங்கையை ஒரு இனக்கொலை ஆபத்து நாடாக இனக் கொலைக்கு எதிரான பன்னாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
  • 2008இல் ஐநாவின் மனித உரிமைக் கழகத்தில் இருந்து இலங்கை வெளியேற்றப் பட்டது.
  • உலகத்தில் கணாமற் போவோர் வீதப்படி பார்த்தால் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • உலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு மிக ஆபத்தான நாடுகளில் இலங்கையும் ஒன்று.
  • இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்காக யாரும் தண்டிக்கப்படவில்லை.
  • இலங்கையில் போர் குற்றம் நடந்தமைக்கான பல ஆதாரங்கள் பன்னாட்டு ஊடகங்களில் வெளிப்படுத்தப் பட்டுள்ளன.
படைத்துறைச் சம நிலையும் பொருளாதாரச் சுரண்டலும்
இவற்றை பன்னாட்டு அரங்கில் அம்பலப் படுத்தி இலங்கையைத் தண்டிக்க வேண்டும் என்று பல வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் முனைப்புடன் செயற்படுகிறார்கள். இதிலிருந்து தப்ப இலங்கை சீனாவின் பக்கம் முழுமையாகச் சாய்ந்தால் அது ஆசியப் பிராந்தியத்தின் படைத்துறைச் சமநிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். போருக்குப் பின்னரான இலங்கையை பொருளாதர ரீதியில் மேற்கு நாடுகளின் பண முதலைகள் சுரண்டுவதற்கும் இந்த போர் குற்ற மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்கள் தடையாக இருக்கின்றன.

மீண்டும் கால அவகாசம்
படைத் துறைச் சமநிலை பொருளாதாரச் சுரண்டல் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மேற்கு நாடுகள் இலங்கையைப் பாது காப்பது போன்ற பணியில் ஈடுபடத்துடிக்கின்றன. முன்பு போல ஒரு கால அவகாசம் இப்போதும் தேவைப்படுகிறது. இப்போதைய தமிழர்கள் பலம் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள். 1980களின் ஆரம்பத்தில் இலங்கையில் செய்தது போன்று வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை பல கூறுகளாக இலங்கையாலும் இந்தியாவாலும் பிரிக்க வேண்டும். இலங்கைக்கு எதிரான போர் குற்றத்தில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் முனைப்பை திசை திருப்ப வேண்டும். இதற்கு ஒரு மாய மான் வேண்டும்.

மாய மான் தயாராகி விட்டது.
புலம் பெயர்ந்த தமிழர்களைத் திசை திருப்ப எரிக் சொல்ஹெய்ம் தாயாராகி விட்டாராம்.

  • இலங்கை அரசுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் அல்லது நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்கி நிர்வகிப்பவர்களுக்கும் இடையே தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு அல்லது பேச்சுக்களை ஏற்பாடு செய்வதற்குத் தன்னால் முடியும் என்று நார்வே அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

தான் நடுநிலையாக நடந்தவன் என்று எரிக் சொல்ஹெய்ம் சொல்கிறார். வேலி அழைக்கும் ஓணான் விக்கிலீக். விக்கிலீக் தன்னை நடுநிலையானவன் என்று குறிப்பிட்து என்கிறார். அப்படி ஒன்று சொன்னதாகத் தெரியவில்லை. விக்கிலீக் தானாக எதையும் தெரிவிக்கவில்லை. பரிமாறப்பட்ட தகவல்களை வெளியிடுகிறது. இன்னும் பல தகவல்கள் வெளிவரவிருக்கின்றன.
இம்முறை இந்த மாய மான் ஒரு முக மூடியைக் கழற்றி விட்டது. தான் தனி ஈழத்திற்கு ஆதரவு இல்லை என்று சொல்கிறது.

மீண்டும் ஏமாறத் தமிழர்கள் தயாரா?

1 comment:

Anonymous said...

முதல் வந்தவர் மீண்டும் வருகிறார் அடி வாங்கித் தருவதற்கு...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...