Wednesday 26 January 2011

பான் கீ மூனின் ஆலோசனைக்குழு இலங்கை செல்லாது!!! ஆனால் செல்லத் தேவையில்லை!!!!


இலங்கைப் போர் குற்றம் தொடர்பான ஆலோசனைக் குழுவுடன் பான் கீ மூன்


இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக ஒரு பன்னாட்டு மட்ட விசாரணை தேவை என சர்வதேச மன்னிப்புச் சபை, பன்னாட்டு நெருக்கடிக் குழு, ஐநா மனித உரிமைக் கழகம் ஆகியன தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இது தொடர்பான சாட்சியங்களையும் அவை முன்வைத்தன. இதை தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஐநா மனித உரிமைக் கழக ஆணையாளர் செல்வி நவநீதம் பிள்ளை, ஐநாவின் அரசியல் விவகார உதவிச் செயலாளர் லின் பஸ்கோ போன்றோரின் தொடர்ச்சியான வற்புறுத்தலைச் சமாளிக்க முடியாமல் ஐநா பொதுச் செயலர் பான் கீ மூன் அவர்கள் வேண்டா வெறுப்பாக ஒரு ஆலோசனைக் குழுவை அமைத்தார். இந்தக் குழு இலங்கைப் போர் குற்றம் தொடர்பாக விசாரணை செய்ய முடியாது. அது ஒரு எழுத்து மூலமான அறிக்கை சமர்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஆலோசனைக் குழு கொழும்பு அதிகார மையத்தை அதிர்ச்சியடையச் செய்தது.

விமல் வீரவன்சவின் வீராப்பு
ஐநா ஆலோசனைச் சபையைக் கலைக்காவிடில் கொழும்பில் உள்ள ஐநா பணிமனையை ஆக்கிரமித்து அங்குள்ளோரை பணயக் கைதிகாளப் வைத்திருப்போம் என்று அரசாங்கதின் ஒரு அமைச்சரான விமல் வீரவன்ச பகிரங்க அறிக்கையை விட்டார்.

ஐநாவின் பொய்நா
விமல் வீரவன்சவின் அறிக்கை தொடர்பாக ஊடகவியலாளர்கள் பான் கீமுனின் உதவியாளர்களிடம் வினவியபோது:
  • அவர் வெளியிட்ட தகவல்களை பத்திரிகைகள் பிழையாக பிரசுரித்திருக்கலாம்.
  • அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்.
  • இலங்கை ஒரு காந்தீய வழி ஒத்துழையாமையை செய்யலாம் அதற்க்காக இலங்கையைப் பாராட்ட வேண்டும்
போன்ற தவறான கருத்துக்களை அவர்கள் முன்வைத்து இலங்கையின் அரச பயங்கரவாதச் செயலை நியாயப்படுத்த முயன்றனர்.

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஐநா மனித உரிமைக் கழக ஆணையாளர் செல்வி நவநீதம் பிள்ளை இப்போது இலங்கை மனித உரிமை மீறல்கள் பற்றி மறந்து விட்டார் போல் தெரிகிறது.

கடந்த சில வாரங்களாக ஐநா ஆலோசனைச் சபையை இலங்கை சென்று உண்மைகளைக் கண்டறியுமா என்ற கேள்வி பலமாக அடிபட்டது. இலங்கை திரைமறைவில் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு பகிரங்கமாக வரலாம் என்று அறிவித்தது. ஆனால் ஐநா ஆலோசனைச் சபையை எந்த விசாரணையையும் மேற் கொள்ள முடியாது என்றும் வேண்டுமானால் இலங்கை அரசு அமைத்த நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கலாம் என்று தெரிவித்தது.

நேற்று ஐநா செயலதிபர் பான் கீ மூனின் பேச்சாளர் Inner City Press இற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய தகவலில்:
  • Regarding your questions about the possible travel of the advisory panel, we have the following to say:
  • Discussions are ongoing. The Panel wants to engage with Sri Lankan actors relevant to the question of accountability. A visit would be useful but is not essential for the Panel to provide advice to the Secretary-General. என்று தெரிவித்துள்ளார்.
பயனுள்ளது தேவையற்றது
ஐநா ஆலோசனைச் சபை இலங்கை செல்வது பற்றி இப்போதும் பேச்சு வார்த்தை நடக்கிறதாம். ஐநா ஆலோசனைச் சபை வகைசொல்லல் என்ற பிரச்சனைபற்றி இலங்கையின் நடவடிக்கையாளர்களை ஈடுபடுத்த விரும்புகிறதாம். ஐநா செயலதிபருக்கு ஆலோசனை வழங்க இலங்கைக்கு செல்வது பயனுள்ளதாம் ஆனால் தேவையற்றதாம்.
பயனுள்ளவை எல்லாம் தேவையானவையே என்பதை ஐநா அதிகாரிகள் ஏன் அறிந்திருக்கவில்லை?

ஐநா ஆலோசனை சபை ஆரம்பித்ததில் இருந்து இலங்கை அதைக் கடுமையாக விமர்சித்து வந்தது. அவர்கள் இலங்கைக்கு வருவதை இலங்கை ஆட்சியாளர்கள் விரும்பவே இல்லை. அதைப் பகிரங்கமாக அறிவித்து ஐநா ஆலோசனை சபை இலங்கை வரக்கூடாது என்று சொன்னால் இலங்கை பற்றி மனித உரிமை அமைப்புக்கள் கடுமையாக விமர்சிக்கும். இதைத் தடுக்க ஐநா அதிகாரிகளும் இலங்கையும் இணைந்து ஆடும் நாடகமா இது?


இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக போர் நடந்த இடத்தைப் பார்வையிடாமலும் பாதிக்கப் பட்டவர்களை நேரில் சந்திக்காமலும் ஆலோசனை சொல்லப் போகிறார்கள்.

தேறாத ஐநா
அண்மைக்காலங்களில் ஐநா ஒரு தேறாத நிறுவனமாக மாறிக் கொண்டிருக்கிறது.
  • 1994-ல் நடைபெற்ற ருவாண்டா இனப்படுகொலையை தடுத்து நிறுத்தத் தவறியது.
  • ஸ்ரெப்ரெனிகா படுகொலையைத் தடுக்கத் தவறியது
  • சூடான் இனப்படுகொலையைத் தடுக்கத் தவறியது
  • இலங்கையில் ஒரு நாளில் மட்டும் 25000 கொல்லப்பட்ட போது கைகட்டி நின்றது.


ஆலோசனைச் சபையின் அறிக்கையில் இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கப் படுமா?????

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...