Wednesday 19 January 2011

இந்திய அனியின் கொலைக்கான நோக்கம் அறிந்த தென் ஆபிரிக்க காவல்துறை!




சுவிற்சலாந்தில் வாழும் இந்திய வம்சாவளிப் பெண் அனி தனது பிரித்தானிய கணவருடன் தேன்நிலவுக்காக தென்னாபிரிக்கா சென்றிருந்தார். 13-11-2010 இலன்று அனி அங்கு கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அனி தீவானியும்(28) , இவரது கணவரான ஸ்ரயன் தீவானியும்(30) மும்பையில் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

அனி திவானியின் கொலை தொடர்பாக அவரது கணவர் சொன்னது:

  • இருவரும் தங்களது தேன் நிலவுக்காக தென்னாபிரிக்கா சென்றனர்.சனிக்கிழமை இரவு இருவரும் தங்கள் இராப்போசனத்தை முடித்துவிட்டுத் தங்கள் காரில் தங்கியிருந்த விடுதிக்கு புறப்பட்டனர்.இதன்போது அவர்களது காரை வழிமறித்த துப்பாக்கி ஏந்திய இருவர், கார் சாரதியை வெளியே இழுத்துத் தள்ளிவிட்டு காரை ஓட்டிச் சென்றுள்ளனர்.
  • சுமார் 1 மணி நேர பயணத்திற்கு பிறகு ஸ்ரயனிடம் உள்ளவற்றை கொள்ளையடித்த அந் நபர்கள், அவரையும் காரிலிருந்து கீழே தள்ளி காரை அனி தீவானியை தம்முடன் கடத்திச்சென்றுள்ளனர்.இதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்க பொலிஸார் தேடல் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
  • அதன்போது அனி தீவானியின் சடலம் சுடப்பட்ட நிலையில் அவர்கள் பயணம் செய்த காரின் பின் இருக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேரிப்பகுதியொன்றில் கார் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
இந்தக் கொலை தொடர்பான சந்தேக நபர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களை அடையாளம் காண இலண்டன் திரும்பிய ஸ்ரயன் தீவானியை அழைத்தனர். ஆனால் ஸ்ரயன் தீவானி தென் ஆபிரிக்கா செல்லவில்லை. மேற் கொண்டு விசாரணை செய்த காவல்துறையினர் ஸ்ரயன் தீவானிதான் இந்தக் கொலைக்கான ஏற்பாட்டை செய்தார் என்று தெரிவித்தனர். ஸ்ரயன் தீவானியின் ஆதரவாளர்கள் கொலைக்கான நோக்கம் என்ன என்று அறியாமல் ஸ்ரயன் தீவானிமீது கொலைக்குற்றம் சுமத்தப் படுத்துவதை எதிர்த்தனர்.

இப்போது ஸ்ரயன் தீவானி தன் மனைவியைக் கொலை செய்தமைக்கான நோக்கத்தை தாம் அறிந்துள்ளதாகவும் அதை பிரித்தானிய நீதிமன்றில் 20-01-2011இலன்றி சமர்ப்பித்தி ஸ்ரயன் தீவானியை தென் ஆபிரிக்காவிற்கு நாடுகடத்தும் கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியப் பத்திரிகைகளில் அனியின் கொலை தொடர்பான பல வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. வெறுவாயை மெல்பவனுக்கு அவல் கிடைத்த மாதிரி.

ஸ்ரயன் தீவானிக்கு எதிரான சாட்சியங்களில் இரண்டு முக்கியமானவை. ஒன்று அவருக்கும் கொலைச் சந்தேக நபருக்கும் இடையில் நடந்த கைப்பேசி குறுந்தகவல் பரிமாற்றம். மற்றது. அனி இறந்த பின் ஸ்ரயன் தீவானி கொலைச் சந்தேக நபருக்கு பணம் கொடுத்தமைக்கான காணொளிப்பதிவு. ஒரு பத்திரிகை கூலிக் கொலையாளிகள் முழுக்கூலியையும் முன்கூட்டியே வாங்கிவிட்டித்தான் கொலை செய்வார்கள் என்று தெரிவித்து காணொளிப்பதிவில் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

காவல்துறை அதிபரின் முட்டாள்தனம்.
தென் ஆபிரிக்க காவல்துறை அதிபர் காவல் துறைப் பயிற்ச்சி இல்லாத ஒரு முனாள் அரசியல்வாதி. இவர் ஆரம்பத்தில் ஸ்ரயன் தீவானியை இலண்டனில் இருந்து வந்த் குரங்கு என்று குறிப்பிட்டார். ஸ்ரயன் தீவானி சட்டவாளர் தென் ஆபிரிக்க காவல் துறை அதிபர் ஏற்கனவே ஸ்ரயன் தீவானியை விசாரித்து குற்றவாளியாக்கிவிட்டார் என்று குறிப்பிடுகிறார். நாளை இலண்டன் நீதிமன்றில் தென் ஆபிரிக்க காவல்துறை அதிபர் பற்றி கடுமையான விமர்சனக்களை எதிர்பார்க்கலாம். அனி கொல்லப்பட்ட நாலாம் நாள் தென் ஆபிரிக்க காவல்துறை அதிபர் ஸ்ரயன் தீவானி ஒரு சந்தேக நபர் அல்லர் என்று வலியுறுத்தினார். பின்னர் தான் பொய் சொன்னதாகக் கூறினார்.

அனியின் கண்ணீர் வாழ்க்கை.
கொல்லப்படுவதற்கு ஆறு நாட்களுக்கு முன் தனது சிநேகிதிக்கு அனி அனுப்பிய குறுந்தகவலில் "அழுவது எனது பொழுது போக்கு" என்று தெரிவித்துள்ளார். அனியின் சிநேகிதி இந்த தகவலை பிரித்தானிய பத்திரிகைக்கு வழங்கினார். இதற்கு பணம் பெற்றாரா அந்த சிநேகிதி?

தந்தையின் முரண்பட்ட தகவல்கள்
அனியின் தந்தை வினோத் ஹிண்டோசாவின் தகவலின் படி கொலை செய்வதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் அனி தந்தையுடன் தொலை பேசியில் உரையாடினார். எனது மகள் அவள் போல் இருக்கவில்லை. எனக்குச் சொல்ல நிறைய இருக்கிறது என்றாள் என் மகள். இப்படிச் சொன்னார் அனியின் தந்தை. - Vinod Hindocha said that Anni 'wasn’t herself' when she called to say: 'Dad, I have so much to tell you. I'll be home on Tuesday and I'll have so much to tell you.'ஆனால் முன்னர் தனது மகள் தென் ஆபிரிக்கவில் மகிழ்ச்சியாக இருந்ததாக தந்தை தெரிவித்திருந்தார்.

நாளை இலண்டன் நீதி மன்றம் சர்ச்சைக்குரியதாகப் போகிறது

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...