Thursday 20 January 2011

அமெரிக்காவிற்கு ராஜபக்ச என்ன கொடுக்கப்போகிறார்?


பாவம் மஹிந்த ராஜபக்ச! உலகத்திலேயே அதிகாரம் மிக்க பதவியை வகிக்கும் அவர் பகிரங்கமாக அறிவிக்காமல் ஒரு நாட்டுக்கு கூட போக முடியாத நிலை. அவரே இதை பகிரங்கமாக அறிவித்தது அதைவிடப் பரிதாபகரமான நிலை. நேற்று (19-ம்திகதி) இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு புறப்பட்ட மஹிந்த ராஜபக்ச எங்கு இருக்கிறார் என்ற விபரம் வெளியிடப்படவில்லை. ஏன் இந்தத் தலைமறைவு?

தலைப்பாகைக்கு வந்தது தலைக்கு வரலாம் என்று தலை தெறிக்க ஓடினாரா?
மஹ்ந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் விழா கொண்டாடப் போயிருந்த வேளை அவர் தலைக்கு தலைப்பாகை கட்டிக்கொண்டு பொங்கல் பானைக்குள் அரிசி போடக் குனிந்த வேளை அவரது தலைப்பாகை கழன்று பொங்கல் பானைக்குள் விழுந்துவிட்டதாம். இது அவருக்கு கூடாத சகுனம் என்று பலரும் கூறினார்களாம். அவரது சோதிடர்களின் ஆலோசனைப்படி அவர் வெளிநாட்டில் இருந்தால் நல்லது என்று அமெரிக்கா பாய்ந்தாராம் என்றும் சில செய்திகள் கூறுகின்றன.

தனிப்பட்ட பயணம் அல்ல
மஹிந்த ராஜபக்சபயணம் தனிப்பட்ட ஒன்று என்று கூறப்படுகிறது. ஆனால் அவருடன் இலங்கை படைத்துறையைச் சேர்ந்தவர்களும் சென்றுள்ளார்கள். தனிப்பட்ட பயணத்திற்கு படைத்துறையைச் சேர்ந்தவர்கள் ஏன் செல்ல வேண்டும்? அது மட்டுமல்ல மஹிந்தவுடன் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஸ் ஏன் சென்றார்?

அமெரிக்கப் பிரதி அரசாங்க செயலர் மஹிந்த சந்திப்பு
மஹிந்த ராஜபக்ச அமெரிக்கா சென்றார் என்றவுடன் பன்னாட்டு மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிரந்திய இயக்குனர் சாம் ஜரிபி அவர்கள் மஹிந்த ராஜபக்சமீது போர் குற்றம் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப் படவேண்டும் என்று அறை கூவல் விடுத்துள்ளார். மஹிந்த ராஜபக்ச தனிப்பட்ட பயணம் செய்யமுன் முன்னாள் அமெரிக்கப் பிரதி அரசாங்க செயலர் ரிச்சர்ட் ஆ(ர்)மிரேச்சை சந்தித்தது ஏன்?

மஹிந்த ராஜபக்ச அமெரிக்காவின் அரச விருந்தினராக தங்க முடியாத நிலை. அவர் அரச விருந்தினராக தங்கினால் அமெரிக்கா மனித உரிமை அமைப்புக்களின் கண்டனத்திற்கு உள்ளாகலாம்.

இலங்கயில் நடந்த போர் குற்றம் தொடர்பான சாட்சியங்களை அமெரிக்கா இரு வழிகளில் திரட்டி வைத்துள்ளது. 2009-ம் ஆண்டு நடந்த போரின் போது கொல்லப்பட்ட மக்கள், அவர்களுக்கு உணவு செல்ல விடாமல் தடுத்தமை மருத்துவ மனைகள் மீது குண்டு வீசியமை தடை செய்யப் பட்ட குண்டுகள் வீசியமை தொடர்பாக போர் முனையில் செயற்பட்ட பல் வேறு தொண்டு அமைப்புக்கள் மூலமாக தினசரி தகவல்களை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரகம் திரட்டியுள்ளது. அத்துடன் அமெரிக்கா தனது செய்மதிகள் மூலமும் பல சாட்சியங்களைத் திரட்டியுள்ளது. இவ்வாறு இலங்கைப் போர்க் குற்றம் தொடர்பாக திரட்டியவற்றிலுருந்து தயாரிக்கப் பட்ட அறிக்கை முன்பு அமெரிக்க காங்கிரசுக்கு சமர்க்கிப்படவிருந்து அது பின் போடப்பட்டுள்ளது.

பன்னாட்டு அரங்கில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க காய் நகர்த்தல்கள்
கடந்த சில மாதங்களாக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சில திரை மறைவு நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு அம்சமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கழகத்தில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டு வருவிருப்பதாகவும் பேசிக் கொள்ளப்பட்டது. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் நியமித்த ஆலோசனைச் சபையின் அறிக்கையும் மனித உரிமைக்கழகத்தில் சமர்ப்பிக்கப் படவிருப்பதாக இருந்தது.

இங்கு நாம் நான்கு வேறுபட்ட நிகழ்வுகளை பொருத்திப் பார்க்கவேண்டும்:
  1. முன்னாள் அமெரிக்கப் பிரதி அரசாங்க செயலர் மஹிந்த சந்திப்பு.
  2. மஹிந்தவின் அமெரிக்க பயணம்.
  3. பன்னாட்டு அரங்கில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க காய் நகர்த்தல்கள்.
  4. திருக்கோணாமலை துறை முகத்தில் முதலீட்டு திட்டங்களை சமர்ப்பிக்கும்படி இலங்கை துறை முக அபிவிருத்திச் சபை சென்றவாரம் விடுத்த அழைப்பு.
இலங்கையில் அதிகரித்து வரும் சீன ஆதிக்கத்தை மனதில் கொண்டு இந்த நான்கையும் பொருத்திப் பார்க்கும் போது இலங்கையை அமெரிக்கா போர் குற்றங்களை வைத்து மிரட்டி ஏதோ ஒன்றைப் பெறப்பார்கிறதா என்ற சந்தேகம் எழுவது இயல்பானதே. திருக்கோணாமலையில் மீண்டும் அமெரிக்கா காலூன்ற முயற்சிக்கிறதா?

சீனா ஏற்கனவே அகல ஆழ இலங்கையில் காலூன்றியவேளையில் அமெரிக்காவும் வந்தால் இந்தியாவின் நிலை பரிதாபகரம்.

அமெரிக்காவின் இந்த நகர்வுகள் பற்றி ஏற்கனவே இங்கு சொல்லப்பட்ட கருத்துக்கள் காண கிழே சொடுக்கவும்:
1. எல்லாவற்றையும் மேலிருந்து ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
2. இலங்கையில் அமெரிக்காவின் அவிற்பாகம்

3 comments:

Anonymous said...

அமெரிக்கா தனது காய்களை கவனமாக நகர்த்தி இலங்கையை ஒரு வழிக்குக் கொண்டு வருகிறது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்திற்கு நிகரான அல்லது அதற்கு முகம் கொடுக்கக் கூடிய ஒரு ஆதிக்கத்தை அமெரிக்கா நிச்சயம் இலங்கையில் நிலைநாட்டும். 1980களி இது நடக்கவிருந்தபோது இந்தியா தமிழர்களின் முதுகில் சவாரி செய்து மூன்று இலடசம் தமிழர்களைக் கொல்ல வழி செய்தது. இப்போது யார் முதுகு?

Anonymous said...

அமெரிக்காவிற்கு மஹிந்த என்ன கொடுக்கப் போகிறார் என்பதல்ல கேள்வி. அமெரிக்கா மஹிந்தவிடம் இருந்து என்ன பிடுங்கப்போகிறது என்பதுதான் கேள்வி.

Anonymous said...

தனது பொருளாதார இராணுவ சுயநலன்களுக்காக அமெரிக்கா இந்த கொலைவெறியனை தண்டனையிலிருந்து தப்ப வைக்க முயல்கின்றதா? உலக பொலிஸ்காரனாக தன்னை எண்ணிக் கொண்டிருக்கும் அமெரிக்காவும் லஞ்சம் வாங்க முயல்கிறதா? எங்கே அமெரிக்காவில் வாழும் புலம் பெயர்தமிழர்கள்?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...